எண்ணெய் கப்பல் சிறைப்பிடிப்பு; பதிலடியை கொடுப்போம் – இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை

எண்ணெய் கப்பல் சிறைப்பிடிப்பு; பதிலடியை கொடுப்போம் – இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் எண்ணெய் கப்பலான சூப்பர்டேங்கர் கிரேஸ் கிப்ரால்டர் கடற்பகுதியில் வைத்து சிறைபிடிக்கப்பட்டதாக இங்கிலாந்து தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை கப்பல் சர்வதேச கடல்பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது என ஈரான் கூறுகிறது. கப்பலை விடுவிக்குமாறு ஈரான் கேட்டு வருகிறது. இந்நிலையில் கப்பல் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் சரியான பதிலடியை கொடுக்காமல் விடப்போவது கிடையாது என ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹதாமி எச்சரிக்கை விடுத்துள்ளார் என உள்ளூர் மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளன. “இங்கிலாந்து நடவடிக்கை சர்வதேச விதிமுறைகளை மீறும் செயலாகும், ஒருவகையான கொள்ளையாகும்” என ஈரான் கூறியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக பொருளாதார…

Read More

அமெரிக்க பயணத்தில் தூதர் இல்லத்திலேயே தங்க இம்ரான் கான் திட்டம்

அமெரிக்க பயணத்தில் தூதர் இல்லத்திலேயே தங்க இம்ரான் கான் திட்டம்

வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா செல்கிறார். பாகிஸ்தான் ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், தேவையற்ற செலவினங்களை அவர் குறைத்து வரும் நிலையில், அமெரிக்க பயணத்தின் போதும் ஆடம்பர ஹோட்டலில் தங்குவதில்லை என திட்டமிட்டுள்ளார். மாறாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதரின் இல்லத்திலேயே 3 நாட்கள் தங்குவதற்கு இம்ரான் கான் முடிவெடுத்துள்ளார்.

Read More

ஏர்இந்தியா விமானத்தில் வெடிகுண்டு?

ஏர்இந்தியா விமானத்தில் வெடிகுண்டு?

அமெரிக்கா சென்ற ஏர்இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அது அவசரமாக லண்டனில் தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஏர்இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், மும்பையில் இருந்து நெவார்க் நோக்கி புறப்பட்ட ஏஐ 191 விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக லண்டனில் உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டது. லண்டன் விமான நிலையம் வெளியிட்டுள்ள தகவலில், விமான ஓடு பாதை மீண்டும் திறக்கப்பட்டது. ஏர்இந்தியா போயிங் 777 விமானம் 10.15 மணிக்கு திருப்பி விடப்பட்டு, பத்திரமாக தரையிறக்கப்பட்டது. போலீசார் சோதனை நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்…

Read More

இரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா – அடுத்து என்ன?

இரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா – அடுத்து என்ன?

இரான் மீது விதிக்கப்படவிருந்த பொருளாதாரத் தடை, இரான் நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மீதும் சேர்த்து விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தடை முடிவு அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது மற்றும் பல விஷயங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்டது என ட்ரம்ப் கூறியுள்ளார். போர் தாகம் இரான் நாட்டின் உயர் தலைவர் என்பதால் இரானின் எதிர்ப்பு செயல்களுக்கு அயத்துல்லா கமேனியே காரணம் என்று அமெரிக்கா அவரை கண்காணிப்பில் வைத்திருந்தது. அமெரிக்கா அமைதியை விரும்பவில்லை என இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார். இந்த தடை அறிவிப்புக்குப் பின்னர் சாரிஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம்…

Read More

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார் டொனால்டு டிரம்ப்

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வதுஅதிபராக பதவியேற்றுக்கொண்டார். சமீபத்தில், 2-வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் இன்று முறைப்படி துவங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லண்டோவில் டிரம்ப் பிரசாரத்தை துவங்கினார். 2020- நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.

