பள்ளியில் துப்பாக்கி சூடு 2 மாணவர்கள் பலி

பள்ளியில் துப்பாக்கி சூடு 2 மாணவர்கள் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா கிளாரிட்டாவில், சாகஸ் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தன், 16வது பிறந்த நாளை, நேற்று முன்தினம் கொண்டாடினார். பள்ளிக்கு கறுப்பு ஆடையில் வந்த அந்த சிறுவன், திடீரென தன் பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து, சரமாரியாகசுட்டார்.இதில், 16 வயது மாணவி மற்றும் 14 வயது மாணவன், துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர். மேலும் மூன்று பேர், காயமடைந்தனர்.

Read More

டிரக்கில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்

டிரக்கில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்

இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள எசெக்ஸ் நகரில் இருக்கும் தொழிற்பூங்காவுக்கு நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.40 மணிக்கு பல்கேரியா நாட்டில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அந்த கண்டெய்னரை தொழிற்பூங்கா காவலாளிகள் சோதனை செய்தனர். அப்போது கண்டெய்னருக்குள் பலர் பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ந்து போனார்கள். ஒரு சிறுவன் உள்பட 39 பேர் கன்டெய்னருக்குள் இறந்து கிடந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 39 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கிலாந்தை அதிர்ச்சி அடையச் செய்த, இச்சம்பவம் தொடர்பாக, வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 25…

Read More

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் நிலநடுக்கம்; 22 பேர் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் நிலநடுக்கம்; 22 பேர் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நியூ மீர்பூர் பகுதியருகே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் நாட்டின் வடபகுதியில் பல்வேறு நகரங்கள் குலுங்கின.  சில வீடுகள் இடிந்து விழுந்தன.  அந்த பகுதியில் உள்ள மசூதி ஒன்றும் சேதமடைந்தது. இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் மருத்துவமனைகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.  பல வாகனங்கள் சாலைகளில் ஏற்பட்ட வெடிப்புகளுக்குள் விழுந்தன.  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அச்ச உணர்வால் கட்டிடத்தில் இருந்து பொதுமக்கள் தப்பியோடினர்.  ஜீலம் கால்வாய் சேதமடைந்து உள்ளது.  அதில் இருந்து நீரானது பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இந்நிலநடுக்கத்திற்கு 19 பேர் பலியாகி உள்ளனர்.  300…

Read More

பாக்., மருத்துவ கல்லூரியில் ஹிந்து பெண் மர்மச்சாவு

பாக்., மருத்துவ கல்லூரியில் ஹிந்து பெண் மர்மச்சாவு

கராச்சி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லார்கானா என்ற இடத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் நம்ரிதா சந்தானி என்ற பெண் மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.இவர் நேற்று தன் விடுதி அறையை விட்டு வெளியே வராததால் நண்பர்கள் கதவை தட்டினர். நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் விடுதி பாதுகாவலர் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு நம்ரிதா சந்தானி கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் தரையில் இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த நம்ரிதாவின் சகோதரர் விஷால் சுந்தர் ‘நான் தடயவியல் படித்துள்ளேன். என் தங்கையின் உடலை பார்க்கும்போது அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது…

Read More

10 கோடி பயனாளர்களின் கிரடிட் கார்டு விவரங்களை திருடிய பெண்

10 கோடி பயனாளர்களின் கிரடிட் கார்டு விவரங்களை திருடிய பெண்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்தவர் பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பெய்ஜ் தாம்சன் (33). இவர் தனது கணினி திறமையை பயன்படுத்தி, கேபிடல் ஒன் வங்கியின் வாடிக்கையாளர்களான சுமார் 10 கோடி பேரின் கிரடிட் கார்டு தொடர்பான விவரங்களை திருடியுள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்திலும், கிட் கியூப் ( GitHub) என்ற இணையதளத்திலும் தற்பெருமை அடித்துள்ளார். இதை கவனித்த இணையதள பயனாளர் ஒருவர், கேபிடல் ஒன் வங்கிக்கு தகவல் அளித்துள்ளார். வங்கியும் கிரடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டதை அறிந்து புகார் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் தகவல் திருட்டில் ஈடுபட்ட பெய்ஜ் தாம்சனை கைது செய்த எப்பிஐ அதிகாரிகள், திருடி வைத்திருந்த விவரங்களையும் மீட்டுள்ளனர். கிரடிட் கார்டு கணக்கு விவரங்களையோ…

