சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் பண்டாரி தேர்வு

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் பண்டாரி தேர்வு

நியூயார்க்: இந்தியாவை சேர்ந்த, தல்வீர் பண்டாரி, 70, சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, நேற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச நீதிமன்றம், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தின், தி ஹேக் நகரில் உள்ளது. பாக்., சிறையில் அடைபட்டுள்ள, இந்தியாவை சேர்ந்த குல்பூஷண் ஜாதவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம், மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில்,இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சர்வதேச நீதிமன்ற நீதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், ஐ.நா., பொதுச் சபை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றில் நடந்து வருகிறது. இதற்கு முன் நடந்த சுற்றில், இந்தியா சார்பில் களத்தில் உள்ள, தல்வீர் பண்டாரிக்கும், பிரிட்டன் வேட்பாளர், கிறிஸ்டோபர் கிரீன்வுட்டிற்கும் கடும் போட்டி…

Read More

போதைப்பொருள் அச்சுறுத்தல் பயங்கரவாதத்தை விட பெரிய சவாலாக உள்ளதாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி எஸ்.பி

போதைப்பொருள் அச்சுறுத்தல் பயங்கரவாதத்தை விட பெரிய சவாலாக உள்ளதாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி எஸ்.பி

ஜம்மு காஷ்மீர் மாநில டிஜிபி எஸ்.பி.வெய்ட் செய்தியார்களிடம் கூறியதாவது: போதைப்பொருள் அச்சுறுத்தல் பயங்கரவாதத்தை விட பெரிய சவாலாக உள்ளது. இந்த வருடம் போதைபொருள் கடத்தல் சட்டப்பிரிவின் கீழ் 667 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 542 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நான் பணியில் சேர்ந்த போது போதைபொருளுக்கு எதிராக போரை அறிவித்தேன். மருந்துகள் மூலம் போதைப்பொருட்கள் செலுத்தபடுகின்றன. போலீஸ் மட்டும் இதனை தனியாக எதிர்த்து போராட முடியாது. ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் மருந்துகள் மூலம் போதைபொருட்கள் செலுத்தப்படுகின்றன. அதனை இயக்குவது யார் யார் என்று தெளிவாக தெரியவந்துள்ளது. போதை பொருள் அச்சுறுத்தலில் இருந்து எல்லோரும் இணைந்து இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தை…

Read More

ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை மாட்ட வேண்டும்

ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை மாட்ட வேண்டும்

சீனாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டுமானால் தங்களின் வீடுகளில் ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்கி விட்டு, அதற்கு பதில் அதிபர் ஷின் ஜின்பிங்கின் படத்தை மாட்ட வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. உலகின் மிகப் பெரிய மதசார்பற்ற நாடாக விளங்கிய நாடு சீனா. ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி வந்த பிறகு, மதங்களின் மீதான நம்பிக்கையை போக்கி, தங்கள் கட்சியின் மீது நம்பிக்கை கொள்ள செய்வதற்காக ஏராளமான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் அரசின் நலத்திட்டங்களைப் பெற கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஏசுவின் படத்துக்குப் பதிலாக அதிபர் ஜின்பிங்…

Read More

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு

இஸ்லாமாபாத்: ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன், மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்தை ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதியாக அறிவித்து உள்ளது. ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நெருக்கடியை அடுத்து பாகிஸ்தான் கடந்த ஜனவரியில் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் வீட்டுக்காவலில் அடைந்தது. அப்போது பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹபீஸ் சயீத் தரப்பில் லாகூர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கோர்ட்டு கேட்டது. அரசு உரிய ஆதாரங்களை சமர்பிக்கவில்லை…

Read More

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அப்போது, அமெரிக்காவின் அறிவியல், மருத்துவம், தொழில் மற்றும் கல்வியில் ஆற்றிய பங்கிற்காக இந்திய வம்சாவளியினருக்கு பாராட்டு தெரிவித்தார். அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருந்த காலம் முதல் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது மாளிகையில் உள்ள அறை ஒன்றில் நடக்கும் விழாவில் புஷ் கலந்து கொண்டது இல்லை. ஆனால், கடந்த 2016ல் அதிபராக ஒபாமா இருந்த போது, வெள்ளை மாளிகையில் உள்ள கிழக்கு அறையில் தீபாவளி கொண்டாடப்பட்டது. ஒபாமா குத்துவிளக்கேற்றி தீபாவளியை கொண்டாடினார். அதேபோல், இந்த வருடம், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த தீபாவளி பண்டிகையில், அதிபர் டிரம்ப் உடன்,…

