துபாய் இளவரசி: கட்டாயத் திருமண உறவிலிருந்து பாதுகாக்க கோரிக்கை

துபாய் இளவரசி: கட்டாயத் திருமண உறவிலிருந்து பாதுகாக்க கோரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமை விட்டு சென்றுவிட்ட அவரது ஆறாவது மனைவி, முழு சம்மதமில்லாமல் கட்டாயப்படுத்தி தாம் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட திருமண உறவில் இருந்து தன்னை பாதுகாக்க வேண்டுமென்றும் பிரிட்டன் நீதிமன்றத்தில் கோரியுள்ளார். ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், கணவரை விட்டு சென்று நீதிமன்றத்தை நாடும் மூன்றாவது பெண்ணாவார். இளவரசி ஹயா அவரது உயிருக்கு பயந்து லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்த மாதம் தகவல் வெளியானது. செவ்வாய்க்கிழமை லண்டனில் இந்த வழக்கு தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தில் நடந்தது என்ன? ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தப்பி வந்தபோது,…

Read More

பிரேசில் காட்டில் பழங்குடியின தலைவர் கொலை – தங்க சுரங்கத்திற்காக விரட்டப்படும் பூர்வகுடிகள்

பிரேசில் காட்டில் பழங்குடியின தலைவர் கொலை – தங்க சுரங்கத்திற்காக விரட்டப்படும் பூர்வகுடிகள்

வடக்கு பிரேசிலில் உள்ள தொலைதூர அமேசான் காடு ஒன்றில் பயங்கர ஆயுதங்கள் ஏந்திய தங்கச் சுரங்க பணியாளர்கள், பழங்குடியின தலைவர்களில் ஒருவரை கொன்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பழங்குடியினர் தங்கம் நிறைந்த அந்த பகுதியை மீண்டும் கைப்பற்ற முயன்றால், வன்முறை வெடிக்கும் என்ற அச்சத்தில் அமாபா மாநிலத்தில் உள்ள அந்த கிராம மக்கள் ஊரைவிட்டு சென்று வருகின்றனர். அந்த பகுதியில் கூடுதலாக போலீஸார் காவலில் பணியமர்த்தப்பட்டனர். பிரேசிலில் அதிதீவிர வலதுசாரி கொள்கைக் கொண்ட போல்சானாரோ அதிபராக பதியேற்றப் பிறகு காப்பு காடுகளுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருவதால் அமேசான் பகுதியில் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காப்பு காடுகளில் பல பகுதிகளில் சுரங்கப் பணிகள் நடத்தப்படும் என அவர்…

Read More

சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு

சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு

இஸ்லாமாபாத்:’சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு வழங்கப்படும்’ என, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், உளவு பார்த்ததாகவும், மூன்றாண்டுகளுக்கு முன், குல்பூஷன் ஜாதவ், , பாகிஸ்தான் உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான அவருக்கு, பாக்., ராணுவ நீதிமன்றம், மரண தண்டனை விதித்துள்ளது. அதை எதிர்த்து, இந்திய தரப்பில், சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின், 17ல், தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘குல்பூஷன் ஜாதவ் மீதான தண்டனையை, பாக்., மறு பரிசீலனை செய்ய வேண்டும்; இந்திய துாதரக அதிகாரிகள், அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என, உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், பாக்., வெளியுறவுத்…

Read More

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவான் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை போர் கப்பல்

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவான் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை போர் கப்பல்

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, தைவான் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை போர் கப்பல் பயணித்து இருப்பது சீனக்கடல் பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தென் சீனக்கடலில், சீனா தொடர்ந்து ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி வருகிறது. சமீபமாக தங்களது கட்டுப்பாட்டில் உள்ள தைவானுக்கு சுய அதிகாரம் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக சீனா குற்றம்சாட்டி வருகிறது. தைவானுக்கு சுதந்திரம் அளிப்பது தங்கள் இறையாண்மைக்கு எதிரானது என்றும் சீனா கூறி உள்ளது. தங்களிடம் இருந்து தைவானைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் படைபலத்தை பிரயோகிக்கவும் தயங்க மாட்டோம் என்று கடந்த புதன்கிழமை (ஜூலை 24) அன்று சீனா எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் சீனா – தைவானைப் பிரிக்கும்…

