ஆட்சிமாற்றத்தை ஆதரித்தமைக்காக இந்தியா வருந்த வேண்டும் – என்கிறார் கோத்தா

ஆட்சிமாற்றத்தை ஆதரித்தமைக்காக இந்தியா வருந்த வேண்டும் – என்கிறார் கோத்தா

மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டுஅரசாங்கம் சீனாவுடன் கூட்டாக இணைந்துசெயற்படுவது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நிச்சயம்குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கும் என்றுசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர்கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “முன்னைய அரசாங்கம் சீனாவுடன் உறவுவைத்திருந்ததை இந்தியா கடுமையாக எதிர்த்தது. அதனால் தான், 2015 அதிபர் தேர்தலின் போது, எதிர்க்கட்சிகளைப் பலப்படுத்தியது. முன்னைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சீனாவின்  திட்டங்களை இந்தியாவிரும்பவில்லை. கடந்த அதிபர் தேர்தலில் ஐதேக தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவுஅளித்தமைக்காக இந்தியா வருந்த வேண்டும். போர் நடந்த காலத்திலும், போருக்குப் பிந்திய காலத்திலும், சிறிலங்காவுக்கும்இந்தியாவுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருந்தது என்பதை, இந்தியாவின்முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் அண்மையில்வெளியிட்டுள்ள நூலில் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், மேனனை…

Read More

யாழ். நாரந்தனை படுகொலைகளோடு ஈபிடிபிக்கு தொடர்பில்லை: டக்ளஸ்

யாழ். நாரந்தனை படுகொலைகளோடு ஈபிடிபிக்கு தொடர்பில்லை: டக்ளஸ்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நாரந்தனையில் 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைகளுக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் (ஈபிடிபி) தொடர்பில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளதாவது, “யாழ். தீவகம் நாரந்தனை சம்பவத்திற்கும் எமது அமைப்புக்கும் சம்மந்தம் இல்லை. இந்த வழக்கு தொடர்பாக பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் வழக்கு தொடர்பாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் அந்த விடயம் தொடர்பில் நான் அதிகம் பேச நினைக்கவில்லை. இருந்தும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்கள் கட்சியின் ஆதரவாளர்களாக…

Read More

ஆலயத்தின் விக்கிரகம் உடைப்பு

ஆலயத்தின் விக்கிரகம் உடைப்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குப்பட்ட வாகனேரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த மூல விக்கிரகமான சிவலிங்கம் உட்பட ஆலயத்தின் திரைச் சீலை மற்றும் ஆலயத்தின் பொருட்கள் இனந்தெரியாதோரினால் உடைக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிசார் தெரிவித்தனர். சனிக்கிழமை இரவு பூசையை முடித்தவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பூசைக்காக பூசகர் கோயிலுக்கு சென்றபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதை அவதானித்துள்ளர். குறித்த விடயத்தினை ஆலயத்தின் தலைவர் உட்பட நிருவாகத்தினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, வாழைச்சேனைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஆலய நிருவாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர்.கி.துரைராஜாசிங்கம் ஆகியோர் வருகைதந்து பார்வையிட்டனர். குறித்த விடயம்…

Read More

அடம்பிடிக்கும் கூட்டமைப்பு…! அறிவுரை கூறும் அரசாங்கம்

அடம்பிடிக்கும் கூட்டமைப்பு…! அறிவுரை கூறும் அரசாங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமஷ்டி எனஅடம்பிடிக்காது, சமஷ்டிப் பண்புக்கூறுகளைக் கொண்டதீர்வுத்திட்டமொன்றை ஒற்றையாட்சிக்குள் பெறுவதற்கு முன்வரவேண்டுமென கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்கஅமைச்சருமான டிலான் பெரேரா இந்தகோரிக்கையினை முன்வைத்துள்ளார். இது குறித்துதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு விடயத்தில் சமஷ்டி என்ற சொற்பதமானதுபெரும்பான்மை இனத்தவரிடையே பாரிய பிரச்சினையாக உள்ளதெனவும்தெரிவித்துள்ளார். எனவே, ஒற்றையாட்சிக்குள் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட முழுமையானஅதிகாரப் பகிர்வை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டுமெனவும், அதனை நாட்டுமக்களுக்கு அறிவிக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன முழுமனதோடு செயற்பட்டு வருகின்றார் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும், கிடைக்காது எனத் தெரிந்த ஒரு விடயத்திற்காகக் காத்திருப்பதைவிட கிடைக்கக்கூடிய விடயத்தை வேறு வடிவில்…

Read More

200 பில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்திய சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் –

200 பில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்திய சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் –

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தஉள்நாட்டுப் போரினால், சுமார் 200 பில்லியன் டொலர்இழப்பை சிறிலங்கா எதிர்கொண்டது என்று, இந்தியாவின்முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர்மேனன் தகவல் வெளியிட்டுள்ளார். சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ள Choices: Inside the Making of India’s Foreign Policy என்ற நூலிலேயே இந்ததகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இழப்பு மதிப்பீடுகளில் சந்தர்ப்பச் செலவுகள், உள்ளடக்கப்படவில்லை என்றுகுறிப்பிட்டுள்ள சிவ்சங்கர் மேனன், தெற்காசியாவிலேயே, மிகவும் திறந்தபொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருந்த சிறிலங்காவின் பொருளாதாரம் மிகவும்வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது என்றும் கூறியுள்ளார். பாதுகாப்பு நிபுணர்களின் தகவல்களின் படி, சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில்,  1983ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை 80…

Read More

அரசியலமைப்பு திருத்த யோசனைகள் குறித்து நாடாளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்

அரசியலமைப்பு திருத்த யோசனைகள் குறித்து நாடாளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்

புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்காநாடாளுமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் மூன்றுநாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்காஅரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அவைத்தலைவரான லக்ஸ்மன் கிரியெல்ல, சீன செய்திநிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், “அரசியலமைப்பு மாற்றம் தொடர்பானயோசனைகளைத் தயாரிக்க அமைக்கப்பட்ட ஆறு உபகுழுக்களின் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து. அடுத்த ஆண்டுஜனவரி மாதம் 9 ஆம் நாள் தொடக்கம் 11ஆம் நாள் வரை மூன்று நாட்கள் விவாதம்நடத்தப்படவுள்ளது. சிறிலங்காவில் அரசியலமைப்பு மாற்ற செயல்முறைகள் ஊடகங்களின் முன்பாகநடப்பது இதுவே முதல்முறை. முன்னர், ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.ஆனால் இம்முறை என்ன நடக்கிறது என்பதை பொதுமக்களால் காண முடியும். நாடாளுமன்றத்தில் நடக்கவுள்ள விவாதத்தின் பின்னர், புதிய அரசியலமைப்பைவரையும் நடவடிக்கைகள் அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படும்.” என்றும்தெரிவித்துள்ளார்.

Read More

தமிழர் பிரச்சினை: இலங்கை அரசுக்கு ஜெ. போலவே ஓபிஎஸ் அழுத்தம் தர கோரிக்கை

தமிழர் பிரச்சினை: இலங்கை அரசுக்கு ஜெ. போலவே ஓபிஎஸ் அழுத்தம் தர கோரிக்கை

தமிழகத்தின் புதிய முதல்வர் ஓ. பன்னிர் செல்வமும், எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினும் ஜெயலலிதாவைப் போல் இலங்கை தமிழர்கள் நலனில் கவனம் கொண்டு இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜி லிங்கம் கூறியுள்ளார். இது குறித்து இலங்கையின் வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியதாவது, தமிழிகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பன்னீர் செல்வமும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், மறைந்த முதல்வர் ஜெயலிலதா போல இலங்கை தமிழர்கள் நலனில் கவனம் செலுத்தி இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார்கள் என்று இலங்கை தமிழர்கள் நம்புகிறோம். மறைந்த முதல்வர் ஜெயலிலதா, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது தொடர்ந்து…

Read More

தமிழையும் அரச மொழியாக அறிவிப்பதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு

தமிழையும் அரச மொழியாக அறிவிப்பதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு

சிறிலங்காவின் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட உபகுழு சமர்ப்பித்த, தமிழையும் அரச கரும மொழியாக அறிவிக்கும் யோசனைக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறு உப குழுக்கள் சமர்ப்பித்த யோசனைகள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழுவினால், சமர்ப்பிக்கப்பட்ட, தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளை அரசகரும மொழிகளாக அறிவிக்கும் திட்டத்தை மகிந்த ராஜபக்ச கடுமையாக எதிர்த்துள்ளார். 1957ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் தமிழ் மொழி பேசுபவர்கள் தான் அதிகம் என்றும், சிங்களமொழி பேசுவோர் அங்கு சிறுபான்மையினர் என்றும் அதனால் அங்கு தமிழை அரசகரும மொழியாக அறிவிக்க வேண்டும்…

Read More

சமஷ்டிக்கு இடமில்லை! அரசாங்கம்

சமஷ்டிக்கு இடமில்லை! அரசாங்கம்

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை. ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சிறிலங்காவின் அமைச்சரும், நாடாளுமன்ற சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட அவர், சமஷ்டி குறித்து சிலர் பொய்யான பயத்தை நாட்டில் ஏற்படுத்தி இனவாத, மதவாத, அரசியல் நடத்த முனைகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படைவாதத்திலிருந்து விடுபட்டு, தமிழ்த் தரப்பினர் புதிய அரசியலமைப்பு தொடர்பில் நடுநிலையாக செயற்பட இணைந்துள்ளமை வரவேற்புக்குரியது. புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை. ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. 1987 இல் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டபோது, நாடு பிரியும், வடக்கு கிழக்கு இந்தியாவின் மாநிலங்களாக மாறும், இங்குள்ளவர்கள் வடக்கு, கிழக்கு…

Read More

கிழக்குப் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகின்றன.

கிழக்குப் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகின்றன.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கொக்குவில் கிழக்குப் பகுதியில் திருவாளர் சிவசுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த புதல்வர்தான்   இரவீந்திரநாத் ஆவார். இவருடைய தந்தையார் ஓய்வுபெற்ற புகையிரத தலைமைப் பாதுகாவலராவார். இவர் தனது  கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பின் கொழும்பு அக்குனைஸ் கல்லூரியிலும் கற்று,1973ம் ஆண்டு பேராதனைக் பல்கலைக் கழகத்திற்கு விவசாயவிஞ்ஞான பட்டப்படிப்பிற்கு தெரிவு செய்யப்பட்டார். எல்லாரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகுவதுடன் இனிமையாகவும் மென்மையாகவும் பேசும் சுபாவம் கொண்டவர். பெருமையற்றவர். எல்லாரையும் சமமாக மதிப்பவர். எவருக்கும் உதவிசெய்வதில் பின்நிற்கமாட்டார். மிகுந்த இரக்கம்கொண்டவர். 1978ம் ஆண்டு கரடியனாறு விவசாய ஆராச்சி நிலையத்தில் ஆராச்சியாளராக சேர்ந்து (Research officer) பணிபுரிந்தார். அங்கு இவரது ஆராச்சியின் பயனாக சிறந்த இன மிளகாய் கண்டுபிடிக்கப்பட்டதுடன்…

Read More
1 37 38 39 40 41 42