ஹிந்து பெண்கள் அமெரிக்க நீதிபதிகளாக நியமனம் !!

ஹிந்து பெண்கள் அமெரிக்க நீதிபதிகளாக நியமனம் !!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்து, இரு பெண்கள், அமெரிக்காவில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர், பில் டி பிளாசியோ, குற்றவியல், சிவில் மற்றும் குடும்பவியல் நீதிமன்றங்களுக்கு, 28 நீதிபதிகளை நியமித்தார்.அவர்களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அர்ச்சனா ராவ், தீபா அம்பேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நியூயார்க் இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக உள்ள, அர்ச்சனா ராவ், தற்போது, நியூயார்க் சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 17 ஆண்டுகளாக, நியூயார்க் மாவட்ட வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சமீபத்தில், நிதி முறைகேடு தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தீபா அம்பேகர், 2018, மே மாதம், இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, தற்போது…

Read More

வங்கதேசத்தின் முதல் ஹிந்து தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹாவுக்கு கைது வாரன்ட்

வங்கதேசத்தின் முதல் ஹிந்து தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹாவுக்கு கைது வாரன்ட்

வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுரேந்திர குமார் சின்ஹா 68. ஹிந்து மதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹா தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.அவர்மீது வங்கதேசத்தில் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 3.4 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதாக சின்ஹா உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்பு கமிஷன் வங்க தேச நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேர் விவசாய வங்கிகளின் முன்னாள் அதிகாரிகள். இவர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலபதிர்கள் இருவர் போலி ஆவணங்களை அளித்து கடன் பெற்றதாகவும் அந்த தொகை முழுவதும் சின்ஹாவின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது….

Read More

நியூயார்க் யூத மத குருவின் வீட்டில் கத்திக்குத்து – ஐவர் காயம்

நியூயார்க் யூத மத குருவின் வீட்டில் கத்திக்குத்து – ஐவர் காயம்

வடக்கு நியூயார்க்கில் உள்ள மோன்சியில் ஒரு மத கொண்டாட்டத்தின்போது, தாக்குதல்தாரிகள் உள்ளே புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாக யூத பொது விவகாரங்களுக்கான சபை (OJPAC) கூறுகிறது. சந்தேக நபர் அங்கிருந்து தப்பியதாகவும், ஆனால் காவல்துறையினர் அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் என்றும் தெரிவித்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. நகரத்தில், யூத எதிர்ப்பு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து நிலவுவதால், யூத மக்கள் வாழும் பல பகுதிகளில், காவல் துறையினர் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக நியூயார்க் நகரய யூதர்கள் அதிகம் வசிக்கும் மோன்சியில் ஒரு மத குருவின் இல்லத்தில், ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது முக மூடி அணிந்த நபர் தாக்குதல் நடத்தினார். படத்தின் காப்புரிமைREUTERS தாக்குதலின்போது,…

Read More

16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ்

16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ்

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடிய சுவீடனை சேர்ந்த 16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ் பெருமைப்படுத்தி உள்ளது.     ஆண்டுதோறும் சிறப்புமிக்கவர்களின் புகைப்படங்களை அட்டைப்படத்தில் வெளியிட்டு டைம் இதழ் பெருமைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த வரிசையில் கிரேட்டா இடம் பெற்று உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார். பருவ நிலை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் குரல் எழுப்பத் தயங்காதவர் கிரேட்டா. செப்டம்பர் மாதத்தில் நியூயார்க் நகரில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா., கூட்டத்தில் 2018 ம் ஆண்டு இவர் ஆற்றிய உரை உலக நாடுகளால் பாராட்டப்பட்டது. அட்லான்டிக் கடல்பகுதியில் சுமார் 14 நாட்கள் பயணித்த தனது…

Read More

நான் தான் பரமசிவன். என் மீது எந்த முட்டாள் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியாது – நித்தியானந்தா

நான் தான் பரமசிவன். என் மீது எந்த முட்டாள் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியாது – நித்தியானந்தா

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா மீது, பல்வேறு பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாருக்கு சொந்தமான ஒரு தீவை அவர் விலைக்கு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தத் தீவுக்கு, ‘கைலாஷ்’ என பெயரிட்டு, தனியாக பாஸ்போர்ட் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. பல்வேறு வழக்குகள் உள்ளதால், நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட், 2018 வரை செல்லுபடியாகும் நிலையில், முன்னதாகவே அது ரத்து செய்யப்பட்டது. ‘புதிய பாஸ்போர்ட் கேட்டு அவர் கொடுத்த விண்ணப்பமும் ஏற்கப்படவில்லை’ என, வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்த நிலையில், ஏதாவது ஒரு, ‘வீடியோ’வை நித்தியானந்தா தினமும் வெளியிட்டு வருகிறார். இன்று…

