இந்தியா முழுவதும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க சுமார் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்

இந்தியா முழுவதும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க சுமார் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் ரீஎன்ட்ரி ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா பீச்சர் போன் மற்றும் மூன்று ஸ்மார்ட்போன்களால் துவங்கியுள்ளது. சர்வதேச சந்தையை தொடர்ந்து நோக்கியா 3310 (2017), நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் அறிமுகம் செய்யப்பட்டு நோக்கியா 6 தவிர மற்ற சாதனங்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகின்றன. அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் நோக்கியா 6 முன்பதிவுகள் ஜூலை 14ம் தேதி துவங்கியது. ஆகஸ்டு 23ம் தேதி விற்பனைக்கு வர இருக்கும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்க முன்பதிவு செய்துள்ளனர் என அமேசான் இந்தியா…

Read More

இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மத்திய அரசு சிறப்பு விருது

இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மத்திய அரசு சிறப்பு விருது

தூய்மை இந்தியா என்ற ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை மத்திய அரசிடமிருந்து மதுரை நகராட்சி பெறவுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தூய்மை இந்தியா சிறந்த கோயிலுக்கான தேர்வு தொடங்கப்பட்டு 10 இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வாகியுள்ளது. நாளை (அக்டோபர் 2, 2017) மதுரை மாவட்ட ஆட்சியர் கே.வீர ராகவ ராவ், நகராட்சி ஆணையர் எஸ்.அனீஷ் சேகர் ஆகியோர் மத்திய அமைச்சர் உமா பாரதியிடமிருந்து விருதைப் பெறுகின்றனர். இது குறித்து அனீஷ் சேகர் கூறும்போது, முதலில் கோயிலின் சுற்றுப்புறத்தைத்…

Read More

நல்ல சம்பளம் கிடைத்தும் போராட்டம் நடத்துவதா; மாணவர்கள் மீது அக்கறையே இல்லையா?- ஆசிரியர்களைக் கடிந்து கொண்ட நீதிபதி கிருபாகரன்

நல்ல சம்பளம் கிடைத்தும் போராட்டம் நடத்துவதா; மாணவர்கள் மீது அக்கறையே இல்லையா?- ஆசிரியர்களைக் கடிந்து கொண்ட நீதிபதி கிருபாகரன்

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களால் மாணவர் சமுதாயம்தான் பாதிக்கப்படுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு உடனடியாக கவுன்சிலிங் மையத்தை அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நாளை இன்னொரு வழக்குடன் சேர்த்து விசாரிப்பதாக தெரிவித்த நீதிபதி கிருபாகரன் ஆசிரியர் போராட்டம் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்தார். அப்போது நீதிபதி கிருபாகரன், ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். போராடும் ஆசிரியர்கள் மாணவர்கள் நிலை பற்றி கவலை கொள்வதில்லை என்று தெரிவித்தார்….

Read More

அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்வது கட்டாயம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்வது கட்டாயம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

வாகன ஓட்டுநர்கள் தங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்வது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இம்மாதம் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை தங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் பொது நல வழக்கு தொடர்ந்தது. கடந்த 1-ம் தேதி நீதிபதி துரைசாமி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மோட்டார் வாகனச் சட்டத்திலேயே இம்மாதிரியான கட்டாயம் வலியுறுத்தப்படவில்லையே என்று கேள்வி எழுப்பினார். மேலும் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் உரிமத்துக்கு ஏதேனும் இழப்பு உண்டானால் யார் பொறுப்பேற்பார்கள்…

Read More

மலையாள மக்களுக்காக உதகையில் ‘ஓணம் சந்தை’

மலையாள மக்களுக்காக உதகையில் ‘ஓணம் சந்தை’

நீலகிரி மாவட்டத்தில் வாழும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகை பொருட்களை வாங்க ‘ஓணம் சந்தை’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கணிசமான மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களை கட்டும். மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை, ரயில்வே துறையில் மலையாள மக்கள் அதிகம் பேர் பணிபுரிவதால், ஓணம் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறும். மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஓணம் நிகழ்ச்சிகள் ஒரு வாரத்துக்கு முன்னரே தொடங்கி விட்டது. உதகை கிரெசண்ட் கேசில் பள்ளி, குன்னூர் பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரிகளில் ஓணம் திருவிழாக்களை மாணவர்கள் நடத்தினர். விழாக்களில் பூக்களம் அமைத்து மாவேலி அரசரை மாணவ, மாணவியர் வரவேற்றனர். தொடர்ந்து, மாணவியர் மற்றும் ஆசிரியைகளை…

Read More

ரத்து செய்யப்பட்ட சலுகைகள் தர சிறைத் துறை முடிவு?-உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் முருகன்

ரத்து செய்யப்பட்ட சலுகைகள் தர சிறைத் துறை முடிவு?-உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் முருகன்

ரத்து செய்யப்பட்ட அனைத்து சலுகைகளும் தரப்படும், பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என சிறைத் துறை தரப்பில் அளித்த வாக்குறுதியையடுத்து, வேலூர் சிறையில் 12 நாட்களாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை முருகன் கைவிட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 26 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், ஜீவசமாதி அடைய விருப்பம் தெரிவித்து சிறைத் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தார். இதையடுத்து, கடந்த 18-ம் தேதி முதல் அவர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். இதனால், சிறையில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை எனவும் சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்….

