வல்வை விளையாட்டு கழக மோதலில் 7பேர் கைதாகி ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

வல்வை விளையாட்டு கழக மோதலில்  7பேர் கைதாகி ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

வல்வெட்டித்துறை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்க ளில் இருவர் பிணையில் விடுவிக்க ப்பட்டதுடன் மற்றைய ஐவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி நளினி சுபாகரன் உத்தரவிட்டார். கடந்த சனிக் கிழமை வல்வெட்டித்துறை நெடிய காடு மற்றும் ஊறணி பகுதியில் உள்ள இரண்டு விளையாட்டு கழ கங்களிற்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் 13 பேர் காயமடைந்தனர். இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட வல்வெட்டித்துறை பொலிஸார் ஏழு சந்தேக நபர்களை கைது செய்து நேற்று ஞாயிற் றுக்கிழமை பருத்தித்துறை நீதவானின் வாச ஸ்தலத்தில் முற்படுத்திய போது இருவரை பிணையில் விடுவித்த நீதவான் நால்வரை எதிர்வரும் 21-ம் திகதி வரையும்,…

Read More

கொக்குவிலில் இளைஞன் மீது வாளால் வெட்டி விட்டு தப்பியோடியவர்களை ஊர் இளைஞர்களால் மடக்கிப் பிடித்தனர்

கொக்குவிலில் இளைஞன் மீது வாளால் வெட்டி விட்டு தப்பியோடியவர்களை ஊர் இளைஞர்களால் மடக்கிப் பிடித்தனர்

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் சமூக விரோத கும்பலான வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த நபரொருவர் ஊரவர்களி டம் வசமாகமாட்டியுள்ளார். இதனை அடுத்து ஊர் இளைஞர்கள் குறித்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கொக்குவில் மேற்கு காந்திஜீ பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மதியம் மோட்டார் சைக்கிளில் சென்ற குழு ஒன்று அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை வாளால் வெட்டி தாக்கியுள்ளது. இதன் போது அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு குறித்த கும்பலை மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர். எனினும் குறித்த குழுவினர் தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து வாள்வெட்டு கும்பலை கிரா மத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து துரத்தி ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர். பிடிபட்ட இளைஞருக்கு…

Read More

கரணவாய் மத்தியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 20 பவுண் நகை கொள்ளை

கரணவாய் மத்தியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 20  பவுண் நகை கொள்ளை

பட்டப்பகல் வேளை வீடு புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருபது பவுண் நகைகளை திருடிச் சென்று ள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தியொன்று தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை பகல் பத்து மணிக்கும் பதினொரு மணி க்கும் இடைப்பட்ட நேரத்தில் கரணவாய் மத்தி பாடசாலை வீதியில் உள்ள இரத்தினமூர்த்தி சதானந்தமூர்த்தி என்பவரது வீட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவ ருவதாவது. வீட்டில் உள்ளவர்கள்வேலைக்கு சென்றிருந்த நிலையில் வயோதிப மூதாட்டி ஒருவர் வீட்டில் இருந்ததை சாதகமாக பயன்படுத்தி உள்நுழைந்த திருடர்கள் நகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு நேரடியாகச் சென்று அங்கிருந்த காப்பு, மோதிரம், சங்கிலி, நெக்கிளஸ் உள்ளிட்ட பதினாறு பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளதாக…

Read More

விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் மரணத்தைத் தழுவினார்

விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட  முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் மரணத்தைத் தழுவினார்

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை துணைப்பொறுப்பா ளர் ஐங்கரன் கடந்த திங்கள் இரவு 11 மணியளவில் மாரடைப் பால் உயிரிழந்துள்ளார். மூதூர் கிழக்கில் பல நூற்றுக்கணக்கான வர்கள் அரச உத்தியோகத்தில் இணைவதற்கும் கல்வியில் அக்கறை செலுத்தவும் காரணமானவராகவும், மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடை முறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் இவர் விளங்கினார். இதேவேளை, ஐங்கரன் ஒரு அரசியல் வாதியின் சேவைக்கு மேல் சென்று தான் நேசித்த மக்களுக்காக சேவை ஆற்றிய ஒரு வர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தீவிரமாக இருந்தபோது இரவும் பகலும் மக்களின் பிரச்சனைகளைக்கு செவிமடுத்து சிறந்த செயற்பாட்டாளராக விளங்கியவர் ஐங்கரன் என்றும் தாக்குதல்ளை விடுதலைப்புலிகள் மேற்கொள்கின்றபோது சீருடை தரித்து ஆயுதம்…

Read More

இந்துக் கல்லூரியி பழைய மாணவர்கள் சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவு விழா

இந்துக் கல்லூரியி பழைய மாணவர்கள் சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவு விழா

