வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை வெற்றி

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை வெற்றி

வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது. அதன்பின்பு கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த வடகொரியா 5–வது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. வடகொரியாவின் இந்த செயலுக்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இந்த நிலையில் தடையை மீறி…

Read More

சீன எதிர்ப்பிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்: ஆக்கப்பூர்வ உறவுகளை வலியுறுத்தி சீன அதிபருக்குக் கடிதம்

சீன எதிர்ப்பிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்: ஆக்கப்பூர்வ உறவுகளை வலியுறுத்தி சீன அதிபருக்குக் கடிதம்

சீனாவை கடுமையாக எதிர்த்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீரென சீன அதிபர் ஜின்பிங்கிற்கு ‘ஆக்கப்பூர்வமான உறவுகள்’ வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது, பல தரப்புகளிலிருந்தும் ஐயங்களைக் கிளப்பியுள்ளது. ஜின்பிங்குக்கு ட்ரம்ப் எழுதிய இந்த இணக்கமான கடிதத்தில் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதற்கு சீன அதிபர் தெரிவித்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்ததோடு சீன மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். “அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங்குக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு நலன்கள் பயக்கும் வகையில் ஆக்கப்பூர்வ இருதரப்பு உறவுகள் வளர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்” என்று இது தொடர்பாக வெளியான வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தக் கடிதம் குறித்து சீன அரசுவட்டாரங்கள் கூறுகையில்,…

Read More

அமெரிக்க ஜனாதிபதியால் ஆபத்திலிருந்து தப்பிய இலங்கை! டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதியால் ஆபத்திலிருந்து தப்பிய இலங்கை! டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் மேற்கொள்ளும் சில தீர்மானங்கள் இலங்கைக்கு சாதகமாகும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையினை சமகால அரசாங்கம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் இராஜதந்திர அதிகாரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். ஆசிய விவகாரங்களுக்கான பொறுப்பான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதர் சமந்தா பவர் நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மனித உரிமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அதிகாரிகள் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளதனை இலங்கைக்கு நன்மையாக்கிக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் இதுவரையில் இலங்கை தொடர்பில் நேரடி…

Read More

எல்லையில் சுவர், குடியேற்ற கட்டுப்பாடுகள் போன்ற திட்டங்களில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்

எல்லையில் சுவர், குடியேற்ற கட்டுப்பாடுகள் போன்ற திட்டங்களில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் டொனால்டு டிரம்ப், மெக்சிகோ எல்லையில் சுவர், அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட திட்டங்களில் நடப்பு வாரத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், சில முஸ்லீம் நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடி பெயருவதற்கு தற்காலிக தடைவிதிக்கவும் டிரம்ப் உத்தரவிட உள்ளதாக அங்குள்ள ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. தேச பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில், அவற்றில் ஒன்று மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பப்படும் என்பதாகும். தனது தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக இதை டிரம்ப் கூறி வந்த நிலையில், இந்த உத்தரவை பிறப்பிக்க போவதாக நியூயார்க்டைம்ஸ் நாளிதழ் செய்தி…

Read More

ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

ரோம் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திட வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாகஇல்லாதொழிக்குமாறும், அனைத்துலக குற்றவியல்நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், சிறிலங்கா அரசாங்கத்திடம், ஐ.நாவின் சிறப்புஅறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் வலியுறுத்தியுள்ளார். சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான, மனிதமாபிமானமற்ற, அல்லது இழிவுபடுத்தும்நடவடிக்கைகள், தண்டனைகள் தொடர்பான ஐ.நா சிறப்புஅறிக்கையாளரான, ஜுவான் மென்டஸ் சிறிலங்காவுக்குமேற்கொண்ட பயணம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். 2016 ஏப்ரல் 29ஆம் நாள் தொடக்கம், மே 7ஆம் நாள் வரை சிறிலங்காவில் மேற்கொண்டபயணத்தின் போது கண்டறியப்பட்ட விடயங்களை உள்ளடக்கியதாக இந்த அறிக்கைதயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைவரும், மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவதுஅமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை சிறிலங்கா உடனடியாக இல்லாமல்ஒழிக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக…

Read More

டிரம்ப் எதிர்ப்பு பேரணிகளால் அமெரிக்கா குலுங்கியது; உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் அணி திரண்டனர்

டிரம்ப் எதிர்ப்பு பேரணிகளால் அமெரிக்கா குலுங்கியது; உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் அணி திரண்டனர்