Read More

புளூவேல் ஆன்லைன் விளையாட்டு: மதுரை மாணவர் தற்கொலை

புளூவேல் ஆன்லைன் விளையாட்டு: மதுரை மாணவர் தற்கொலை

புளூவேல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட மதுரை மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே மொட்டமலை கலைஞர் நகரை சேர்ந்தவர் ஜெயமணி என்பவரது மகன் விக்னேஷ் (19). இவர் பசுமலையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில் விக்னேஷ் தனது இடது கையில் திமிங்கலத்தின் படம் வரைந்தும், புளூவேல் விளையாட்டு குறித்து காகிதத்திலும் எழுதி இருந்தது தெரியவந்தது. எனவே அவர் புளூவேல் எனப்படும் நீலத் திமிங்கல ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆஸ்டின்பட்டி போலீஸார்…

Read More

உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் கலந்துகொள்ளவென வருகை தரவுள்ள பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா

உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் கலந்துகொள்ளவென வருகை தரவுள்ள பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா

செப்டம்பர் 2ம் 3ம் திகதிகளில் ஸ்காபுறோ மற்றும் மொன்றியால் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ள உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் கலந்துகொள்ளவென வருகை தரவுள்ள பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா சென்னையிலிருந்து அமெரிக்கா பயணமாகின்றார். அங்கு 26ம் திகதி சிக்காகோ நகரில் பட்டிமன்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து சிறப்பிக்கின்றார். பின்னர் புதன்கிழமை 30ம் திகதி கனடா வருகின்றார். இங்கு அவர் அன்று மாலை பத்திரிகையாளர்கள் ஊடக நண்பர்கள் மற்றும் விழாவிற்கு ஆதரவு தரும் அனுசரைணையாளர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களோடு இராப்போசன விருந்தொன்றிலும் கலந்து கொள்கினறார். அத்துடன் தன்னோடு பட்டிமன்றங்களில் பேசவுள்ள கனடா வாழ் எழுத்தாளர்களையும் சந்திக்கின்றார். இந்த சந்திப்பும் இராப்போசன விருந்தும் ஸ்காபுறோவில் மார்க்கம்-பெயின்றட் போஸ்ட் சந்திப்புக்கு அருகில்…

Read More

6-வது நாளாக சிறையில் உண்ணாவிரதம்: முருகன் உடல்நிலை பாதிப்பு: மருத்துவக் குழுவினர் தகவல்

6-வது நாளாக சிறையில் உண்ணாவிரதம்: முருகன் உடல்நிலை பாதிப்பு: மருத்துவக் குழுவினர் தகவல்

வேலூர் சிறையில் நேற்று 6-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட முருகனின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், வேலூர் மத்திய சிறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு மேல் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் சிறையிலேயே ‘ஜீவசமாதி’ அடைய, கடந்த 18-ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். 3 வேளை நீரை மட்டும் பருகி, மவுனவிரதம் மேற்கொண்டுள்ளார். 6-வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முருகனின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். முருகனுக்கு கட்டாயமாக உணவு கொடுப்பது, சிகிச்சைகளை அதிகரிப்பது உள்ளிட்ட…

Read More

பாரிஸ் பயணம் – 11 : கண்டதும்! கேட்டதும்!! குரு அரவிந்தன்

பாரிஸ் பயணம் – 11 :  கண்டதும்! கேட்டதும்!! குரு அரவிந்தன்

‘கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீரவிசாரித்து அறிவதே மெய்!’ எனது கண்ணில் பட்டோ அல்லது எனது காதில் புகுந்தோ ஏதாவது விதத்தில் அவ்வப்போது மனதில் பதிந்திருந்தால் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். இது தேடலுக்கான தகவல் மட்டுமே! …………………………………………………………..  பாரிஸ் பயணம் – 11    பாரிஸில் நாங்கள் பார்த்த இடங்கள் பழைய நினைவுகளை மீட்டுப் பார்க்க வைத்தன. இரவு உணவை வெளியே அருந்திவிட்டு பேருந்தில் தங்குமிடம் சென்றோம். மறுநாள் எங்கெல்லாம் செல்லலாம் என்பது பற்றி கூகுள் பண்ணிப் பார்த்தோம். ஏற்கனவே நாங்கள் சில இடங்களைத் தெரிவு செய்திருந்தோம். ஆனாலும் அருகருகே இருக்கும் இடங்கள் என்றால் நேரத்தை மிச்சம்…

Read More
1 12 13 14 15 16 19