அமெரிக்காவுடன் அக்.5 -ல் பேச்சுவார்த்தை : வடகொரியா தகவல்

அமெரிக்காவுடன் அக்.5 -ல் பேச்சுவார்த்தை : வடகொரியா தகவல்

வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் அமெரிக்கா-வட கொரியா இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அணுஆயுத பிரச்சினையால் முடங்கியிருக்கும் இருதரப்பு உறவை புதுப்பிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் துணிச்சலான ஒரு முடிவை எடுக்க வேண்டுமென வடகொரியா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், அணுஆயுத சோதனை அழிப்பு தொடர்பாக அமெரிக்கா – வடகொரியா இடையே அக்டோபர் 5 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும்; சவுதி அரேபியா எச்சரிக்கை

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும்; சவுதி அரேபியா எச்சரிக்கை

சவுதி அரசின் எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது கடந்த 14ஆம் தேதி அன்று வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக, எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஏமனில் இருந்து தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. அரம்கோ மீதான தாக்குதலால் ஈரான் – சவுதி அரேபியா இடையேயான பகை முற்றத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின்…

Read More

அமெரிக்க அதிபர் டிரம்பின் அரசியல் எதிரியை வீழ்த்த வெளிநாட்டு உதவி : வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், உக்ரைன் அதிபரும் பேசிய தொலைபேசி உரையின் விவரங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. டிரம்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை அமெரிக்க நாடாளுமன்றம் தொடங்க இந்த விவரங்கள் காரணமாகியுள்ளன. ஜனநாயக கட்சியின் உறுப்பினரும், முன்னாள் துணை அதிபரமான ஜோ பைடனின் செயல்பாடுகளை விசாரிக்க உக்ரைன் அதிபர் வாலடிமீர் ஸெலன்ஸ்கியிடம் ஜூலை 25ம் தேதி அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட விவரங்கள் காட்டுகின்றன. ஜோ பைடனின் மகன் உக்ரைன் எரிவாயு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தனது அரசியல் எதிரியான ஜோ பைடனை களங்கப்படுத்தும் நோக்கில் உக்ரைனுக்கு வழங்கும் ராணுவ உதவியை நிறுத்தி வைத்தாக கூறப்படுவதை டிரம்ப் மறுத்து வருகிறார்….

Read More

சீன தேசியக் கொடியை அவமதித்து ஆற்றுக்குள் வீசிய ஹாங்காங் மக்கள்

சீன தேசியக் கொடியை அவமதித்து ஆற்றுக்குள் வீசிய ஹாங்காங் மக்கள்

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக தொடர்ந்து 16வது வாரமாக நடந்து வரும் போராட்டங்களின்போது சீன தேசியக்கொடி நாசப்படுத்தப்பட்டதுடன், வணிக வளாகம் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சீன தேசியக் கோடி போராட்டக்காரர்களால் அவமானப்படுத்தப்பட்டு, ஆற்றுக்குள் தூக்கி வீசப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. ‘ஷா தின்’ எனும் இடத்தில் உள்ள நியூ டவுன் பிளாசா எனும் வணிக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் நகரும் மின் படிக்கட்டுகள் மற்றும் கண்ணாடித் தடுப்புகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த வளாகத்தில் இருந்த சீன ஆதரவு வர்த்தக நிறுவனங்களையே பெரும்பாலும் போராட்டக்காரர்கள் இலக்கு வைத்துத் தாக்கினர். ஷா தின்னில் காவல் துறையால் வைக்கப்பட்டிருந்த தடுப்பு ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது. நடைபாதைகளில் செங்கற்களை பெயர்த்து எடுத்து காவல் துறை மீது…

Read More

பாக்.,வான்வழியில் செல்ல மோடிக்கு மறுப்பு

பாக்.,வான்வழியில் செல்ல மோடிக்கு மறுப்பு

பிரமதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது தன்னுடைய வான்வழியை பயன்படுத்த பாக்., அனுமதி மறுத்துள்ளது. கடந்த ஆக. 5 ம் தேதி மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை, காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய விமானங்கள் தங்களது வான்வழியை பயன்படுத்த பாக். தடை விதித்தது. இந்நிலையில் வரும் 21-ம் தேதி அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் வான்வழியில் பிரதமர் மோடி விமானம் செல்ல இந்தியாவின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இதனிடையே பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி பாக்., வான்வழியே செல்ல பிரதமர் மோடிக்கு அனுமதி…