யாழ்ப்பாணம்- காரைநகர் இந்துக் கல்லூரியி பழைய மாணவர்கள் சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கனடா- ஸ்காபுறோ நகரில் உள்ள ஶ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாண்டின் பிரதம விருந்தினராக மருத்துவர் இராமலிங்கம் செல்வராஜாவும் அவரது பாரியார் மருத்துவர் சறோ செல்வராஜாவும், சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற இலங்கையின் பிரதி நில அளவையாளர் நாயகம் திரு முருகேசு வேலாயுதபிள்ளை அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள் விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக தமிழ்நாடு விஜேய் தெலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் புகழ் பாடகர் ஸ்ரவன் சிறந்த தமிழிசைப் பாடல்களையும் பக்திப் பாடல்களையும் வழங்கினார். அவருக்கு பக்கவாத்தியக் கஞைர்களாக திருவாளர் ஜெயதேவன் நாயர் ( வயலின்)…

Read More

இலங்கையில் மழை வெள்ளம்: 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு, மீட்புப் பணி தீவிரம்

இலங்கையில் மழை வெள்ளம்: 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு, மீட்புப் பணி தீவிரம்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்த மழை இன்று சற்று குறைந்திருந்தாலும் அடுத்த 24 மணி நேரத்தில் 150 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என இன்று மாலை வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. 17 மாவட்டங்களில் இந்த சீரற்ற காலநிலை நிலவுகிறது. மழை வெள்ளத்தினால் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 1000 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன. இவற்றில் 20 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 6,000 திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 80 திற்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு,…

Read More

ஞானம் இதழ் ஆசிரியர் திரு.தி.ஞானசேகரன் அவர்கள் இலக்கியப் பயணம் மேற்கொண்டு கனடா வருகை தந்தபோது அவரை உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் எழுத்தாளர் குரு அரவிந்தன்

ஞானம் இதழ் ஆசிரியர் திரு.தி.ஞானசேகரன் அவர்கள் இலக்கியப் பயணம் மேற்கொண்டு கனடா வருகை தந்தபோது அவரை உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் எழுத்தாளர் குரு அரவிந்தன்

(இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இதழ் ஆசிரியர் திரு.தி.ஞானசேகரன் அவர்கள் இலக்கியப் பயணம் மேற்கொண்டு கனடா வருகை தந்தபோது அவரை உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் எழுத்தாளர் குரு அரவிந்தன்.) 1. வணக்கம். நீங்கள் தம்பதிகளாக கனடா நாட்டுக்கு வருகை தந்திருக்கிறீர்கள். கனடிய இலக்கிய அன்பர்கள் சார்பில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். எம்மவர்கள் புலம்பெயர்ந்த வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கிறீர்களா? பதில் : நன்றிஇ மிக்க மகிழ்ச்சி. எம்மவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளான டென்மார்க், ஜேர்மனி, சுவற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறோம். 2. அந்த நாடுகளில் எம்மவர்கள் ஆற்றும் தமிழ் இலக்கிய சேவைகளோடு எம்மவர்கள் ஆற்றும் சேவையை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? பதில்: எம்மவர்கள் புலம்பெயர்ந்து…

Read More

127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது – விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது – விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளுடன் நேரடி கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 131 பேரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் 43 பேரிடம் ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிகராலயத்தினால் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் கடந்த முதலாம் தேதி இலங்கையர்கள் என நம்பப்படும்…

Read More

யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியைத் தொடரவேண்டும் என்ற பெற்றோரின் விருப்பத்தை ஏற்காத கிளிநொச்சி மாணவன் தற்கொலை

யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியைத் தொடரவேண்டும் என்ற பெற்றோரின் விருப்பத்தை ஏற்காத கிளிநொச்சி மாணவன் தற்கொலை

யாழ்ப்பாண பாடசாலையில் கல்வியை தொடர பெற்றோர் வற்புறுத்திய காரணத்தினால் அதற்கு மறுப்பு தெரிவித்து மாணவன் ஒரு வன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தனது உயிரை மாய்த்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியைச் சேர்ந்ததி யாகேஸ்வரன் நிலாபவன் (வயது16) என்ற மாணவனே மேற்படி தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த மாணவன் கடந்த வருடம் க.பொ.தசாதாரண தர பரீட்சையில் தோற்றி இருந்தார். அண்மையில் வெளியாகிய பரீட்சை பெறு பேற்றில் சிறந்த பெறு பேறுகளையும் பெற்று சித்தியடைந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக நீர் வேலியில் உள்ளதனது பெரியம்மாவின் வீட்டில் தங்கி நின்று யாழ் நகர்ப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர…

Read More

சுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்பு

சுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்பு

சுவிஸ் வாழ் தமிழர்களுடன் தமிழகத் தலைவர்கள் ஜெனீவாவில் சந்திப்அனைத்துலக தமிழர் பேரவையின் விசேட ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்துரையாடலில் ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்க சுவிஸ் சென்றுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் அரிபரந்தாமன்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க துணைத் தலைவரும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருஷஸ்ணகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் பாரிவேந்தன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு தமது கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றனர்.இக்கலந்துரையாடலில் சுவிஸ் வாழ் தமிழர்கள்…

Read More
1 3 4 5 6 7 10