நிரந்தர அதிபராக தொடர சிறிசேன திட்டம்?

நிரந்தர அதிபராக தொடர சிறிசேன திட்டம்?

‘இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின், ௧௯-ஏ பிரிவை, ரத்து செய்ய வேண்டும்’ என, அதிபர், மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். இதன்படி, அந்நாட்டின் நிரந்தர அதிபராக தொடர, அவர் விரும்புவது தெரிய வந்துள்ளது. இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே, 2010ல், அரசியல் சட்டத்தின், ௧௮-ஏ பிரிவை ஏற்படுத்தினார். அதன்படி, அதிபராக இருப்பவர்கள், எத்தனை முறை வேண்டுமானாலும், தேர்தலில் போட்டியிடலாம் என, சட்டத்தை ஏற்படுத்தினார். ஆனால், 2015ல், அதிபராக இருந்த சிறிசேன, 19-ஏ என்ற, அரசியல் சட்டப்பிரிவை ஏற்படுத்தி, முன்னாள் அதிபர், ராஜபக்சே கொண்டு வந்த, 18-ஏ பிரிவை நீக்கினார். அதன்படி, அதிபராக இருப்பவர்கள், இரண்டு முறை மட்டும் தான், தேர்தலில் போட்டியிட முடியும்; மூன்றாவது முறையாக போட்டியிட…

Read More

இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகியது ஏன் என்பது குறித்து இலங்கை பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கம் கூறினர். இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்குமிடையிலான சந்திப்புகள் நேற்று புதன்கிழமை கண்டியில் இடம்பெற்ற போதே இதனை அவர்கள் கூறியுள்ளனர். அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை பிற்பகல் 2.00 மணியளவிலும், ராமான்ய பீடத்தின் மகாநாயக்க தேரரை இரவு 7.00 மணியளவிலும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். இந்த நிலையில் மேற்படி சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, முன்னாள் ராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பிபிசிக்கு தகவலளித்தார். அஸ்கிரிய மற்றும்…

Read More

“தெற்காசியாவின் சௌகிதர்” (பாதுகாவலன்) மோடி – அமைச்சர் மனோ கணேசன்

“தெற்காசியாவின் சௌகிதர்” (பாதுகாவலன்) மோடி – அமைச்சர் மனோ கணேசன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு மணி நேர இலங்கை பயணம் மிகவும் குறுகியதாக இருந்தாலும், அதிகளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றார்கள் விமர்சகர்கள். இலங்கையின் பிரதான அரசியல் தலைவர்கள் மோடியை வரவேற்பதில் காட்டிய ஆர்வமும், அவருடன் நடத்திய பேச்சுக்களும், அமைச்சர் மனோ கணேசன் சொன்னதைப்போல, “தெற்காசியாவின் சௌகிதர்” (பாதுகாவலன்) என்ற நிலையில்தான் மோடி இருக்கியறார் என்பதை உணர்த்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு மோடி அழைத்திருக்கின்றார். ஏப்ரல் 21 தாக்குதல் தெற்காசிய பிராந்திய கள நிலையில், தாக்கம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கும் பின்னணியில் – இலங்கை குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதுதான் இப்போது ஆராயப்படும் விடயமாகவுள்ளது. பலம்வாய்ந்த ஒரு அரசாங்கத்தை அமைத்து, ஒரு…

Read More

இலங்கையில் அரபு மொழி பலகைகளை அப்புறப்படுத்த திட்டம்

இலங்கையில் அரபு மொழி பலகைகளை அப்புறப்படுத்த திட்டம்

இலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள அரபு மொழி பெயர் பலகைகளை அகற்றுவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில், அமைச்சர் மனோ கணேசனை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரபு மொழியிலான பெயர் பலகைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சரவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. பொது கொள்கைக்கு அமைய தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை தவிர்த்து, ஏனைய மொழிகளை காட்சிப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் வேறு மொழிகளை காட்சிப்படுத்த வேண்டுமாயின், அதற்கு விசேட அனுமதி பெற்றுக் கொள்வது…

Read More

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் இன்று சந்தித்து கலந்துரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் இன்று சந்தித்து கலந்துரையாடல்

