மூன்றாவது முறை தேதி அறிவிப்பு : இலங்கை நாடாளுமன்ற தேர்தல்

மூன்றாவது முறை தேதி அறிவிப்பு : இலங்கை நாடாளுமன்ற தேர்தல்

இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு இன்று, புதன்கிழமை, வெளியிட்டது. இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி கலைத்திருந்தார். நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானதை அடுத்து, நாடாளுமன்றத்திற்கான தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இடம்பெற்ற நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கமும் அதனுடன் பரவ ஆரம்பித்திருந்தது. வேட்பு…

Read More

இந்தியாவின் மூக்கடியில் இலங்கையை முழுங்க பார்க்கிறதா சீனா ?

இந்தியாவின் மூக்கடியில் இலங்கையை முழுங்க பார்க்கிறதா சீனா ?

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள் சீனாவின் ஆதிக்கத்தை ஏற்படுத்த விடாது, இலங்கையில் சைவ மதத்தை பின் பற்றும் தமிழர்களின் முழு ஆதரவோடு இந்திய மத்திய அரசு, விரைவாக செயற்பட வேண்டும். இல்லாதுவிட்டால், இலங்கையில் பெரும்பான்மையாக இருக்கும் பெளத்த மதத்தை, சீனா தன் கைக்குள் வைத்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் தென் பிராந்திய கடல் எல்லையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது !! இந்தியாவில், பின் பற்றும் பெளத்தமும் மற்றும் இலங்கையில் பின் பற்றும் பெளத்தமும் ஒன்றல்ல. இலங்கையில் பின் பற்றும் பெளத்த கொள்கைகள் எல்லாமே, இந்திய – சீனப் போரில் சீனாவிற்கு இலங்கை உதவி செய்த பிறகு, சீனாவின் பெளத்த கொள்கைகளை இன்றுவரை 100% பின் பற்றி…

Read More

இறுதி தோட்டா வரை போராடியதற்காக பிரபாகரனை பெரிதும் மதிக்கிறேன் – சரத் பொன்சேகா

இறுதி தோட்டா வரை போராடியதற்காக பிரபாகரனை பெரிதும் மதிக்கிறேன் – சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் இலங்கை ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார். யுத்தம் நிறைவடையும் இறுதித் தோட்டா வரை பிரபாகரன் போராடியுள்ளதாக முன்னாள் ராணுவ தளபதி தெரிவிக்கின்றார். பிரபாகரன் பயங்கரவாதியாக இருந்தாலும், இறுதித் தோட்ட வரை அவர் போராடியதை பார்க்கும்போது, தான் ஒரு ராணுவ வீரனாக அவரை பெரிதும் மதிப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் தமக்கு சிறந்ததொரு எதிர்ப்பைக் காட்டியதால் தான் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் கைப்பற்றிய அனைத்து பகுதிகளையும் இலங்கை அரசாங்கப் படைகள் கைப்பற்றியதாக உலகிற்கு 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி…

Read More

வெட்டுக்கிளிகள் – இலங்கைக்குள் படையெடுப்பு

வெட்டுக்கிளிகள் – இலங்கைக்குள் படையெடுப்பு

இலங்கையின் வடமேல் மாகாணத்திற்கு வெட்டுக்கிளிகள் பிரவேசித்துள்ள நிலையில், அங்குள்ள விவசாயிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளனர். வடமேல் மாகாணத்தின் குருநாகல் பகுதியிலேயே இந்த வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்தார். இலங்கைக்குள் பிரவேசித்துள்ள இந்த வெட்டுக்கிளிகள் அனைத்து விதமான பயிர்கள் மற்றும் மரங்களின் இலைகளை உட்கொள்ளும் திறன் கொண்டவை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த வெட்டுக்கிளிகள் தொடர்பில் தமது திணைக்களத்திற்கு நேற்று முன்தினம் (30) முதன் முறையாக தகவல் கிடைத்திருந்ததாகவும், அது தொடர்பில் நேற்றைய தினம் (மே 31) முதல் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட ஆய்வுகளின் ஊடாக, இந்த வெட்டுக்கிளிகள் அனைத்து விதமான மரங்களிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக…

Read More

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகவும், பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஆறுமுகன் தொண்டைமான் .இவரது வயது 55. சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த போது தவறி விழுந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக தாலங்காமா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Read More

