தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியே நாங்கள் பொறுமை காக்கின்றோம் என்கிறார் புளொட்அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்

தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியே நாங்கள் பொறுமை காக்கின்றோம் என்கிறார் புளொட்அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்

காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரங்க ளில் அரசு மெத்தனமாக இருந்தா லும் தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி நாங்கள் பொறுமை காக்கின்றோம் என புளொட்அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியா திருநாவற்குளத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்;ராட்சிமன்ற தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக் கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், இடைக்கால அறிக்கையை பற்றி இப்போது பேசப்படுகின்றது. அது இறுதி அறிக்கை அல்ல! அது முழுமையடையும் போதுதான் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வதா? நிரா கரிப்பதா? என்பதனை முடிவெடுக்க முடியும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜனாதிபதி யாக வருவதற்கு 80 வீதமான…

Read More

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது- சுரேஸ் பிரேமச்சந்திரன். மக்களின் அபி விருத்திக்காகவே பல கோடி ரூபாய்கள் அரசாங்கத்தால் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளன.- மாவை சேனாதிராஜா.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது- சுரேஸ் பிரேமச்சந்திரன்.  மக்களின் அபி விருத்திக்காகவே பல கோடி ரூபாய்கள் அரசாங்கத்தால் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளன.- மாவை சேனாதிராஜா.

தமிழ் மக்களின் நலன்களை பாராமல் அரசின் தேவைகளை பூர்த்தி செய்தமையால் தான் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை, கூட்டமைப்பின் அழுத்தத்தால் இடம் பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தி ற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அரசாங்கம் 2 கோடி ரூபா வழங்கப்பட்டது என கூட்டமை ப்பு நாடளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற த்தில் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தார். எனினும்…

Read More

ஊழல் குற்றச்சட்டு: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இடையே கைகலப்பு

ஊழல் குற்றச்சட்டு: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இடையே கைகலப்பு

ஊழல் குற்றச்சட்டு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இலங்கையின் மத்திய ரிசர்வ் வங்கி பங்குபத்திரங்கள் வெளியிட்டதில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட விவாதத்தின் போது வாக்குவாதம் முற்றி எம்.பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய அந்த விவகாரம் குறித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே உரையாற்றிக்கொண்டு இருந்த போது அதுகுறித்து விசாரணை அறிக்கையை வெளியிடாமல் அவர் பேசக்கூடாது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆளும் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தால் இலங்கை நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Read More

தமிழர் தரப்பில் உறுதியான தலைமை உருவாவதை இந்தியாவும் இலங்கை அரசும் விரும்பவில்லை என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழர் தரப்பில் உறுதியான தலைமை உருவாவதை இந்தியாவும் இலங்கை அரசும் விரும்பவில்லை என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களுக்கிடையே நேர் மையான, விட்டுக்கொடுப்பற்ற, கொள்கையிலிருந்து விலகாத தலைமை உருவாவதை இலங்கை அரசும் இந்தியாவும் மேற்குலக மும் விரும்பவில்லை. அதனால் தான் தமிழ் மக்களுக்கு விரோதமான கட்சிகளை பலப் படுத்துவதாக சாடியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உள்ராட்சி தேர்தலை எதிர் கொள்ளும் தமது கூட்டணியில் 80 வீதத்துக்கும் அதிகமான வேட்பாளர் கள் பொது அமைப்புக்களை சார்ந்தோரே எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புதன் கிழமை நடைபெற்ற பத்திரி கையாளர் சந்திப்பின் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர். எல்.எவ் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இடையே உள்;ராட்சி தேர்தலில் போட்டியிடுவது…

Read More

இலங்கையில் தென்னிலங்கை போர்க் குற்றவாளிகள் வீரர்களாகியுள்ளனர் என்பதே இன்றைய துயரநிலை என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இலங்கையில் தென்னிலங்கை போர்க் குற்றவாளிகள் வீரர்களாகியுள்ளனர் என்பதே இன்றைய துயரநிலை என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இலங்கையில் தென்னிலங்கை போர்க் குற்றவாளிகள், வீரர்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ் வாறு கூறியுள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பாக எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்ப டுத்தப்பட்டுள்ளனர்.இது தான் எமது தலைவர்களின் இன் றைய துயரநிலை என்றும் தலைவர்கள் இந்த விடயத்தை பல்வேறு காரணங்களுக்;காக மறந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் இந்த விடயத்தை என்றும் மறக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள் ளார்

Read More

யாழ்.மாநகர முதல்வராக அல்லது வடக்கு மாகாண முதல்வராவதற்கு சீ.வீ.கே. சிவஞானத்திற்கு சந்தர்ப்பம் கிட்டுமா?

