‘இலங்கை ராணுவத்தினர் கண் முன் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்’

‘இலங்கை ராணுவத்தினர் கண் முன் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்’

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பிறகு இஸ்லாமியர் வாழும் சில பகுதிகளில் தொடர் தாக்குதல்கள் நடக்கின்றன. புத்தளம் மாவட்டத்திலுள்ள துன்மோதர பகுதியில் இஸ்லாமியர்கள் வீடுகள் மற்றும் பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வன்முறையாளர்கள் குரான் பிரதிகளை எரித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இலங்கையில் புத்தளம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் முஸ்லிம்கள் வாழும் சில பகுதிகளிலும் மே 13 அன்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவங்களினால் பல முஸ்லிம் கிராமங்கள் கடுமையான சேதம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இது புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய – துன்மோதர பிரதேசமாகும். இந்த பிரதேசத்தில் பெருமளவு தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும், இந்த கிராமத்தை சூழ்ந்துள்ள பகுதிகள்…

Read More

இலங்கையில் கலவரம்: ஒருவர் பலி

இலங்கையில் கலவரம்: ஒருவர் பலி

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று( மே 13)புட்டலம் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர், அவரது தொழிற்சாலையில் இருந்த போது, மர்ம கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே டிவியில் ஆற்றிய உரையில் கூறியதாவது: அடையாளம் தெரியாத கும்பல் மதக்கலவரத்தில் ஈடுபட்டு நாட்டை அழித்து விடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட மேற்கு மாகாணத்தில் பல இடங்களில், அந்த கும்பல் கலவரத்தில் ஈடுபட்டு, பொது சொத்துகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரும் பாதுகாப்பு படையினரும் நிலைமையை…

Read More

இலங்கையில் தொடரும் மோதல்

இலங்கையில் தொடரும் மோதல்

குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளுக்கு உடன் அமலுக்குவரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குச் சட்டம் நாளை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மையினால் பல சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தவும் தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இந்த நிலையில், குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்தும் அமைதியின்மை ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக தெரிவித்து, மீண்டும்…

Read More

இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு: பல பகுதிகளில் அமைதி குலைவதால் நடவடிக்கை

இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு: பல பகுதிகளில் அமைதி குலைவதால் நடவடிக்கை

இலங்கையில் பல பகுதிகளில் அமைதி குலைவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இன்று திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்படியாக உத்தரவு பிறப்பித்துள்ளது இலங்கை போலீஸ். நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்தே, இந்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. சிலாபம், குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் இன்றும் அமைதியின்மை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதை அடுத்து, இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. வடமேல் மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் அதிகாரத்திற்கு…

Read More

வாள்,கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஒப்படைக்கும்படி பொதுமக்களுக்கு கெடு

வாள்,கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஒப்படைக்கும்படி பொதுமக்களுக்கு கெடு

வாள்,கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஒப்படைக்கும்படி பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட கெடுவை மேலும் 48 மணி நேரத்துக்கு நீட்டித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் சமீபத்தில் தேவாலயங்கள்,நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட எட்டு இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. குண்டு வெடிப்பை தொடர்ந்து இலங்கையில் பல இடங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு உதவுவோரை கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் போலீசார் நடத்திய சோதனைகளில் பல இடங்களில் வாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து ‘பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள…

Read More

இலங்கையில் ஹிஜாப் அணிந்த ஆசிரியர்களை தடுத்து இடம்மாற்றம்

இலங்கையில் ஹிஜாப் அணிந்த ஆசிரியர்களை தடுத்து இடம்மாற்றம்

ஹபாயா மற்றும் ஹிஜாப் ஆடையுடன், தாங்கள் பணியாற்றும் பாடசாலைக்குள் நுழைய தடுத்ததன் காரணமாக, இலங்கையின் மேல் மாகாணத்திலுள்ள பாடாசாலை ஒன்றில் பணியாற்றி வந்த 10 ஆசிரியைகள், நேற்று செவ்வாய்க்கிழமை வேறு பாடசாலைகளுக்கு மாற்றம் பெற்று சென்றது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. அவிசாவளை – புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலத்தில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள், பணிக்கு சென்றபோது, ஹபாயா மற்றும் ஹிஜாப் அணிந்து கொண்டு பாடசாலைக்குள் செல்லக் கூடாது என்று, நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த பாடசாலையில் கற்கும் மாணவர்களின் பெற்றோரும், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் இணைந்து அவர்களை தடுத்ததாக மேல் மாகாண ஆளுநர் ஆஸாத் சாலியின் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியைகள் அனைவரும்…

Read More

இலங்கை ஜனாதிபதி சிறிசேன கேள்வி: ஐ.எஸ். அமைப்புக்கு சக்தி வாய்ந்த நாடுகளை தாக்கும் திறன் இருக்கிறதா?