Read More

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்கல் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்கல் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கலின் திருமணம் கடந்த ஆண்டு மே 19-ம் தேதி லண்டனுக்கு அருகே உள்ள வின்ஸ்டர் என்ற இடத்தில் நடைபெற்றது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உள்ளூர் நேரப்படி காலை 5.26 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.2 கிலோ எடை இருந்தது. இதுகுறித்து இளவரசர் ஹாரி கூறும்போது, ‘‘மேகனும், குழந்தையும் நலமாக உள்ளனர். நான் இதுவரை கனவிலும் காணாத மிகவும் அற்புதமான அனுபவம் இது. ஒவ்வொரு தந்தையையும் போல நானும் எனது மனைவியை நினைத்து பெருமைப்படுகிறேன்’’ என்றார். குழந்தைக்கான பெயரை தேர்வு…

Read More

இலங்கை குண்டுவெடிப்பு பின்னணியில் சகோதரர்கள்

இலங்கை குண்டுவெடிப்பு பின்னணியில் சகோதரர்கள்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 359 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் பணக்கார குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மகாவேலா கார்டன்ஸ் பகுதியில் 3 அடுக்கு மாடி வீடு ஒன்றில் வசித்து வந்த இவர்களில் இன்ஷாப் இப்ராஹிம் (33) என்பவர் காப்பர் ஆலை உரிமையாளராக உள்ளார். மசாலா பொருட்கள் உற்பத்தி ஆலையின் உரிமையாளரான இவரது சகோதரர் இப்ராஹிம், தாக்குதல் நடத்தப்பட்ட சொகுசு ஓட்டல் ஒன்றில் வெடிகுண்டுகளை வைத்து சென்றது தெரிய வந்தது. இதனை அறிந்து போலீசார் அவரை தேடிச் சென்ற போது, தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர், இப்பகுதியில் இவர்களின் குடும்பம் செல்வாக்கு…

Read More

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்; வங்காளதேச பிரதமரின் உறவினரான 8 வயது சிறுவன் உயிரிழப்பு

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்; வங்காளதேச பிரதமரின் உறவினரான 8 வயது சிறுவன் உயிரிழப்பு

இலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், கொழும்பு நகரின் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது அன்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இதேபோன்று மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இந்த தாக்குதல்களில் இதுவரை 321 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதில், வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் பஸ்லுல் கரீம் செலிம் என்பவரின் பேரன் ஜயான் சவுத்ரி (வயது 8) கொல்லப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. …

Read More

கருஞ்சிறுத்தையுடன் ‘செல்பி’ – பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

கருஞ்சிறுத்தையுடன் ‘செல்பி’ – பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

இளைஞர்கள் மத்தியில் மையம் கொண்டுள்ள செல்பி மோகம் அவர்களுடைய உயிருக்கே பல நேரங்களில் உலை வைக்கிறது. இது தெரிந்தும் செல்பியால் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது அமெரிக்காவில் பெண் ஒருவர் கருஞ்சிறுத்தையுடன் செல்பி எடுக்க முயன்று கையில் காயத்தை வாங்கியுள்ளார்.  அரிசோனா மாகாணத்தின் தலைநகர் பீனிக்சில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வந்தார். அங்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கருஞ்சிறுத்தையுடன் ‘செல்பி’ படம் எடுப்பதற்காக பார்வையாளர்கள் நுழையக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பையும் தாண்டி கூண்டு அருகே சென்றார். பின்னர் அவர் கூண்டை உரசியபடி நின்று கருஞ்சிறுத்தையுடன் தனது செல்போனில் ‘செல்பி’ படம்…

Read More

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 23 ஆக உயர்வு

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 23 ஆக உயர்வு

அமெரிக்காவின் தென்கிழக்கு அலபாமாவில் கடுமையான சூறாவளி காற்று வீசியது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் காற்று வீசியது. பேரிடர் நிவாரண படையினர் உடனடியாக அங்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூறாவளியானது ஜார்ஜியா, தெற்கு கரோலினா மற்றும் புளோரிடா ஆகிய நகரங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதில் 14 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் குழந்தைகளும் உள்ளனர். பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்….

Read More
1 2 3