சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் : ஐ.நா.,வில் ரஷ்ய தீர்மானம் தோல்வி

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் : ஐ.நா.,வில் ரஷ்ய தீர்மானம் தோல்வி

சிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஐ.நா.வில் ரஷ்யா கொண்டு வந்த கண்டன தீர்மானம் தோல்வியடைந்தது.சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் இணைந்து ஏவுகணை தாக்குதல் நடத்தின. அமெரிக்க படைகளின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் ரஷ்யா தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் பொலிவியா, கோட்டிவார் (ஐவரி கோஸ்ட்), ஈக்வடோரியல் கினி, எத்தியோப்பியா, கஜகஸ்தான், குவைத், நெதர்லாந்து, பெரு, போலந்து, சுவீடன் ஆகிய 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன.ரஷ்யாவின் தீர்மானத்துக்கு சீனா, பொலிவியா ஆதரவு அளித்தன. அமெரிக்கா,…

Read More

ஒப்பந்தத்தை மீறினால் வருத்தப்பட நேரிடும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஒப்பந்தத்தை மீறினால் வருத்தப்பட நேரிடும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையே 2015 ஜூலையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, “ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன்” என்று கூறி வருகிறார். மேலும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளையும் விதித்துள்ளார். இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, தெஹ்ரானில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது, ‘‘அணு சக்தி ஒப்பந்த விதிகளை ஈரான் மீறாது. அதேநேரம் அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறினால் அந்த நாடு வருத்தப்பட நேரிடும். ஒரு வாரத்துக்குள் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். அமெரிக்கா வின் புதிய அதிபரிடம்…

Read More

ரசாயன தாக்குதல் : சிரியாவில் 40 பேர் பலி

ரசாயன தாக்குதல் : சிரியாவில் 40 பேர் பலி

சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதலில், 40 பேர் பலியாகினர்; இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.மத்திய கிழக்கில் உள்ள சிரியாவில், எட்டு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கடந்த, 2011ல் துவங்கிய இந்த போரில், ஏற்கனவே, நான்கு லட்சம் பேர் பலியாகி விட்டனர்; இரண்டு லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டனர். அந்நாட்டின் மக்கள் தொகையே பாதியாக குறைந்துவிட்டது. இருப்பினும், சண்டை தொடர்கிறது.அதிபர் ஆசாத்தின் அரசுப்படை – போராட்டக்காரர்கள் – ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு என, மும்முனை போர் நடக்கிறது. கடந்த ஜனவரியில், இப்போர் உச்சகட்டத்தை எட்டியது. இதில், நுாற்றுக்கணக்கான குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.போராட்டக்காரர்கள் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை, அரசுப்படை கைப்பற்றியது. தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு…

Read More

காஸா எல்லையில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: பாலஸ்தீனர் ஒருவர் பலி

காஸா எல்லையில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: பாலஸ்தீனர் ஒருவர் பலி

காஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனர் ஒருவர் பலியானார். இதுகுறித்து காசா சுகாதார அமைச்சகம் தரப்பில், “காஸா – இஸ்ரேல் எல்லைப்புறத்தில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பாலஸ்தீன நபர் ஒருவர் பலியாகியிருக்கிறார்” என்று கூறியுள்ளது. பலியான விவரம் குறித்து பாலஸ்தீன அரசு வெளியிடவில்லை. பாலஸ்தீன குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல், “வான்வழித் தாக்குதல் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது” என்று விளக்கம் அளித்துள்ளது. காசா – இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேல் – காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை பேரணியாகச் சென்றனர். அவர்களைக் கலைக்க இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாலஸ்தீனர்களின்…

Read More

அமெரிக்கா விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப்பட்ட பாக். பிரதமர்

அமெரிக்கா விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப்பட்ட பாக். பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி நியூயார்க் விமான நிலையத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவுக்கு சென்றிருந்தப்போது நியூயார்க் விமான நிலையத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் மெத்தன போக்கை அமெரிக்கா கடந்த சில மாதங்களாகவே கண்டித்து வந்தது. இதன் கராணமாக அமெரிக்கா – பாகிஸ்தான் உறவில் லேசான விரிசல் ஏற்பட்ட நிலையில், விமான நிலையத்தில் அப்பாஸி மீதான இந்தச் சோதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறும் போது, ”அப்பாஸி எளிமையானவர். பிற பயணிகளுக்கு எந்த நடைமுறை…

