மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி; 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி…!

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி; 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி…!

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்குவழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரி கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், பாரத் பயோடெக் உருவாகியுள்ள மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய மருந்து மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு இன்று அனுமதி வழங்கியுள்ளது. மூக்குவழியாக செலுத்தப்படும் இந்த கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசாக பயன்படுத்தப்பட உள்ளது….

Read More

மலையில் தோன்றி: கோஷம் எழுப்பிய பக்தர்கள் பரவசம்

மலையில் தோன்றி: கோஷம் எழுப்பிய பக்தர்கள் பரவசம்

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மகர விளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் (திருவாபரணங்கள்) அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அய்யப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்துச் சென்றார். இதனையடுத்து மகரஜோதி நாளில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்று மகரசங்கராந்தி பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லும் நேரத்தில் ஐயப்பனுக்கு இந்த பூஜை நடத்தப்படும். இதன்படி இன்று மதியம் இந்த பூஜை நடைபெற்றது….

Read More

ஏரியில் பாலம் கட்டும் சீனாவால் நமக்கு என்ன பிரச்சினை?

ஏரியில் பாலம் கட்டும் சீனாவால் நமக்கு என்ன பிரச்சினை?

அடாவடிக்கு பெயர் போன நாடாக சீனா மாறி வருகிறது. ஒற்றை கட்சி ஆட்சி என்பதாலோ என்னவோ, உலகத்துக்கே தான் வைத்தது தான் சட்டம் என்ற நினைப்பு, சீன அதிபர் ஜின்பிங்குக்கு வந்து விட்டது போலும். பதிவு: ஜனவரி 05, 2022 08:38 AM ஒரு பக்கம் தைவானை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து வருகிறது. இன்னொரு பக்கம், இந்தியாவுடன் சீனாவுக்கு நீண்ட நெடுங்காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிற சூழலில் இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்கவும் முயற்சிக்கிறது. கல்வான் தாக்குதல் இதற்கிடையேதான் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய படைகளுடன் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் மோதல்போக்கில் சீன துருப்புகள் ஈடுபட்டு வருகின்றன. அதே ஆண்டின்…

Read More

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இந்தியா… டெல்லி மருத்துவர் பேட்டி

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இந்தியா… டெல்லி மருத்துவர் பேட்டி

நாட்டில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இவற்றில் டெல்லி, மராட்டியம் அதிக அளவிலான ஒமைக்ரான் பாதிப்புகளை கொண்டுள்ளன. இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த மருத்துவர் எஸ். சந்திரா செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் 3வது அலையின் தொடக்கத்தில் நாடு உள்ளது என காட்டுகிறது. இந்த காலகட்டத்தில், ஒமைக்ரான் வகை கொரோனா ஆதிக்கம் செலுத்தும். டெல்டா வகை கொரோனாவை விட இதன் அறிகுறிகளின் கடுமை மிக குறைவாகவே உள்ளது. அதனால் பாதிப்பு அதிகளவில் இருக்க…

Read More

மும்பையில் ஒரேநாளில் 1,377 பேருக்கு கொரோனா

மும்பையில் ஒரேநாளில் 1,377 பேருக்கு கொரோனா

மும்பையில் அதிகரிப்பு மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் 2-வது அலை ஏற்பட்டு மக்களை ஆட்டிப்படைத்தது. அதன்பிறகு மாநிலத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. நவம்பர் மாதம் முதல் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-க்கும் குறைவாகவே இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. நேற்று மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன்படி புதிதாக 2 ஆயிரத்து 172 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 22 பேர் பலியானார்கள். இதேபோல மாநில தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு திடீரென எகிறி உள்ளது. இங்கு நேற்று ஒரேநாளில் 1,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது….

Read More

காசி விஸ்வநாதர் கோவில் தமிழ் டிரஸ்ட்டியுடன் நேர்காணல் !!

காசி விஸ்வநாதர் கோவில் தமிழ் டிரஸ்ட்டியுடன் நேர்காணல் !!

காசி விஸ்வநாதர் கோவில் காரிடார்பற்றிய புது தகவல்கள் !! தற்சமயம் அமைந்துள்ள கோவில் வல்லஹத்தின் முக்கியத்துவம் !! காசி விஸ்வநாதர் – அன்னபூரணா தேவியின் மகிமை !! கிளிக் செய்து கோவிலின் முதல் தமிழ் டிரஸ்டி ஸ்ரீ வெங்கட்ராமன கனபாடிகளிடமிருந்து கேட்டு கண்டு … அனைவரோடும் பகிரவும்

Read More

தமிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,00,342 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,41,013 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 691 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,97,244 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,691 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 7,078 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை…

Read More

ரஜினியின் புதிய பட இயக்குனர் முடிவானதா?

ரஜினியின் புதிய பட இயக்குனர் முடிவானதா?

அண்ணாத்த படம் திரைக்கு வந்த நிலையில் ரஜினிகாந்துக்கு லேசான உடல்நல குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவர் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிறார். ரஜினியின் புதிய படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை அழைத்து பேசினார். இதனால் ரஜினியின் புதிய படத்தை அவர் இயக்கலாம் என்று கூறப்பட்டது. மேலும் சில இயக்குனர்களையும் அழைத்து ரஜினி கதை கேட்டதாக தகவல் வெளியானது. தேசிங்கு பெரியசாமியுடன் டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், படையப்பா, லிங்கா…

Read More

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 66 பேர் இந்திய வம்சாவளியினர் – அமெரிக்கா தகவல்

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 66 பேர் இந்திய வம்சாவளியினர் – அமெரிக்கா தகவல்

உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறியப்படுகிற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்திய வம்சாவளிகள் 66 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த தகவலை 2020-ம் ஆண்டின் பயங்கரவாதம் பற்றிய அறிக்கையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அந்த அறிக்கையில் அவர் குறிப்பிடும்போது, “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2039-ஐ அமல்படுத்துவதில் அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயல்படுகிறது. நவம்பர் மாத நிலவரப்படி, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்திய வம்சாவளிகள் 66 பேர் உள்ளனர். கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு எந்தவொரு வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளும் திருப்பி அனுப்பி வைக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

Read More

ஒமைக்ரான்: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

ஒமைக்ரான்: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

இது குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- ஒமைக்ரான் பரவலைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல் முறைகளான கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பது இல்லை என்பது வேதனை அளிக்கிறது. ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தவும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக்…

Read More
1 2 3 4 5 50