யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியைத் தொடரவேண்டும் என்ற பெற்றோரின் விருப்பத்தை ஏற்காத கிளிநொச்சி மாணவன் தற்கொலை

யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியைத் தொடரவேண்டும் என்ற பெற்றோரின் விருப்பத்தை ஏற்காத கிளிநொச்சி மாணவன் தற்கொலை

யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியை தொடர பெற்றோர் வற்புறுத்திய காரணத்தினால் அதற்கு மறுப்பு தெரிவித்து மாணவன் ஒரு வன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தனது உயிரை மாய்த்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியைச் சேர்ந்ததி யாகேஸ்வரன் நிலாபவன் (வயது16) என்ற மாணவனே மேற்படி தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த மாணவன் கடந்த வருடம் க.பொ.தசாதாரண தர பரீட்சையில் தோற்றி இருந்தார். அண்மையில் வெளியாகிய பரீட்சை பெறு பேற்றில் சிறந்த பெறு பேறுகளையும் பெற்று சித்தியடைந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக நீர் வேலியில் உள்ளதனது பெரியம்மாவின் வீட்டில் தங்கி நின்று யாழ் நகர்ப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர…

Read More

சுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்பு

சுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்பு

சுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்அனைத்துலக தமிழர் பேரவையின் விசேட ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்துரையாடலில் ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்க சுவிஸ் சென்றுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் அரிபரந்தாமன்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க துணைத் தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருஷஸ்ணகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் பாரிவேந்தன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு தமது கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர்.இக்கலந்துரையாடலில் சுவிஸ் வாழ் தமிழர்கள்…

Read More

வட்டுக்கோட்டை பகுதியில் வயற் காணிக் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன

வட்டுக்கோட்டை பகுதியில்  வயற் காணிக் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான  ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன

வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வயற் காணியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான பழைய மற்றும் புதிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வட்டுக்கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் வீதியில் யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மையில் உள்ள வயற் காணியொன்றில் இருந்தே குறித்த பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்ப ட்டுள்ளன. இந்நிலையில் இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக மேலும் தெரியவருவ தாவது, கடந்த செவ்வாய்கிழமையன்று மாலை குறித்த வயற் காணியில் உள்ள கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த போது கிணற்று நீரானது வற்றவே கிணற்றுக்குள் இருந்த ஆயுதங்கள் வெளியே தென்பட்டுள்ளன.இதனையடுத்து குறித்த ஆயுதங்கள் காணப்படுவது தொடர்பாக குறித்த வயற்காணிக் குரியவர் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு…

Read More

யாழ்ப்பாணத்தில் மண்டைதீவில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

யாழ்ப்பாணத்தில் மண்டைதீவில்  அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் உள்ள, மண்டைதீவில் தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 50 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை தாம் ஆய்வு செய்ததாக அவர் கூறியுள்ளார்.தமிழர்களின் கலாசார தலைநகர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம், நீண்ட கிரிக்கெட் வரலாற்றைக்  கொண்டிருக்கின்ற போதிலும், 1970களில் தொடங்கிய உள்நாட்டுப் போரினால் வடக்கில் எந்தவொரு சர்வதேச தரம் வாய்ந்த மைதானங்களும் அமைக்கப்படவில்லை.இந்த நிலையிலேயே தற்போது மண்டைதீவில் சர்வதேச தரம்வாய்ந்த மைதானத்தை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்கு முன்னர் ஆனையிறவை அண்டியுள்ள பகுதிகளில் மைதானம் அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்திகள்…

Read More

வவுனியாவில் கொலை வழக்கொன்றில் 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை வழங்கிய நீதிபதி

வவுனியாவில் கொலை வழக்கொன்றில் 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை வழங்கிய நீதிபதி

வுனியா –ஸ்ரீராமபுரத்தில் ஒருவரைக் கொலை செய்த 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரனால் மரண தண்டனை விதித்து கடந்த செவ்வாய்கிழமையன்று தீர்ப்பளிக்கப்பட்டது.2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.கொலை தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி சட்ட மா அதிபரால் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இரண்டாம் , மூன்றாம் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படாமையால் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.முதலாவது பிரதிவாதிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து,…

Read More

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரியில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தர் விழா

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரியில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தர் விழா

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரியில் நடத்திய விவேகானந்தர் விழா கல்லூரியின் தம்பையா மண்படத்தில் அண்மையில் (10.01.2018 ) நடைபெற்றது. . கல்லூரியின் இந்து மன்றத் தலைவர் மதுராங்கி நந்தகோபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர் வேணுகா சண்முகரட்ணம் முன்னிலை வகித்தார். பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் கலந்து கொண்டார். விவேகானந்தரை மையப்படுத்தி மாணவிகள் வழங்கிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.