Read More

பிரித்தானியாவில் மீண்டும் அமுலுக்கு வரும் நீல வண்ண கடவுச்சீட்டு

பிரித்தானியாவில் மீண்டும் அமுலுக்கு வரும் நீல வண்ண கடவுச்சீட்டு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதை அடுத்து மீண்டும் நீல வண்ண கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. பிரித்தானியாவில் புதிய வடிவமைப்புடன் மேலதிக பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் நீல வண்ண கடவுச்சீட்டுகளை வரும் 2019 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு கொண்டுவர உள்விவகாரத்துறை அமைச்சு முடிவு செய்துள்ளது. இதுவரை பயன்பாட்டில் இருக்கும் Burgundy நிற கடவுச்சீட்டை உரிய அலுவகங்களில் ஒப்படைத்து புதிய நீல வண்ண கடவுச்சீட்டை குடிமக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள Burgundy நிற கடவுச்சீட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய சின்னத்தை மாற்ற வலியுறுத்தி ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து குறித்த நீல வண்ன கடவுச்சீட்டு தயாரிப்பு செலவினங்களுக்காக 500…

Read More

அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு-ட்ரம்ப்

அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு-ட்ரம்ப்

அமெரிக்க பொருட்களையே வாங்குவது, அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்துவது என்பதே இந்த அரசின் கொள்கை என, டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். வாஷிங்டன்: அமெரிக்க பொருட்களையே வாங்கவும், அமெரிக்கர்களையே வேலைவாய்ப்பில் பணியமர்த்தவும் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு டொனால்டு டிரம்ப் முதல் முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது தேர்தல் பிரசாரத்தின்போது, வலியுறுத்திய இறுக்கமான கருத்துக்களையே மீண்டும் முன்வைத்தார். கார்பொரேட் வரிகளை குறைத்து, வணிக கொள்கைகளை மாற்றியமைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்க நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க ஏதுவான சூழல் உருவாக்கப்படும் என றுதியளித்தார். அமெரிக்க பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது பிற நாடுகள் அதன் மீது…

Read More

ரஷ்யாவின் ஐ.நா., தூதர் விடாலி சுர்க்கின் திடீர் மாரடைப்பால் மரணம்!

ரஷ்யாவின் ஐ.நா., தூதர் விடாலி சுர்க்கின் திடீர் மாரடைப்பால் மரணம்!

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யா நாட்டு தூதர் விடாலி சுர்க்கின் திடீர் மாரடைப்பால் நியூயார்க் நகரில் காலமானார். மறைந்த சுர்க்கினுக்கு இன்று 65-வது பிறந்த நாளாகும். இந்நிலையில், நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால், அவர் மன்ஹாட்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி சுர்க்கின் உயிரிழந்தார். இந்த செய்தி கேட்டதும் ரஷ்ய அதிபர் புதின் மிகுந்த மனவேதனை அடைந்ததாகக் கூறியுள்ளார். ராஜிய உறவில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த சுர்க்கின் திடீரென உயிரிழந்தது தாங்க முடியாத அதிர்ச்சியாக உள்ளதென்றும், தனது 65வது பிறந்த நாள் ஒரு நாள் முன்பு இறந்து விட்டதாக புதின் குறிப்பிட்டுள்ளார். சிரியா நாட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான ரஷ்யா மேற்கொண்ட அதிரடி…

Read More

டிரம்பின் அமெரிக்க வருகையை எதிர்த்து 18 லட்சம் பேர் மனு – இங்கிலாந்து பிரதமர் நிராகரிப்பு

டிரம்பின் அமெரிக்க வருகையை எதிர்த்து 18 லட்சம் பேர் மனு – இங்கிலாந்து பிரதமர் நிராகரிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 லட்சம் பேர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே நிராகரித்துள்ளார். அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்பை, கடந்த மாதம் இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே, வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது, டிரம்பை இங்கிலாந்து வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். மேலும், இங்கிலாந்து ராணி எலிசபெத் உடன் விருந்து உண்ண வேண்டும் என ராணி விரும்புவதாக, தெரேசா கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட டிரம்ப் இந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு வருவதாக உறுதியளித்தார். இந்நிலையில், அகதிகளாக வருவோர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது…

Read More

வடகொரியாவை கடுமையாக அணுகுவோம்: டிரம்ப் எச்சரிக்கை

வடகொரியாவை கடுமையாக அணுகுவோம்: டிரம்ப் எச்சரிக்கை

பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா மீண்டும் சோதனை செய்துள்ளது. வடக்கு பியோங்கன் பிராந்தியத்தில் இருந்து இந்த ஏவுகணை பங்க்யான் ஏவுதளத்தில் இருந்து  ஜப்பானின் கடல் எல்லையில் விழும்படி வடகொரியா சோதனை செய்தது. தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், அணு ஆயுத சோதனை நடத்தி வரும் வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் உடனான…

Read More
1 19 20 21 22 23 25