இரட்டை இலையை மீட்போம்: புதிய அமைப்பைத் தொடங்கி தீபா சூளுரை

இரட்டை இலையை மீட்போம்: புதிய அமைப்பைத் தொடங்கி தீபா சூளுரை

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கினார். இரட்டை இலையை மீட்போம் என்று தீபா சூளுரைத்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடுவேன். எந்த நிலையிலும் பின்வாங்கமாட்டேன் என்றும் தீபா கூறியுள்ளார். சென்னை தி.நகரில் இன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கி வைத்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேசியதாவது: ”ஜெயலலிதாவின் பணிகளை அரசியல் வாரிசாகத் தொடர்வேன். ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அரசியல் பயண முடிவை அறிவிப்பதில் பெருமையாக உள்ளது. இரட்டை இலையை மீட்பதே எங்கள் குறிக்கோள். தற்போதைய அரசியல் சூழலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. ஒரு துரோகக் கூட்டத்தின் பிடியில் தமிழக மக்கள் உள்ளனர்….

Read More

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் நடக்க வாய்ப்பு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் நடக்க வாய்ப்பு: பிரேமலதா விஜயகாந்த் கருத்து

தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது என தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 6 மாதமாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் நிலையான முதல்வரோ, ஆளுநரோ, உள்ளாட்சிப் பிரதிநிதிகளோ இல்லை. சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி வருகின்றன. ஆட்சியைக் கவிழ்க்க தினமும் ஒரு நாடகம் நடத்தப்படுகிறது. தற்போது நடக்கும் நிகழ்வுகள் மூலம் நல்ல தலைவர் யார் என்பதை மக்கள் உணர்ந்துகொள்வார்கள். மக்கள் கருத்தைக் கேட்டு, ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய…

Read More

பெண்களுக்கு 50% மானியத்தில் ஸ்கூட்டர், 500 டாஸ்மாக் கடை மூடல்: முதல்வர் பழனிசாமியின் முதல் 5 நடவடிக்கைகள்

பெண்களுக்கு 50% மானியத்தில் ஸ்கூட்டர், 500 டாஸ்மாக் கடை மூடல்: முதல்வர் பழனிசாமியின் முதல் 5 நடவடிக்கைகள்

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி (திங்கள்கிழமை) பகல் 12.30 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் அவரது நாற்காலியில் அமர்ந்து பணிகளைத் துவக்கினார் பழனிசாமி. அவரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர் 500 டாஸ்மாக் கடைகள் மூடல், அம்மா இரு சக்கர வாகனம் திட்டம், மகப்பேறு நிதியுதவி உயர்வு, மீனவர்களுக்கு வீட்டு வசதி திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு ஆகிய 5 அறிவிப்புகள் கொண்ட கோப்புகளில் கையெழுத்திட்டார். தேர்தல் வாக்குறுதியின்படி இத்திட்டங்களை நிறைவேற்றுவதாக முதல்வர் தெரிவித்தார். இந்த 5 அறிவிப்புகள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள…

Read More

காரைக்கால், நெடுவாசலில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு: புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

காரைக்கால், நெடுவாசலில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு: புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

காரைக்கால் மற்றும் நெடுவாசலில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கார்பன் வாயு) எடுக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலைத் தொடர்ந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காரைக்கால் பிராந்தியத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுப்பது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு அறிவிப்பு வரவில்லை. கடிதமும் வரவில்லை. இது மத்திய…

Read More

முதல்வருடன் 4 மூத்த அமைச்சர்கள்: தமிழக அரசை வழிநடத்தும் 5 பேர் குழு

முதல்வருடன் 4 மூத்த அமைச்சர்கள்: தமிழக அரசை வழிநடத்தும் 5 பேர் குழு

தமிழக அரசின் அனைத்து முடிவுகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டை யன் உள்ளிட்ட 4 அமைச்சர் களும் இணைந்து எடுத்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கிய தைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். கடந்த 18-ம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் அவர் தனது அரசின் பெரும் பான்மையை நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி தலைமைச் செயலகம் வந்த அவர், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய அறையில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது 500 மதுக்கடைகள் மூடல், இரு சக்கர வாகனம் வாங்க பெண்களுக்கு ரூ….

