இலங்கை வரலாற்றில் உள்ள கரும்புள்ளிகள் : பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை

இலங்கை வரலாற்றில் உள்ள கரும்புள்ளிகள் : பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை

பல்கலைக்கழகங்களில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள பகிடிவதை குறித்து பல்கலைக்கழக நிர்வாகங்களுடன் இணைந்து விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மத்துகம, ஆனந்த தேசிய கல்லூரியின் 75ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில், பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது. இதனால் பல்கலைக்கழகங்களில் முறையற்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது. ஒரு சில மாணவர்களின் அசாதாரணமான செயற்பாடுகள் காரணமாக ஏராளமான பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. நேற்று முன்தினம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானபீட மாணவர்களினால் புதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பகிடிவதை, இலவச கல்வியின் ஒரு…

Read More

இலங்கையில் புதிய கட்சி தொடங்கினார் கருணா

இலங்கையில் புதிய கட்சி தொடங்கினார் கருணா

இலங்கையில் உள்நாட்டுப்போர் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரண் செயல்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டில் அவர் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறினார். கடந்த 2009-ல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் லங்கா சுதந்திர கட்சியில் இணைந்து அந்த கட்சியின் துணைத் தலைவரானார். ராஜபக்ச ஆட்சியின்போது துணை அமைச்சராக பதவி வகித்தார். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா வசம் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து கருணா விலகினார். அமைச்சராக இருந்தபோது அரசு வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் கடந்த…

Read More

சுதந்­திர தின நிகழ்வை ஏன் புறக்­க­ணித்தேன்?

சுதந்­திர தின நிகழ்வை ஏன் புறக்­க­ணித்தேன்?

விளக்­க­ம­ளிக்­கிறார் மஹிந்த ராஜ­பக் ஷ  (ஆர்.யசி) நாட்டின் தேசிய பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்தி பொரு­ளா­தாரத்தை  வீழ்த்­தி­விட்டு சுதந்­திர தினம் கொண்­டாடிய அர­சாங்­கத்தின் அழை ப்பை ஏற்­க­மு­டி­யாத கார­ணத்­தி­னா­லேயே அதனை நிரா­க­ரித்தேன் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். நாம் போராடி அழித்த ஆயுத காலா­சாரம் மீண்டும் நாட்டில் உயிர்ப்­பெற்­றுள்­ளது. வடக்கில் மீண்டும் ஆயுத வெடிச்­சத்தம் கேட்க ஆரம்­பித்­துள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார். முன்னாள் ஜனா­தி­பதி நேற்று குரு­நாகல் பகு­தியில் மக்கள் சந்­திப்­பு­களை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில், அந்­நி­யர்­களின் ஆக்­கி­ர­மிப்பில் இருந்து எமது முன்­னைய தலை­வர்கள் நாட்டை மீட்டு எமக்கு…

Read More

இலங்கை அதிபர் சிறிசேனா மரணம் அடைவார் என்று கூறிய ஜோதிடர் கைது

இலங்கை அதிபர் சிறிசேனா மரணம் அடைவார் என்று கூறிய ஜோதிடர் கைது

கொழும்பு, இலங்கை அதிபர் சிறிசேனா, ஜனவரி 26-ந் தேதிக்குள் மரணம் அடைந்து விடுவார் என்று இலங்கை ஜோதிடர் விஜிதா ரோகணா விஜேமுனி என்பவர் கணித்து இருந்தார். இதை அவரே பேசி, வீடியோவாக பதிவு செய்து, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதுதொடர்பாக, இலங்கை ஊடகம் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சக செயலாளர் நிமல் போபகே போலீசில் புகார் செய்தார். சிறிசேனாவை கொலை செய்யும் சதியாக இது இருக்கலாம் என்று அவர் புகாரில் தெரிவித்தார். இதையடுத்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, ஜோதிடர் விஜேமுனியை குற்ற புலனாய்வு போலீசார் கைது செய்தனர். மக்களை திசைதிருப்ப முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விஜேமுனி, இலங்கை கடற்படை வீரராக பணியாற்றியவர்….

Read More

எல்லை நிர்ணய அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் வர்த்தமானியில்.!

எல்லை நிர்ணய அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் வர்த்தமானியில்.!

உள்ளூராட்சி எல்லைகள் மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை, இன்னும் ஒரு மாதத்தில் வர்த்தமானிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி எல்லைகள் பூரணப்படுத்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளில் மிக விரைவாக தேர்தலை நடாத்துமாறு கோரி பெப்ரல் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட மனு, இன்று உச்ச நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அமைச்சர் பைசர் முஸ்தபா சார்பில் ஆஜரான சட்டத்தரணி இதனை குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் தினத்தை தெரியப்படுத்துமாறு கோரியே பெப்ரல் அமைப்பு குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தது. இதேவேளை, மனு மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மகிந்த எச்சரிக்கை

