“நாங்கள் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதற்காவே தற்போதைய அரசுக்கு ஆதரவை வழங்குகின்றோம்”

“நாங்கள்  சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதற்காவே தற்போதைய அரசுக்கு ஆதரவை வழங்குகின்றோம்”

கனடா தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடத்திய கூட்டத்தில் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராஜா “நாங்கள் எத்தனையோ சந்தர்ப்பங்களைத் கடந்த காலங்களில் தவற விட்டுள்ளோம். இப்போது எமது இனத்தின் விடிவுக்கு நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இப்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நாம் எமது ஆதரவை வழங்க வேண்டும்” இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ததேகூ(கனடா) நடத்திய இரவு விருந்தின் போது முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறிஸ்கந்தராசாஈ தனது உரையில் குறிப்பிட்டார். தலைமை உரையை ததேகூ (கனடா) இன் தலைவர் கதிர வேலுகுகதாசன் ஆற்றினார். வரவேற்புரையை ததேகூ இன் துணைத்தலைவர் வீர சுப்பிர மணியம் ஆற்றினார். மிகச் சிறப்பாக நடந்தேறிய இந்த விருந்தில்…

Read More

அர்ஜூன் மகேந்திரன் அரச பதவிகள் ஏதும் வகிக்கவில்லை: ரங்க கலன்சூரிய

அர்ஜூன் மகேந்திரன் அரச பதவிகள் ஏதும் வகிக்கவில்லை: ரங்க கலன்சூரிய

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், தற்போது எந்தவிதமான அரச பதவிகளையும் வகிக்கவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், மத்திய வங்கியின் ஆலோசகராக மீண்டும் செயலாற்றுகின்றார் என்று ஊழலுக்கு எதிரான முன்னணி குற்றஞ்சாட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய, ‘மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நிதியமைச்சின் ஆலோசகராக செயற்படுவது உண்மையற்ற விடயமாகும். அவர் அரசாங்கத்தில் எந்தவொரும் பதவிலும் இல்லை’ என்றுள்ளார்.

Read More

யாழ் போதனா வைத்திய சாலையில்ஆசிரியை திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் நினைவு பூங்கா திறநது வைக்கப்பட்டது

யாழ் போதனா வைத்திய சாலையில்ஆசிரியை திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் நினைவு பூங்கா திறநது வைக்கப்பட்டது

அண்மையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் யாழ் இந்து ஆரம்ப பாட சாலை முன்னாள் உப. அதிபர் திருமதி. சரஸவதி ஆறுமுகம் அவர்களின் நினைவாக வைத்தியா சாலை பெண்கள் வாட் 02 இல் நோயாளர் ஆறுதல் பெறுவதற்கான பூங்கா அமைக்கப்பட்டு வைத்திய நிபுணர் பேரானந்த ராஜா திறந்துவைத்தார்.  நினைவுப் பூங்கா அமரரது குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டது. அமரத்துவம் அடைந்த முன்னாள் ஆசிரியை திருமதி.சரஸ்வதி ஆறுமுகம் அவர்கள், எமது தாயகத்தின் சுய நலமற்ற சமூக சேவையாளரும் கல்விமானுமாகிய திரு ஆறு திருமுருகன் அவர்களது தாயார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.

Read More

தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்

தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்

தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன் கனடாவில் நடைபெற்ற இறுதிக் கூட்டத்தில் உருக்கமான உரையை ஆற்றி விட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்ற வடக்கின் முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் கடந்த ஒரு வார காலமாக ஓய்வின்றி உங்கள் மத்தியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். (மிகவும் மோசமான இறுமல் அவரது உணர்வுபூர்வமான உரையை தடுக்க முயலுகின்றது) அவ்வாறு உடல் இளைக்கும் வண்ணம் நான் ஓய்வின்றி செயற்பட்டதால் வந்த வினைதான் இந்த இறுமல். ( நகைச்சுவையாகக் கூறுகின்றார்) எனினும் தாயகக் கடமைகள் என்னை அழைத்த வண்ணம் உள்ளதால் கனடிய உறவுகளாகிய உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கி;ழமையன்று மாலை ஸ்காபுறோவில்…

Read More

கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை குப்பைக் கூடைக்குள் வீச வேண்டும் – சம்பிக்க

கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை குப்பைக் கூடைக்குள் வீச வேண்டும் – சம்பிக்க

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுசெயலணியின் அறிக்கையை நிராகரித்துள்ள அமைச்சர்சம்பிக்க ரணவக்க, இந்த அறிக்கை குப்பைக் கூடைக்குள்வீசப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்துவெளியிட்ட அவர், “கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகள், தேசியநலனுக்கும், இன நல்லிணக்கத்துக்கும் விரோதமானவை. செயலணியின் பரிந்துரைகளின் மூலம், போர்க்குற்றங்களுக்காக எமது போர்வீரர்களையும், அரசியல் தலைவர்களையும், விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளைஅனுப்ப ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் முயற்சிக்கக் கூடும். மகிந்த ராஜபக்ச 12,600 விடுதலைப் புலிகளை போர்க்குற்றங்களுக்காக தண்டிக்காமல்விடுவித்தமை பாரிய தவறாகும். செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால், எஞ்சியுள்ள விடுதலைப்புலிகளுக்கும் அவர்களின் அனுதாபிகளுக்குமே நன்மையளிப்பதாக இருக்கும்” என்றும்தெரிவித்தார்.