வாஷிங்டன், டிரம்ப் மீது குற்றச்சாட்டு அமெரிக்க நாட்டின் 45–வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் (வயது 70) கடந்த 20–ந் தேதி பதவி ஏற்றார். தேர்தலுக்கு முன்பாகவே அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன. குறிப்பாக பெண்கள், குடியுரிமை, முஸ்லிம்கள் தொடர்பான அவரது பார்வையும், கருத்துகளும் கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்தன. குறிப்பாக பெண்களை பாலியல் ரீதியில் மோசமாக பார்க்கிற நடத்தை கொண்டவர் என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 10–க்கும் மேற்பட்ட பெண்கள் அவருக்கு எதிராக பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். வாஷிங்டனில் பேரணி இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, அவர் பதவி ஏற்ற பின்னரும் அவருக்கு எதிராக பல தரப்பினரும்…

Read More

இஸ்தான்புல் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி அதிரடி கைது

இஸ்தான்புல் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி அதிரடி கைது

துருக்கியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதுநடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல் தொடர்பாகமுக்கிய குற்றவாளி கைதாகியுள்ள தகவல்வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் டிசம்பர் 31ஆம்திகதி இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதுதீவிரவாதிகள் இருவர் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 39 பேர் பலியானார்கள். இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அந்நாட்டுக் காவல்துறையினர், வெளிநாட்டவர்கள் உட்பட பலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், தற்போது, இத்தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவர்கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல்தெரிவித்துள்ளது.   அப்துல்காதிர் மஷாரிபோவ் என்ற அந்த தீவிரவாதி உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர்என்றும் இஸ்தான்புல் நகரின் சென்யுர்ட் எனும் இடத்தில் கைதுசெய்யப்பட்டதாகவும்அந்நாட்டுக் காவல்துறை தகவல் அளித்துள்ளது.

Read More

ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மரணம்… தலைவர்கள் அஞ்சலி

ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மரணம்… தலைவர்கள் அஞ்சலி

ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி தனது 82வது வயதில் மரணம் அடைந்தார். ஈரானில் இஸ்லாமிய குடியரசை நிறுவியவர்களில் மிக முக்கியமானவராக விளங்கியவர் இவர். டெக்ரான்: ஈரானில் 1989 முதல் 1997 வரை அதிபராக இருந்த அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 82 வயதான இவர் 2 முறை அதிபராக பதவி வகித்து நடைமுறைக்கேற்ற திட்டங்களை செயல்படுத்தியவர். ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் நேற்று மரணமடைந்துவிட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.  1979ம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய குடியரசை நிறுவியவர்களில் முக்கியமானவராக கருதப்படும் ரப்சஞ்சானி,…

Read More

சுஷ்மா சுவராஜ் விரைவில் பூரண குணம் அடைய வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்

சுஷ்மா சுவராஜ் விரைவில் பூரண குணம் அடைய வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்

மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உடல்நிலைக் கோளாறு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து கடந்த 19ம் தேதி அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் அவர் விரைவில் பூரண குணம் அடைய வேண்டும் என்று வாழ்த்துவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கடிதம் எழுதியுள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து கடந்த சில தினங்களாக மருத்துவமனையிலேயே இருந்து வந்த அவர் சிகிச்சை முடிந்த பின் சுஷ்மாவின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனையும் தெரிவித்து வந்தது. இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா சுவராஜ், மருத்துவமனையில்…

Read More

மீண்டும் இனி போர் தொடுக்க மாட்டோம்: பியர்ல் ஹார்பர் நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் உறுதிமொழி

மீண்டும் இனி போர் தொடுக்க மாட்டோம்: பியர்ல் ஹார்பர் நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் உறுதிமொழி

ஹவாய் தீவில் உள்ள பியர்ல் ஹார்பர் பகுதியில் அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஜப்பான் தாக்குதல் நடத்திய நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, நாங்கள் மீண்டும் இனி போர் தொடுக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றார். ஹோனோலுலு: 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை நேச நாடுகள் என்றும் எதிர் அணியில் அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஒன்று சேர்ந்து போரிட்டன. சுமார் ஆறாண்டுகள் நீடித்த இந்த இரண்டாம் உலகப்போரின் போது, ஹவாய் தீவுகளில் உள்ள அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படைத் தளத்தைத் தாக்க தனது…

Read More
1 20 21 22 23 24 25