Read More

லண்டன் பாலத்தில் கத்தியால் தாக்குதல்: துப்பாக்கிச்சூடு; மர்மநபர் கொல்லப்பட்டார்

லண்டன் பாலத்தில் கத்தியால் தாக்குதல்: துப்பாக்கிச்சூடு; மர்மநபர் கொல்லப்பட்டார்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கத்தியால் குத்தி தாக்கிய மர்ம மனிதனை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர் லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார். சரமாரியாக அவர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். பொதுமக்கள் சிலர் அந்த மர்ம மனிதனை பார்த்து அலறியடித்து ஒடினர். தகவலறிந்த ஆயுதமேந்திய ரோந்து போலீசார் அந்த மர்ம மனிதன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி சுற்றி வளைத்து கைது செய்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியுள்ளது. மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பலர்…

Read More

பள்ளியில் துப்பாக்கி சூடு 2 மாணவர்கள் பலி

பள்ளியில் துப்பாக்கி சூடு 2 மாணவர்கள் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா கிளாரிட்டாவில், சாகஸ் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தன், 16வது பிறந்த நாளை, நேற்று முன்தினம் கொண்டாடினார். பள்ளிக்கு கறுப்பு ஆடையில் வந்த அந்த சிறுவன், திடீரென தன் பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து, சரமாரியாகசுட்டார்.இதில், 16 வயது மாணவி மற்றும் 14 வயது மாணவன், துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர். மேலும் மூன்று பேர், காயமடைந்தனர்.

Read More

டிரக்கில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்

டிரக்கில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்

இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள எசெக்ஸ் நகரில் இருக்கும் தொழிற்பூங்காவுக்கு நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.40 மணிக்கு பல்கேரியா நாட்டில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அந்த கண்டெய்னரை தொழிற்பூங்கா காவலாளிகள் சோதனை செய்தனர். அப்போது கண்டெய்னருக்குள் பலர் பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ந்து போனார்கள். ஒரு சிறுவன் உள்பட 39 பேர் கன்டெய்னருக்குள் இறந்து கிடந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 39 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கிலாந்தை அதிர்ச்சி அடையச் செய்த, இச்சம்பவம் தொடர்பாக, வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 25…

Read More

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் நிலநடுக்கம்; 22 பேர் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் நிலநடுக்கம்; 22 பேர் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நியூ மீர்பூர் பகுதியருகே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் நாட்டின் வடபகுதியில் பல்வேறு நகரங்கள் குலுங்கின.  சில வீடுகள் இடிந்து விழுந்தன.  அந்த பகுதியில் உள்ள மசூதி ஒன்றும் சேதமடைந்தது. இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் மருத்துவமனைகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.  பல வாகனங்கள் சாலைகளில் ஏற்பட்ட வெடிப்புகளுக்குள் விழுந்தன.  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அச்ச உணர்வால் கட்டிடத்தில் இருந்து பொதுமக்கள் தப்பியோடினர்.  ஜீலம் கால்வாய் சேதமடைந்து உள்ளது.  அதில் இருந்து நீரானது பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இந்நிலநடுக்கத்திற்கு 19 பேர் பலியாகி உள்ளனர்.  300…

Read More

பாக்., மருத்துவ கல்லூரியில் ஹிந்து பெண் மர்மச்சாவு

பாக்., மருத்துவ கல்லூரியில் ஹிந்து பெண் மர்மச்சாவு

கராச்சி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லார்கானா என்ற இடத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் நம்ரிதா சந்தானி என்ற பெண் மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.இவர் நேற்று தன் விடுதி அறையை விட்டு வெளியே வராததால் நண்பர்கள் கதவை தட்டினர். நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் விடுதி பாதுகாவலர் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு நம்ரிதா சந்தானி கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் தரையில் இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த நம்ரிதாவின் சகோதரர் விஷால் சுந்தர் ‘நான் தடயவியல் படித்துள்ளேன். என் தங்கையின் உடலை பார்க்கும்போது அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது…

Read More
1 2 3 4