தமிழ்மொழியின் உரிமைக்காக தனித்துநின்று போராடிய கோடீஸ்வரன்

தமிழ்மொழியின்  உரிமைக்காக தனித்துநின்று போராடிய கோடீஸ்வரன்

தமிழ் மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில் தடம் பதித்த வரலாற்று நாயகன் செல்லையா கோடீஸ்வரன் தனது 85வது வயதில் அமரத்துவம் அடைந்து விட்டார். தென்னிலங்கையில் உள்ள வத்தேகமவில் பிறந்த அவர் யாழ். மீசாலையைப் பூர்வீகமாகக் கொண்டவர். அரச சேவையில் எழுதுவினைஞராக இணைந்து கொண்ட அவர், தமிழ்மொழி மீதும், தமிழ் சமூகம் மீதும் தீவிர பற்றுக் கொண்டவராக விளங்கினார். தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டு, ‘அரச சேவையிலிருந்த தமிழ் அலுவலர்கள் சிங்கள மொழியில் தேர்ச்சியடைய வேண்டும். தவறினால் படி, பதவி உயர்வுகள் மறுக்கப்படுவதுடன் சேவையிலிருந்து எதுவித இழப்பீடுகளும் இன்றி நீக்கப்படுவார்கள்’ என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. அப்போது கேகாலை கச்சேரியில் பணிபுரிந்து கொண்டிருந்த கோடீஸ்வரன் குறித்த விதிக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார்….

Read More

இலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு

இலங்கை மக்கள் வெளிநாடுகளில் குடியேறுவது அதிகரிப்பு

இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்த பின்னர், வௌிநாடுகளில் குடிபெயர்வது படிப்படியாக முடிவுக்கு வந்த நிலையில் , தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. போர் சூழ்நிலை காணப்படாத போதிலும், இந்த வருடத்தில் இலங்கையிலிருந்து வௌியேறி வௌிநாடுகளில் குடிபெயர முற்பட்ட 80-க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸூக்கு சொந்தமான ரீயூனியன் தீவை சென்றடைந்த 64 இலங்கையர்கள், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாடுகடத்தப்பட்ட 64 பேரும் இன்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு – கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இலங்கை குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள இந்த குடியேற்றவாசிகளை தேசிய…

Read More

வடக்கு மாகாணத்தில் உள்ள மொழிகள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய ஆளுநரால் குழுவொன்று நியமனம்

வடக்கு மாகாணத்தில் உள்ள  மொழிகள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய ஆளுநரால்  குழுவொன்று நியமனம்

வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரொருவரின் தலைமையில் ஐவரடங்கிய விசேட குழுவொன்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் சகல அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மும்மொழிக் மொழிக்கொள்கையினை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டுமென்று வடக்கு மாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக அந்த நடவடிக்கைகள் குறிப்பிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை அந்த செயற்பாடுகளுக்கு உதவும் வகையிலேயே இந்த மொழிக் குழு ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்…

Read More

தேயிலை உற்பத்தி அழிவு கண்டால் இலங்கையின் பொருளாதாரமும் அழிந்துவிடும் என்கிறார் முத்தையா முரளிதரன்

தேயிலை உற்பத்தி அழிவு கண்டால் இலங்கையின் பொருளாதாரமும் அழிந்துவிடும் என்கிறார் முத்தையா முரளிதரன்

பெருந்தோட்ட பயிர் அழிவு கண்டால் நாட்டின் பொருளாதாரம் அழிந்துவிடும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் .தெரிவித்துள்ளார்.அத்துடன், பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் பல சிக்கல் நிலையுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரை யாற்றும் போதே அவர் இவ் வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்களின் முன் னேற்றத்திற்காக பொது வான பணிகளை முன்னெடுக்க கடந்த இரண்டாயிரமாம் ஆண்டில் அமைப்பு ஒன்றை ஆரம்பித்து பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.இதுவரை காலமும் எத்தனையோ பொது அமைப்புகள் மலையக மக்களுக்காக சேவையாற்ற முன்வந்திருந்த போதிலும் அவர்கள் வழங்கும் உதவிகள் மக்களுக்கு…

Read More

முல்லைத்தீவு மாந்தைப் பகுதியில் 60 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன

முல்லைத்தீவு மாந்தைப் பகுதியில் 60 ஏக்கர்  காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட மூன்று முறிப்பு பகுதியில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் உபயோகிகப்பட்டு வந்த மக்களின் 59.8 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆவது சிங்க படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் இந்திக்க விக்கிரமசிங்க, இந்த காணிகளுக்கான பத்திரங்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனிடம் நேரில் கையளித்துள்ளார். இந்த காணி ஆவணங்களை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்து அவர்கள் ஊடாக உரிய முறையில் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தக் காணிகள் கையளிப்பு தொடர்பாக கருத்துக்களை…