இந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை

இந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை

‘கொரோனா பாதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்கும் வகையில், 8,360 கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க வேண்டும்’ என, இந்தியாவுக்கு நம் அண்டை நாடான இலங்கை கோரிக்கை வைத்து உள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு பிரச்னைகளை சமாளிப்பது தொடர்பாக, இலங்கை அதிபர், கோத்தபய ராஜபக்சேவுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம், தொலைபேசியில் பேசினார். அப்போது, பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். ஊரடங்கால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சமாளிக்க தேவையான உதவிகளை செய்வதாக, மோடி அப்போது உறுதி அளித்தார். இந்த பேச்சின் போது, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ‘கரன்சி ஸ்வாப் எனப்படும் செலாவணி பரிமாற்ற முறையின் கீழ்,…

Read More

தபால் அதிகாரிகளின் ஏப்ரல் மாத ஊதியத்தை குறைக்க இலங்கை அரசு முடிவு: அதிகாரிகள் அதிருப்தி

தபால் அதிகாரிகளின் ஏப்ரல் மாத ஊதியத்தை குறைக்க இலங்கை அரசு முடிவு: அதிகாரிகள் அதிருப்தி

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தபால் அதிகாரிகளின் ஏப்ரல் மாத ஊதியத்தை குறைக்க இலங்கை அரசு முடிவு செய்தது. அரசின் இந்த முடிவுக்கு தபால் துறை அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்து இலங்கை தபால் சேவைகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதத்திற்கான ஊதிய குறைப்பு குறித்து தபால் அதிகாரிகள் மகிழ்ச்சியடையவில்லை என தெரிவித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில்,அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில், தபால் துறையினருக்கும் முக்கிய பங்கு இருந்ததாக தபால் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் கொரோனா நிதி பங்களிப்பாக ஏப்ரல் மாதத்திற்கான ஒரு நாள் ஊதியத்தை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளதையும் சுட்டிகாட்டியுள்ளது. போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எடுத்த தற்காலிக முடிவுகளின் காரணமாக, அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து குறைக்கப்பட்ட…

Read More

இலங்கையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று முதல் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்வு

இலங்கையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று முதல் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்வு

இலங்கையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று முதல் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள பின்னணியில், தொழில்சார் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை இன்று (மே 11) முதல் வழங்கவுள்ளதாக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.இதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்களை வெளியில் செல்ல அனுமதிக்க புதிய நடைமுறை ஒன்றை இன்று முதல் அமல்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையிலுள்ள இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டே வெளியில் செல்ல…

Read More

இலங்கை அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் கட் !!

இலங்கை அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் கட் !!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு மே மாத சம்பளத்தை அளித்து உதவும்படி இலங்கை அரசு, அரசு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷேவின் செயலாளர் பிபி ஜெயசுந்தரா அரசு ஊழியர்களுக்கு எழுதி உள்ள கடித்ததில் கூறப்பட்டு இருப்பதாவது: கொரோனா தொற்றால், சர்வதேச வர்த்தகம் ஏற்றுமதி,சுற்றுலா போன்றவற்றின் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருமானங்கள் தடைபட்டுள்ளது. இது பொருளாதாரத்தின் மீதான தற்காலிக அழுத்தமாக இருந்த போதிலும் வெளிநாட்டு கடன்களை செலுத்தியாக வேண்டும். எனவே இச் சூழலை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் தங்களின் மே மாத சம்பளத்தை முழுமையாகவோ, அல்லது பகுதியாகவோ கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு தந்து உதவ வேண்டும். இதன்…

Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்பு -பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ : சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு -பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ : சந்திப்பு

இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை கருத்துக்கூறினார். இலங்கை கொரோனா வைரஸ் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், மக்கள் எதிர்நோக்கியுள்ள வைரஸ் பிரச்சினைகள் மாத்திரமன்றி, தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் இனப் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடல்களை நடத்தியதாக அவர் கூறினார். குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வாழ்க்கை பிரச்சினைகள், தமிழர் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுதல், கொரோனா பிரச்சினைகள் நிறைவடையும் வரை தேர்தல் நடத்துவதற்கு அவசரப்படாதிருத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில்…

Read More
1 2 3 42