இலங்கையில் ஹிஜாப் அணிந்த ஆசிரியர்களை தடுத்து இடம்மாற்றம்

இலங்கையில் ஹிஜாப் அணிந்த ஆசிரியர்களை தடுத்து இடம்மாற்றம்

ஹபாயா மற்றும் ஹிஜாப் ஆடையுடன், தாங்கள் பணியாற்றும் பாடசாலைக்குள் நுழைய தடுத்ததன் காரணமாக, இலங்கையின் மேல் மாகாணத்திலுள்ள பாடாசாலை ஒன்றில் பணியாற்றி வந்த 10 ஆசிரியைகள், நேற்று செவ்வாய்க்கிழமை வேறு பாடசாலைகளுக்கு மாற்றம் பெற்று சென்றது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. அவிசாவளை – புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலத்தில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள், பணிக்கு சென்றபோது, ஹபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து கொண்டு பாடசாலைக்குள் செல்லக் கூடாது என்று, நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த பாடசாலையில் கற்கும் மாணவர்களின் பெற்றோரும், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் இணைந்து அவர்களை தடுத்ததாக மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலியின் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியைகள் அனைவரும்…

Read More

இலங்கை ஜனாதிபதி சிறிசேன கேள்வி: ஐ.எஸ். அமைப்புக்கு சக்தி வாய்ந்த நாடுகளை தாக்கும் திறன் இருக்கிறதா?

இலங்கை ஜனாதிபதி சிறிசேன கேள்வி: ஐ.எஸ். அமைப்புக்கு சக்தி வாய்ந்த நாடுகளை தாக்கும் திறன் இருக்கிறதா?

இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பிபிசியுடனான பிரத்யேக பேட்டியின்போது அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன பதிலளித்தார். கேள்வி: இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழு உங்கள் நாட்டை இலக்கு வைக்கும் என்ற உள்ளுணர்வு உங்களுக்கு இருந்ததா? அப்படியொரு கற்பனையை கூட செய்திருப்பீர்களா? பதில்: உண்மையை சொல்வதென்றால், அப்படி நான் நினைத்ததே இல்லை. நான் அதிர்ச்சி அடைந்தேன். இலங்கையை ஏன் அவர்கள் தேர்வு செய்தார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கேள்வி: பிறகு தாக்குதல் நடத்த இலங்கையை அவர்கள் ஏன் தேர்வு செய்திருப்பார்கள் என கருதினீர்கள்? பதில்: உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் நேருக்கு நேராக…

Read More

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் பயன்பட்ட பயிற்சி மையம் கண்டுபிடிப்பு

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் பயன்பட்ட பயிற்சி மையம் கண்டுபிடிப்பு

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று காலை 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஒரே நாளில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர். 500 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. ஆனால், தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்.டி.ஜே.) மற்றும் ஜமாதி மிலாது இப்ராகீம் என்ற பிரிவினைவாத குழு மீது அரசு குற்றச்சாட்டு தெரிவித்தது. தொடர்ந்து, அதிபர் மைத்ரிபால சிறிசேனா கடந்த வாரம் இந்த இரு அமைப்புகளையும் தடை…

Read More

இலங்கை தாக்குதலுக்கு முன் பிட்காயின் அடிப்படையில் நிதி திரட்டிய ஐ.எஸ். அமைப்பு

இலங்கை தாக்குதலுக்கு முன் பிட்காயின் அடிப்படையில் நிதி திரட்டிய ஐ.எஸ். அமைப்பு

இலங்கை தாக்குதலுக்கு முன்னர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பானது தங்களிடம் உள்ள க்ரிப்டோ கரன்சிகளை டாலர்களாக மாற்றியதாக கண்டறிந்துள்ளது. இஸ்ரேல் நிறுவனமான ஒஉஇட்ஸ்டீர்ம் இதுகுறித்து தெரிவிக்கையில், பிட்காயின் முறையில் இருக்கும் நம்பகத்தன்மை மற்றும் மேற்பார்வை செய்யப்படாத சர்வதேச பண மாற்றங்கள் அனைத்தும் தீவிரவாதத்திற்கு பயனளிப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கையில் நூற்றுக்கணக்கானவர்களின் உயிரைப் பறித்த அந்த தொடர் தாக்குதல்களுக்கு முன்னர் ஐ.எஸ். அமைப்பு பிட்காயின் பரிமாற்றங்கள் செய்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி காயின் பேமெண்ட்ஸ் (CoinPayments) என்ற தளத்தின் நிலுவையில் உள்ள தொகை £383,000 இருந்து £3.45 மில்லியன் என அதிகரித்ததாக அந்த இஸ்ரேல் நிறுவனம் கண்டறிந்துள்ளது. ஆனால் ஈஸ்டர் ஞாயிறன்று அந்த மொத்த பணமும் மாயமாகி,…

