சுருவில் மக்கள் மன்றம்- கனடா

சுருவில் மக்கள் மன்றம்- கனடா

சுருவில் என்னும் கடலோரக் கிராமம், யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிறிய கிராமமாக இருந்தாலும், பணம் புரளும் அழகிய ஊர் இது. “கொழும்பு சீனி முதலாளிகள்” என்று பெருமையோடு அழைக்கப்பட்ட அமரர்கள் திருவாளர்கள் சுப்பிரமணியம், சண்முகம் ஆகியோரும், இன்னும் பல தென்னிலங்கை வ ர்த்தகர்களும் சுருவில் கிராமத்தைச் சார்ந்தவர்களே! இந்த சுருவில் ஊரைச் சேர்ந்தவர்களான கனடா வாழ் பெருமக்கள் இணைந்து ஆரம்பிக்கப்பட்டதே “சுருவில் மக்கள் மன்றம்- கனடா” ஆகும். அதன் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் நேற்று மாலை மார்க்கம் நகரில் உள்ள ஜே ஜே சுவாஹட் மண்டபத்தில் சிறபபாக நடைபெற்றது. சிறுவர்களுக்கான பல நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் போட்;டி நிகழ்சசிகளும் சிறபபாக முறையில்…

Read More

திருமதி வசந்தா நடராஜன் – ஈழத்து திருக்கோயில்கள்

திருமதி வசந்தா நடராஜன் – ஈழத்து திருக்கோயில்கள்

திருமதி வசந்தா நடராஜன்! இந்த வசந்தமான பெயருக்குரிய அம்மையார் தற்போது கோடையும் வசந்தமும் குளிர்காலும் ஆண்டு தோறும் அணிவகுத்து வரும் கனடா தேசத்தில் வாழ்ந்து வருகின்றார். ஒரு காலத்தில் வசந்தா நடராஜன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறம் இரதோற்சவத்தை இலங்கை வானொலியூடா இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சமய ஆர்வலர்களின் செவிகளுக்கு எடுத்துச் செல்லும் “நேர்முக வர்ணனையை ” தரத்தோடும் குரல் வளத்தோடும் ஆண்டுகள் பல வழங்கியவர். தற்போது கனடாவில் கால் பதித்து “சும்மா” வாழ்ந்து விட்டுப் போவோம்! என்று இருக்கவில்லை வசந்தா நடராஜன் அம்மையார். இங்கு இந்து சமய நிகழ்சசிகளில் பங்கெடுத்து சமய உரைகளை…

Read More

மொன்றியால் நகரில் கியுபெக் தமிழ்ர் மூத்தோர் இணையத்தின் நத்தார் கொண்டாட்ட விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது

மொன்றியால் நகரில் கியுபெக் தமிழ்ர் மூத்தோர் இணையத்தின் நத்தார் கொண்டாட்ட விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது

மொன்றியால் நகரில்கடந்த பல ஆண்டுகளாக இயங்கும் கியுபெக் தமிழ்ர் மூத்தோர் இணையத்தின் வருடாந்தநத்தார் கொண்டாட்ட விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மொன்றியால் நகரில் நடைபெற்றது. இணையத்தின் தலைவி திருமதி பாமதி லிங்கராஜா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.மேற்படி விழாவிற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் சிலரில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர்.என். லோகேந்திரலிங்கமும் ஒருவர். மிகவும் அழகிய விழாவாக இடம்பெற்ற மேறபடி கொணடாட்டத்தில் இளம் மற்றும் குழந்தை நட்சத்திரஙகளின் கலை மற்றும் கல்வி சார்ந்த ஆற்றல்களைகண்டு நாம் வியந்தபடி ரசித்தோம். வர்த்தகப்பிரமுகர் ஏ.எம்ஆர் பலசரக்குமாளிகை திரு ராஜ்கோபால் உட்பட நான்கு சேவையாளர்கள் மேடையில் கௌரவிககப்பட்டார்கள். “அகரம்” வானொலி ஸ்தாபகர் திருமதிரஞ்சினி இரஞ்சன் அறிவிப்பாளராக பணியாற்றினார். மேற்படி விழாவில் மொன்றியால்…

Read More

ஸ்காபுறோ விலாகருணா இல்லத்தில் தனது 101வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த திரு இராமையா சுவாமிநாதன்

ஸ்காபுறோ விலாகருணா இல்லத்தில் தனது 101வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த திரு இராமையா சுவாமிநாதன்

திருமதி இந்திராணி நாகேந்திரத்தின் நிர்வாகத்தில் இயங்கிவரும் ஸ்காபுறோ விலாகருணா இல்லத்தில் தங்கியிருந்து அவர்களது பராமரிப்பில் உள்ள, திரு இராமையா சுவாமிநாதன் தனது 101வது பிறந்த நாளை நேற்று கொண்டாடி மகிழ்ந்தார். திருமதி இந்திராணி நாகேந்திரம் மற்றும் பணியாளர்கள் சகிதம் சிரித்த முகத்துடன் கேக் வெட்டுவதை படத்தில் காணலாம். திரு இராமையா சுவாமிநாதன் மேலும் பலஆண்டுகள், அனைவரும் வியந்துபார்க்கும் வண்ணம் வாழ வேண்டுமென கனடா உதயன் வாழ்த்துகின்றான்.