Read More

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது: டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது: டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது

டெல்லியில் நடந்த விழாவில் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு தமிழ் மொழிக்கான 2016-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. சந்தியா பதிப்பகம் வெளியிட்ட ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் பிறந்த சி.கல்யாணசுந்தரம் எனும் இயற்பெயர் கொண்டவர் வண்ணதாசன். இவர், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய சிறுகதைகள் இதுவரை 12 நூல்களாகவும், கவிதைகள் 5 நூல்களாகவும் வெளிவந்துள்ளன. கலைமாமணி, இலக்கிய சிந்தனை, விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றை தனது படைப்புகளுக்காக பெற்றுள்ளார். இவரது 15 சிறுகதைகள் அடங்கிய ‘ஒரு சிறு இசை’ என்ற நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. இந்த சிறுகதை…

Read More

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட தீபா திடீர் தயக்கம்

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட தீபா திடீர் தயக்கம்

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா திடீர் தயக்கம் காட்டுகிறார்.  ஆர்.கே.நகர் நிகழ்ச்சியை புறக்கணிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறார். சசிகலா தலைமையில் இன்னொரு அணி உள்ளது. முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மீது சரமாரியாக  குற்றச்சாட்டுகளை  கூறியதுடன் மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும், பரபரப்பான புகாரை தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து புதிய முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். அ.தி.மு.க.வில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த போது ஓ.பன்னீர் செல்வத்தை, தீபா ஜெயலலிதா சமாதியில் வைத்து…

Read More

அரசு வீட்டை காலி செய்ய வேண்டி உள்ளதால் சென்னையில் புது வீடு தேடும் ஓ.பன்னீர்செல்வம்

அரசு வீட்டை காலி செய்ய வேண்டி உள்ளதால் சென்னையில் புது வீடு தேடும் ஓ.பன்னீர்செல்வம்

புதிய முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதல்–அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் இழந்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தான் குடியிருந்து வரும் அரசு பங்களா வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் நுழைவுவாயில் முன்பு இருந்த அறிவிப்பு பலகை கடந்த 2 நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டுவிட்டது. இதன் மூலம் உடனடியாக அரசின் பங்களா வீட்டை காலி செய்துவிட்டு விரைவில் புதிய வீட்டில் குடியேற பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளனர். தனக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து செல்வதால் அதற்கு ஏற்றார் போல சென்னையிலேயே வாடகை வீட்டை அவர் தேடி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக பதவி வகித்த நேரத்திலும், அவருடைய இல்லத்தின் நுழைவுவாயிலில்…

Read More

கூவத்தூரில் இருந்த எம்எல்ஏ-க்களின் லீலைகள் விரைவில் வெளியாகும்- ராசிபுரம் எம்.பி

கூவத்தூரில் இருந்த எம்எல்ஏ-க்களின் லீலைகள் விரைவில் வெளியாகும்- ராசிபுரம் எம்.பி

கூவத்தூரில் இருந்த எம்எல்ஏ-க்களின் லீலைகள் விரைவில் வெளியாகும் அவர்கள் என்னென்ன செய்தார்கள்? என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என ராசிபுரம் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் கூறினார். முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த பின்னர் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. முதன் முதலாக ராசிபுரம்  வந்தார். அவருக்கு ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர். பின்னர் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அங்கு அவர் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:- முதன் முதலாக என்னை வெற்றி பெற செய்து அரசியலுக்கு அறிமுகப் படுத்திய ராசிபுரம் தொகுதி மக்களுக்கும், நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி…

Read More

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதை கர்நாடக அரசு எதிர்க்கும்.. ஆச்சார்யா அதிரடி

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதை கர்நாடக அரசு எதிர்க்கும்.. ஆச்சார்யா அதிரடி

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றினால் கர்நாடக அரச சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்வேம் என அம்மாநில வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். பெங்களூரூ: சசிகலாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டதால் ஜாமீன் என்ற பேச்சுக்கே இடமில்லை கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற உத்தரவிட்டால் கர்நாடக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில்ல மனுத்தாக்கல் செய்வோம் என்றும் ஆச்சார்யா கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அப்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய 4…

Read More
1 96 97 98 99 100 110