‛ரா’ மீது புகார்: இலங்கை மறுப்பு

‛ரா’ மீது புகார்: இலங்கை மறுப்பு

இந்திய உளவு அமைப்பான, ‘ரா’ என்னை கொல்ல சதி செய்கிறது என இலங்கை அதிபர் சிறிசேனா கூறியதாக வந்த தகவலை, அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று, வாராந்திர அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் பேசிய அதிபர் சிறிசேனா, ‘ இந்திய உளவு அமைப்பான ரா என்னை கொல்ல சதி செய்கிறது. ஆனால், இந்த விஷயம் பிரதமர் மோடிக்கு தெரியாது. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் செயல்பாடுகள் அந்நாட்டு அதிபர் டிரம்புக்கு முழுமையாக தெரியாது. அது போல தான் இது’ என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்….

Read More

இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் தேதி, ஆட்சியமைத்த போது, அமெரிக்க டாலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய் 25 சதமாக இருந்தது. ஆனால், இன்றைய தினத்தில் (03 ஆம் தேதி) அமெரிக்க டாலர் ஒன்றின் பெறுமதி 170 ரூபாய் 75 சதமாக உள்ளது. இதன் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை, 149…

Read More

இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை விடுவிக்க ராணுவத்திற்கு அதிபர் சிறிசேன உத்தரவு

இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை விடுவிக்க ராணுவத்திற்கு அதிபர் சிறிசேன உத்தரவு

இலங்கையில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை அவர்களிடம் ராணுவம் ஒப்படைக்க வேண்டும் என அதிபர் சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார். இலங்கையில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை அக்டோபர்.31ஆம் தேதிக்குள் அவர்களிடம் ராணுவம் ஒப்படைக்க வேண்டும் என  இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார்.

Read More

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் இன்று கையளிக்கப்படவுள்ளது

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் இன்று கையளிக்கப்படவுள்ளது

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளும், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தை, ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கவுள்ளனர். சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளான, சுலக்சன், திருவருள், தபரூபன்,சிவசீலன், ஜெயச்சந்திரன், ஜெகன், நிர்மலன், தில்லைராஜ் உள்ளிட்ட 10 அரசியல் கைதிகளையும் பார்வையிட்டனர். இதன்போதே, 10 அரசியல் கைதிகளும் கையெழுத்திட்ட, ஜனாதிபதிக்கான கடிதம், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரான சேனக பெரேராவிடம் கையளிக்கப்பட்டது….

Read More

தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்து செயற்படும் தென்னிலங்கைத் தோழர்கள்

தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்து செயற்படும் தென்னிலங்கைத் தோழர்கள்

உலகில் வர்க்க வேறுபாடுகள் தொடர்பாக இடதுசாரி கருத்துகளை விதைத்த அரசியல் ஞானிகள் எழுதிவைத்த பல விடயங்கள் இன்னும் எரிந்து கொண்டே இருக்கின்றன. கொம்யூனிசத்தை அழித்து விட்டோம் என்று அமெரிக்க அரசியல் பீடம் உரத்துச் சத்தமிட்டாலும் இடதுசாரிச் சிந்தனைகள் இன்னும் அழிந்து போகாமலே இருக்கின்றன. இந்த உண்மை தற்போது இலங்கையில் நிதர்சனமாகவே தெரிகின்றது. நாம் சில வாரங்களுக்கு முன்னர் எழுதிவைத்த ஒரு விடயத்தை மீண்டும் ஒரு தடைவ இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம் “ஆள்பவர்களும் ஆள நினைப்பவர்களும் என்னும் ஆளும் வர்க்கத்தோடு இணைந்து செயற்படவே எண்ணுவார்கள்” என்பதே எமது கருத்தாக முன்னர் எழுதினோம். தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்து செயற்படும் தென்னிலங்கைத் தோழர்கள்…

Read More

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது ஏற்புடையதல்ல என்கின்றார் மாவை சேனாதிராசா

நினைவேந்தல் நிகழ்வுகளை  உள்ராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது ஏற்புடையதல்ல என்கின்றார் மாவை சேனாதிராசா

நினைவேந்தல் நிகழ்வுகளை மாநகர சபை உட்பட உள்ராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொரத்தமானது அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் (காக்கா அண்ணா) கடந்த ஞாயிறு அன்று மாவை சேனாதிராஜா அவர்களது இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தியாகி திலீபன் நினைவு நாள் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலை மையை சுட்டிக்காட்டியபோதே அவர் தமது நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப்படுத்தினார் என அறியவந்தது. சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாங்கள் இந்த விடயத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் விடுத்த வேண்டுகோளையும் அவர் ஏற்றுக்கொண்டார். திலீபன் நினைவு நாளுக்கு தடைவிதிக்கக் கோரி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருப்…

