புதிய அமெரிக்காவை உருவாக்க வாருங்கள் எதிர்கட்சிகளுக்கு டொனால்டு டிரம்ப் அழைப்பு
புதிய அமெரிக்காவை உருவாக்க வாருங்கள் எதிர்கட்சிகளுக்கு டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்து உள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது : மக்களின் நன்மைக்காக கருத்து வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும். மக்களுக்காக அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றிக்காட்டுவேன். தங்களுக்கு பணியாற்றுவதற்காகவே மக்கள் நம்மை தேர்வு செய்துள்ளனர். 20.40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை எனது நிர்வாகம் உருவாக்கி உள்ளது. மெரிட் அடிப்படையிலான குடியேற்ற முறையை அறிமுகம் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. திறமையான, நமது சமூகத்திற்கு தனது பங்களிப்பை அளிக்கக் கூடிய, நாட்டிற்கு மரியாதை அளித்து நேசிக்கக் கூடிய மக்களுக்கு மட்டுமே…
Read More