உயிரிழந்த இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல்: கதறி அழுத குடும்பத்தினர்

உயிரிழந்த இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல்: கதறி அழுத குடும்பத்தினர்

ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீட்டிற்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவரது குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பந்தப்பட்ட இரண்டுபேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் ஒரு மாத தேடுதல் வேட்டையில் கொள்ளையர்கள் தினேஷ், சௌத்ரி பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் எல்லையில் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு…

Read More

நடுரோட்டில் நடனம்: முஸ்லிம் பெண்களை மிரட்டியவர்கள் மீது வழக்கு

நடுரோட்டில் நடனம்: முஸ்லிம் பெண்களை மிரட்டியவர்கள் மீது வழக்கு

திருவனந்தபுரம்: எய்ட்ஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில், ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடிய மூன்று முஸ்லிம் பெண்கள் குறித்து, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தவர்கள் மீது, கேரள மகளிர் கமிஷன் வழக்கு பதிவு செய்துள்ளது. நடுரோட்டில் திடீர் நடனம் கேரள மாநிலம், மலப்புரம் நகரின் முக்கியமான சாலை சந்திப்பில் கடந்த டிச., 1ம் தேதி மூன்று முஸ்லிம் பெண்கள் திடீரென, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர். அவர்கள் பல் மருத்து கல்லூரி மாணவிகள். உலக எய்ட்ஸ் தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில் நடமாடினர் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால், மூன்று பெண்களும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து தலையை துணியால் மூடிக்…

Read More

‘ஒக்கி’ புயல் தாண்டவம்: 4 நாட்களாகியும் கரை திரும்பாத குமரி மீனவர்கள்; கண்ணீருடன் சாலை மறியல் செய்த உறவினர்கள்

‘ஒக்கி’ புயல் தாண்டவம்: 4 நாட்களாகியும் கரை திரும்பாத குமரி மீனவர்கள்; கண்ணீருடன் சாலை மறியல் செய்த உறவினர்கள்

கடலுக்குச் சென்ற மீனவர்கள் நான்கு நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களை விரைவில் கண்டுபிடித்துத் தரக்கோரியும் குமரி, சின்னத்துறை மாநில நெடுஞ்சாலையில் மீனவர் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் உள்ள மீனவர் கிராமம் சின்னத்துறை. அங்குள்ள மீனவர் குடும்பங்கள், ”கடலில் மாயமான நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்னும் வீடு வந்து சேரவில்லை, காணாமல் போனவர்கள் குறித்த முறையான தகவல் கிடைக்கவில்லை, கடலோர காவல்படையின் தேடுதலில் தங்களுக்குத் திருப்தி இல்லை. மீனவர்களுக்குத் தரப்பட்டுள்ள பிரத்யேக எண் அடிப்படையில் தேடுவது குறித்து கடலோர காவல்படையினர் பரிசீலிக்கவில்லை” உள்ளிட்ட புகார்களை முன்வைத்து சின்னத்துறை மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ்…

Read More

இளவரசர் ஹாரி – மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது?

இளவரசர் ஹாரி – மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது?

இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் வின்ட்ஸர் கோட்டையில் நடக்கவுள்ளதாக கென்னிங்ஸ்டன் அரண்மனை அறிவித்துள்ளது. விளம்பரம் இசை, பூக்கள், வரவேற்பறை உள்ளிட்ட அனைத்து சேவைகளின் செலவுகளையும் அரச குடும்பம் ஏற்கிறது. திருமண தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் .இங்கிலாந்து திருச்சபையில் செல்வி மார்கெலுக்கு திருமணத்துக்கு முன்பு ஞானஸ்நானம் செய்யப்படுகிறது. திருமணத்தின் அனைத்து அம்சங்களுக்குமான செயல்முறை குறித்து முப்பத்து மூன்று வயதான இளவரசர் ஹேரியும், செல்வி மார்கெலும் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாகவும். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொது மக்கள் உணரத் தேவையான திட்டங்கள் குறித்து தீவிரமாக வேலை செய்து வருவதாகவும் இளவரசர் ஹேரியின் செய்திதொடர்பாளர் ஜேசன் நாஃப் தெரிவித்துள்ளார்….

