நெடுவாசல் போராட்டத்துக்கு துணை நிற்போம்: தென்னிந்திய நடிகர் சங்கம்

நெடுவாசல் போராட்டத்துக்கு துணை நிற்போம்: தென்னிந்திய நடிகர் சங்கம்

நெடுவாசலில் களங்மிறங்கி போராடும் மக்களின் உணர்வுகளுக்கு என்றும் துணை நிற்போம் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வடகாடு, நெடுவாசல், கோட்டைக்காடு, கருக்காகுறிச்சி, வாணக்கன்காடு ஆகிய இடங்களில் ஆழ் துளைக் கிணறு அமைத்து எரி பொருள் சோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க பிப்.15-ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இயற்கை எரிவாயு எடுக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 13-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள…

Read More

படங்கள் தொடர் வெற்றியால் ஏழுமலையானை தரிசித்தேன்: நடிகை கீர்த்தி சுரேஷ்

படங்கள் தொடர் வெற்றியால் ஏழுமலையானை தரிசித்தேன்: நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் சனிக்கிழமை இரவு அவரது குடும்பதினருடன் திருப்பதி வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கிய அவர் நேற்று ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்கள் வழங்கினர். கோவிலில் நடிகை கீர்த்தி சுரேசை கண்டு இளைஞர்கள், பெண்கள் குரல் எழுப்பியடி கையசைத்தனர். அவர்களை பார்த்து சிரித்தபடி கீர்த்தி சுரேஷ் சென்றார். அவர் கூறுகையில்:- தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். சமீபத்தில் நான் நடித்து வெளிவந்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. இதற்கான நேர்த்தி கடனாக ஏழுமலையானை தரிசனம் செய்தேன். தரிசனம் நன்றாக இருந்தது என்றார்.

Read More

அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக நடிகர் தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்

அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக நடிகர் தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்

உயர்நீதீமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் ஆஜராகியுள்ளார். மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் ஆஜராகியுள்ளார். சான்றிதழ்கள் படி அங்க அடையாளங்கள் சரிபார்ப்புக்காக தனுஷ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கொண்டாடி வருகின்றனர். தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க தனுஷூக்கு உத்தரவிடக்கோரி இருவரும் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற…

Read More

நடிகர் தனுஷ் பிப். 28-ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நடிகர் தனுஷ் பிப். 28-ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரும் மேலூர் தம்பதி தாக்கல் செய்துள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க, மச்ச அடையாளங்கள் உடலில் உள்ளதா என்பதை சரிபார்க்க நடிகர் தனுஷ் பிப். 28-ல் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் (60), இவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கொண்டாடி வருகின்றனர். தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க தனுஷூக்கு உத்தரவிடக்கோரி இருவரும் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து…

Read More

இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு

இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு

தனது இயக்கப் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வன்மத்தைக் காட்டுகிறது என கமல் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அரசியலில் நிலவி வரும் சூழல் குறித்து உடனடியாக கருத்துகளைத் தெரிவித்து வருபவர் கமல். அரசியலில் நிலவிவுள்ள மாற்றத்துக்கு ஆளுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதங்கத்தை அனுப்புமாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் கமல். இதற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிமுக கட்சியினரை கடுமையாக சாடினார். இது தொடர்பாக, கமல் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் “இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின்…

Read More

‘‘பாவனா கொடுமை எனக்கு நேர்ந்தால் காமவெறியர்களை கொலை செய்து இருப்பேன்’’ நடிகை ரகுல்பிரீத் சிங் ஆவேசம்

‘‘பாவனா கொடுமை எனக்கு நேர்ந்தால் காமவெறியர்களை கொலை செய்து இருப்பேன்’’ நடிகை ரகுல்பிரீத் சிங் ஆவேசம்

‘‘நடிகை பாவனாவைப்போல் நான் பாலியல் தொல்லையை அனுபவிக்க நேர்ந்து இருந்தால், செக்ஸ் வெறியர்களை கொலை செய்து இருப்பேன்’’ என்று நடிகை ரகுல்பிரீத் சிங் கூறினார். ரகுல்பிரீத் சிங் அதிர்ச்சி தடையற தாக்க, என்னமோ ஏதோ, புத்தகம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘‘நடிகை பாவனாவைப்போல் நான் பாலியல் தொல்லையை அனுபவிக்க நேர்ந்து இருந்தால், செக்ஸ் வெறியர்களை கொலை செய்து இருப்பேன்’’ என்று நடிகை ரகுல்பிரீத் சிங் கூறினார். தடையற தாக்க, என்னமோ ஏதோ, புத்தகம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த ரகுல்பிரீத் சிங், கேரளாவில் நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் தொல்லைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:– ‘‘நடிகை பாவனாவுக்கு ஓடும் காரில் நடந்துள்ள…