Read More

திரிபுராவில் உபரி மின்சாரம்:நேபாளத்திற்கு விற்பனை

திரிபுராவில் உபரி மின்சாரம்:நேபாளத்திற்கு விற்பனை

திரிபுரா மாநிலத்தில் உள்ள உபரி மின்சாரம் அண்டை நாடான நேபாளத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. என மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநில துணை முதல்வர் ஜிஸ்னு தேவ்வர்மா கூறி இருப்பதாவது: மாநிலத்தில் தற்போது நுகர்வோருக்கு தினமும் 300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மாநிலத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் சவுபாக்யா திட்டத்தின் மூலம் 1.36 லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்கி உள்ளது. சூரிய மின்சாரம் தயாரிப்பதில் மாநில அரசு இப்போது முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனை தொடர்ந்து மாநில செயலகம், சட்டமன்றம்,ஐகோர்ட் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களை முழுமையாக சூரிய சக்தியாக மாற்றும் திட்டங்கள் தொடங்கி வருகிறது. மேலும் அசாம்…

Read More

நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர்

நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர்

ராணுவத்தால் 2013ஆம் ஆண்டு பதிவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அதிபர் முகமத் மூர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவருக்கு வயது 67. நாட்டில் ஜனநாயக முறையில் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூர்சி, பதவியிலிருந்து இறக்கப்பட்ட ஒரு வருடக் காலத்திற்கு போராட்டங்கள் நடைபெற்றன. அதிலிருந்து அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

Read More

ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை செயலர் கையெழுத்து

ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை செயலர் கையெழுத்து

அமெரிக்க ராணுவ ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ இணைய தளத்தில் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (47) வெளியிட்டார். இதனால் விதிக்கப்படும் மரணதண்டனை மற்றும் துன்புறுத்தலுக்கு பயந்து அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறினார். ஆஸ்திரேலியரான இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று இருந்தார். அமெரிக்காவில் இருந்து வெளியேறிய அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நைட்ஸ்பிரிட்ஷ் பகுதியில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 2012-ம் ஆண்டில் அடைக்கலம் புகுந்தார். அவருக்கு ஈகுவேடார் அரசாங்கம் அரசியல் தஞ்சம் அளித்தது. எனவே அங்கு அச்சமின்றி நிம்மதியாக தங்கி இருந்தார். அவர் தஞ்சம் அடைந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு ஈகுவேடார் தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கான உத்தரவை அந்நாட்டின் அதிபர் லெனின் மொரெனோ பிறப்பித்தார்….

Read More

‘காவு’ வாங்கியது ‘பிரெக்சிட்’; தெரசா மே பதவி விலகினார்

‘காவு’ வாங்கியது ‘பிரெக்சிட்’; தெரசா மே பதவி விலகினார்

பிரிட்டனின் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தொடர்பான பிரச்னையில், தெரசா மே, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை இன்று(ஜூன் 7) ராஜினாமா செய்தார். இரண்டாம் உலகப் போருக்கு பின், அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்காக ஆஸ்திரேலியா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், க்ரீஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரிட்டன் உட்பட 28 நாடுகள் ஐரோப்பிய யூனியன் என்ற கூட்டமைப்பை உருவாக்கின. குடியேற்ற விஷயத்தில் தாராள போக்கை கடைப்பிடித்தன. ஆனால், குடியேறும் பிற நாட்டினரால் தங்களின் கலாசாரம், பொருளாதாரம் மோசமடைவதாக பிரிட்டனில் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரியலாமா என பொதுமக்களின் கருத்தைக்கேட்டு 2016 ஜூனில் வாக்கெடுப்பு நடந்தது. இது பிரெக்சிட் எனப்பட்டது. பிரெக்சிட்டுக்கு மக்கள் ஆதரவளித்ததால்…

Read More

சவுதி மன்னரை அவமதித்த இம்ரான் – கண்டனம்

சவுதி மன்னரை அவமதித்த இம்ரான் –  கண்டனம்

சவுதி சென்றுள்ள பாகிஸ்தான் இம்ரான் கான், அந்நாட்டு மன்னரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய ஒத்துழைப்பிற்கான அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். மெக்காவில், அந்நாட்டு மன்னர் சல்மானை சந்தித்தார். இம்ரானை, மன்னர், தனது மொழி பெயர்ப்பாளருடன் வரவேற்றார். தொடர்ந்து, இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது, இம்ரான் கான், மொழிபெயர்ப்பாளரிடம், மன்னரிடம் ஏதோஒன்றை கூற சொல்லிவிட்டு, பதிலுக்கு காத்திருக்காமல், உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவின. பலர், சவுதி மன்னரை, இம்ரான் கான் அவமதித்து விட்டதாக கண்டனம் தெரிவித்தனர்.

Read More
1 2 3 4 5 21