Read More

பயங்கரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம் அதிரடியில் இறங்கியது இலங்கை அரசு

பயங்கரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம் அதிரடியில் இறங்கியது இலங்கை அரசு

இலங்கை தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துவர்களின் பண்டிகையான, ‘ஈஸ்டர்’ அன்று, இலங்கையில் உள்ள மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில், தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது.இதில், 253 பேர் கொல்லப்பட்டனர்; 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உள்ளூர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒன்பது பேர், இந்த தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.பயங்கரவாதிகள் ஒன்பது பேர் மற்றும் அவரது உறவினர்களின் விபரங்களை, போலீசார் சமீபத்தில் வெளியிட்டனர். பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களின் பட்டியலை, விசாரணை அதிகாரிகள் பட்டியலிட்டு வருகின்றனர்.அந்த சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில், அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும்வரை,…

Read More

இலங்கை அரசாங்கத்துடன் கரம் கோர்க்கும் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகள்

இலங்கை அரசாங்கத்துடன் கரம் கோர்க்கும் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகள்

இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், தமது அனுபவங்களை இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான் காப்பு படையணியின் போராளியாக கடமையாற்றிய முன்னாள் போராளியும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான க.துளசி பி.பி.சி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார். இலங்கை பாதுகாப்பு பிரிவினர், உள்நாட்டு யுத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கான கட்டமைப்புடன் செயற்பட்டு வருகின்றமையே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச ரீதியில் செயற்படுகின்ற பயங்கரவாத அமைப்புக்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலான திட்டமொன்று இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது…

Read More

இலங்கை குண்டுவெடிப்பு: தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் கைது – அமைச்சர் தகவல்

இலங்கை குண்டுவெடிப்பு: தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் கைது – அமைச்சர் தகவல்

இலங்கை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் நிலைகொண்ட பயங்கரவாதத்தை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சஹரான் இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவர் என கூறிய போதிலும், அவர் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இல்லை எனவும் அவர் கூறினார். அமைப்பொன்றின் தலைவர் ஒருபோதும் தற்கொலை குண்டுத் தாக்குலை நடத்தி உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் கிடையாது என்றும், தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும்…

Read More

இலங்கையில் கடல் வழியாக மற்றொரு தாக்குதல்? இந்திய உளவுத்துறை ரகசிய தகவல்

இலங்கையில் கடல் வழியாக மற்றொரு தாக்குதல்? இந்திய உளவுத்துறை ரகசிய தகவல்

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட பல இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 9 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினார்கள். இதில் 40 வெளிநாட்டினர் உள்பட 253 பேர் கொல்லப்பட்டனர். 500–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். அவர்கள் உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினருடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு இலங்கை அரசு தடை விதித்தது. இலங்கையில், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இலங்கையில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும், அதனால் கடற்கரையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என…

Read More

இலங்கைக்கு செல்ல கறுப்பு பூனை படை தயார்

இலங்கைக்கு செல்ல கறுப்பு பூனை படை தயார்

பயங்கரவாதிகளை எதிர்கொள்வது குண்டுவெடிப்பு நேரங்களில் கையாள்வதில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களும் என்.எஸ்.ஜி., , எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினர் ( கறுப்பு பூனை படை ) சென்னையில் தயார் நிலையில் உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக 253 பேர் கொல்லப்பட்டனர். இன்னும் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இலங்கையில் கடந்த 21 ம் தேதி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 253 பேர் பலியாகியுள்ளனர். தாக்குதலை தொடர்ந்து இலங்கை படையினர் பயங்கரவாதிகளை கைது செய்வதில் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கிழக்கு இலங்கையின் கல்முனை பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது…

Read More

இலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை

இலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை அடுத்து, முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்படுவுதாக அந்நாட்டு அதிபர் சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முகத்தை மறைக்கும் ஆடைகள் அல்லது அடையாளங்களை மக்கள் அணிய தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இந்த தடை ஏப்.,29 முதல் அமலுக்கு வருகிறது. அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழ் இந்த தடை கொண்டு வரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன்னும் பதற்றம் அடங்காத நிலையே காணப்படுகிறது. மக்கள் வெடிகுண்டு அச்சத்தில் உறைந்துள்ளனர். ராணுவம் தொடர்ந்து நாடு முழுவதும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் விளைவாக வயல்வெளி பகுதிகளில் இருந்து வெடி பொருட்களும், மறைவான இடங்களில்…

Read More
1 6 7 8 9 10 38