Read More

அரசைக் காப்பாற்றுவதிலேயே த.தே.கூட்டமைப்பு கவனமாக உள்ளது என்கிறார் மைத்திரி குணரட்ண

அரசைக் காப்பாற்றுவதிலேயே த.தே.கூட்டமைப்பு கவனமாக உள்ளது  என்கிறார் மைத்திரி குணரட்ண

வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படுவதை விடுத்து அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி மைத்திரி குணரட்ண தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் கடந்த செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்க ண்டவாறு தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபை தமக்கு இருக்கின்ற அதிகாரங்களை உரிய முறையில் பயன்ப டுத்திக் கொண்டு தமக்கான அதிகாரங்களைக் கோரவேண்டும். ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மக்களின் வாக்கைப் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் வெளியில் ஓடிவிடுவர். அவர் கள் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் வீடுக ளைக்…

Read More

மக்களின் காணிகளை விடுவிப்பதில் இராணுவம் உறுதியாக உள்ளது யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹட்டியாராச்சி தெரிவிப்பு

மக்களின் காணிகளை விடுவிப்பதில் இராணுவம் உறுதியாக உள்ளது யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹட்டியாராச்சி தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணிகளை மக்களிடம் வழங்குவதற்கு இராணுவம் உறுதியாக உள்ளது என பாதுகாப்பு படைகளின் யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தி ப்பில்கருத்து தெரிவிக்கும் போதே மேற் கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 2009ஆம் ஆண்டு யாழ்.மாவட்ட த்தில் இராணுவத்தின் வசம் 25 ஆயிரத்து 986.67 ஏக்கர் நிலம் காணப்பட்டது. குறித்த நிலத்தில் 88.80 வீதமான நிலம் மக்களிடம் மீள வழங்கப்பட்டுள்ளது. மேலும் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிடம் தற்போது மொத்த மாக 4512.82 ஏக்கர் நிலம் காணப்படு கி ன்றது. இது யாழ்.மாவட்டத்தின் மொத்த நில ப்பரப்பில்…

Read More

இனப்பிரச்சினைக்கு இடமளிக்காது வடக்கு அபிவிருத்தியில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்கிறார் ஜனாதிபதி மைத்திரி

இனப்பிரச்சினைக்கு இடமளிக்காது வடக்கு அபிவிருத்தியில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்கிறார் ஜனாதிபதி மைத்திரி

மீண்டுமொரு இனரீதியான பிரச்சினைகளுக்கு இடமளிக்காமல் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அபிவிருத்தி உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு அர சாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி வித்துள்ளார். திருகோணமலையில் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1947 முதல் ஆட்சியமைத்த அனைத்து அரசாங்கங்களும் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டுமே வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளை பயன்படு த்திக் கொண்டார்களே தவிர, அம்மக்களின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சி னைகளை தீர்க்கக்கூடிய அரசியல் பின்பு லத்தை அமைக்கவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்களின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் அனைத்து அரசாங்க ங்களும் குறைந்தளவு…

Read More

எமது தாய்நாட்டை புதியதோர் கோணத்தில் பாருங்கள்; உலக மக்களிடம் ஜனாதிபதி மைத்திரி வேண்டுகோள்

எமது தாய்நாட்டை புதியதோர் கோணத்தில் பாருங்கள்; உலக மக்களிடம் ஜனாதிபதி மைத்திரி வேண்டுகோள்

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள பின்னணியில் போருக்குப் பின்னரான றுப்புக்களை உரியவாறு நிறைவேற்றிவரும் இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய்நாட்டை புதியதோர் கோணத்தில் பாருங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தார். ஐக்கிய நாடுகளின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரின் பிரதான அமர்வில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி,இலங்கை நேரப்படி அதிகாலை ஆற்றிய விசேட உரையின் போதே இந்த அழைப்பை விடுத்தார். ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான விரிவான பொறுப்புக்களை நிறைவேற்றிய, நிறைவேற்றிவரும் நாடு என்ற வகையில் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சகல நாடுகளினதும் ஒத்துழைப்பினை தொடர்ந்தும்…

Read More
1 4 5 6 7 8 26