Read More

யாழ்ப்பாணத்தில் 271 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில்  271 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்குக் காய்ச்சலின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தகவல்கள் தெரிவித்துள்ளன. மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதற்குரிய சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாத காலப்பகுதியில் 271 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 60 பேர் வரையில் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்வு கூறப்படுவதால் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வ்வொரு சுகாதார வைத்திய…

Read More

யாழ் குடாநாட்டில் இடம்பெறும் விபத்துகளின் தாக்கம் அதிகரிக்கின்றது

யாழ் குடாநாட்டில் இடம்பெறும் விபத்துகளின் தாக்கம் அதிகரிக்கின்றது

யாழ் குடாநாட்டில் அண்மைக் காலங்களில் இடம்பெறும் விபத்துக்களின் தாக்கங்கள் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் மனங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். அண்மையில் அங்கு இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் படுகாய மடைந்தகுடும்பஸ்தர்கள் இருவர் சிகி;ச்சை பலனின்றி யாழ் போதனாவைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். வல்வட்டித்துறையை சேர்ந்த மூன்று பி;ள்ளைகளின் தந்தையான கதிரவேற்பிள்ளை அரியரட்ணம் (வயது 68) என்பவர் கடந்த 15 ஆம் திகதி நண்பகல் யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை வீதி வழியாக வீடுநோக்கி பயணித்துள்ளார். அப்போது ஆவரங்கால் பகுதியில் குறித்த நபருக்கு முன்னால் சென்ற வாகனத்தின் கதவு கழன்று குறித்த நபரின் மோட்டார் சைக்கிளில் மோதிய தில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில்…

Read More

பொன்னாலைப் பாலத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில ஒருவர் கொல்லப்பட்டார்

பொன்னாலைப் பாலத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில ஒருவர் கொல்லப்பட்டார்

பொன்னாலைப் பாலத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பன இந்த விபத்தில் சிக்கிக்கொண்டன. காரைநகரில் உள்ள ஆலயம் ஒன்றில் பூசை செய்துவிட்டு பாலத்தால் மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த பூசகர் ஒருவர் கடற்றொழிலுக்குச் சென்றுவிட்டு துவிச்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்தவரை முந்திச்செல்ல முற்பட்டார். இதன்போது துவிச்சக்கரவண்டியுடன் விபத்துக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்துடனும் அவரது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. பூசகர் வீதியில் விழுந்து மோட்டார் சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்டார். அவரது தலைக்கவசம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்திருந்தன. துவிச்சக்கரவண்டியில் சென்றவர் கடலுக்குள் பாய்ந்த நிலையில் அவரும் காயமடைந்தார்….

Read More

துணுக்காயில் தீக்காயங்களுக்கு உள்ளான பெண் உயிரிழப்பு

துணுக்காயில் தீக்காயங்களுக்கு உள்ளான பெண் உயிரிழப்பு

தீ காயங்களுக்குள்ளான இளம் குடும்ப பெண் ஒருவர் மூன்று நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் துணுக்காய் பகுதியில் இடம்பெற்றுள்ளுத. துணுக்காய் தேராங்கண்டல் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான வி.ராதிகா (வயது 19) என்ற இளம் குடும்பப் பெண்ணே மேற்படி உயிரிழந்தவராவார். இவர் கடந்த 19 ஆம் திகதி வேலைக்கு போக முன்னர் விறகு அடுப்பில் சமைத்துள்ளார். அருகில் இருந்த மண்ணெண்ணெய் தவறுதலாக நிலத்திலும் விறகிலும் பெண் ணின் ஆடையிலும் சிந்தியுள்ளது. அப்போது உடனடியாக குறித்த பெண் மீது தீ பற்றியுள்ளது. பெண்ணின் கூக்குரல் கேட்டு குடும் பத்தினர் வந்து தீயை அணைத்து மல்லாவி வைத்தியசாலையில் சேர்த்தனர். மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி…

Read More

பாராளுமன்றின் பாரம்பரியத்திற்கு ஏற்ப செயற்படுவது எமது தவிர்க்க முடியாத கடமை என்கிறார் சபாநாயகர் கரு

பாராளுமன்றின் பாரம்பரியத்திற்கு ஏற்ப செயற்படுவது எமது தவிர்க்க முடியாத கடமை என்கிறார் சபாநாயகர் கரு

பாராளுமன்றின் பாரம்பரியத்திற்கு ஏற்ப பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தினை செவிமடுப்பது சபாநாயக ரி;ன் தவிர்க்க முடியாத கடமை எனவும், இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை உரிய முறை யில் நிரூபிக்க முடியாத அரசியல் கட்சிகள், செய்தியாளர் மாநாடுகளி லும் ஆர்ப்பாட்டங்களிலும் சபாநா யகரிற்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கு கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எழு த்தின் மூலம் சவால் விடுத்துள்ளனர் என சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இதன்…

Read More
1 2 3 4 10