இலங்கை ஜனாதிபதி சிறிசேன கேள்வி: ஐ.எஸ். அமைப்புக்கு சக்தி வாய்ந்த நாடுகளை தாக்கும் திறன் இருக்கிறதா?

இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பிபிசியுடனான பிரத்யேக பேட்டியின்போது அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன பதிலளித்தார். கேள்வி: இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழு உங்கள் நாட்டை இலக்கு வைக்கும் என்ற உள்ளுணர்வு உங்களுக்கு இருந்ததா? அப்படியொரு கற்பனையை கூட செய்திருப்பீர்களா? பதில்: உண்மையை சொல்வதென்றால், அப்படி நான் நினைத்ததே இல்லை. நான் அதிர்ச்சி அடைந்தேன். இலங்கையை ஏன் அவர்கள் தேர்வு செய்தார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கேள்வி: பிறகு தாக்குதல் நடத்த இலங்கையை அவர்கள் ஏன் தேர்வு செய்திருப்பார்கள் என கருதினீர்கள்? பதில்: உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் நேருக்கு நேராக…

Read More

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் பயன்பட்ட பயிற்சி மையம் கண்டுபிடிப்பு

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் பயன்பட்ட பயிற்சி மையம் கண்டுபிடிப்பு

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று காலை 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஒரே நாளில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர். 500 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. ஆனால், தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்.டி.ஜே.) மற்றும் ஜமாதி மிலாது இப்ராகீம் என்ற பிரிவினைவாத குழு மீது அரசு குற்றச்சாட்டு தெரிவித்தது. தொடர்ந்து, அதிபர் மைத்ரிபால சிறிசேனா கடந்த வாரம் இந்த இரு அமைப்புகளையும் தடை…

Read More

இலங்கை தாக்குதலுக்கு முன் பிட்காயின் அடிப்படையில் நிதி திரட்டிய ஐ.எஸ். அமைப்பு

இலங்கை தாக்குதலுக்கு முன் பிட்காயின் அடிப்படையில் நிதி திரட்டிய ஐ.எஸ். அமைப்பு

இலங்கை தாக்குதலுக்கு முன்னர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பானது தங்களிடம் உள்ள க்ரிப்டோ கரன்சிகளை டாலர்களாக மாற்றியதாக கண்டறிந்துள்ளது. இஸ்ரேல் நிறுவனமான ஒஉஇட்ஸ்டீர்ம் இதுகுறித்து தெரிவிக்கையில், பிட்காயின் முறையில் இருக்கும் நம்பகத்தன்மை மற்றும் மேற்பார்வை செய்யப்படாத சர்வதேச பண மாற்றங்கள் அனைத்தும் தீவிரவாதத்திற்கு பயனளிப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கையில் நூற்றுக்கணக்கானவர்களின் உயிரைப் பறித்த அந்த தொடர் தாக்குதல்களுக்கு முன்னர் ஐ.எஸ். அமைப்பு பிட்காயின் பரிமாற்றங்கள் செய்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி காயின் பேமெண்ட்ஸ் (CoinPayments) என்ற தளத்தின் நிலுவையில் உள்ள தொகை £383,000 இருந்து £3.45 மில்லியன் என அதிகரித்ததாக அந்த இஸ்ரேல் நிறுவனம் கண்டறிந்துள்ளது. ஆனால் ஈஸ்டர் ஞாயிறன்று அந்த மொத்த பணமும் மாயமாகி,…

Read More

பயங்கரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம் அதிரடியில் இறங்கியது இலங்கை அரசு

பயங்கரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம் அதிரடியில் இறங்கியது இலங்கை அரசு

இலங்கை தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துவர்களின் பண்டிகையான, ‘ஈஸ்டர்’ அன்று, இலங்கையில் உள்ள மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில், தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது.இதில், 253 பேர் கொல்லப்பட்டனர்; 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உள்ளூர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒன்பது பேர், இந்த தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.பயங்கரவாதிகள் ஒன்பது பேர் மற்றும் அவரது உறவினர்களின் விபரங்களை, போலீசார் சமீபத்தில் வெளியிட்டனர். பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களின் பட்டியலை, விசாரணை அதிகாரிகள் பட்டியலிட்டு வருகின்றனர்.அந்த சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில், அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும்வரை,…

Read More
1 2 3 4 5 34