Read More

போலியான டிக்கெட்டுகளுடன் டெல்லி விமான நிலையத்தில் நுழைந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தம்பதி கைது

போலியான டிக்கெட்டுகளுடன் டெல்லி விமான நிலையத்தில் நுழைந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தம்பதி கைது

டெல்லி விமான நிலையத்தில் மகளை பார்ப்பதற்காக போலியான டிக்கெட்டுகளுடன் வந்த ஆப்கானிஸ்தான் நாட்டு தம்பதி கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த தம்பதி சையத் உமர் மற்றும் அவரது மனைவி என். சையேடி. இவர்கள் இன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனைய கட்டிடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை பிடித்து விசாரணை மேற்கொண்டது. அதில், காபூல் நகருக்கு சென்ற தங்களது மகளை பார்ப்பதற்காக ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டை பயன்படுத்தி விமான நிலைய முனையத்திற்குள் அவர்கள் சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த தம்பதி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய விமான போக்குவரத்து விதிகளின்கீழ்…

Read More

திருமதி கலைவாணி பாலசுந்தரம் அவர்களின் தமிழ்க் கற்பித்தல்

திருமதி கலைவாணி பாலசுந்தரம் அவர்களின் தமிழ்க் கற்பித்தல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டதாரியும் முன்னாள் ஆசிரியையும் கனடாவில் கடந்த 13வருடங்களாக பிளமிங்டன் தமிழ்க் கல்வி நிலையத்தை வெற்றிகரமாக நடத்திய வண்ணம் நல்ல தமிழ் மொழி அறிவைப் பெற்றுக் கொண்ட பல மாணவ மாணவிகளை உருவாக்கிவருகின்றவருபவருமான திருமதி கலைவாணி பாலசுந்தரம் அவர்களின் தமிழ்க் கற்பித்தல் பயணத்தில் இன்று ஒரு பொன்னான நாளை அனைவரும் தரிசித்தோம். அவரது பிளமிங்டன் தமிழ்க் கல்வி நிலையத்தின் 13வது ஆண்டு நிறைவு விழா இன்று ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம விருநதினராக முன்னாள விரிவுரையாளர் திரு கணபதிப்பிள்ளை கலந்து சிறப்பித்தார்.அருட்கவி திரு ஞானகணேசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கனடா உதயன் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம்…

Read More

Christmas Mixer, presented by Canadian Tamil Chamber of Commerce

Christmas Mixer, presented by Canadian Tamil Chamber of Commerce

This year`s Christmas Mixer, presented by Canadian Tamil Chamber of Commerce, took place today at Princes Banquet Centre in Scarborough. The President of Canadian Tamil Chamber of Commerce, Mrs Dilani Gunarajah, associated with other Directors and members must have worked hard, in order to organize this event. Many Business Institutions sponsored the event. All the Gifts, given to Children, were sponsored by Mr. Raj Nadaraja, a Prominent Realtor. This was a very remarkable event for…

Read More

“பிறைசூடி” சந்திரசேகரனின் தாயார் திருச்சியில் காலமானார்

“பிறைசூடி” சந்திரசேகரனின் தாயார் திருச்சியில் காலமானார்

கனடாவில் “பிறைசூடி” என்னும் பெயரில் கட்டுரைகளை எழுதி வருகின்றவரும் கடந்த பல ஆண்டு காலமாக கனடாவில் வாழ்ந்து வருகின்றவருமாகிய திரு சந்திரசேகரனின் தாயார் திருமதி பாப்பு அம்மாள் திருச்சியில் காலமானார் என்ற செய்தியை அவரது நண்பர்களின் அறிதலுக்காக இங்கே பதிவு செய்கின்றோம். இலங்கையில் மலையகத்தில் நுவரேலியா மாவட்டம் ராகலையில் வாழ்ந்து வந்த பாப்பு அம்மாள் பின்னர் திருச்சிக்கு இடம்பெயர்ந்து சென்றார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் திருச்சியில் இடம்பெற்றன. அனுதாபம் தெரிவிக்க விரும்புவோர் திரு சந்திரசேகரனை 416 996 4366 என்னும் இலக்கத்தில் அழைக்கலாம்.

Read More

பிறிமாடான்ஸ் நிறுவனம் வழங்கும் சமூகப் பார்வையுள்ள“தடைகளைத் தாண்டி”நாடகம்

பிறிமாடான்ஸ் நிறுவனம் வழங்கும் சமூகப் பார்வையுள்ள“தடைகளைத் தாண்டி”நாடகம்

கடந்தபலஆண்டுகளாககனடாவில் இளையதலைமுறைநடனக் கலைஞர்களை உருவாக்கிவரும் பிறிமாடான்ஸ் நிறுவனம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 3ம் திகதிமாலை 6.00 மணிக்குசமூகப் பார்வையுள்ள“தடைகளைத் தாண்டி”என்னும் நாடகத்தை மேடையேற்றுகின்றது. அன்றையதினம் ஸ்காபுறொவில் உள்ள மெற்றோபொலிட்டன் மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி நாடகத்தை திருவாளர்கள் குயின்றஸ் துரைசிங்கம்,இலியாஸ் மற்றும் செல்வி கீர்த்தி காதயா ஆகியோர் தயாரித்து வழங்குகின்றார்கள். எமது சமூகத்தில் காணப்படும் பல்வேறு வகையான பிரச்சனைகளை மையமாகக் கொண்டு நடத்தப்பெறும் இந்த நிகழ்விற்கான அனுமதிச் சீட்டுக்களை மண்டபவாசலிலும் பெற்றுக்கொள்ளலாம். இங்கே காணப்படும் படத்தில் நேற்று முன்தினம் மாலை பிறிமாடான்ஸ் நிறுவனத்தின் கலைக்கூடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களில் வர்த்தக நண்பர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோர் உட்படநாடகத்தில் பங்கெடுக்கும் ஆண் மற்றும் பெண் கலைஞர்களும்…

Read More
1 3 4 5 6 7 20