Read More

கிளிநொச்சியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்

கிளிநொச்சியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்

கிளிநொச்சியில் 12 வயது சிறு மியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 2 இலட்சம் ரூபாய் நட்டஈடும் விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன்தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு 07ஆம் மாதம் கிளிநொச்சியில் 12 வயதும் 6 மாதம் நிரம்பிய பருவமடையாத சிறுமயை கடத்தி சென்று தேவாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்தமை தொடர்பான வழக்கானது கடந்த செவ்வாய்கிழமையன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதிபதி இத்தீர்ப்பை வழங்கினார். குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் சாட்சியமளித்திருந்ததுடன் எதிரியும் தன்மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தார். அத்துடன் தாம் மது போதையில்…

Read More

விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கி கப்பல்கள் இரண்டு முள்ளிவாய்க்காலப்; பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கி கப்பல்கள் இரண்டு முள்ளிவாய்க்காலப்; பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கி கப்பல்களான இரண்டு மிதப்பிகள் முள்ளிவா ய்க்கால் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இந்த நீர்மூழ்கி கப்பல் விடுதலைப் புலிக ளின் தாயாரிப்பில் உருவாகியதாக குறிப்பிட ப்படுகின்றது.விடுதலைப் புலிகளின் அங்கையற் கண்ணி நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கிசெல்லும் சந்த ர்ப்பத்தில் அதனுடைய மேற்பகுதி கடல்மட்ட த்துடன் காணப்படும் என்று கூறப்படுகின்றது.கடற்கரும்புலிகள் தமது இலக்கு நோக்கி நகரும்போது எதிர்ப்படைக்கு அது தெரியாத வகையில் இருப்பதற்காக அவர்கள் இவ் வாறு பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.இறுதி யுத்தம் நடைபெற்று எட்டுவருட ங் கள் கடந்த நிலையிலும் விடுதலைப் புலிக ளின் தயாரிப்பில் உருவாகிய போர்த்தள பாடங்களை புதுமாத்தளன் பகுதியில் இரா ணுவத்தினர் தற்பொழுதும் காட்சிப்படுத்தியு ள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முகமறியா குழந்தைகளினதும் இளைஞர்களினதும் உயிர்காக்கும் முயற்சியில் வெற்றிகரமாக இயங்கும் கனடா வாழ் செந்தில் குமாரன்

முகமறியா குழந்தைகளினதும் இளைஞர்களினதும் உயிர்காக்கும் முயற்சியில் வெற்றிகரமாக இயங்கும் கனடா வாழ் செந்தில் குமாரன்

இலங்கையில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் குடும்பஸ்த்தர்கள் ஆகியோரின் உயிர்காக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி கண்டுள்ள கனடா வாழ் செந்தில் குமரன் கனடா திரும்பியுள்ளார். தனது சொந்தப் பணம் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணம் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் ஆகியோரிடமி(ருந்து சேகரிக்கப்பட்ட நிதி ஆகியவற்றின் “பலத்தோடு” இலங்கை சென்று நேரடியாக இந்த இதய சத்திர சிகிச்சைகளை கண்டு வந்துள்ளார். அத்துடன் கொழும்பில் உள்ள டுயுNமுயு ர்ழுளுPஐவுயுடுளு வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள் மற்றும் வைத்தியப் பெருந்தகைகள் ஆகியோரையும் சந்தித்து நன்றி தெரிவித்து வந்துள்ளார்.இவ்வாறான சந்திப்புக்குரிய காரணம் மேற்படிடுயுNமுயு ர்ழுளுPஐவுயுடுளு வைத்தியசாலை நிர்வாகம் மேற்படி வறிய நிலையில் உள்ளவர்களின் சந்திர சிகிச்சைக்காக நியம…

Read More

“Thai Pongal” Festival was celebrated among Tamil Hindus

“Thai Pongal” Festival was celebrated among Tamil Hindus

In Scarborough, “Thai Pongal” Festival was celebrated among Tamil Hindus and by some Managements of Temples in Candada. Our Uthayan Editor in Chief Logan Logendralingam and his Media Friends attended the “Thai Pongal” day special Poojas and ceremonies at Canada Kanthasamy Temple on Birchmount Road.. Thousands of divoties of the Temple, well wishers and Younh Artists were gathered there to celebrate “Thai Pongal” day, which is the First Day of the First month of Tamil…

Read More
1 2 3 4 7