நடிகை சித்ரா மரணம் !! கணவர், மாமனார் மீது சந்தேகமா ?

நடிகை சித்ரா மரணம் !! கணவர், மாமனார் மீது சந்தேகமா ?

தமிழ் சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் மற்றும் மாமனாரிடம் காவல்துறையினர் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை ரஸ மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். நடிகை சித்ராவின் சடலம், கடந்த புதன்கிழமை அதிகாலையில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. அந்த விடுதி அறையில் நடிகை சித்ராவும் அவரது கணவர் ஹேமந்தும் தங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில், சம்பவ நாளில் நள்ளிரவுக்கு பிந்தைய நேரத்தில் அறைக்கு வந்த சித்ரா, தான் குளிக்கப்போவதாகக் கூறி ஹேமந்தை வெளியே இருக்கக் கூறியதாகவும் அதன் பிறகு வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால், மாற்றுச் சாவியை வாங்கி அறையை…

Read More

முன்னாள் சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தி தெலுங்கானா பா ஜ கா வில் இணைந்தார் !!

முன்னாள் சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தி தெலுங்கானா பா ஜ கா வில் இணைந்தார் !!

தென்னிந்திய திரைப்பட உலகில் பிரபலமானவராக வலம் வந்த நடிகையும் முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி (54) பாரதிய ஜனதா கட்சியில் திங்கட்கிழமை முறைப்படி இணைந்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு சரியத் தொடங்கிய நிலையில், கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக விஜயசாந்தி அறிவித்தார். இதையடுத்து டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த விஜயசாந்தி, திங்கட்கிழமை பிற்பகலில் பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தன்னை இணைத்துக் கொள்ளும் முடிவை உறுதிப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இந்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, தேசிய செயலாளர் அருண் சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் அவர் திங்கட்கிழமை பாஜக உறுப்பினரானார்….

Read More

பிரபல நடிகை காஜல் அகர்வால் – தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவின் திருமணம் நடைபெற்றது

பிரபல நடிகை காஜல் அகர்வால் – தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவின் திருமணம் நடைபெற்றது

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவின் திருமணம் மும்பை தாஜ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நெருங்கிய சொந்தங்கள் சுமார் 50 பேர் மட்டுமே கலந்து கொண்ட அவரது திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகர்ந்துள்ளார். திருமணம் தொடர்பான தகவல்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்த காஜல் அகர்வாலுக்கு அவரது ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கடந்த இரு தினங்களாக வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தனது திருமணத்துக்கு முந்தைய சடங்குகளான மருதாணியிடுதல், நலுங்கு வைத்தல் போன்ற புகைப்படங்களை #kajgautkitched என்ற ஹேஷ்டேக்குடன் காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார். மும்பை தாஜ் ஹோட்டலில்…

Read More

விஜய் சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தவர் இலங்கை தமிழர்

விஜய் சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தவர் இலங்கை தமிழர்

நடிகர் விஜய் சேதுபதிமகளுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர், இலங்கையை சேர்ந்தவர் என சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், முத்தையா முரளிதரன். தமிழரான இவர், 800 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலக சாதனை படைத்தவர். சமூக வலைதளத்தில் ரித்திக் என்பவர், விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிகவும் வக்கிரத்துடன் இலங்கை தமிழர் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ”என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் சில தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் வருகிறது. என்னால் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அவரின் கலைபயணத்தில்…

Read More

விஜய் சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் : முத்தையா முரளிதரன் பயோ பிக் – 800ன் எதிரொலி !!

விஜய் சேதுபதி மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் : முத்தையா முரளிதரன் பயோ பிக் – 800ன்  எதிரொலி  !!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைதளங்களில் கற்பழிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டது. இலங்கை அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‛800′ ல் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் இருந்து விலகிக்கொள்ளும்படி பல பிரபலங்கள் விஜய் சேதுபதியிடம் தெரிவித்தனர். முத்தையா முரளிதரனே, தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலக வேண்டும் என அறிக்கை விட்டார். இதனையடுத்து விஜய்சேதுபதியும் படத்தில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரித்திக் என்பவர், விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிகவும் வக்கிரத்துடன் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை…

Read More

‘800’ படத்திலிருந்து விலகுங்கள் – விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் வேண்டுகோள்

‘800’ படத்திலிருந்து விலகுங்கள் – விஜய் சேதுபதிக்கு கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன் வேண்டுகோள்

”என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் சில தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் வருகிறது. என்னால் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அவரின் கலைபயணத்தில் எதிர்காலத்தில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவரை இப்படத்திலிருந்து விலகும்படி கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படும் தடைகளால் ஒருபோதும் நான் சோர்ந்துவிடவில்லை. அதை எதிர்கொண்டு வென்றிருக்கிறேன். இந்தப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும், மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை படமாக்க சம்மதம் சொன்னேன். ஆனால் இப்போது அதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளது. நிச்சயம் இந்த தடைகளை கடந்து இந்த…

Read More

நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை !!

நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை !!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில், பெங்களூரு போலீசார் சோதனை நடத்தினர். கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திரிவேதி உள்ளிட்ட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இவர், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயின் உறவினர்(மைத்துனர்) ஆவார். போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கியதும் ஆதித்யா ஆல்வா…

Read More

பிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு !!

பிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு !!

பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் அளித்த புகாரின் பேரில் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர். 2013ம் ஆண்டு தன்னிடம் பாலியல் ரீதியாக அனுராக் அத்துமீறி நடந்து கொண்டதாக நடிகை பால் அண்மையில் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் கடந்த 2013ம் ஆண்டு யாரிரோடு என்னும் பகுதியில் வைத்து நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக அனுராக் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அனுராக்கை விசாரணைக்கு அழைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்தக்குற்றச்சாட்டிற்கு ஏற்கனவே அனுராக் காஷ்யப் மறுத்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்….

Read More

போதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது?

போதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன்,  சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது?

பாலிவுட்டில் போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக, நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு இந்திய தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் கைதாகியுள்ளஅவரது காதலி ரியா சக்கரவர்தத்தியிடம் நடத்திய விசாரணையில் சுசாந்த் சிங்கும் தானும் போதை பொருள் பயன்படுத்துவதாக கூறியதையடுத்து அவர் அளித்த வாக்குமூலத்தில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் போதை பொருள் பயன்டுத்துவது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மஹாராஷ்டிர மாநில போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரித்து வருகிறது. இதில், பிரபல பாலிவுட் நடிகை, தீபிகா படுகோனேவின் மேலாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது….

Read More

நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் !!

நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் !!

பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 45 . வடிவேல் பாலாஜிக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாலாஜியின் இரு கைகளும் செயலிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், சென்னையிலேயே மற்றொரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அவரை சேர்க்க அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் தான், இன்று…

Read More
1 2 3 4 30