ஜஸ்டின் ட்ரூடோ: “கனடா பிரதமர் சட்டத்தை மீறினார்” – விசாரணை அமைப்பு குற்றச்சாட்டு

ஜஸ்டின் ட்ரூடோ: “கனடா பிரதமர் சட்டத்தை மீறினார்” – விசாரணை அமைப்பு குற்றச்சாட்டு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு ஊழல் வழக்கு விசாரணையில் கனடா சட்டத்தை மீறி உள்ளார் என்று நெறிமுறைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று கண்டுபிடித்துள்ளது. எஸ்.என்.சி லவாலின் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது செல்வாக்கு செலுத்த ஜஸ்டின் முயன்றதாக அந்த அமைப்பின் ஆணையர் கூறி உள்ளார். ஆணையரின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அதே சமயம் அவரது அறிக்கையின் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் அக்டோபரில் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் இந்த விசாரணை முடிவானது ஒரு பிரச்சனையாக ஜஸ்டினுக்கு உருவெடுக்கலாம். அது என்ன எஸ்.என்.சி லவாலின் விவகாரம்? எஸ்.என்.சி லவாலின் என்பது கனடா…

Read More

ஜாகீர் நாயக்கை நாட்டிலிருந்து வெளியேற்ற 3 மலேசிய அமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை

ஜாகீர் நாயக்கை நாட்டிலிருந்து வெளியேற்ற 3 மலேசிய அமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை

மலேஷியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகிர் நாயக், இந்தியா சென்று, வழக்குகளை சந்திக்க வேண்டும் என அந்நாட்டு மனிதவள அமைச்சர் குலசேகரன் கூறியுள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் ஜாகிர் அப்துல் கரீம் நாயக். இஸ்லாமிய மத பிரசாரகர். பல்வேறு நாடுகளில் இருந்து, சட்ட விரோதமாக, 193 கோடி ரூபாய் நிதி பெற்று, இந்தியாவில், பல இடங்களில் சொத்து வாங்கி குவித்து உள்ளார். இது தொடர்பாக, அமலாக்கத் துறை, இவர் மீது வழக்குகள் தொடர்ந்து உள்ளது. விசாரணைக்கு ஆஜராகாமல், ஜாகிர் நாயக் மலேஷியாவில் பதுங்கியுள்ளார். அவரை நாடு கடத்த மலேஷியா மறுத்துவிட்டது. இந்நிலையில், சமீபத்தில் ஜாகிர் நாயக் அளித்த பேட்டி…

Read More

சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது: தொழிலதிபர் சிறையில் மரணம் மற்றும் பிற செய்திகள்

சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது: தொழிலதிபர் சிறையில் மரணம் மற்றும் பிற செய்திகள்

பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி முதலீட்டு நிர்வாகிகளில் ஒருவரான ஜெப்ரே எப்ஸ்டெய்னின் உடல், சனிக்கிழைமை சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தமது சிறை அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருத்துப்படுகிறது. 2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது. “ஒவ்வொரு ஆணும் உங்களுடன் பாலுறவு வைத்து கொள்ள விரும்புவார்கள்” – பிபிசி…

Read More

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கிறது -பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி புலம்பல்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கிறது -பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி புலம்பல்

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனித்து விடப்பட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், இஸ்லாமிய நாடுகளும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களுக்கு (பி 5) அல்லது முஸ்லீம் நாடுகளில் ஒரு பகுதியினரிடம் ஆதரவு பெறுவது மிகவும் கடினம் என்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்டு உள்ளது. பி 5 உறுப்பினர்களாக சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை உள்ளன. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.குரேஷி கூறும்போது… பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளவர்கள் பூக்களுடன் நிற்கவில்லை. பி 5 உறுப்பினர்களில் எவரும் தடையாக இருக்க…

Read More

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது பாகிஸ்தான்

மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விவாதிப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி பாவத் சவுத்ரி, இந்தியா உடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும் என கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘‘இந்திய தூதர் ஏன் இங்கே இருக்கிறார்? நாம் ஏன் தூதரக உறவுகளை துண்டிக்கவில்லை? இரு நாடுகளுக்கும் இடையில் தூதரகம் இல்லாதபோது, அங்கு (இந்தியாவில்) நமது தூதர் என்ன செய்கிறார்?’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும், ‘‘காஷ்மீர் மற்றொரு பாலஸ்தீனமாக மாற பாகிஸ்தான் அனுமதிக்கக்கூடாது’’ என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ‘‘பாகிஸ்தான் போருக்கு பயப்படக்கூடாது, ஏனென்றால் எதையும் விட மரியாதை முக்கியமானது….

