முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் சொத்து

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் சொத்து

யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பொது அமைப்புக்கள் பல சேர்ந்து கூட்டாக நாளை வெள்ளிக்கிழமை ஹர்த்தால் ஒன்றுக்கு ஏற்பாடு. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வலுவிலக்கச் செய்து, ஏனைய கட்சிகளை புறக்கணித்து, தமிழரசுக் கட்சியின் கைகளில் வடக்கு மாகாண சபையை ஆக்கிரமிக்க சம்பந்தன்,சுமந்திரன் கூட்டாகச் செய்யும் சதியும் முயற்சியும் தெனனிலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களின் “சாணககியம்” “வேலை” செய்யாத காரணத்தால் தமிழ் மக்களுக்கு விடிவே கிட்டவில்லை. ஆனால் வடக்கு மாகாண சபையைப் பொறுத்தளவில் அதனை தமிழரசுக் கட்சியின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர எண்ணும் சம்பந்தன் அவர்களின் சாணக்கியம் வெற்றி பெற முயற்சி. வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக மாண்புமிகு விக்னேஸ்வரன் அவர்களை தொடர்ந்து தக்கவைக்க அனைத்து…

Read More

மலேசியாவில் நுழைய அனுமதி மறுப்பு: எல்லாவற்றுக்கும் இலங்கை அரசே காரணம் – வைகோ குற்றச்சாட்டு

மலேசியாவில் நுழைய அனுமதி மறுப்பு: எல்லாவற்றுக்கும் இலங்கை அரசே காரணம் – வைகோ குற்றச்சாட்டு

மலேசியாவில் இருந்து நேற்று சென்னை திரும்பிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண வரவேற்பில் பங்கேற் பதற்காக கோலாலம்பூர் சென்றேன். எனது பெயர் கருப்புப் பட்டியலில் இருப்பதாகக் கூறி இந்தியாவுக்கு திரும்பி விடுமாறு அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். இந்தியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் என்று கூறியும் என்னை அனு மதிக்கவில்லை. விமான நிலையத் தின் ஒரு அறையில் 24 மணி நேரம் தங்க வைத்தனர். அப்போது நான் தண்ணீர்கூட அருந்தவில்லை. சென்னையில் உள்ள இலங் கைத் தூதரகத்தில் அதிகாரியாக இருந்த அம்சா என்பவர், தற் போது இங்கிலாந்தில் இருக் கிறார்….

Read More

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்

உலகெங்கும் பல நாடுகளில் கிளைகளை அமைத்து தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் ஆற்றி வருகின்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும் என இயக்கத்தின் அகிலத் தலைவர் கனடா வாழ் வி. துரைராஜா மற்றும் இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளவென ஐரோப்பிய நாடுகள் வட அமெரிக்க நாடுகள் அவுஸ்த்திரேலியா, ஸ்கென்நேவியன் நாடுகள், தென்னாபிரிக்கா பர்மா, மொறிசியஸ் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் அந்தமான், போன்ற நாடுகளிலிருந்து அறிஞர்களும் வர்த்தகப் பிரமுகர்களும் கலை இலக்கியவாதிகளும் பத்திரிகையாளர்களும்…

Read More

யாழ்ப்பாணத்தில் ஆட்கள் இலலாத ஊரில் நடைபெறும் ஆலயத் திருவிழாக்கள்..

யாழ்ப்பாணத்தில் ஆட்கள் இலலாத ஊரில் நடைபெறும் ஆலயத் திருவிழாக்கள்..

யாழ்ப்பணத்திற்கு சென்றுவரும் புலம் பெயர் அன்பர்கள் “யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்குது” என்று வாய் இனிக்க பகிர்ந்து கொள்வார்கள். தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ-9 வீதி வழியாகவோ அன்றி பூநகரி பாதை வழியாகவோ சென்றால் பிரதான வீதிகள அழகாகவும் விசாலமாகவும் அமைக்கபபட்டிருககின்றன. இதனால் நன்மையடைபவர்கள் யாழ்ப்பாணத்தில் வாழும் ஏழை மக்கள் அல்ல. வெளிநாடுகளிலிருந்து அங்கு பயணிப்போர், அதனிலும் மேலாக தென்னிலங்கை சுற்றுலாப்; பயணிகள், தென்னிலங்கை முதலீட்டாளர்கள், அரசியல் வாதிகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் வீதி வழியாக தங்கள் முகாம்களுக்கு தேவை நிமித்தம் பயணிக்கும் படையினர். தற்போது தென்னிலங்கை முதலீட்டாளர்கள் பலர் யாழ்பபாணத்தில் பல வர்த்தக முயற்சிகளில் முதலிட்டுள்ளார்கள். பல அரசாங்க ஒப்பந்தங்கள் கூட சிங்கள கொந்தராத்துக் காரர்களுக்கு மட்டுமே…