யாழ்.மாநகர முதல்வராக அல்லது வடக்கு மாகாண முதல்வராவதற்கு சீ.வீ.கே. சிவஞானத்திற்கு சந்தர்ப்பம் கிட்டுமா?

உள்ளாட்சி தேர்தலில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளாட்சி தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் வேட்பாளர் களை தெரிவு செய்வதில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின் றன. இந்த நிலையில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி இருந்து வருகிறது. ஊடகவியலாளர் வித்தியாத ரனை யாழ். மாநகர முதல்வராக நிறுத்துவ தாகவும் அண்மையில் தகவல்கள் வெளி யாகி இருந்தது.இந்த நிலையில் அடுத்த வருடம் வடக்கு மாகாண சபை காலம் முடிவுறவுள்ள நிலை யில் வடக்கு மாகாண…

Read More

உள்ளூராட்சி தேர்தல் ஆசனப் பங்கீட்டில் தமிழரசுக்கட்சி ஏமாற்றிவிட்டதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றச்சாட்டுகின்றார்

உள்ளூராட்சி தேர்தல் ஆசனப் பங்கீட்டில் தமிழரசுக்கட்சி ஏமாற்றிவிட்டதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றச்சாட்டுகின்றார்

விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பாக தமக்கு வழங்கிய உறுதி மொழியை தமிழரசுக்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மீறிவிட்டது என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சாட்டியுள்ளார். உள்ட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து அண்மையில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். கலந்துரையாடலின் இறுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தமக்குள் இருந்த பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்ப ட்டுள்ளதாகவும் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்வதாகவும் அறிவித்திருந்தனர். அன்றைய கூட்டத்தில் ஆசனப்பங்கீடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது. குறிப்பாக அதில் வலி மேற்கு பிரதேச…

Read More

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 7 பேருக்கு தலா 56 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 7 பேருக்கு தலா 56 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை

தமிழீழ விடுதலைப் புலி கள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 7 பேருக்கு தலா 56 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன் நேற்று முன்தினம் புதன்கிழமை தீர்ப்பளித்தார். வில்பத்து தேசிய சரணா லயத்துக்குள் கிளைமோர் குண்டை வெடிக்கச் செய்து, மருத்துவர் உள்பட 7 பேரை கொலை செய்த குற்றத்தை ஏற்றுக் கொண்டனர் என்று கட்டளை வழங்கிய மேல் நீதிமன்றம் 7 பேருக்கும் இந்தத் தண்ட னையை வழங்கியது.மன்னார், சாவகச்சேரி, வவுனியா, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் இந்த தண்டனையை பெற்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிமியன் சந்திரயோகி, சிறில் இராசமணி, முத்து மரிக்கார்…

Read More

சம்பந்தன், மாவை, சுமந்திரன் அரசியலிலிருந்து விலகினால் விடிவு தமிழ் மக்களுக்கு ஏற்படும் என்கிறார் வி. ஆனந்தசங்கரி

சம்பந்தன், மாவை, சுமந்திரன் அரசியலிலிருந்து விலகினால் விடிவு தமிழ் மக்களுக்கு ஏற்படும் என்கிறார் வி. ஆனந்தசங்கரி

இரா.சம்பந்தன், மாவை சேனா திராசா மற்றும் சுமந்திரன் ஆகி யோர் அரசியலில் இருந்து விலகினால்தான் தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் உள்;ராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையி லான ஈ.பி,ஆர்.எல்.எவ் மற்றும் சிறு சிறு கட்சிகள் ஆனந்த சங்கரி தலைமையிலான தமி ழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் உள் ;ராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பதவி ஆசைகளும்…

Read More

ரயில் போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்ட பிறகும் தொடரும் வேலைநிறுத்தம்

ரயில் போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்ட பிறகும் தொடரும் வேலைநிறுத்தம்

ரயில் ஊழியர்களினால் கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக லட்சக்கணக்காக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக ரயில் இல்லாத சிரமத்தை எதிர்நோக்கியுள்ள பயணிகளின் நலன்கருதி, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ரயில் பணியாளர்கள் தொழிற்சங்கங்களுடன் நேற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார் எனினும், இந்த கலந்துரையாடல் தோல்வியடைந்த நிலையில், ரயில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதையடுத்து, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையொப்பமிட்டதாகவும் பிரதி…

Read More
1 14 15 16 17 18 25