சுஜித்தை மீட்க போராட்டம் : 55 அடி ஆழ குழிக்குள் வீரர் இறங்கி ஆய்வு

சுஜித்தை மீட்க போராட்டம் : 55 அடி ஆழ குழிக்குள் வீரர் இறங்கி ஆய்வு

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி, தொடர்ந்து 73 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது 55 அடி ஆழ குழிக்குள் தீயணைப்பு வீரர் ஒருவர் ஏணி மூலம் இறங்கி ஆய்வு செய்தார். ஆழ்துளை கிணற்றின் அருகே அதிநவீன நிலத்தை துளையிடும் ‘ரிக்’ இயந்திரத்தை கொண்டு குழி தோண்டப்பட்டது. கடின பாறைகள் இருந்ததால் தோண்டும் பணி தாமதமாகியது. இதுவரை 55 அடி வரை குழி தோண்டப்பட்ட நிலையில், 60 அடிக்கு மேல் மண் இருப்பதாக கூறப்படுகிறது. ரிக் இயந்திரம் மூலம் இரவு 9 மணி வரையில் 55 அடி குழி தோண்டப்பட்டது. பின், மண்ணின் தரம் மற்றும் பாறையின்…

Read More

நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம்

நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம்

ஆஸ்திரேலியாவின் கேரியர் குவாண்டாஸ் விமான போக்குவரத்து சேவை இடைவிடாது மிக நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் விமானத்தின் சோதனையை முடித்துள்ளது. இந்த சோதனையில் பயணிகள், விமான ஓட்டுனர்கள்,மற்றும் பணியாளர்களின் பயணம் எந்த விதத்தில் பாதிக்கிறது என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது. போயிங் 787-9 ரக விமானம் 49 பயணிகளுடன் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் நியூயார்கில் இருந்து சிட்னி வரை 16,200 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளது. அடுத்த மாதம் இதே நிறுவனம் லண்டனில் இருந்து சிட்னி வரை இடைவிடாமல் விமானத்தை இயக்கும் சோதனையில் ஈடுபடவுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இடைவிடாது இயங்கும் விமான சேவையை துவங்குவது குறித்து குவாண்டாஸ் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது….

Read More

கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி ! !

கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி ! !

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே கணவரை மனைவி வேறொரு பெண்ணிடம் விற்ற சம்பவம் நடந்துள்ளது. சில ஆண்டுகளாகவே கணவர் தனது வீட்டை விட்டு வெளியேறி, அந்த பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இது தெரிந்திருந்தும் மனைவி அடிக்கடி சென்று கண்டித்து வந்துள்ளார். மேலும், தன்னுடன் வந்துவிடுமாறும் கணவரை கேட்டுள்ளார். முதலில் இந்த ஆஃபரை ஏற்றுக்கொள்ளாத மனைவி, பின்னர் தொகையை உயர்த்தியுள்ளார். ரூ.17 லட்சம் தொடங்கி பேரம் நடந்து ஒருவழியாக ரூ.5 லட்சத்தில் பேரம் முடிந்துள்ளது. கணவரை திரும்ப அழைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என்று அந்தப் பெண்ணிடம் மனைவி கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மனைவியான அந்த பெண்ணுக்கு கடன் இருப்பதை…

Read More

கேரம் போர்டிற்காக முத்தலாக்: கணவர் மீது வழக்கு

கேரம் போர்டிற்காக முத்தலாக்: கணவர் மீது வழக்கு

ராஜஸ்தானில் கேரம் போர்டை எடுத்துச் செல்லாத மனைவிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தில் உள்ள அன்டா பகுதியை சேர்ந்தவர் ஷப்ரூநிஷா (24). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவர், மகனுடன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஷப்ரூநிஷா, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அவரது கணவர் ஷாகில் அகமது வழிமறித்துள்ளார். தங்கள் மகனுக்காக கேரம் போர்டை எடுத்துச் செல்லும்படி கூறி உள்ளார். அதற்கு மறுத்த ஷப்ரூநிஷாவை, ஷாகில் அகமது அடித்து துன்புறுத்தியதுடன், அந்த இடத்திலேயே முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இது தொடர்பாக அக்.,1 அன்று மாலை கணவர்…

Read More

உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு : நீட் ஆள்மாறாட்ட விவகாரம்

உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு : நீட் ஆள்மாறாட்ட விவகாரம்

சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் உதித் சூர்யா(21). இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 முடித்தார். இரண்டு முறை ‘நீட்’ நுழைவுத் தேர்வு எழுதியும், உதித் சூர்யா தேர்ச்சி பெறவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், மூன்றாவது முயற்சியாக, மே 5 ல் நடந்த நீட் தேர்வில் உதித் சூர்யாவை பங்கேற்க வைத்தார். இதில், அவர், 385 மதிப்பெண்கள் பெற்று, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் இணைந்தார். இவர் மும்பையில், வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்ததும், தேர்ச்சி பெற்றதும், ஆள்மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்ததும் தெரியவந்தது.  இது தொடர்பாக கல்லூரி…