Read More

தூதரை திரும்ப அழைக்க பாக்., முடிவு

தூதரை திரும்ப அழைக்க பாக்., முடிவு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு பறித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவிற்கான தூதரை திரும்ப பெற்று கொள்ள பாக்., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு – காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 – ஏ பிரிவுகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்ததன் மூலம் முடிவுக்கு வந்தன. மாநிலத்தை ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது. மோடி அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிித்திருந்தது. இந்த விவகாரத்தில், இந்தியாவிற்கான தூதரை திரும்ப அழைத்து கொள்ள பாகிஸ்தான்…

Read More

பெண்கள் தனியே : போகலாம் இனியே

பெண்கள் தனியே : போகலாம் இனியே

பெண்கள், ஆண் துணை இல்லாமல் வெளிநாடு செல்ல சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது. சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான், பொறுப்பேற்றுக் கொண்டது முதல் அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்படி, பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, சவுதியில் தியேட்டர், விண்வெளித் திட்டம் போன்றவை செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது ஆண்களின் அனுமதி இல்லாமல் பெண்கள் தனியாக பாஸ்போர்டிற்கு விண்ணப்பித்து, வெளிநாடு செல்வதற்கு சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது. 21 வயது நிறைவடைந்த எந்த ஒரு பெண்ணும், யாரின்…

Read More

ரஷ்யாவுடன் செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

ரஷ்யாவுடன் செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம் (இன்டர்மீடியேட் ரேஞ்ஜ் நியூக்ளியர் ஃபோர்சஸ் டிரீட்டி) 1987-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இடையே கையெழுத்தானது. 500 கி.மீ. முதல் 5,500 கி.மீ தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை இந்த ஒப்பந்தம் தடை செய்தது. புதியவகை சீரியங்கு ஏவுகணைகளை (குரூய்ஸ் மிசைல்) பயன்பாட்டுக்கு கொண்டுவந்ததன் மூலம் இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா மீறுவதாக அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்தே குற்றம்சாட்டிவந்தன. ஆனால், இதை ரஷ்யா மறுத்துவந்தது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். 9M729 ஏவுகணைகள் பலவற்றை ரஷ்யா…

Read More

தூத்துக்குடிக்கு கடலில் மாலத்தீவு மாஜி துணை அதிபர் கைது?

தூத்துக்குடிக்கு கடலில் மாலத்தீவு மாஜி துணை அதிபர் கைது?

மாலத்தீவில் இருந்து வந்த இழுவைக் கப்பலில் மாறுவேடத்தில் வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடியில் இருந்து கடந்த 11 ஆம் தேதி மாலத் தீவிற்கு கருங்கல் ஏற்றி சென்ற விர்கோ 9 என்ற இழுவைப் படகில் இந்தோனீசியாவை சேர்ந்த 8 ஊழியர்களும், ஓர் இந்தியரும் சென்றுள்ளனர்.கடந்த 27 ஆம் தேதி சரக்கை இறக்கிவிட்டு தூத்துக்குடி நோக்கி வந்த இந்த இழுவைப் படகில் பத்தாவதாக ஒரு நபர் வந்துள்ளார். இது தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து உளவுத்துறையினர் நடுக்கடலில் படகில் வந்த பத்தாவது நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்தப் பத்தாவது நபர் மாலத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி…

Read More

துபாய் இளவரசி: கட்டாயத் திருமண உறவிலிருந்து பாதுகாக்க கோரிக்கை

துபாய் இளவரசி: கட்டாயத் திருமண உறவிலிருந்து பாதுகாக்க கோரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமை விட்டு சென்றுவிட்ட அவரது ஆறாவது மனைவி, முழு சம்மதமில்லாமல் கட்டாயப்படுத்தி தாம் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட திருமண உறவில் இருந்து தன்னை பாதுகாக்க வேண்டுமென்றும் பிரிட்டன் நீதிமன்றத்தில் கோரியுள்ளார். ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், கணவரை விட்டு சென்று நீதிமன்றத்தை நாடும் மூன்றாவது பெண்ணாவார். இளவரசி ஹயா அவரது உயிருக்கு பயந்து லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்த மாதம் தகவல் வெளியானது. செவ்வாய்க்கிழமை லண்டனில் இந்த வழக்கு தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தில் நடந்தது என்ன? ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தப்பி வந்தபோது,…

Read More
1 2 3 21