இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 3 நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்தார்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 3 நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்தார்

சமீபத்தில் நடந்த தேர்தலில், கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று கொண்ட கோத்தபய ராஜபக்சே, டில்லி வந்துள்ளார். டில்லியில் அவர், ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். இலங்கை உள்நாட்டுப் போரில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டாபய. அந்த இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளும், பொதுமக்களும் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதாக புகார்கள் உண்டு. இந்தப் பின்னணியில் கோட்டாபய இந்திய வருகையை ஒட்டி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினார்….

Read More

இலங்கையில் முஸ்லிம்களே இல்லாத ராஜபக்‌ஷவின் அமைச்சரவை !!

இலங்கையில் முஸ்லிம்களே இல்லாத ராஜபக்‌ஷவின் அமைச்சரவை !!

இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவாகிய நிலையில், ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி, ஆட்சி செய்யும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடமே கையளித்தது. இதற்கமைய, ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் தேதிக்கு பின்னரே கிடைக்கும் என்ற நிலையில், இடைகால அரசாங்கமொன்றை உருவாக்க கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான நிர்வாகம் திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 21ம் தேதி நியமிக்கப்பட்டார். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத…

Read More

தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம்

தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம்

தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். நவ.18-ந் தேதி, அவர் அதிபராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். இதையடுத்து அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக கோத்தபய நியமித்தார். 2 தமிழர்கள் உள்பட 16 பேர் அடங்கிய இடைக்கால அமைச்சரவையையும் நியமித்தார்.பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும். மக்கள் நலனுக்காக அரசு செயல்படும் என கோத்தபயா தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தமிழர்கள் வாழும் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்தும்…

Read More

தமிழர்களுக்கு இடமுண்டு – முஸ்லிம்களுக்கு இடமில்லை – ராஜபக்ஷ அமைச்சரவை

தமிழர்களுக்கு இடமுண்டு – முஸ்லிம்களுக்கு இடமில்லை – ராஜபக்ஷ அமைச்சரவை

இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளது. சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர். புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அத்துடன், நாடாளுமன்ற…

Read More

பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா

பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா

சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், பொது ஜன முன்னணி கட்சியின் சார்பில் போட்டியிட்ட, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சஜித் பிரேமதேசா தோல்வி அடைந்ததும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இந்த நிலையில், இலங்கை பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Read More

நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரம் ஒரே குடும்பத்தின் கைக்கு மாறுகிறது

நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரம் ஒரே குடும்பத்தின் கைக்கு மாறுகிறது

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரம சிங்கே அறிவித்தார். அதைத் தொடர்ந்து தன் அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை, சமீபத்தில் பதவியேற்ற அதிபர் கோத்தபயா ராஜபக்சே, 70, பிரதமராக அறிவித்தார். இதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரம் ஒரே குடும்பத்தின் கைக்கு மாறுகிறது. சமீபத்தில், இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், கோத்தபயா ராஜபக்சே அபாரமாக வென்றார். அதைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு, பதவியில் இருந்து விலகுவதற்கான நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், புதிய அதிபர் கோத்தபயாவை, நேற்று முன்தினம் இரவு சந்தித்து ரணில் ஆலோசனை நடத்தினார்.நேற்று நாட்டுக்கு ஆற்றிய உரையில், பதவியில் இருந்து விலகுவதாக ரணில் அறிவித்தார். அவர் கூறியதாவது:பார்லி.,யில் நமக்கு பெரும்பான்மை…

Read More

தமிழக அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் – நாமல் ராஜபக்‌ஷ

தமிழக அரசியல்வாதிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றனர் – நாமல் ராஜபக்‌ஷ

தமிழகத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக இலங்கை மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருவதாக மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள பின்னணியில், தமிழக அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழில் அவர் விடுத்த அறிக்கையில், தமிழகத்திலுள்ள சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசியல் தலைவர்கள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்தது கிடையாது…

Read More

சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

தமிழர்களின் வாக்குகளையும் தான் எதிர்பார்த்த போதிலும், தான் எதிர்பார்த்தளவு தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்று கூறினார்.இனிவரும் காலங்களிலாவது தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழர்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தனது முதலாவது திட்டம் எனவும் அவர் கூறினார்.சட்டத்தின் ஆட்சியை மதிக்கிற, லஞ்ச ஊழல் அற்ற ஆட்சி ஒன்றை ஏற்படுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.அத்துடன் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு வெளிநாடுகளிடம் கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார். இலங்கையின் யுத்த காலத்தில் அதிகமாக முணுமுணுக்கப்பட்ட பெயர் கோட்டாபய ராஜபக்ஷ. இலங்கையை கடந்து சர்வதேச அளவில் அந்தப் பெயர் உச்சரிக்கப்பட்டது. இலங்கை போரை அரசு சார்பில் முன்னெடுத்தவர் கோட்டாபய. இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்திலுள்ள…

Read More

இலங்கையில் அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயா அபார வெற்றி

இலங்கையில் அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயா அபார வெற்றி

இலங்கையின் வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரமான அனுராதபுரத்தில் நடந்த விழாவில், அந்த நாட்டின் அதிபராக கோத்தபயா ராஜபக்சே, நேற்று பதவியேற்றார். சிங்கள மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிந்தாலும், தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவையாற்றப் போவதாக, அவர் உறுதி அளித்தார். அண்டை நாடான இலங்கையில், நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரரான கோத்தபயா ராஜபக்சே, 70, அபார வெற்றி பெற்றார். அமோக ஆதரவுதன்னை எதிர்த்து போட்டியிட்ட, ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசாவை விட, 13 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று, அவர் வெற்றி பெற்றார். இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் வசிக்கும்…

Read More

கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு?

கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு?

இலங்கையில், நாளை அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கோத்தபயா ராஜபக்சேவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாவதால், அரசியல் கட்சி தலைவர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர். இலங்கையில், அதிபர் தேர்தல் நாளை நடக்கஉள்ளது. இதில், 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும், சஜித் பிரேமதாசாவுக்கும், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபயா ராஜபக்சேவுக்கும் இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது. சிங்களர்களின் முழு ஆதரவு உள்ளதால், கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக, இலங்கை பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன. கோத்தபயா, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர். இவர், ராணுவ அமைச்சராக இருந்தபோது, அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர்,…

Read More
1 3 4 5 6 7 42