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மகிந்த எச்சரிக்கை

போர் வெற்றியைக் காட்டிக் கொடுக்கும் புதியஅரசியலமைப்புக்கான பணிகளை நிறுத்த வேண்டும்என்று எச்சரித்துள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, துறைமுகங்கள், நிலங்களை வாங்கும் வெளிநாட்டுமுதலீட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். நுகேகொடவில் நேற்று நடந்த கூட்டு எதிரணியின்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறுஎச்சரிக்கை விடுத்துள்ளார். “இந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது நமது தலைவர்களுக்கு எந்தப் பக்கம்இழுத்துக்கொள்ளும் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், இனி அரசியலிருந்து ஓய்வு பெறுவோம்என்ற எண்ணத்தோடு ஜனவரி 9 ஆம் நாள், காலை 6 மணிக்கு அதிபர் மாளிகையைவிட்டு வெளியேறி மெதமுலனவுக்கு சென்ற என்னை, ‘ தற்போது உங்களுக்கு ஓய்வுஇல்லை, மீண்டும் நீங்கள் வரவேண்டும்” என சொன்னது நீங்கள் தான்….

Read More

“நாங்கள் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதற்காவே தற்போதைய அரசுக்கு ஆதரவை வழங்குகின்றோம்”

“நாங்கள்  சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதற்காவே தற்போதைய அரசுக்கு ஆதரவை வழங்குகின்றோம்”

கனடா தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராஜா “நாங்கள் எத்தனையோ சந்தர்ப்பங்களைத் கடந்த காலங்களில் தவற விட்டுள்ளோம். இப்போது எமது இனத்தின் விடிவுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இப்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நாம் எமது ஆதரவை வழங்க வேண்டும்” இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ததேகூ(கனடா) நடத்திய இரவு விருந்தின் போது முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறிஸ்கந்தராசாஈ தனது உரையில் குறிப்பிட்டார். தலைமை உரையை ததேகூ (கனடா) இன் தலைவர் கதிர வேலுகுகதாசன் ஆற்றினார். வரவேற்புரையை ததேகூ இன் துணைத்தலைவர் வீர சுப்பிர மணியம் ஆற்றினார். மிகச் சிறப்பாக நடந்தேறிய இந்த விருந்தில்…

Read More

அர்ஜூன் மகேந்திரன் அரச பதவிகள் ஏதும் வகிக்கவில்லை: ரங்க கலன்சூரிய

அர்ஜூன் மகேந்திரன் அரச பதவிகள் ஏதும் வகிக்கவில்லை: ரங்க கலன்சூரிய

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், தற்போது எந்தவிதமான அரச பதவிகளையும் வகிக்கவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், மத்திய வங்கியின் ஆலோசகராக மீண்டும் செயலாற்றுகின்றார் என்று ஊழலுக்கு எதிரான முன்னணி குற்றஞ்சாட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய, ‘மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நிதியமைச்சின் ஆலோசகராக செயற்படுவது உண்மையற்ற விடயமாகும். அவர் அரசாங்கத்தில் எந்தவொரும் பதவிலும் இல்லை’ என்றுள்ளார்.

Read More

யாழ் போதனா வைத்திய சாலையில்ஆசிரியை திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் நினைவு பூங்கா திறநது வைக்கப்பட்டது

யாழ் போதனா வைத்திய சாலையில்ஆசிரியை திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் நினைவு பூங்கா திறநது வைக்கப்பட்டது

அண்மையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் யாழ் இந்து ஆரம்ப பாட சாலை முன்னாள் உப. அதிபர் திருமதி. சரஸவதி ஆறுமுகம் அவர்களின் நினைவாக வைத்தியா சாலை பெண்கள் வாட் 02 இல் நோயாளர் ஆறுதல் பெறுவதற்கான பூங்கா அமைக்கப்பட்டு வைத்திய நிபுணர் பேரானந்த ராஜா திறந்துவைத்தார்.  நினைவுப் பூங்கா அமரரது குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டது. அமரத்துவம் அடைந்த முன்னாள் ஆசிரியை திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் அவர்கள், எமது தாயகத்தின் சுய நலமற்ற சமூக சேவையாளரும் கல்விமானுமாகிய திரு ஆறு திருமுருகன் அவர்களது தாயார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.

Read More

தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்

தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்

தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன் கனடாவில் நடைபெற்ற இறுதிக் கூட்டத்தில் உருக்கமான உரையை ஆற்றி விட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்ற வடக்கின் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் கடந்த ஒரு வார காலமாக ஓய்வின்றி உங்கள் மத்தியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். (மிகவும் மோசமான இறுமல் அவரது உணர்வுபூர்வமான உரையை தடுக்க முயலுகின்றது) அவ்வாறு உடல் இளைக்கும் வண்ணம் நான் ஓய்வின்றி செயற்பட்டதால் வந்த வினைதான் இந்த இறுமல். ( நகைச்சுவையாகக் கூறுகின்றார்) எனினும் தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கி;ழமையன்று மாலை ஸ்காபுறோவில்…

Read More
1 35 36 37 38 39 42