அடுத்த ஜனாதிபதியாக தம்மைச் சார்ந்தவர் வரவேண்டும் என்பதற்காக குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து விடுவிக்க முயலும் தமிழ் அரசியல்வாதிகள்

அடுத்த ஜனாதிபதியாக தம்மைச் சார்ந்தவர் வரவேண்டும் என்பதற்காக குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து விடுவிக்க முயலும் தமிழ் அரசியல்வாதிகள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவையின் அமர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்ற வேளையில் ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கத்தாலும் இராணுவக் கொடியவர்களாலும் இழைக்கப்பட்ட கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட பாரிய படுகொலைகள், கற்பழிப்புக்கள், அங்கங்களை வெட்டி எறிந்து தமிழ்ப் போராளிகளை அங்கவீனர்களாக்கியமை ஆகியவை போன்ற கொடிதான போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கா பலர் போராடுகின்றார்கள். இந்த நோக்கத்தோடு, உலகெங்கும் இருந்து நூற்றுக்கணக்கான உணர்வாளர்கள் ஜெனவாவில் கூடியிருந்தும், ஆராய்ந்தும் தேவையான அமர்வுகளில் அதற்காககுரல் கொடுத்தும் வருகின்றார்கள். அதே போன்று இலங்கையில் போர்க்குற்றங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்று வாதிட்டு அதிலிருந்து விடுவிக்கப்பட்டால்,  இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு காத்திருப்பவருக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது என்று எதிர்பார்க்கும் அனைத்து தரப்பினரும்…

Read More

இதயமுள்ளவர்கள் ஒன்று கூடி நின்றதனால் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களை இவ்வுலகில் தகக வைக்க முடிந்தது

இதயமுள்ளவர்கள் ஒன்று கூடி நின்றதனால் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களை இவ்வுலகில் தகக வைக்க முடிந்தது

கனடா தேசம் உலக நாடுகள் சிலவற்றைப் போல இதயமுள்ள நாடு. தன்னால் இயன்றளவிற்கு உலகெங்கும் இருந்து உயிராபத்திலிருந்து  தப்பும் வகையில் அகதிக் கோரிக்கையை சமர்ப்பிக்கின்றபோது, அவற்றை ஏற்றுக்கொண்டு, இலட்சக்கணக்கான உலக மக்களுக்கு வாழ்வளித்த நாடு இந்த கனடா தான். இவ்வாறானவர்களில் எமது தாயகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பல இதயமுள்ளவர்கள் கடந்த வாரத்தில் “நிவாரணம்” மூலம் நன்கு அறியபபட்டவரும் மனித நேயம் எங்கே தேவைப்படுகின்றதோ, அந்த இடத்திற்கு ஓடிச்செல்லாவிட்டாலும் தனது இதயத்தை அங்கு அனுப்பிவை த்து ஆதரவு வழங்குபவருமான அன்பரும் நண்பருமான திரு செந்தில் குமரன் தலைமையிலே கனடாவில் ஒன்று கூடி நின்றதனால் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களை இவ்வுலகில் தகக வைக்க முடிந்தது. கடந்த 9ம் திகதி வெள்ளிக்கிழமை இந்த…

Read More

மாவீரர் புகழ் பாடும் மகத்தான மாதமாம் கார்த்திகையை நாம் பக்தியோடு பூசிப்போம்!!

மாவீரர் புகழ் பாடும் மகத்தான மாதமாம் கார்த்திகையை நாம் பக்தியோடு பூசிப்போம்!!

நிறைவேற்று எமது தமிழினத்தில் பிறந்து பல்வேறு துறைகளில் பணியாற்றி, சேவைகளையும் சாதனைகளையும் அரிய கண்டுபிடிப்புக்களையும் எமக்காய் அளித்து விட்டு இவ்வுலக வாழ்வை நீத்த இலட்சக் கணக்கானவர்கள் எமது நினைவு வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.அவர்களில் பலர் நேர்மையான அரசியல்வாதிகளாய், அறிவு பசிக்கு தீனி இட்ட ஆசிரியப் பெருந்தகைகளாய், உயிர்களைக் காப்பாற்றிய வைத்தியப் புண்ணியர்களாய், பக்தியை பரப்பி நின்று எமக்கு நல்லுபதேசங்களை வழங்கிய ஆன்மிகப் பெரியோர்களாய் திகழ்ந்தவர்கள் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவ்வாறாக நாம் நன்றியுடன் கொண்டாடி மகிழ்ந்தவர்களின் நினைவலைகள் ஒரு புறம் காற்றில் பறந்த வண்ணம் இருக்க எம் இதயங்களில் என்றும் கடவுளர்களாய் வீற்றிருக்கும் மாவீரர்கள் என்னும் தியாகிகளை நாம் என்றும் மறக்கவே இயலாது….

Read More

மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்; என்று தமிழர்களிடம் கேட்கும் ஜனாதிபதி யாழ் மண்ணில் வாள்வெட்டும் வேண்டாம் என்று கேட்கவில்லையே!!

மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்; என்று தமிழர்களிடம் கேட்கும் ஜனாதிபதி  யாழ் மண்ணில் வாள்வெட்டும் வேண்டாம் என்று கேட்கவில்லையே!!

முன்னாள் ஜனாதிபதி, மகிந்த ராஜபக்சா, தானே விடுதலைப் புலிகளை வென்று, யுத்தத்தை நிறுத்தியவர் என்று மார் தட்டுகின்ற நாட் தொடக்கம், தமிழர்கள் மீதான அடக்கு முறைகளும் தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதைப்போன்றே மகிந்தாவை வெற்றி கொண்டு. தமிழ்த் தேசியகூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு ஜனாதிபதியா பதவியேற்ற பின்னர் குறைந்தது ஆயிரம் தடவை என்றாலும் கூறியிருப்பார் “மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்” என்று. யாழ் மண்ணை நோக்கி அவர் தனது பட்டாளங்களுடன் “படையெடுக்கும்” போது தனது முன்னைய உரைகளின் பிரதிகளையும் கொண்டுதான் வருகின்றாரா என்ற கேள்வியே எம் அனைவர் முன்பாகவும் எழுந்து நிற்கின்றது. சுpல நாட்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் மயிலிட்டி…

Read More

நீதிபதிகள் விடுக்கும் உத்தரவுகள் நியாமற்ற இனவாத எதிர்ப்புக்களிடம் தோற்றுப் போகின்றன!!

நீதிபதிகள் விடுக்கும் உத்தரவுகள் நியாமற்ற இனவாத எதிர்ப்புக்களிடம் தோற்றுப் போகின்றன!!

இலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரமல்ல, முழு இலங்கைத் தீவிலுமே தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவாதிகள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதற்கு மேலாக இராணுவம் மற்றும் போலீஸ் படைகளும் தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லுவதற்கு எப்போதும் தயங்குவதில்லை.. இவ்வாறு கடந்த காலங்களில் ஆயிரக்கணக்காக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படடபோது தமிழ்ப் பிரதேசங்களில் நீதிபதிகளாக பணியாற்றிய தமிழ் பேசும் கனவான்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திய பொலிஸாரையோ அன்றி இராணுவத்தினரையோ அவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்று கைது செய்துவருமாறு பொலிசாருக்கு பணிப்புரைகள் வழங்கவது வழக்கம். ஆனால் அந்த உத்தரவுகள் எதுவுமே இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தப் படுவதில்லை என்புத கண்கூடான…

Read More

இரண்டு நாடுகளிலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் அப்பாவித் தமிழர்கள்

இரண்டு நாடுகளிலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் அப்பாவித் தமிழர்கள்

அரசியல் என்னும் உயர்ந்த அதிகார பீடத்தின் ஊடாக மக்களின் நலன்களுக்காகவும் நாட்டின் உயர்விற்காகவும் சேவையாற்ற வேண்டிய அரசியல்வாதிகளும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் உயர் அதிகாரிகளும் மக்கள் நலனைப் பார்க்காது தங்களை நலன்களுக்காகவும் சுக போகங்களுக்காகவும் தொடர்ச்சி தங்கள் பணி நேரங்களை செலவிடுகின்றார்கள் என்பதை முன்னர் பலதடவைகள் இந்தப் பக்கத்தில் பதிவு செய்திருந்தோம். நாம் இங்கு தலைப்பில் இரண்டு நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளது, எந்தெந்தநாடுகள் என்பதை எமது வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதும் நாம் அறிந்ததே, ஆமாம் எமது இலங்கை மற்றும் இந்தியா ஆகியநாடுகளில் வாழும் சாதாரண தமிழ் மக்கள், அதுவும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசதனியார் சேவையில் சாதாரண தரங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரையே நாம்…

Read More

மனந்திறந்து பேசும் மனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும்

மனந்திறந்து பேசும் மனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும்

தற்போது மைத்திரி பால சிறிசேனாவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் மனோகணேசன் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல புலமை உள்ளவராகத் திகழ்கின்றார். அத்துடன் அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மலையகத்தின் தொழிற்சங்கத் தலைவரின் மகனாக இருப்பதால அவருக்கு போர்க் குணம் மிகவும் அதிகம். இதனால் அவர் துணிச்சலாக .கருத்துக்களைக் கூறிவருகின்றார். திரு.மனோகணேசன் அண்மையில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் நேரடியாக வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களோடு உரையாடினார். அத்துடன் அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது,யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு நேயர் கேட்ட கேள்விக்கும் அவர் பதிலளித்தார். மேற்படி நேயர் கேட்ட கேள்வியானது, தென்னிலங்கையிலிருந்து தாதிமாரும் சாரதிகளும் யாழ்ப்பாணத்தில் அரச பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றார்கள். இதை நீங்கள்…

Read More