Read More

நாகார்ஜுன் இளைய மகன் திருமணம் ரத்தானதால் நடிகை சமந்தா அதிர்ச்சி

நாகார்ஜுன் இளைய மகன் திருமணம் ரத்தானதால் நடிகை சமந்தா அதிர்ச்சி

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனுக்கு நாக சைதன்யா, அகில் என்று இரண்டு மகன்கள். இவர்கள் இருவருமே தெலுங்கில் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அகிலுக்கும் ஐதராபாத்தில் தொழில் அதிபராக இருக்கும் ஜி.வி.கே. ரெட்டியின் பேத்தியும் பே‌ஷன் டிசைனருமான ஸ்ரேயா பூபாலுக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலை இரு வீட்டு பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு திருமண நிச்சயதார்த்தத்தையும் முடித்தார்கள். இத்தாலியில் திருமணத்தை நடத்த முடிவு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 700 பேரை அழைத்து செல்வதற்காக விமான டிக்கெட்டுகள், இத்தாலியில் நட்சத்திர ஓட்டலில் அறைகள் போன்றவற்றை முன்பதிவு செய்தனர். இந்த நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலிக்கும் தகவல் வெளியாகி அவர்கள் திருமண நிச்சயதார்த்தத்தையும் தடபுடலாக நடத்தி முடித்தார்கள். முதலில் அகில் திருமணத்தை…

Read More

சைவ உணவே எனது ஆரோக்கியத்திற்கு காரணம்: நடிகை சுருதி ஹாசன்

சைவ உணவே எனது ஆரோக்கியத்திற்கு காரணம்: நடிகை சுருதி ஹாசன்

நான் 4 மாதங்களாக சைவ உணவு சாப்பிட்டு வருகிறேன் என நடிகை சுருதி ஹாசன் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை சுருதி ஹாசன். தமிழில் 7ஆம் அறிவு, 3, பூஜை போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  இவர் நடிப்பு தவிர்த்து பாடகி மற்றும் இசையமைப்பாளர் போன்ற பன்முக தன்மைகளை கொண்டவர். அவர் தனது டுவிட்டரில், கடந்த 4 மாதங்களாக சைவ உணவையே எடுத்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், இது எனது சிறந்த முடிவுகளில் ஒன்று.  சைவ உணவினை தழுவியது எனது ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.  அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். சைவ உணவுடன்,…

Read More

பாவனா கடத்தலில் நயன்தாரா டிரைவருக்கு தொடர்பா?

பாவனா கடத்தலில் நயன்தாரா டிரைவருக்கு தொடர்பா?

நடிகை பாவனா கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொச்சியில் தனது கார் டிரைவர் உள்ளிட்டோர் அடங்கிய கும்பலால் காரில் கடத்தப்பட்டு, பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் ரவுடிகளைத்தான் தங்களின் பாதுகாவலர்களாகவும், டிரைவராகவும் நியமித்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. முன்னணி நடிகையான நயன்தாராவிடம் சேது என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர்தான் நயன்தாராவுக்கு பாதுகாவலராகவும் உள்ளார். கடந்த 8 வருடங்களுக்கு முன் ஆலப்புழாவில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் 5 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள…

Read More

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிட தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிட தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தமிழ் படத் தயாரிபாளர் சங்க ேதர்தல் நடத்தும் அதிகாரியாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டார். பின்னர் ேதர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றார். இதில் நடிகர் விஷால் கொடுத்த விண்ணப்பத்தை பரிசீலித்தார். பின்னர் நடிகர் விஷால் மனுவை ஏற்பதாக நீதிபதி ராஜேஸ்வரன் அறிவித்தார். இதை எதிர்த்து  தயாரிப்பாளர் கேயார் மற்றும் கிஷோர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடத்த நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடிகர் விஷால் இந்த தேர்தலில் போட்டியிட…

Read More
1 17 18 19 20 21 26