இலங்கை மீதான பயங்கரவாதத் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு மத்தியில் தனது நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டது, இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக உலகிற்கு வழங்கிய நற்செய்தி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமராக இரண்டாவது முறையாக பதவி பிரமாணம் செய்து கொண்ட நரேந்திர மோதி, தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக மாலத்தீவிற்கு நேற்றைய தினம் சென்று, இலங்கைக்கு இன்று அடுத்த கட்டமாக விஜயம் மேற்கொண்டிருந்தார். சுமார் ஐந்து மணி நேரம் இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும்…

Read More

இலங்கையில் இருந்து வெளியேற 7 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன: முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா

இலங்கையில் இருந்து வெளியேற 7 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன: முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா

இலங்கையை விட்டும் வெளியேறுவதற்கு அந்த நாட்டைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து, இன்று வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊரான காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில், ஜும்மா தொழுகைக்கு பின்னர் அவர் உரையாற்றுகையில் இந்தத் தகவல்களை வெளியிட்டார். “முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாட்டிலேதான் சிறுபான்மையினர். ஆனால் உலகில் நாங்கள் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாக சொல்லிக்…

Read More

தவறான தகவல் பரப்பினால் 5 ஆண்டு சிறை : இலங்கை அரசு முடிவு

தவறான தகவல் பரப்பினால் 5 ஆண்டு சிறை : இலங்கை அரசு முடிவு

சமூக வலைதளங்களில் அவதூறு பேச்சுக்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 258 பேர் கொல்லப்பட்டனர். 500 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இலங்கையில் டுவிட்டர், பேஸ்புக், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த 9 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரவுவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி, சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை…

Read More

முஸ்லிம் கவர்னர்கள், மந்திரிகள் இலங்கையில் ராஜினாமா

முஸ்லிம் கவர்னர்கள், மந்திரிகள் இலங்கையில் ராஜினாமா

இலங்கையில் புத்த மதத்தினரும் கிறிஸ்தவர்களும் போராட்டத்தை தீவிரப்படுத்தியதால் இரண்டு முஸ்லிம் கவர்னர்கள் நேற்று பதவிகளை ராஜினாமா செய்தனர். பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புடையதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டதால் அதிருப்தியடைந்த ஒன்பது அமைச்சர்களும் நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.இலங்கை தலைநகர் கொழும்புவில் ஏப்ரல் 21ல் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பிரபல நட்சத்திர ஓட்டல்களில் முஸ்லிம் பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.இதில் 258 பேர் இறந்தனர்; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதையடுத்து முஸ்லிம்கள் மீதும் அந்த மதத்தினர் நடத்தும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீதும் பெரும்பான்மை சிங்களர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம்கவர்னர்கள் இருவர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக புத்த…

Read More

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் பிக்குகள் செல்வாக்கு – முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் பிக்குகள் செல்வாக்கு – முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இலங்கையில் புத்த பிக்குகளின் செல்வாக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைக்கும் நிலையினை உருவாக்கியுள்ளது என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆரத்தழுவுவதாகவும் அவர்களின் துயரத்தில் பங்குகொள்வதாகவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களைப் பல தசாப்தங்களாக பலிகொண்டுவரும் சிங்கள பேரினவாதத்தின் பார்வை தற்போது முஸ்லிம் மக்களின் மீது திரும்பியிருக்கும் இந்த வேளையில், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கைகோர்த்து, இணைந்த வடக்கு கிழக்கில் தம்மைதாமே…

Read More

கண்டியில் வெடித்தது போராட்டம்: முஸ்லிம் அமைச்சர், ஆளுநர்களை நீக்கக்கோரிக்கை

கண்டியில் வெடித்தது போராட்டம்: முஸ்லிம் அமைச்சர், ஆளுநர்களை நீக்கக்கோரிக்கை

முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மற்றும் இரண்டு முஸ்லிம் ஆளுநர்களை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி கண்டி நகரில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரையே பதவி நீக்குமாறு வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் கடந்த 31ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். கண்டி தலதா மாளிகைக்கு முன்னபாக அத்துரெலிய ரத்தன தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், அத்துரெலிய ரத்தன தேரர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,…

Read More
1 2 3 4 5 6 36