Read More

சிக்கலை தீர்க்க அவசரமாக அமெரிக்கா பறந்தார் கோத்தபாய!

சிக்கலை தீர்க்க அவசரமாக அமெரிக்கா பறந்தார் கோத்தபாய!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சஇன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகஅமெரிக்கா நோக்கி சென்றுள்ளார். கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்கா பயணத்தில்அவரது மனைவி அனோமா ராஜபக்சவும்இணைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 2.50 மணிக்கு டோஹா கட்டார் நோக்கிபயணித்த ஈ.கே.349 என்ற விமானத்தில் கோத்தபாயபயணித்துள்ளார். அமெரிக்காவில் தனது சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளைதீர்த்துக் கொள்வதற்காக கோத்தபாய அமெரிக்க சென்றுள்ளதாக ராஜபக்ச குடும்ப தகவல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Read More

மின் கட்டணத்தை 2 இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும்

மின் கட்டணத்தை 2 இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும்

நிதி அமைச்சின் மாதாந்த மின் கட்டணத்தை இரண்டு இலட்சம் ரூபா வரையில் குறைக்க முடியும் என, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைய, அனைத்து அரச நிறுவனங்களையும் சூரிய சக்தி பயன்பாட்டிற்கு மாற்றும் தேசிய வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று, நிதி அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலகமாநாடுஆகஸ்ட் 5ம் 6ம் திகதிகளில் யாழ்பபாணபல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலகமாநாடுஆகஸ்ட்  5ம் 6ம் திகதிகளில் யாழ்பபாணபல்கலைக் கழகத்தில்  நடைபெறவுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தின் செயலாளர் நாயகம்” தமிழச் செம்மல்” ஜேர்மனிவாழ் துரை கணேசலிங்கம் அவர்களின் துரித முயற்சியாலும் அபாரமான துணிச்சலாலும் யாழ்பபாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக  பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாகநடைபெறவுள்ளது. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாட்டின் மாநாட்டுத் தலைவராக தமிழ் நாட்டைச் சேர்ந்த முனைவர் பாஞ் இராமலிங்கம் அவர்களை இயக்கத்தின் பொதுக்குழு தெரிவு செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்படி 13வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டில் வடக்கு மாகாணமுதலமைச்சர் மாண்புமிகு சி. வி. விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு…

Read More

அம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனரா?

அம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனரா?

இலங்கை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க கொழும்பில் நடத்தியிருந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ள சீனாவின் திட்டங்களில் பணியாற்றுவதற்கு, ஒரு மில்லியன் சீனர்கள் நுழைவிசைவுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறியிருந்தார். இதுகுறித்து நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, “இலங்கை அரசாங்கத்துக்கு அத்தகைய கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை. அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் தொடர்பான உடன்பாடுகளில், சீனர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பான நிபந்தனைகள் ஏதும் இல்லை. எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இது ஒரு தேசிய செயற்பாடு ஆகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read More

எந்த நாட்டினது உத்தரவுக்கும் அடி பணியோம் – இலங்கை அரசு

எந்த நாட்டினது உத்தரவுக்கும் அடி பணியோம் – இலங்கை அரசு

எல்லா நாடுகளுடனும் இராஜதந்திர ரீதியான நல்ல உறவுகளைப் பேணிக் கொண்டாலும், எந்த நாட்டினது உத்தரவுக்கும் சிறிலங்கா கீழ்ப்பணியாது என்று சிறிலங்கா அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். “ தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது தொடக்கம், அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. அதேவேளை, சீனா, இந்தியாவுடனான உறவுகளை விரிவாக்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டது. நாட்டு மக்களுக்கு எது சிறந்தது என்ற அடிப்படையில் தான் அரசாங்கம் முடிவுகளை எடுக்குமே தவிர, வெளிநாட்டு அரசாங்கத்தின் உத்தரவுக்கு அடி பணிந்து முடிவுகள் எடுக்கப்படாது. இந்த நாடு எமது மக்களால், எமது அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. சிறிலங்காவின் இறைமையை அரசாங்கம் பாதுகாக்கும். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையினால், எல்லா நாடுகளுடனும் சுமுகமான…

Read More
1 17 18 19 20 21 23