இலங்கையில் பௌத்த மதத்திற்கு ஆபத்து வருகின்றதாம்

இலங்கையில் பௌத்த மதத்திற்கு ஆபத்து வருகின்றதாம்

தற்போதைய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளது போன்று உத்தேச புதிய அரசியலமைப்பிலும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுமென அரசாங்கத்தினால் கூறப்படுகின்றபோதும் உத்தேச அரசியலமைப்பில் சில விடயங்கள் மூலம் பௌத்தத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமை இல்லாது செய்யப்படவுள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போது மேலும் தெரிவிக்கையில்; பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையிலும், ஒற்றையாட்சியிலும் கை வைக்க மாட்டோம் என ஜனாதிபதியும் பிரதமரும் அடிக்கடி உத்தரவாதமளித்துள்ளனர். ஆனால் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பௌத்த செயற்பாட்டு குழுக்கள் புதிய அரசியலமைப்பின் ஊடாக பௌத்த…

Read More

வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம்

வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிவிப்பு ” வடக்கின் முதல்வராக விக்கினேஸ்வரன் தொடர்ந்து இருப்பதே எமக்குப் பலம்” வடக்கு மாகாண முதல்வர் விடயத்தில் கருத்து முரண்பாடுகள் இருப்பினும், திரு விக்கினேஸ்வரன் அவர்கள் வடக்கின் முதலவராக இருப்பதே எமக்கும் பலம் என்று நான் நினைக்கின்றேன். உள்ளுராட்சி சபைத் தேர்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நான் உதாசீனம் செய்ய விரும்பவில்லை. கூட்டாக செயற்படுவதே நான் விரும்புகின்றேன்” இவ்வாறு கொழும்பில் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பிற்குறிப்பு:- வடக்கின் முதலவராக சுமந்திரன் பதவியேற்றால் அவர் விலை போய்விடுவார்கள் என்பதும் ரணிலின் ஆதிக்கம் வடக்கில் உறுதியாகிவிடும் என்பதை நன்கு தெரிந்து வைத்துள்ள படியால் தான்…

Read More

ஐ.நா.மன்றத்தில் வைகோ மீது தாக்குதல் முயற்சி; இலங்கை தூதரகம் முன்பு நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: மதிமுக அறிவிப்பு

ஐ.நா.மன்றத்தில் வைகோ மீது தாக்குதல் முயற்சி; இலங்கை தூதரகம் முன்பு நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: மதிமுக அறிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைமையகத்தில் வைகோ மீது தாக்குதல் நடத்த கைக்கூலிகளை ஏவிவிட்ட சிங்கள அரசைக் கண்டித்து செப்டம்பர் 27-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையத்தின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் பங்கேற்க…

Read More

இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் ஐ.நா வருகையை முன்னிட்டு கண்டன போராட்டம்

இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் ஐ.நா வருகையை முன்னிட்டு கண்டன போராட்டம்

இலங்கை ஜனாதிபதி சிறிசேனவின் ஐ.நா வருகையை முன்னிட்டும், தாயகத்தில் 200 நாட்கள் தாண்டியும் அரசின் பாராமுகத்தோடும் கண்ணீரோடும் எழுச்சியோடும் நடைபெற்று கொண்டு இருக்கும் மக்கள் எழுச்சி போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் முகமாகவும் கனடிய மண்ணில் கனடா தமிழ் சமூகமும் கனடா தமிழ் மாணவர் சமூகமும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால் நடத்தவுள்ளனர். இடம்: அமெரிக்க துணைத் தூதரகம், டொரண்டோ (360 University Avenue) திகதி: செவ்வாய் செப்டெம்பெர் 26, 2017 நேரம்: மாலை 5:00 மணி முதல் 7:00 மணிவரை இந்த கண்டன போராட்டத்திற்கு கனடா வாழ் அனைத்து மக்களும் ஊடகங்களும் ஆதரவு நல்கி அணி திரண்டு தாயகத்தில் போராடும்…

Read More

ஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்

ஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்

தமிழினத்துக்கு வடகிழக்கு இணைந்த கூட்டாட்சி அரசியல் அமைப்புக்கு கடினமாக உழைத்து தமிழரை இன அழிப்பில் இருந்து பாதுகாப்போம் என்று கடைசி தேர்தலில் கூக்குரல் இட்டுவிட்டு மக்களின் வாக்குகளை பெற்றபின் ஊமைகளாகி போய்விட்டார்கள். இவர்கள் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் பயந்தவர்களா? 1. சர்வதேச விசாரணையை சுமந்திரன் வேண்டாம் என்றபோது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள். 2. இரண்டு வருடம் இலங்கைக்கு கால அவகாசம் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் கொடுக்க வேண்டும் என்று சுமந்திரன் சொன்னபோது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள். 3. சிங்கள அமைச்சர்கள், தமிழர்கள் அரசியல் வழிகாட்டு குழுவில் இருந்தும் வடகிழக்கு இணைப்பையும், கூட்டாட்சி (சமஷ்டி) கேட்கவில்லை என்ற போது ஏன் இவர்கள் ஊமைகளாக…

