படையிரைக் கேவலப்படுத்தாதீர் – எதிரணியிடம் எஸ்.பி. திசநாயக்க கோரிக்கை

படையிரைக் கேவலப்படுத்தாதீர் – எதிரணியிடம் எஸ்.பி. திசநாயக்க கோரிக்கை

இராணுவப் புரட்சிக்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி,சிறிலங்கா படையினரை கேவலப்படுத்த வேண்டாம்என்று கூட்டு எதிரணியினரிடம்தெரிவித்துள்ளார் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க. கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,இராணுவப் புரட்சி ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக,நாடாளுமன்றத்தில் தினேஸ் குணவர்த்தன நிகழ்த்தியஉரை தொடர்பாக கருத்து வெளியிட்டார். “இராணுவப் புரட்சிக்கான வாய்ப்பு இருப்பதாக, மிகவும் தீவிரமான ஒன்றைவெளியிட்டிருப்பது எதிர்பாராத ஒன்று. இதனை அரசாங்கம் ஒரு புறக்கணிக்காது. இதுகுறித்து உன்னிப்பாக கண்காணிக்கும்.இந்த அறிக்கை சமூகத்தில் எதிர்மறையான செல்வாக்கை செலுத்தும். சிறிலங்கா இராணுவம் உலகில் மிகச் சிறந்த இராணுவங்களில் ஒன்று.  தீவிரவாதத்தைஅழிப்பது தொடர்பாக அவர்களால் உலகத்துக்கு போதிக்க முடியும். சிறிலங்காவில் மிகமோசமான அரசியல் சூழ்நிலைகள் இருந்த போது, சிறிலங்காபடையினர், நம்பிக்கை, விசுவாசம், மிகச் சிறந்த ஒழுக்கத்தைப் பின்பற்றிநிரூபித்தவர்கள். எனவே, இந்தக்…

Read More

அமெரிக்காவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் கைது

அமெரிக்காவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் கைது

அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலியவிக்கிரமசூரிய நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுஅதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். முன்னைய ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில்தூதுவராக இருந்த போது, 245,000 டொலர் தரகுப் பணம்பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறிலங்கா தூதரகத்தைப் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே, இவர்இந்த தரகுப்பணத்தை பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தப்பணத்தை ஜாலிய விக்கிரமசூரிய சிறிலங்காவில் வைப்புச் செய்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஜாலிய விக்கிரமசூரிய சிறிலங்காவின் முன்னாள் அதிபர்மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினராவார். நேற்று இவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, வெளிநாடு செல்வதற்குநிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தடை விதித்திருந்தனர். கைது செய்யப்பட்ட ஜாலிய விக்கிரமசூரிய இன்று நீதிமன்றத்தில்முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Read More

தமிழ் கிராமத்தையே அழித்த இலங்கை இராணுவம் தமிழரின் சொத்தையும் கொள்ளையடித்தது

தமிழ் கிராமத்தையே அழித்த இலங்கை இராணுவம் தமிழரின் சொத்தையும் கொள்ளையடித்தது

தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர். இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாகப் பிடிபட்டிருந்து, விடுவிக்கப்பட்ட இலங்கை கடற்படை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட, இலங்கைஇராணுவத்தினரின் ஒழுக்க மீறல்களை தனது “A Long Watch: War, Captivity and Return in Sri Lanka” என்று நூலில் விபரித்துள்ளார். “எனது இராணுவப் பணியின் போது மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும். 1991ல் எமது இராணுவ நடவடிக்கை முடிவுற்ற கையோடு இலங்கைக்கு வடக்கேயுள்ள தீவுகளில் ஒன்றான காரைநகரில் கடமையாற்றிய போது பலவீனமுற்ற, பாதிக்கப்பட்ட மக்களுடன் பழகும்…

Read More

மறைந்தும் மறையாதமாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்கள் மரணித்துபத்தாண்டுகள் பறந்தோடின…

மறைந்தும் மறையாதமாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்கள் மரணித்துபத்தாண்டுகள் பறந்தோடின…