Read More

ஐம்பதாவது நாளாகவும் தொடரும் கிளிநொச்சி மக்களின் போராட்டம்

ஐம்பதாவது நாளாகவும் தொடரும் கிளிநொச்சி மக்களின் போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஐம்பதாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக தங்களுடைய உறவுகள் தொடர்பில் எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், இதற்கு உரிய பதிலை இந்த அரசு வழங்கவேண்டும் என கோரி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பு பேரணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இது வரை தமக்குரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என போராட்டத்தில் ,ஈடுபட்டுள்ள விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி இப்போராட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

46ஆவது நாளாகவும் தொடரும் வவுனியா மக்களின் போராட்டம்

46ஆவது நாளாகவும் தொடரும் வவுனியா மக்களின் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று 46ஆவது நாளாகவும் தொடர்கின்றது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமது போராட்டம் நியாயமானதெனவும், இதற்குரிய, சாதகமான தீர்வு கிடைக்கப்பெறும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பதியாதவர்கள், விபரங்களை விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறும் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவி ஜெயவனிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More

ஆட்சியாளர்களின் நடிப்பால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை: சுதந்திர பெண்கள் அமைப்பு

ஆட்சியாளர்களின் நடிப்பால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை: சுதந்திர பெண்கள் அமைப்பு

கொழும்பு உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்தால் அதற்கு முழு ஆதரவை வழங்குவோம்” எனத் தெரிவித்தார். ஆட்சியாளர்கள் அரங்கேற்றிவரும் நாடகங்கள், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுக்கொடுக்கப் போவதில்லையென தென்னிலங்கையைச் சேர்ந்த சுதந்திர பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் திருகோணமலையில் கடந்த 25 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) சுதந்திர பெண்கள் அமைப்பினர் இணைந்து தமது ஆதரவை தெரிவித்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவ் அமைப்பினைச் சேர்ந்த ஹேமமாலி அபேரத்ன மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”தமது உறவுகளை இழந்து பல்வேறு துன்பங்களுக்கு முகங்கெடுக்கும் இம் மக்களின் பிரச்சினைகளை…

Read More

ஐ.நா. வாக்குறுதியில் விசாரணைக் காலத்தை அரசு கூறவே இல்லை! ஹர்ஷ டி சில்வா

ஐ.நா. வாக்குறுதியில் விசாரணைக் காலத்தை அரசு கூறவே இல்லை! ஹர்ஷ டி சில்வா

போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பேரவை இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ள போதிலும், அந்த இரண்டு வருடங்களுக்குள் இந்த விசாரணையை முடிப்பதாக இலங்கை அரசு ஐ.நாவுக்கு வாக்குறுதி வழங்கவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ஆட்சி மாற்றத்தின் பின் இலங்கையின் கட்டமைப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப இன்று ஜனநாயகம் அமைந்துள்ளது. இன, மத பேதங்களுக்கு அப்பால் இலங்கையர் என்ற அடிப்படையிலேயே இன்று இலங்கைக் குடிமக்கள் நடத்தப்படுகின்றனர். இந்த மாற்றத்தை சர்வதேச சமூகம் அவதானித்து வருவதால் அவை…

Read More

இலங்கையின் யுத்த வடுக்களை உலகம் மறந்து விட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் மறக்கவில்லை..

இலங்கையின் யுத்த வடுக்களை உலகம் மறந்து விட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் மறக்கவில்லை..

ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சியாளர்களின் அடவாடித்தனங்கள், அடக்கு முறைகள் இனவாத அல்லது மதவாதப் போக்கு ஆகியவற்றால் பாதிக்கபபட்ட மக்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காது. அந்தளவிற்கு எத்தனையோ ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள பல நாடுகளில இந்த அனர்த்தஙகளும் அடக்குமுறைகளும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற “.இறுதி யுத்தத்தின்” போதும் அதற்குப் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட அரச படைகளின் மோசமான நடவடிக்கைகள் அங்கு யுத்த வடுக்களை ஏற்படுத்தின. அந்த நாட்களில் இடம்பெற்ற அரசபடைகளின் போர்க்குற்றங்கள் மறைவான இடங்களில் கொல்லப்பட்டவர்களின் முன்பாக நடந்தபடியால் அவை வெளியுலகத்திற்கு தெரியாமல் போய்விட்டது. களத்தில் நின்ற போராளிகள் கூட எவ்வாறு துன்புறுத்தப்பட்டு கொல்லபபட்டார்கள என்பதை அவர்களை வழிநடத்திய தளபதிகள் கூட அறிந்திருகக வாயப்பிருக்கவில்லை….

Read More

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் காவலில் வைக்க சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ராணி சீதையம்மாள் அரங்கில் மதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்துகளை பேசினார். இதனையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. வழக்கில் வைகோ அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகிவந்தார். இந்நிலையில், சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு வந்த இன்று (திங்கள்கிழமை)…

Read More
1 34 35 36 37 38 42