கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை குப்பைக் கூடைக்குள் வீச வேண்டும் – சம்பிக்க

கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை குப்பைக் கூடைக்குள் வீச வேண்டும் – சம்பிக்க

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுசெயலணியின் அறிக்கையை நிராகரித்துள்ள அமைச்சர்சம்பிக்க ரணவக்க, இந்த அறிக்கை குப்பைக் கூடைக்குள்வீசப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்துவெளியிட்ட அவர், “கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகள், தேசியநலனுக்கும், இன நல்லிணக்கத்துக்கும் விரோதமானவை. செயலணியின் பரிந்துரைகளின் மூலம், போர்க்குற்றங்களுக்காக எமது போர்வீரர்களையும், அரசியல் தலைவர்களையும், விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளைஅனுப்ப ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் முயற்சிக்கக் கூடும். மகிந்த ராஜபக்ச 12,600 விடுதலைப் புலிகளை போர்க்குற்றங்களுக்காக தண்டிக்காமல்விடுவித்தமை பாரிய தவறாகும். செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால், எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளுக்கும் அவர்களின் அனுதாபிகளுக்குமே நன்மையளிப்பதாக இருக்கும்” என்றும்தெரிவித்தார்.

Read More

சிக்கலை தீர்க்க அவசரமாக அமெரிக்கா பறந்தார் கோத்தபாய!

சிக்கலை தீர்க்க அவசரமாக அமெரிக்கா பறந்தார் கோத்தபாய!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சஇன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகஅமெரிக்கா நோக்கி சென்றுள்ளார். கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்கா பயணத்தில்அவரது மனைவி அனோமா ராஜபக்சவும்இணைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 2.50 மணிக்கு டோஹா கட்டார் நோக்கிபயணித்த ஈ.கே.349 என்ற விமானத்தில் கோத்தபாயபயணித்துள்ளார். அமெரிக்காவில் தனது சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளைதீர்த்துக் கொள்வதற்காக கோத்தபாய அமெரிக்க சென்றுள்ளதாக ராஜபக்ச குடும்ப தகவல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Read More

மின் கட்டணத்தை 2 இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும்

மின் கட்டணத்தை 2 இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும்

நிதி அமைச்சின் மாதாந்த மின் கட்டணத்தை இரண்டு இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும் என, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைய, அனைத்து அரச நிறுவனங்களையும் சூரிய சக்தி பயன்பாட்டிற்கு மாற்றும் தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று, நிதி அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலகமாநாடுஆகஸ்ட் 5ம் 6ம் திகதிகளில் யாழ்பபாணபல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலகமாநாடுஆகஸ்ட்  5ம் 6ம் திகதிகளில் யாழ்பபாணபல்கலைக் கழகத்தில்  நடைபெறவுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தின் செயலாளர் நாயகம்” தமிழச் செம்மல்” ஜேர்மனிவாழ் துரை கணேசலிங்கம் அவர்களின் துரித முயற்சியாலும் அபாரமான துணிச்சலாலும் யாழ்பபாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக  பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாகநடைபெறவுள்ளது. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாட்டின் மாநாட்டுத் தலைவராக தமிழ் நாட்டைச் சேர்ந்த முனைவர் பாஞ் இராமலிங்கம் அவர்களை இயக்கத்தின் பொதுக்குழு தெரிவு செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்படி 13வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டில் வடக்கு மாகாணமுதலமைச்சர் மாண்புமிகு சி. வி. விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு…

Read More

அம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனரா?

அம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனரா?

இலங்கை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க கொழும்பில் நடத்தியிருந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ள சீனாவின் திட்டங்களில் பணியாற்றுவதற்கு, ஒரு மில்லியன் சீனர்கள் நுழைவிசைவுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறியிருந்தார். இதுகுறித்து நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, “இலங்கை அரசாங்கத்துக்கு அத்தகைய கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை. அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் தொடர்பான உடன்பாடுகளில், சீனர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பான நிபந்தனைகள் ஏதும் இல்லை. எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இது ஒரு தேசிய செயற்பாடு ஆகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read More

எந்த நாட்டினது உத்தரவுக்கும் அடி பணியோம் – இலங்கை அரசு

எந்த நாட்டினது உத்தரவுக்கும் அடி பணியோம் – இலங்கை அரசு

எல்லா நாடுகளுடனும் இராஜதந்திர ரீதியான நல்ல உறவுகளைப் பேணிக் கொண்டாலும், எந்த நாட்டினது உத்தரவுக்கும் சிறிலங்கா கீழ்ப்பணியாது என்று சிறிலங்கா அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். “ தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது தொடக்கம், அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. அதேவேளை, சீனா, இந்தியாவுடனான உறவுகளை விரிவாக்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டது. நாட்டு மக்களுக்கு எது சிறந்தது என்ற அடிப்படையில் தான் அரசாங்கம் முடிவுகளை எடுக்குமே தவிர, வெளிநாட்டு அரசாங்கத்தின் உத்தரவுக்கு அடி பணிந்து முடிவுகள் எடுக்கப்படாது. இந்த நாடு எமது மக்களால், எமது அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. சிறிலங்காவின் இறைமையை அரசாங்கம் பாதுகாக்கும். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையினால், எல்லா நாடுகளுடனும் சுமுகமான…