இருண்டயுகமாககாணப்பட்டஈழத்தமிழர்களின் அரசியல் யுகத்தில் 1985ம் ஆண்டளவில்  ஒருவிடிவெள்ளிதோன்றியது. ஆமாம்!வயதில் ஒருசட்டத்தரணியாகவும் மனிதஉரிமைசார்ந்தவிடயங்களில் அக்கறைகொண்டவருமானதிருநடராஜா ரவிராஜ் அவர்கள் தமிழ் மக்களினால் அறியப்படும் வகையில் அரசியலுக்குள்ளநுழைந்தார். ஏற்கெனவேபல்வேறுவகையில் தனதுபங்களிப்புக்களைஈழத்தமிழர்களுக்காகவழங்கிவந்தஅவர் மனிதஉரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டுகுமுறினார். அதன் விiவாகவேதமிழ் மக்களி;ன் நலன் காக்கவும் ஏனைய சமூகங்களுக்குஅநீதி இழைக்கப்படும் போதுகுரல் கொடுக்கவும் தீ;ர்மானித்துஅரசியல் பாதையைதேர்ந்தெடுத்தார். இந்தஅரசியல் பயணத்தில் சுமார் இருபதுவருடங்கள் தீவிரமாகஈடுபட்டுமக்களுக்காகஉழைத்தஅவரைபேரினவாதசக்திகள் விட்டுவைக்கவிரும்பவில்லை. மும்மொழியையும் சரளமாகப் பேசி இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் தமிழர் தொடர்பானமுக்கியவிடயங்களையும் தெளிவாகக் கூறியும் குறிப்பாகசிங்களஊடகங்களில் கூட துணிச்சலாகபலகருத்துக்களைதெரிவிக்கஅஞ்சாதஒருகருத்துப் போராளியைகபடத்தனமாகதீர்த்துக்கட்டதீர்மானித்தனரபேரினவாதக் கயவர்கள். அவர்களின்  கொலைவெறிக்கு 2006ம் ஆண்டுபலியாகிப் போனவரேதிருநடராஜா ரவிராஜ்  அவர்கள். யாழ்ப்பாணம் தென்மராட்சிசாவகச்சேரியைபிறப்பிடமாகக் கொண்டரவிராஜ் சாவகச்சேரிடிறிபேர்க் மற்றும் யாழ்ப்பாணம்  சென் ஜோன்ஸ் கல்லூரிகளில் கல்விகற்றார். இரண்டுபிள்ளைகளின்…

Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் போலிஸ் கொலை தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துகிறது

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் போலிஸ் கொலை தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துகிறது

சென்ற வியாழக்கிழமையன்று,யாழ்ப்பாணத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பவுன்ராஜ் சுலக்ஷண் மற்றும் நடராசா கஜன் ஆகிய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இரண்டு கலைப் பிரிவு மாணவர்களை இலங்கை போலிஸ் கொலை செய்தது. ஒட்டுமொத்த தீவிலும் வர்க்கக் குரோதங்கள் துரிதமாக தீவிரமடைந்து செல்வதன் மத்தியில் போலிஸின் இந்தக் கொலை நடைபெற்றுள்ளது. அமெரிக்கா ஒரு ஆட்சிமாற்ற நடவடிக்கைக்கு பொறியமைவு செய்த கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்,அதன்மூலம் அமர்த்தப்பட்ட “நல்லாட்சி” அரசாங்கமானது மேலும் மேலும் அதிகமாய் மக்கள்வெறுப்பதாய் ஆகிக் கொண்டிருக்கிறது,அத்துடன் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் மத்தியில் அதற்கான எதிர்ப்பும் அதிகரித்துச் சென்று கொண்டிருக்கிறது. திகிலூட்டும்விதமாக,பாதுகாப்புச் செயலரான கருணாசேன ஹெட்டியாராச்சி இந்தக் கொலைகளை வழக்கமான நடைமுறை என்றார். “வடக்கில் மட்டுமல்ல,இதேபோன்ற…

Read More

இலங்கை தோட்டத் தொழிற்சங்கங்கள் உற்பத்தி திறனுடன் பிணைக்கப்பட்ட சம்பள உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன

இலங்கை தோட்டத் தொழிற்சங்கங்கள் உற்பத்தி திறனுடன் பிணைக்கப்பட்ட சம்பள உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன

தொழிலாளர்களின் பிரமாண்டமான எதிர்ப்பின் மத்தியில்,கடந்த செவ்வாய் கிழமை உற்பத்த திறனுடன் பிணைக்கப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கைச்சாத்திட்டன. முந்தைய கூட்டு ஒப்பந்தம் காலவதியாகி 18 மாத கால தாமதத்தின் பின்னரே கைச்சாத்திடப்பட்ட இந்த புதிய ஒப்பந்தமானது கம்பனிக்காரர்கள்,சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் சேர்ந்து,தொழிலாளர்களுக்கு எதிராகச் செய்த சதியின் விளைவாகும். ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புதிய ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மறுநாளே போராட்டத்தில் குத்தித்தனர். பொகவந்தலாவையில் கொட்டியாகலை,மஸ்கெலியாவில் சாமிமலைக்கு அருகில் ஸ்டொக்ஹொம்,ஸ்றெத்ஸ்பி மற்றும் லட்புரோக்,பண்டாரவளை டயரபா மற்றும் பலாங்கொடையில் ரத்வத்தை போன்ற தோட்டங்கள் உட்பட பல தோட்டங்களில் தொழிலாளர்கள் முற்பகல் வேலையை நிறுத்திவிட்டு,ஒப்பந்தத்தை கிழித்தெறியுமாறும் ஆயிரம் ரூபா நாள் சம்பளம் வழங்குமாறும்…

Read More

இலங்கை ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் வாஷிங்டனுக்கு மண்டியிட்டார்

இலங்கை ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் வாஷிங்டனுக்கு மண்டியிட்டார்

உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் வீழ்ச்சியினால் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள போர் மேகங்கள் குவிகின்ற நிலையில்,கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூடியது. பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளுடன் சேர்த்து,இலங்கையும் பூகோள-அரசியல் பகைமைகளின் நீர்ச்சுழிக்குள்ளும் மற்றும் பெரும் வல்லரசுகளால்,குறிப்பாக அமெரிக்காவினால் மேலும் மேலும் உச்சரிக்கப்படும் இராணுவவாதத்தை நோக்கிய திருப்பத்துக்குள்ளும் இழுபட்டு சென்றுகொண்டிருக்கின்றது. செப்டம்பர் 21 அன்று ஐ.நா.வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை உட்பட,நியூ ஜோர்க்கில் அவரது முழு நடத்தையும்,அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவரது மண்டியிடலை வெட்கமின்றி வெளிப்படுத்துகின்றது. ஐ.நா. பொது செயலாளர் பான் கி-மூன்,அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஏனையவர்களிடமிருந்தும் அவர் பெற்ற மதிப்புரைகள்,கடந்த வருடம் ஜனவரி மாதம் பதவிக்கு வந்ததில்…

Read More

பதினைந்து ஆண்டு கால நிறைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு – கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய சிந்தனைகள்

பதினைந்து ஆண்டு கால நிறைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு  – கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய சிந்தனைகள்

– கலாநிதி நல்லையா குமரகுருபரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகி ஒக்டோபர் 21ம் திகதியுடன் ஒன்றரை தசாப்தங்கள் நிறைவு பெறுகின்றது. கடந்த 15 ஆண்டகளில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு வாழ் தமிழர் தம் அரசியல் தலைமையாக தமிழ் மக்களால் பல்வேறு தேர்தல்கள் ஊடாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. காலத்திற்குகாலம் ஒரு தசாப்தம் கூடியது ஒன்றரை தசாப்த காலங்கள் ஊடாக தமிழ் தலைமை புது வடிவம் எடுத்து வரவேண்டிய தேவை ஏற்படுவதும் புதிய தலைமைத்துவம் கொடுக்கப்படுவதும் இயல்பான வரலாற்று நிகழ்வாகும். இந்த வரிசையிலே கடந்த 15 ஆண்டுகள் தமிழினத்தின் வரலாற்றில் ஒரு…

Read More
1 33 34 35 36