Read More

இங்கிலாந்து புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு

இங்கிலாந்து புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு

இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது. இதில் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் ஓட்டுகள் தான் கட்சியின் புதிய தலைவர் (பிரதமர்) யார்? என்பதை தீர்மானிப்பதாக இருந்தன . போரிஸ் ஜான்சனுக்கு கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே அதிக ஆதரவு இருப்பது கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரிய வந்திருப்பதால் அவரே இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆவார் என நம்பப்பட்டது…

Read More

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி கைது

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி கைது

பாகிஸ்தானில் நவாஸ் செரீப் பிரதமராக இருந்த போது பனாமா ஆவண கசிவு காரணமாக பதவியை இழந்தார். இதனையடுத்து பிரதமரானவர் சாகித் ககான் அப்பாசி. பின்னர் தேர்தல் நடைபெற்று இம்ரான் கான் பிரதமர் ஆனார். அப்பாசி பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பு நவாஸ் செரீப் அமைச்சரவையில் பெட்ரோலிய துறை மந்திரியாக இருந்தார். அப்போது, கத்தார் நாட்டில் இருந்து திரவ எரிவாயு இறக்குமதி ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை அப்பாசி மறுத்து வந்தார். இந்த நிலையில் அப்பாசி லாகூரில் பத்திரிகையாளர்களை சந்திக்க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை தேசிய பொறுப்புடைமை முகமை (ஊழல் தடுப்பு) அதிகாரிகள் வழிமறித்து கைது செய்தனர். இதற்கு பாகிஸ்தான்…

Read More

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு; நண்பர்கள் உற்சாக கொண்டாட்டம்

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு; நண்பர்கள் உற்சாக கொண்டாட்டம்

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட தகவல் அறிந்து நண்பர்கள் உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர். இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ். இவர், கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 3ந்தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ‘ரா’ அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது. இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும்…

Read More

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட்டு நாளை தீர்ப்பு

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட்டு நாளை தீர்ப்பு

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ். இவர், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ‘ரா’ அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது. இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றி விட்டதோ என்ற…

Read More

பிரிட்டன் எண்ணெய் கப்பலை இடைமறிக்க முயற்சித்த இரான் – என்ன நடந்தது?

பிரிட்டன் எண்ணெய் கப்பலை இடைமறிக்க முயற்சித்த இரான் – என்ன நடந்தது?

வளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க இரானிய படகுகள் மேற்கொண்ட முயற்சி, ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரானின் இந்த நடவடிக்கைகள் “சர்வதேச சட்டத்திற்கு முரணானது” என்று அவர் கூறியுள்ளார். தனது எண்ணெய் கப்பலை பிரிட்டன் தடுத்து வைத்திருப்பதற்கு பதிலடி வழங்கப்படும் என்று இரான் முன்னதாக மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அத்தகைய முயற்சி எதையும் எடுக்கவில்லை என்று இரான் தெரிவித்திருக்கிறது. இரானின் இஸ்லாமிய புரட்சி…

Read More

சர்ச்சைக்குரிய இ-மெயில் கசிந்த விவகாரத்தில் திருப்பம் அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதர் ராஜினாமா

சர்ச்சைக்குரிய இ-மெயில் கசிந்த விவகாரத்தில் திருப்பம் அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதர் ராஜினாமா

அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதராக பதவி வகித்து வந்தவர் சர் கிம் டரோச். இவர் அமெரிக்காவில் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் தகுதியில்லாதவர்; பாதுகாப்பற்ற நிலையில் அவர் இருக்கிறார். வெள்ளை மாளிகையில் உட்பூசல், குழப்பம் நிலவுவதாக வெளியாகும் தகவல்களை டிரம்ப் ஏற்க மறுக்கிறார் என கடுமையாக விமர்சித்து இங்கிலாந்து அரசுக்கு இ-மெயில் அனுப்பினார். அது எப்படியோ கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சர் கிம் டரோச்சை டிரம்ப், மிகப்பெரிய முட்டாள் என சாடினார். சர் கிம் டரோச்சுக்கு பதவி விலக உள்ள இங்கிலாந்து பிரதமர் தெரசா மே முழு ஆதரவு தெரிவித்தார். ஆனால் அவரது இடத்துக்கு போட்டியில் உள்ள முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ்…

Read More
1 11 12 13 14 15 32