Read More

பாக்., மருத்துவ கல்லூரியில் ஹிந்து பெண் மர்மச்சாவு

பாக்., மருத்துவ கல்லூரியில் ஹிந்து பெண் மர்மச்சாவு

கராச்சி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லார்கானா என்ற இடத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் நம்ரிதா சந்தானி என்ற பெண் மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.இவர் நேற்று தன் விடுதி அறையை விட்டு வெளியே வராததால் நண்பர்கள் கதவை தட்டினர். நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் விடுதி பாதுகாவலர் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு நம்ரிதா சந்தானி கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் தரையில் இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த நம்ரிதாவின் சகோதரர் விஷால் சுந்தர் ‘நான் தடயவியல் படித்துள்ளேன். என் தங்கையின் உடலை பார்க்கும்போது அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது…

Read More

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கும் “Howdy Modi” நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கும் “Howdy Modi” நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடக்கும் “Howdy Modi” நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளதை வெள்ளைமாளிகை உறுதி செய்துள்ளது.     இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்.,22 ம் தேதி அதிபர் டிரம்ப், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகருக்கு செல்ல உள்ளார். அங்கு இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்க உள்ளார். “Howdy Modi” நிகழ்ச்சி ஒளிமயமாக எதிர்காலத்தையும், கனவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாக இருக்கும். இதில் ஒரு லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.   மோடி, மீண்டும் இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு…

Read More

47ஐ 58 எனக்கூறிய இம்ரான்: கணக்கு பாடம் தேவை

47ஐ 58 எனக்கூறிய இம்ரான்: கணக்கு பாடம் தேவை

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு 58 நாடுகள் ஆதரவு அளிப்பதாக பாக்., பிரதமர் இம்ரான் கான் தவறாக கூறியது தற்போது கேலிக்குள்ளானது. ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா., மனித உரிமைகள் பேரவையில் பாக்., தரப்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியுறவு அலுவலகத்தின் இணையதளத்திலும், இம்ரான் கானின் டுவிட்டர் பக்கத்திலும் வெளியானது. இம்ரான் கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜம்மு-காஷ்மீரில் படை பலத்தை பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும். கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும், காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் வைத்த கோரிக்கைகளுக்கு 58 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இவ்வாறு இம்ரான் பதிவிட்டிருந்தார்….

Read More

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை நீக்கினார், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை நீக்கினார், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக ஜான் பால்டனுக்கும். அதிபர் டொனால்டு டிரம்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. இந்நிலையில், ஜான் பால்டனை பணிநீக்கம் செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது தனது டுவிட்டரில், “நான் நேற்று இரவு ஜான் பால்டனிடன் உங்கள் சேவை இனி வெள்ளை மாளிகைக்கு தேவையில்லை என கூறினேன். அவரது ஆலோசனைகள், நிர்வாகத் திறமைகள் பலவற்றை நான் ஏற்கவில்லை. அதனால் அவரை பதவி விலகுமாறு கூறினேன். இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை பால்டன் இன்று வழங்கியுள்ளார்….

Read More

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெக்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் இந்தியாவிடம் அடைக்கலம் கோரியுள்ளார். பல்தேவ் குமார் என்பவர் தனது மனைவி பாவனா, இரண்டு குழந்தைகள் ஆகியோருடன், பஞ்சாபில் உள்ள கன்னா நகரில் ஒரு மாதமாக தங்கியுள்ளார். இது குறித்து, மைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பரிகொட் தொகுதி எம்எல்ஏ., ஆக இருந்த பல்தேவ் குமார் கூறுகையில், கடந்த ஆக., 11 இந்தியா வந்தேன். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை. உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு எதிராக கொடூரங்கள் அதிகரித்துள்ளன. கொல்லப்படுகின்றனர். இரண்டு வருடங்களாக நான் சிறையில் இருந்தேன். முழு மனதுடன் தான் இங்கு வந்துள்ளேன். எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு வழங்கும்படி…

Read More
1 2 3 4 24