Read More

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் நிலநடுக்கம்; 22 பேர் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் நிலநடுக்கம்; 22 பேர் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நியூ மீர்பூர் பகுதியருகே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் நாட்டின் வடபகுதியில் பல்வேறு நகரங்கள் குலுங்கின.  சில வீடுகள் இடிந்து விழுந்தன.  அந்த பகுதியில் உள்ள மசூதி ஒன்றும் சேதமடைந்தது. இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் மருத்துவமனைகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.  பல வாகனங்கள் சாலைகளில் ஏற்பட்ட வெடிப்புகளுக்குள் விழுந்தன.  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அச்ச உணர்வால் கட்டிடத்தில் இருந்து பொதுமக்கள் தப்பியோடினர்.  ஜீலம் கால்வாய் சேதமடைந்து உள்ளது.  அதில் இருந்து நீரானது பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இந்நிலநடுக்கத்திற்கு 19 பேர் பலியாகி உள்ளனர்.  300…

Read More

தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்

தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.இது தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ள உத்தரவில்,தமிழகத்தைச் சேர்ந்த இமாச்சல பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதி ராமசுப்ரமணியன், ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீபதி ரவீந்திரபட், கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக ஜனாதிபதி பதவி உயர்வு தந்து ஒப்புதல் அளித்தார்.

Read More

சிவபக்தரின் ஜீவசமாதி அறிவிப்பு: சிவகங்கையில் குவிந்த பக்தர்கள்

சிவபக்தரின் ஜீவசமாதி அறிவிப்பு: சிவகங்கையில் குவிந்த பக்தர்கள்

சிவகங்கை அருகே, பாசாங்கரையில் பிறந்தவர், இருளப்பசுவாமி, 77. இவர், 12 வயதில் இருந்தே சிவபக்தர். கடந்த ஆண்டு வரை, திருவண்ணாமலை உட்பட சிவத்தலங்களுக்கு நடந்தே சென்றுள்ளார். 1700 கி.மீ., க்கு மேல் பாதயாத்திரை சென்றுள்ளார். சில தினங்களுக்கு முன், ‘செப்., 12 இரவு, 12:00 மணி முதல் மறுநாள் காலை, 5:00 மணிக்குள் என் உடலை விட்டு, உயிர் பிரியும். அன்றே எனக்கு ஜீவசமாதி கட்டவேண்டும்’ எனக் கூறியுள்ளார். இதன்படி, அவரது, 46 சென்ட் நிலத்தில் எங்கு சமாதி கட்ட வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார். சில நாட்களாக, வீட்டில் தியானத்தில் இருந்தவர், இன்று காலை (செப்.12) முதல், ஜீவசமாதி அடைய உள்ள இடத்தில், தியானம் துவக்கினார்….

Read More

பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் பெண்கள்

பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் பெண்கள்

தென்கொரியாவில் பெண்கள் மேலாடைக்கு உள்ளே பிரா அணியாமல் இருக்கும் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். #NoBra என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இது சமூக ஊடகத்தில் பெண்கள் இயக்கமாக மாறி வருகிறது. தென்கொரிய நடிகையும், பாடகியுமான சுல்லி என்பவர், லட்சக் கணக்கானோர் பின்தொடரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாம் பிரா அணியாதிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை பரவி வருகிறது. தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக அவர் மாறியுள்ளார். பிரா அணிவதோ அல்லது அணியாமல் இருப்பதோ ”தனிப்பட்ட சுதந்திரம்” என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக இந்த இயக்கம் அமைந்துள்ளது. பிரா அணியாத இயக்கம் ஆதரவு தெரிவித்து நிறைய பதிவுகள் பதிவிடப்பட்டுள்ள போதிலும்,…

Read More

ஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம்

ஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம்

ஒடிசாவில் குடித்து விட்டு ஆட்டோ ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆட்டோ டிரைவருக்கு ரூ.47,500 அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையில், மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய உயர்த்தப்பட்ட அபராதங்கள், நாடு முழுவதும், 1ம் தேதி(செப்.,1) அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டியது, ஆட்டோவில் தேவையான ஆவணங்களை கொண்டு செல்லாததற்காக, ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. குடிபோதையில் ஆட்டோ ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், காற்று மாசு ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம், வண்டிக்கு பர்மிட் இல்லாததற்காக ரூ.10 ஆயிரம், பதிவெண் இல்லாமல் ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், இன்சுரன்ஸ் புதுப்பிக்காததற்காக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.47,500…

Read More
1 2 3 4 22