நினைவால் என் பேரெழுதி……. என்னும் தொடர் விரைவில் உங்கள் கனடா உதயன் பத்திரிகையில்.வாரா வாரம்

நினைவால் என் பேரெழுதி……. என்னும் தொடர் விரைவில் உங்கள் கனடா உதயன் பத்திரிகையில்.வாரா வாரம்

லண்டனில் இருந்து இளைய அப்துல்லாஹ் எழுதும் சுயநினைவுகள் தொடர். பல தொழில்கள் வாழ்வின் பல சூழல்கள் கூட யாருமே தொடராத தனிப்பயணம் . கடைசியில் கென்டயினரில் லண்டன் வந்தது. என்று பண்பட்ட ஊடகவியலாளர் இளைய அப்துல்லாஹ் . வானொலி தொலைக்காட்சிகளில் எம்.என்.எம்.அனஸ் என்று அறியப்பட்ட இவரின் கதை வித்தியாசமானது. கொஞ்சநேரம் அவரோடு உரையாடினால் அவரின் உற்சாகம் எங்களை தொற்றிக்கொள்ளும். இளைய அப்துல்லாஹ் எழுதும் சுயகதை வெகு விரைவில் உங்கள் உதயன் பத்திரிகையில்……….. பிரதம ஆசிரியர்

Read More

ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் எதிரொலி: வங்கிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் எதிரொலி: வங்கிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் எதிரொலியாக வங்கிகள் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கணினி தொழில்நுட்ப வரலாற் றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரும் சைபர் தாக்குதலை ரேன்சம்வேர் என்ற வைரஸ் கடந்த இருநாட்களில் நிகழ்த்தியுள்ளது. 48 மணி நேரத்தில் 150 நாடு களுக்கு பரவி சுமார் 2 லட்சம் கணினிகளைச் செயலிழக்கச் செய் துள்ளது. இந்த வைரஸ் கணினியில் நுழைந்த அடுத்த நொடி கணினியில் உள்ள கோப்பு கள் அத்தனையும் ‘என்க்ரிப்ஷன்’ என்ற பெயரில் லாக் செய்து 300 டாலர் தந்தால் மட்டுமே பைல்களை விடுவிப்பதாக மிரட்டல் விடுத்து வருகிறது. இந்நிலையில், வங்கிகளில் இந்த வைரஸ் தாக்குதல் நடத்தி யிருப்பதால் கணினி வழியிலான பணப்…

Read More

கலாநிதி குமரகுருபரன் அகவை ஐம்பத்தொன்பதை நிறைவு செய்து 59 பிறந்த தினத்தை இன்று காண்கின்றார்

கலாநிதி குமரகுருபரன் அகவை ஐம்பத்தொன்பதை நிறைவு செய்து 59 பிறந்த தினத்தை இன்று காண்கின்றார்

கலாநிதி குமரகுருபரன் அகவை ஐம்பத்தொன்பதை நிறைவு செய்து 59 பிறந்த தினத்தை இன்று காண்கின்றார் ,1979 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நிறைவேற்று குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபை கள் அரசியற்ற தீர்வாகாது என் வலியுறுத்தி தமிழ் காங்கிரஸ் வேட்பாளராக தனது தலைவர் குமார் பொன்னம்பலத்தோடு காத்திரமான பேச்சாளராக அரசியற் களமிறங்கியவர் . பல்வேறு சர்வகடசி மாநாடுகளிலும் கலந்து கொண்டவர் . இறுதியாக இடம்பெற்ற அரசியல் தீர்வுக்கான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் (APRC) ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளராக ஜனநாயக மக்கள் முன்னணி யின் சார்பாக தொடர்ச்சியான பங்களிப்பை அறிக்கை ஆவணமாக பூரணமாகும் வரை…

Read More

டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் வரத லட்சுமி கதிர்காமத்தம்பி கொழும்பில் காலமானார்.

டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் வரத லட்சுமி கதிர்காமத்தம்பி கொழும்பில் காலமானார்.

கனடாவில் “கதிர்” என்ற பெயரால் பலராலும் அறியபபட்ட டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் 26ம் திகதி புதன்கிழமையன்று கொழும்பில் காலமானார். தனது 95வது வயதில் உயிர் நீத்துள்ள தாயாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்துள்ள டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் குடும்பத்தினருக்கு கனடா உதயன் நிறுவனம் தனதுஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவிக்கின்றது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமையன்றுகொழும்பில் நடைபெற்றன. அனுதாபங்களைத் தெரிவிக்கவிரும்புவோர் 416 299 4492 என்னும் இலக்கத்தைஅழைக்கவும்

Read More

மொன்றியால் “அகரம்”தமிழ் வானொலிநிலையஅதிபர் ரஞ்சினியின் தந்தையார் இராமலிங்கம் பாலசுப்பிரமணியம் காலமானார்

மொன்றியால் “அகரம்”தமிழ் வானொலிநிலையஅதிபர் ரஞ்சினியின் தந்தையார்  இராமலிங்கம் பாலசுப்பிரமணியம் காலமானார்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியையும் பின்னர்  கனடா மொன்றியாலையும் வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று சிவனடிசேர்ந்தார். அன்னார்,காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மாதம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீமான் நாகலிங்கம் செல்லாச்சிதம்பதிகளின் அன்பு மருமகனும், ரஞ்சினி (அகரம் தமிழ் வானொலி- மொன்றியால்), அவர்களின் அன்புத் தந்தையாரும் ரஞ்சன்(அகரம் தமிழ் வானொலி-மொன்றியால்),அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் மறைவையொட்டிகனடாஉதயன் நிறுவனம் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. மேலதிக விபரங்களுக்கு :- ரஞ்சன், ரஞ்சினி14388766527