Read More

எகிப்து மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 155 ஆக உயர்வு

எகிப்து மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 155 ஆக உயர்வு

வடக்கு செனாய் பகுதியில் மசூதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளனர், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்பு படை ஆதரவாளர்கள் தொழுகையில் ஈடுபட்ட போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவித்து உள்ளது. அல்-ரவுடாக் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 75 பேர் காயம் அடைந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே தாக்குதலில் 155 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் அந்நாட்டு மீடியா தகவல்கள் தெரிவிக்கிறது. மருத்துவமனைகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. வடக்கு செனாயில் ஐ.எஸ். ஊடுருவல்காரர்களுடன்…

Read More

இந்தோனேசியா: பாலி தீவில் வெடித்த எரிமலை அச்சத்தில் மக்கள்

இந்தோனேசியா: பாலி தீவில் வெடித்த எரிமலை அச்சத்தில் மக்கள்

இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெடித்தது இதனால் அந்த பகுதியில் வசிக்கும் அச்சம் அடைந்துள்ளனர். இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை தற்போது வெடிக்க தொடங்கி உள்ளது. அதில் இருந்து வரும் புகை 2300 அடி உயரத்திற்கு எழுகிறது.  இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே அங்கு தங்கி இருக்கும் கிராம மக்கள் வேறு இடத்திற்கு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன், கால்நடை விலங்களுடன் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பாலித்தீவில் எரிமலை வெடிக்க தொடங்கி உள்ளதால் சுற்றுலா…

Read More

ஆக்கிரமிப்புகளால் சென்னை புறநகரில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

ஆக்கிரமிப்புகளால் சென்னை புறநகரில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் 8 நாட்களாக தேங்கி இருக்கும் நீர் வெளியேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த 31-ந்தேதியில் இருந்து மழை பெய்து வருகிறது. முதல் 2 நாட்கள் நல்ல மழை பெய்தது. அதன்பின்னர், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீ புரம் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி, ஊராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த…

Read More

பாரம்பரிய உணவு முறை டெங்குவை குறைக்கும்: மருத்துவக் கல்வி இயக்குநர் புதிய தகவல்

பாரம்பரிய உணவு முறை டெங்குவை குறைக்கும்: மருத்துவக் கல்வி இயக்குநர் புதிய தகவல்

பாரம்பரிய உணவு முறைகளைப் பின்பற்றினாலே காய்ச்சலை பெருமளவுக்கு குறைத்துவிடலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் ஏ.எட்வின் ஜோ தெரிவித்தார். தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில்தான் அதிகமான ‘டெங்கு’ காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் டெங்குவுக்கு பலியாகியுள்ளனர். ஆனால், மாவட்ட சுகாதாரத் துறையும், மருத்துவத் துறையும் சேர்ந்து டெங்கு இறப்புகளை வெளிப்படையாக கூறாமல் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் 600-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். வீடுவீடாக ஆய்வு தற்போது ஓரளவு ‘டெங்கு’ கட்டுக்குள் வந்தநிலையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கிவிட்டதால் மீண்டும் டெங்கு காய்ச்சல் விசுவரூபம் எடுக்கும் அபாயம் இருக்கிறது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளாட்சி…

Read More

சென்னையில் தொடரும் அவலம்: வெள்ளத்தில் சடலமாக மிதந்த பிச்சைக்காரர்

சென்னையில் தொடரும் அவலம்: வெள்ளத்தில் சடலமாக மிதந்த பிச்சைக்காரர்

சென்னை நகரில் வெள்ளத்தில் சிக்கி மரணத்தை தழுவிய பிச்சைக் காரர் ஒருவரின் சடலம் தண்ணீரில் மிதக்கின்றது. தமிழக அரசின் மனிதநேயம் காற்றில் பறக்கின்றது. கட்சிக் கொடிகள் கட்டடங்களில் அசைகின்றன சினிமா நடிகர்கள் சிம்மாசனத்தை தொடுவதற்காக வரிசையில் வருகின்றார்கள்

Read More

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்- 8 பேர் பலி

அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்- 8 பேர் பலி

நியூயார்க்: அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் அருகே பாதசாரிகள் செல்லும் பாதையில் கார் புகுந்து ஏற்படுத்திய விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளார், அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் அருகே உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் செல்லும் ரோட்டில் தாறுமாறாக ஓடி பயங்கரவாத தாக்குதல் ஏற்படுத்தியது. இதில் 8 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கரவாத தாக்குதல் ஏற்படுத்திய நபர் காரில் இருந்து இறங்கி கையில் போலி துப்பாக்கியுடன் மக்களை மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை சுட்டு பிடித்துள்ளார். இது குறித்து நியூயார்க் மேயர் பேசுகையில் இச்சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என்றும், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிராத்தனை…

Read More
1 9 10 11 12 13 17