‘மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க உறுப்பினர்களை விலை பேசுகிறார் அவர் மகன்’

‘மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க உறுப்பினர்களை விலை பேசுகிறார் அவர் மகன்’

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினைப் பெற, ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, எதிரணி உறுப்பினர்களை 3 மில்லியன் அமெரிக்க டாலர் வரையில் விலை பேசி வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தனது ட்விட்டர் பதிவொன்றில் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையினை காட்டுவதற்கு, திங்கட்கிழமை வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைபேசும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ இதனை தலைமை தாங்கி நடத்துவதாகவும்…

Read More

நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு

நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு

இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந்தேதி அதிரடியாக நீக்கினார். பின்னர் முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார். ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்த சிறிசேனா ஜனவரி 5-ந்தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த கோர்ட்டு சிறிசேனா பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்தது. இதற்கிடையே கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடியபோது ராஜபக்சே அரசுக்கு எதிராக 2 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டிலுமே ராஜபக்சே தோல்வி கண்டார். இதைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டுள்ள…

Read More

ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுக் காட்டுங்கள் என ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் சவால்

ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுக் காட்டுங்கள் என ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் சவால்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு துணிச்சல் இருந்தால், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி, அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார். நேற்று வியாழக்கிழமை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியில் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றி ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது; ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர், உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றிருக்கலாம். ஆனால், சட்டத்துறையில் போதிய தெளிவில்லாத பாமர சட்டத்தரணிகளின் பேச்சைக் கேட்டு பாராளுமன்றத்தை அவரசரப்பட்டு கலைத்துவிட்டார். அவர் இப்போது பின்நோக்கிச் செல்லமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார். 2ஃ3 பெரும்பான்மையின்றி நான்கரை…

Read More

இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் – மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் அடிதடி, எம்.பி. ஒருவர் காயம் – மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றும் கூச்சல் ஏற்பட்டது. எம்.பிக்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந்தார். சுமார் ஒரு மணி நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூச்சல் குழப்பம் நீடித்தது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும கத்தியுடன் திரிந்ததாக காட்டும் படங்கள் வெளியாயின. இத்தகைய படங்களுடன் ரிவிர என்ற இணைய தளம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்குக் கூடிய போது, பிரதமருக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியினர் பக்கம் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். சபையை சபாநாயகர் ஆரம்பித்தபோது, மகிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த தினேஸ்…

Read More

பார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது

பார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும் அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது

‘பார்லிமென்டை கலைத்தும், மறுதேர்தல் அறிவித்தும், அதிபர் மைத்ரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது’ என, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கே உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், அதிபர் மைத்ரிபால சிறிசேன, சமீபத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை, புதிய பிரதமராகவும் அவர் அறிவித்தார்.இதனால், அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, நவ., 5ல் நடப்பதாக இருந்த, பார்லிமென்ட் கூட்டத் தொடரை, நவ., 14ம் தேதிக்கு, சிறிசேன ஒத்தி வைத்தார். ஆனால், தான் பிரதமராக தொடர்வதாக, ரணில் கூறி வந்தார்.இந்நிலையில், பார்லிமென்டை கலைப்பதாகவும், அடுத்தாண்டு, ஜனவரி, 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், சிறிசேன, சமீபத்தில்…

Read More

ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி: சபாநாயகர்

ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி: சபாநாயகர்

இலங்கை பார்லியில் இருந்து ராஜபக்சே வெளிநடப்பு செய்ததை அடுத்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார் கடும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இலங்கை பார்லிமென்ட் இன்று கூடியது. அப்போது அதிபர் சிறிசேனாவால் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து கூச்சல், குழப்பம் நிலவியது. ரணில் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவையில் பங்கேற்றனர். எதிர்க்கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவாக…

Read More

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் சமீபத்தில் மோதலாக வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந் தேதி திடீரென்று நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார்.ஆனால் தானே பிரதமர் என்றும், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் ரனில் விக்ரமசிங்கே கூறினார். அத்துடன் பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறவும் அவர் மறுத்தார்.  நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எண்ணிக்கை கிடைக்காது என்று கூறப்பட்டது. இந்த…

Read More

கைவசம் இன்னும் துரும்புகளை தேவைப்படும் போது யுஎன்பி க்கு எதிராகப் பயன்படுத்துவேன் என எச்சரிக்கின்றார் ஜனாதிபதி

கைவசம் இன்னும் துரும்புகளை தேவைப்படும் போது யுஎன்பி க்கு எதிராகப் பயன்படுத்துவேன் என எச்சரிக்கின்றார்  ஜனாதிபதி

கைவசம் இன்னும் துரும்புகளை தேவைப்படும் போது யுஎன்பி க்கு எதிராகப் பயன்படுத்துவேன் என எச்சரித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, நான் ஒரு துரும்பை மாத்திரமே பயன்படுத்தியுள்ளேன். இன்னும் துரும்புகள் என்னிடம் இருக்கின்றன. தேவைப்பட்டால் அதனை பயன்படுத்தலாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எங்களிடம் தேவையான பெரும்பான்மை இருக்கின்றது. இதனால் எனது தீர்மானங்களை நான் எக்காரணத்திற்காகவும் இடையில் நிறுத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். 14ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சியினரை கேட்டுக்கொள்வதாகவும் இல்லையென்றால் அரசியலமைப்பிற்கு ஏற்றவாறு செய்யக்…

Read More

மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க திட்டங்கள் தயார் என்கிறார் ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார்

மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க திட்டங்கள் தயார் என்கிறார் ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு வரப்படும் எந்த பிரேரணைக்கும், தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க கருத்து வெளியிடுகையில்,“பதவிகள், சலுகைகள், மற்றும் கறுப்புப் பணத்தை பயன்படுத்தி மைத்திரி- மகிந்தவினால் முன்னெடுக்கப்படும் இந்த சதித் திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும். முதலில் இந்த அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பதற்காகவே ஜேவிபி செயற்பட வேண்டியுள்ளது. இந்த சதித் திட்டம் நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேறும் தோற்கடிக்கப்பட வேண்டும். எனவே, நாளை ஜேவிபி நான்கு முக்கிய நகரங்களில் கருத்தரங்குகளை நடத்தவுள்ளது. பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை…

Read More

விகாரைகளுக்கு சென்று வழிபட்டாலும் ஜனாதிபதி மைத்திரி பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார் என்கிறார் உயன்கொட

விகாரைகளுக்கு சென்று வழிபட்டாலும் ஜனாதிபதி மைத்திரி பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார் என்கிறார் உயன்கொட

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்த அதிகாரத்தையே முறையற்ற விதத்தில் செயற்படுத்துகின்றார்.அத்துடன் அவர் விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும்; பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார். மனிதனுக்கு காணப்பட வேண்டிய சாதாரண குணங்கள் அனைத்தையும் புறந்தள்ளி செயற்படுகின்றார். என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜயதேவ் உயன்கொட தெரிவித்துள்ளார். மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு தின நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார். மனிதனுக்கு காணப்பட வேண்டிய சாதாரண குணங்கள் அனைத்தையும் புறந்தள்ளி செயற்படுகின்றார். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும்…

Read More
1 5 6 7 8 9 29