Read More

முதல் முள்ளம் தண்டுள்ள பத்திரிகையென்ற பெயரை கனடா உதயன் தக்க வைத்துள்ளது

முதல் முள்ளம் தண்டுள்ள பத்திரிகையென்ற பெயரை கனடா உதயன் தக்க வைத்துள்ளது

முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு, கனடாவில் தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்களின் விடையமாக பதிவு செய்திருக்கும் முதல் முள்ளம் தண்டுள்ள பத்திரிகையென்ற பெயரை கனடா உதயன் தக்க வைத்துள்ளது. ஆனாலும், இவ்வளவு காலமும் அமைதியாக இருந்ததன் பின்னனியையும் பதிவு செய்யவும். இப்படி எல்லா தமிழ் ஊடகங்களும் தெளிவாக உண்மைகளை வெளிக் கொண்டு வந்தால் மட்டும் தான் மக்களின் சொத்துக்களை பதுக்கியவர்களிடம் இருந்து ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கொடுக்க முடியும்.  பல தடவைகள் இந்த விடயத்தை கனடாட உதயன் பதிவு செய்திருக்கின்றது. குறிப்பிப்பாக பத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய தலையங்கள். அவைகளில் பல எமது ஆசிரிய தலையங்களின் தொகுப்பாக வெளிவந்த “இதுவரை” என்னும் நூலில் அடங்கியுள்ளன. உதாரணமாக இந்த நிதி அபகரிப்பு தொடர்பான…

Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உப-வேந்தராக பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணஜா நியமனம் பெற்றுள்ளார்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உப-வேந்தராக பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணஜா நியமனம் பெற்றுள்ளார்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உப-வேந்தராக பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணஜா நியமனம் பெற்றுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தி;ன் பட்டதாரியான இவர் அங்கு சிரேஸ்ட கணித விரிவுரையாளராகவும் விஞ்ஞான பீடாதிபதியாகவும் பணியாற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உடுப்பிட்டி அமெரிக்க மின் கல்லூரி பழைய மாணவரான இவர் முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உப-வேந்தரும் உடுப்பிட்டி அமெரிக்க மின் கல்லூரியின் பழைய மாணவர் தாய்ச் சங்கத்தின் தலைவராக இருந்தவருமான பேராசிரியர் துரைராஜா காலத்திலிருந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக தாய்ச்சங்கத்தில் பல பதவிகளை வகித்து வந்தவர் ஆவார். பல கல்விமான்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட இந்த உப- வேந்தர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவரும் தகுதியானவருமான போராசிரியர் எஸ். சற்குணராஜா நியமனம் பெற்றுள்ளமை, உலகெங்கும்…

Read More

எழுத்தாளர் நவம் மட்டக்களப்பில் காலமானார்

எழுத்தாளர் நவம் மட்டக்களப்பில் காலமானார்

சீனித்தம்பி ஆறுமுகம் என்னும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளர்  நவம் அவர்கள் 2017-04-12 அன்று   மட்டக்களப்பில் காலமானார். எமது கனடா உதயன் பத்திரிகையில் தொடர்ச்சியாக பல கட்டரைகளை எழுதி வந்த இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் லீலாவதி அவர்களின் அன்புக்கணவரும், இந்துமதி (அமெரிக்கா), முகுந்தன், (அமெரிக்கா), அரவிந்தன் (ஜேர்மனி), கீதாஞ்சலி,( கனடா), நளாயினி,( கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தர்மகீர்த்தி (அமெரிக்கா), கலைவாணி (அமெரிக்கா), கலைச்செல்வி (ஜேர்மனி) கோணேசமூர்த்தி (கனடா), சதாகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்ஃ. இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று  மட்டக்களப்பில் இடம்பெறும். தொடர்புகளுக்கு:- 01194766983738

Read More

இலங்கையின் கலாச்சாரத்தலைநகர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு

இலங்கையின் கலாச்சாரத்தலைநகர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைமையகம் அறிவிப்பு  யாழ்நகர் விழாக்கோலம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் ஒன்றியங்கள் கிளைகள் ஆகியவற்றின் பேராதரவுடன் இலங்கைக்கிளை நடாத்தும் 13வது உலக மாநாடும், இலங்கையின் கலாச்சாரத்தலைநகர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைமையகம் அறிவிப்பு யாழ்நகர் விழாக்கோலம் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் ஒன்றியங்கள் கிளைகள் ஆகியவற்றின் பேராதரவுடன் இலங்கைக்கிளை நடாத்தும் 13வது உலக மாநாடும் அனைத்துலக பேரவைக்கூட்டமும் 2017 ஆவணி மாதம் 5ம் 6ம் நாள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் (2048 திருவள்ளுவராண்டு) இலங்கையின் கலாச்சாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் இடம் பெற உள்ளது. உலகத்…

Read More

சென்னையில் பிரதமர் வி.உருத்திரமாரன் பத்திரிகையாளர் சந்திப்பு : திங்களன்று இடம்பெறவுள்ளது !

சென்னையில் பிரதமர் வி.உருத்திரமாரன் பத்திரிகையாளர் சந்திப்பு : திங்களன்று இடம்பெறவுள்ளது !

Chennai Press Event: Sri Lanka’s War Crime and UN Inquiry – TGTE நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெற்ற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 18-03-2017 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு சென்னை, சேப்பாகத்தில் உள்ள ரிப்போட்டர்ஸ் கில்டில் (Reporters Guild) – சென்னை பிரஸ் கிளப் அருகில்) இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரின் சிறிலங்கா விவகாரம் தொடர்பிலும், ஈழத் தமிழ்மக்களின் நீதிக்கும் உரிமைக்குமான போராட்டத்தின் சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருப்பதோடு, கேள்விகளுக்கும் பதில்களை…

Read More
1 8 9 10 11