கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யவேண்டும் : இலங்கை இஸ்லாமியர்கள் எதிர்ப்பை மீறி அறிவித்த அரசு

கொரோனா வைரஸ் நோயால் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யவேண்டும்   : இலங்கை இஸ்லாமியர்கள் எதிர்ப்பை மீறி அறிவித்த அரசு

எவரேனும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பதற்கு நேரிட்டால், அவரது பூதவுடலை முறையான அதிகாரிகளால் பெயர் குறித்து நியமிக்கப்படும் தகனத்திற்கான அத்தியாவசிய கடமைகளை பெறுபேற்கும் நபர் தவிர்ந்த வேறு எவரிடமும் கையளித்தல் ஆகாது என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அத்தகைய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் முறையாக அங்கீகரிக்கப்படும் சுடலை அல்லது இடமொன்றில் பூதவுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சாத்தியமான உயிரியல் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்திற்கென முழுமையாக எரிவதற்கென ஆகக் குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை 800க்கும், 1200ற்கும் இடைப்பட்ட பாகை செல்சியஸ் வெப்ப நிலையில் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது….

Read More

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் கைது

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் கைது

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரருக்கும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் இடையில் தொடர்பிருந்தமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று, புதன்கிழமை, இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்கும் இடையில் தொடர்புள்ளதா என ஊடகவியலாளர்கள் இதன்போது போலீஸ் ஊடகப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த போலீஸ் ஊடகப் பேச்சாளர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரருக்கு இந்த சம்பவத்துடன் தொடர்புள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் தாம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாக அவர்…

Read More

கொரோனா வைரஸ்: இலங்கையர்களுக்கு 16 நிவாரண திட்டங்கள் அறிவிப்பு

கொரோனா வைரஸ்: இலங்கையர்களுக்கு 16 நிவாரண திட்டங்கள் அறிவிப்பு

கோவிட்- 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நிர்கதிக்குள்ளாகியுள்ள நாட்டு மக்களுக்காக, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் பல்வேறு நிவாரணங்களை வழங்க இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இந்த நிவாரண உதவித்திட்டங்கள் இன்று (மார்ச் 23) முதல் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் செயலாளர்கள், அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மக்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவித்திட்டங்கள். வருமான வரி, வாட் வரி, வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை…

Read More

இலங்கை அதிபர் அதிரடி – கடனை வசூலிக்க வங்கிகளுக்கு தடை

இலங்கை அதிபர் அதிரடி – கடனை வசூலிக்க வங்கிகளுக்கு தடை

‘கொரோனா வைரஸ் தொற்றால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆறு மாதத்துக்கு, கடன், வட்டியை வங்கிகள் வசூலிக்கக் கூடாது’ என, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, தற்போது உலகையே உலுக்கி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 60ஐ எட்டியுள்ளது. கொரோனா தாக்கத்தால் இலங்கையில் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ‘ஆறு மாதங்களுக்கு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய கடனுக்கான வட்டிப் பணத்தை வங்கிகள் வசூலிக்கக் கூடாது’ என, உத்தரவிட்டுள்ளார். மேலும், தொழில்துவங்க யாரேனும் விண்ணப்பித்தால் 4 சதவீத வட்டியில் கடன் வழங்க…

Read More

இலங்கையில் கோவிட் 19 – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கோவிட் 19 – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் இன்றைய தினம் (மார்ச் 12) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக இன்று மாலை அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்கவை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையர் இவராவார். உலகம் முழுவதும் பாரிய உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கோவிட் – 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இலங்கையை தாக்கியுள்ளதையடுத்து, இலங்கை…

Read More

யானை சின்னம் யாருக்கு? ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்துள்ளது !!

யானை சின்னம் யாருக்கு? ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்துள்ளது !!

ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்த கூட்டணி திங்கட்கிழமை உருவாக்கப்பட்டது. கொழும்பு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முற்பகல் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதீயூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக்க ஹெல உறுமய உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துக்கொண்டுள்ளன. அது மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய 20…

Read More

இலங்கை பார்லிமென்ட் கலைப்பு !!

இலங்கை பார்லிமென்ட் கலைப்பு !!

இலங்கை பார்லிமென்டை கலைப்பதற்கான அரசாணையில் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே கையெழுத்திட்டார்.  இலங்கைக்கு கடந்த 2015ம் வருடம் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. 2015ம் வருடம் செப். 1ல் பார்லிமென்ட் பதவிக்கு வந்தது. ராஜபக்சே முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் அந்நாட்டின் பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பார்லிமென்டை கலைப்பதற்கான அரசாணையில் கையெழுத்திட்டார். கையெழுத்திடப்பட்ட அரசாணை இலங்கை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்லியின் பதவிக்காலம் 6 மாதம் இருக்கும் நிலையில் அந்நாட்டில் பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது. இலங்கை பார்லிமென்ட் தேர்தல் ஏப். 25ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்லி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 12 முதல் மார்ச் 19 வரை நடக்க உள்ளது.

Read More

போர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

போர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், இலங்கை ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி, ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு, தங்கள் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்தது. இதற்கு, இலங்கை அரசிற்கு ஆலோசனைகள் வழங்கும் பவுத்த மத அமைப்பு கண்டனம் தெரிவித்தது. ‘இலங்கையில் நடைபெற்ற உள் நாட்டுப் போரின் போது, போர்க்குற்றங்கள் நடந்தன. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அதுகுறித்து விசாரிக்க வேண்டும்’ என, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை பேரவையில் 30/1 மற்றும் 40/1 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கு அப்போதைய இலங்கை அரசு உடன்பட்டு, தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. அந்த தீர்மானங்களில் இருந்து விலகுவதாக, இலங்கை…

Read More

இலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பம் –

இலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பம் –

இலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்திற்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா விதித்த தடையுத்தரவிற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளி விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவு பெற்றத் தருணத்தில், இலங்கை இராணுவத்தின் 58ஆவது பிரிவினரால் மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. குறித்த காலப் பகுதியில் மனித உரிமை மீறல்கள், சட்டவிரோத கொலைகள் இடம்பெற்றுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதனால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக…

Read More

இலங்கை தமிழர்களையும், தமிழையும் புறக்கணிக்கும் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது – இரா.சம்பந்தன்

இலங்கை தமிழர்களையும், தமிழையும் புறக்கணிக்கும் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது – இரா.சம்பந்தன்

இலங்கையின் 72ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார் இருப்பினும் நாம் கலந்துகொள்ளவில்லை. தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அவர்களின் செயற்பாடுகளை நாம் ஆதரிக்க முடியாது. இதன் காரணமாக தேசிய சுதந்திர தின நிகழ்வில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பங்கேற்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது. இது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம். 2015ஆம் ஆண்டிலிருந்து சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இம்முறை சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்படும் என்று…

Read More
1 2 3 4 42