Read More

மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போலீஸ் விசாரணை

மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போலீஸ் விசாரணை

ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இஸ்ரேல் நாட்டில் 4-வது முறையாக பிரதமர் பதவி வகித்து வருபவர் பெஞ்சமின் நெதன்யாகு. இந்த நிலையில் அவர் மீது ஏற்கெனவே 2 ஊழல் வழக்குகள் உள்ளன. இதைத் தொடர்ந்து 3-வது வழக்காக இவர் மீது லஞ்ச ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக பெசக் இஸ்ரேலி நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மூலம் தனக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக பெஞ்ச மின் நெதன்யாகு மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. இதனால் டெலிகாம் துறை விதிகளில் பெஞ்சமின் நெதன்யாகு மாற்றம் மேற்கொண்டதாகவும் குற்றச்சாட்டு…

Read More

சீனாவிற்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் ரகசிய பயணம்

சீனாவிற்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் ரகசிய பயணம்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், முதன்முறையாக சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட கொரிய அதிபர் கிம்ஜோங் உன், அவ்வப்போது அணு சோதனை மற்றும் ஏவுகணை சோதனையையும் மேற்கொண்டு வந்தார். இதற்கு ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் தென்கொரியா முயற்சியால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை , வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் அடுத்த மாதம் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கிம் ஜோங் உன், திடீரென சீனாவிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுவெளியிட்டுள்ள செய்தியில், வட கொரியா அதிபர் ரகசியமாக சீன வந்தார். கடந்த 2011-ம்…

Read More

அமெரிக்கா 60 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது, சியாட்டில் தூதரகத்தை மூட உத்தரவு

அமெரிக்கா 60 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது, சியாட்டில் தூதரகத்தை மூட உத்தரவு

ரஷியாவின் உளவாளிகள் என 60 தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியது, சியாட்டில் தூதரகத்தை மூடவும் உத்தரவிடப்பட்டது. அமெரிக்காவில் பணியாற்றிய ரஷியாவின் 60 தூதரக அதிகாரிகள் உளவுத்துறை அதிகாரிகள் என அமெரிக்கா கூறிஉள்ளது. ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு இங்கிலாந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தது. தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன்…

Read More

வரலாற்றில் முதல் முறை: பாக்., ராணுவ அணிவகுப்பில் இந்திய அதிகாரிகள்

வரலாற்றில் முதல் முறை: பாக்., ராணுவ அணிவகுப்பில் இந்திய அதிகாரிகள்

வரலாற்றில் முதல் முறையாக, பாகிஸ்தான் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். 1956 மார்ச் 23இல் உலகின் முதல் இஸ்லாமிய குடியரசாக அறிவிக்கப்பட்டது. அதைக் கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் 23-ல் ராணுவ அணிவகுப்பு நடத்துவது வழக்கம். இதில் இந்திய துாதரக அதிகாரிகள் பங்கேற்பது இல்லை. ஆனால் நேற்று முன்தினம் நடந்த கொண்டாட்டத்துக்கு, இந்திய துாதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் அழைப்பு விடுத்தது. நல்லெண்ண உறவுக்கு அழைப்பு விடுவதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா தெரிவித்தார். அவர் கூறும்போது, ‘இந்திய ராணுவ பிரதிநிதிகளை, அழைத்ததற்கு பாகிஸ்தான் எப்போதும் அமைதியையே விரும்புகிறது என காட்டத்தான்’ என்றார். அழைப்பை ஏற்குமாறு இந்திய…

Read More

ஈராக்கில் 3 ஆயிரம் பேருக்கு தூக்கு ஐ.எஸ்., ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை

ஈராக்கில் 3 ஆயிரம் பேருக்கு தூக்கு ஐ.எஸ்., ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை

ஈராக்கில் தீவிரவாத குற்றங்கள் அல்லது ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சிரியாவில் வன்முறையில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், ஈராக்கிலும் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி நிலவரப்பட்டி, ஈராக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ள 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களில் 3 ஆயிரம் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆயிரம் பேருக்கு மேல் போலீஸ், ராணுவம், குர்து படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகம் பேரை சிறை வைப்பதும், குற்றவாளி என விரைவாக முடிவு செய்வதும், தவறான…

Read More
1 13 14 15 16 17 22