Read More

முதலமைச்சருக்கு விலாசமிடப்பட்டுள்ள முக்கியமான கடிதம் இது

முதலமைச்சருக்கு விலாசமிடப்பட்டுள்ள முக்கியமான கடிதம் இது

அவரசமான வேண்டுகோளும் கூட… இதைப்போல இன்னும் எத்தனை இடங்களில் இவ்வாறான இடர்தரும் விடயஙகளை இடம்பெறுகின்றனவோ?? நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கௌரவ முதலமைச்சர் வட மாகாணம் ஐயா…… கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் யாழ் – பருத்தித்துறை வீதியில் புத்தூர் 9 ஆம் கட்டையில் வடிகாலமைப்புப் பணி மேற்கொள்ளப்படுகின்றது. இதற்காக வீதியோரத்தில் பாரிய அளவில் நிலம் வெட்டப்படுகின்றது. இவ்வாறு வெட்டப்பட்ட மண் மற்றும் நிர்மாண வேலைகளுக்கான கற்கள் வீதியோரத்தில் குவிக்கப்பட்டும் உள்ளன. எனினும் சாதாரணமாகவே விபத்துக்கள் நடைபெறும் பாரிய வளைவினை உடைய இவ் வீதியில் வீதியோரத்தில் வேலைகள் நடைபெறுவதற்கான எந்தச் சமிஞையும் கிடையாது. தனியே இரண்டு கொங்கிறீட் கட்களால் முண்டு கொடுக்கப்பட்டு மஞ்சல் நிற சிறு துண்டு பொலித்தீன்…

Read More

பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக விலக்கப்பட்டார்

பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக விலக்கப்பட்டார்

பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக பெர்ணான்டோ விலக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகம் பிரிவு இதனை அறிவித்துள்ளது. அரசியல் அமைப்பில் ஜனாதிபக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதி அமைச்சர் பதவியில் இருந்து அவர் இன்று முதல் நீக்கப்படுகிறார் என அறிவித்துள்ளது.

Read More

தற்போதைய சூழ்நிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதி விக்னேஸ்வரனுக்கு அவர்களுக்கே உண்டு – யாழ்ப்பாணத்தில் வெளியாகியுள்ள அறிக்கை

தற்போதைய சூழ்நிலையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதி விக்னேஸ்வரனுக்கு அவர்களுக்கே உண்டு – யாழ்ப்பாணத்தில் வெளியாகியுள்ள அறிக்கை

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தமிழர்கள், தமது தலைவர் என்று எவரையாவது குறிப்பிட்டால் அது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையே குறிப்பதாக அமைந்திருந்தது. அந்த அளவுக்கு ஒட்டு மொத்தத் தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு தலைவராக அவர் காணப்பட்டார். தமிழர் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற அனைத்துப் பேச்சுக்களிலும் பிரபாகரனால் நியமிக்கப்பட்டவர்களே பங்குபற்றினார்கள். புலிகளின் தலைமைக்கு அந்த அளவுக்கு அன்று மதிப்பு வழங்கப்பட்டது. பிரபாகரன் தமது இளவயதிலேயே புலிகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். மிக நீண்ட காலமாக வேறு எவராலும் அசைக்க முடியாத நிலையில் அந்தப் பதவியில் அமர்ந்திருந்தவர்.அவரது நேர்மையும் கொள்கைப் பற்றுறுதியும், இனத்தின் மீது கொண்ட வாஞ்சையும் உலகத் தலைவர்களில் ஒருவராக அவரை அடையாளம் காட்டின….

Read More

தமிழில் தேசிய கீதம் பாடும் உரிமையை இலங்கைப் பிரஜைகள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் திருகோணமலை பௌத்த பிக்கு ஆனந்த தேரர் தெரிவிப்பு

தமிழில் தேசிய கீதம் பாடும்  உரிமையை இலங்கைப் பிரஜைகள் அனைவரும்  ஏற்றுக்கொள்ள வேண்டும் திருகோணமலை பௌத்த பிக்கு ஆனந்த தேரர் தெரிவிப்பு

இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுகின்றபோது எவ்விதமான மாற்றம் அல்லது திரிபுபடுத்தல்n ஆகியவை இன்றி பாடப்படுகின்றது. ஏனவே தமிழ் மக்கள் தங்களுக்கு விளங்கும் மொழியில் தமிழில் தேசிய கீதம் பாடும் உரிமையை இலங்கைப் பிரஜைகள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு திருகோணமலை பௌத்த பிக்கு ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். ஆண்மையில் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையர்ற்றுகையில் கடந்த காலங்களில் இலங்கையின் பல பாகங்களிலிருந்து தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவது தொடர்பான பல எதிர்க்கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வந்தது. இது ஒரு தவறான விடயமாகும். இலங்கையில் மூவின மக்கள் வாழுகின்றார்கள். ஏனவே…

Read More

கிழக்கு மாகாண மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய துரோகம் விளைவித்துள்ளது கண்டனம் தெரிவிக்கும் கருணா

கிழக்கு மாகாண மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய துரோகம் விளைவித்துள்ளது கண்டனம் தெரிவிக்கும் கருணா

கிழக்கு மாகாணசபையில் உள்ள பெரும்பான்மை அதிகாரத்தை கொண்டு தமிழ்பேசும் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தன. ஆனாலும் ஜனாதிபதி மைத்திரியினதும் பிரதமர் ரணிலினதும் வேண்டுகொளையும் நெருக்குவாரத்தையும் கருத்திற்கொண்டு முதலமைச்சர்பதவியை முஸ்லிம் ஒருவருக்கு விட்டுக்கொடுத்துவிட்டது. இந்த வகையில் கிழக்கிலும் தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய துரோகம் இழைத்துள்ளது என்றே கூறவேண்டும். ஏனவே காலம் தாழ்த்திச் சென்றாலும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான ஒரு போராட்;டத்தை நடத்துவதோடு மட்டுமல்லாது, கிழக்;கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும். இவ்வாறு கருணா என்று அழைக்கப்படுபவரும் முன்னாள் மகிந்த அரசில் உதவி அமைச்சராக இருந்தவருமான விநாயகமூர்த்தி முரளிதரன்…

Read More
1 31 32 33 34 35 40