Read More

இலங்கை அரசைக் கவிழ்க்க முடியுமா? ராஜபட்சவுக்கு ரணில் சவால்

இலங்கை அரசைக் கவிழ்க்க முடியுமா? ராஜபட்சவுக்கு ரணில் சவால்

இலங்கை அரசை முடிந்தால் கவிழ்த்துப் பார்க்கட்டும் என்று ராஜபட்சவுக்கு அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சவால் விடுத்துள்ளார். தாம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒரு வார காலத்தில் ராஜபட்ச அதை செய்து முடிக்கிறாரா? என்பதை பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டங்களை அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபட்ச முன்னெடுத்து வருகிறார். இலங்கை விடுதலைக் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அரசியல் பிரவேசம் செய்ய இத்தகைய நடவடிக்கைகளில் ராஜபட்ச ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, இலங்கை – சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டல ஒப்பந்தத்தின் சில அம்சங்களுக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தத்…

Read More

நாம் எத்தனை பேர் செத்து வீழ்ந்தாலும் ஈழ விடுதலை தத்துவங்கள் இன்னும் செத்து வில்லை. உறுதிகுன்றாத மனோதிடமும் போராட்டத்தின் இடைவிடாத தொடர்ச்சியும் நீதிக்கான எமது போராட்டங்களின் அடிநாதங்கள். – ஈழத்து நிலவன் –

நாம் எத்தனை பேர் செத்து வீழ்ந்தாலும் ஈழ விடுதலை தத்துவங்கள் இன்னும் செத்து வில்லை. உறுதிகுன்றாத மனோதிடமும் போராட்டத்தின் இடைவிடாத தொடர்ச்சியும் நீதிக்கான எமது போராட்டங்களின் அடிநாதங்கள். – ஈழத்து நிலவன் –

ஒடுக்குமுறைக்கு எதிரான மானிடத்தின் நெடுநீண்ட வரலாறு பலியெடுப்புக்களால் நிரம்பியுள்ளது. இப்பலியெடுப்புக்கள் ஒருபோதும் போராட்டங்களைப் பல வீனப்படுத்தாது, மாறாக வலிமையான முன்னெடுப்புக்களாக மாற்றம் கொள்ளகிறது. வடகிழக்கு தமிழர்களைப் பொறுத்தவரையில் நல்லிணக்கம் என்ற சொல் இன, நில ஒடுக்குமுறையின் கோரத்தின் அர்தத்தை தருகிறது. நமது தமிழரின் தேசிய தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்ற வடக்கு-கிழக்கு இணைந்ததே தமிழர் தாயகம். சலுகைகளுக்காக எமது உரிமைகளை நாம் இழப்பதானது அவல நிலைக்கே எம்மை இட்டு செல்லும்.. மக்களை எப்போதும் பதட்டத்தில் வைத்திரு. ஒன்று ஆயுதப்போர் நடத்து அல்லது உளவியல் போர் நடத்து. எவனும் சிந்திக்கவே கூடாது. இதுவே இன்றைய உலக மற்றும் உள்ளூர் அரசியல். ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் சிங்கள பௌத்த மேலாதிக்க மனநிலையின்…

Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முடியும்: மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முடியும்: மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களை நேற்று (29) மாலை கொழும்பில் சந்தித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, மஹிந்த ராஜபக்ஸ விருந்து உபசாரம் ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்ததாக பி.பி.சி உலக சேவையின் கொழும்பு ஊடகவியலாளர் அசாம் அமீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸவை தற்போதைய ஜனாதிபதி பிரதமராக நியமித்தால் ஒன்றாக இணைந்து செயற்பட முடியுமா, என இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதாக பி.பி.சி செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவினால் அதனை செய்ய முடியும் எனின், 1970 ஆம் ஆண்டில் இருந்து நன்றாக அறிந்த ஒருவருடன்…

Read More

மகா­நா­யக்க தேரர்கள் பிர­த­ம­ரிடம் கடிதம் மூலம் கோரிக்கை

மகா­நா­யக்க தேரர்கள் பிர­த­ம­ரிடம் கடிதம் மூலம் கோரிக்கை

(எம்.எம்.மின்ஹாஜ்) உத்­தேச அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்­சிக்கு எந்­த­வொரு பாதிப் பும் ஏற்­படக் கூடாது. அத்­துடன் மாகாண சபை அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்கப்படும்போது மாகாண சபையின் அதி­கா­ரங்கள் மத்­திய அர சின் நிறை­வேற்று அதி­கா­ரத்தின் கீழ் காணப்­பட வேண்டும். அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை தொடர்ந்தும்  வழங்­கப்­பட வேண்டும் என அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து மகா­நா­யக்க தேரர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளித்த இரண்டு கடி­தங்­க­ளி­லேயே வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இன­வாதம் போன்ற குறு­கிய கொள்­கை­க­ளுக்குள் தற்­போ­தைய சவால்­களை வெற்றி கொள்ள முடி­யாது என்­பதை ஏற்றுக் கொள்­கின்றோம். ஆனாலும் நாட்டின் ஒரு­மைப்­பாட்டை முன்­னெ­டுத்து செல்லும் போது உரு­வாகும் தேசிய நல்­லி­ணக்­கத்­திற்கு பாதிப்­பான விட­யங்­களை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என்றும் மஹா­நா­யக்க தேரர்கள் தமது…

Read More
1 36 37 38 39 40 42