சசிகலா முதல்வர் பதவிக்கு தகுதியானவரா? மக்களை தூண்டிவிடும் ப.சிதம்பரம்

சசிகலா முதல்வர் பதவிக்கு தகுதியானவரா? மக்களை தூண்டிவிடும் ப.சிதம்பரம்

சென்னை: அதிமுக பொதுச் செயலராக உள்ள வி.கே.சசிகலா முதல்வராக பொறுப்பேற்க தகுதியானவரா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்கும் நிகழ்ச்சி நாளை செவ்வாய்க்கிழமை (பிப்.7) அல்லது 9-ஆம் தேதி பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதிவில்,   அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்ய அந்த கட்சி எம்எல்ஏ.க்களுக்கு உரிமை உள்ளது. ஆனால்,…

Read More

இரண்டு அணிகளிடமும் உதைபடும் கால்பந்து போல் ஆகிவிட்டேன்: விஜய் மல்லையா சொல்கிறார்

இரண்டு அணிகளிடமும் உதைபடும் கால்பந்து போல் ஆகிவிட்டேன்: விஜய் மல்லையா சொல்கிறார்

புதுடெல்லி, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் வாங்கிய சுமார் ரூ.9000 கோடிக்கும் அதிகமான கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், நெருக்கடி அதிகரித்ததால் கடந்த ஆண்டு இந்தியாவை விட்டுச் சென்றார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்ததையடுத்து, அமலாக்கத்துறையானது பண மோசடி வழக்கு பதிவு செய்து, அவரது சொத்துக்களை முடக்கியுள்ளது. அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்தபடி தன் மீதான வழக்கு விவரங்களை கவனித்து வரும் விஜய் மல்லையா அவ்வப்போது தனது கருத்துக்களை டுவிட்டர் மூலமாக வெளியிட்டு வருகிறார்.  அண்மையில் தான் கடன் வாங்கவில்லை எனவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கிடையே,…

Read More

வெற்று வார்த்தைகளால் நிரம்பிய பட்ஜெட் – மம்தா பானர்ஜி தாக்கு

வெற்று வார்த்தைகளால் நிரம்பிய பட்ஜெட் – மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா: முற்றிலும் வெற்று வார்த்தைகளால் நிரம்பிய, ஆதாரமில்லாத வருமானங்களோடு, தவறாக வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடுமையான விமர்சனங்களை தெரிவித்துள்ளார். 2017-2018-ம் ஆண்டிற்கான ரெயில்வே பட்ஜெட்டுடன் இணைந்த பொது பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிவடைந்ததும், பட்ஜெட் குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பட்ஜெட் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:- எந்த வகையிலும் இருந்து வராத ஆதாரமற்ற நிதியைக்கொண்டு, அடிப்படை காரணமற்ற, எந்த பயனுமில்லாத, இலக்கு இல்லாத…

Read More

மல்லையாவுக்கு உதவி செய்யவில்லை: பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்

மல்லையாவுக்கு உதவி செய்யவில்லை: பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு காங்கிரஸ் கட்சி உதவி செய்யவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் மறுப்பு தெரிவித்துள்ளனர். தற்போது பிரிட்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்கு கடன் கிடைப்பதற்கு மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் உதவி செய்தனர் என்ற பாஜகவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக, அவர்கள் இருவரும் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும், மல்லையாவை வெளிநாட்டுக்குத் தப்ப வைத்தது பிரமதர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக, மன்மோகன் சிங்கும், சிதம்பரமும், தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தொழில் துறையைச் சேர்ந்த தலைவர்கள், தங்களுடைய கோரிக்கைகளைத் தெரிவித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது…

Read More

உ.பி.யில் மீண்டும் மோதல் வெடிக்கிறது; காங்கிரசுக்கு எதிராக வேட்பாளர்கள் களமிறங்க முலாயம் உத்தரவு

உ.பி.யில் மீண்டும் மோதல் வெடிக்கிறது; காங்கிரசுக்கு எதிராக வேட்பாளர்கள் களமிறங்க முலாயம் உத்தரவு

லக்னோ, உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் சமாஜ்வாடி 298 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு 105 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக நேற்று உத்தரபிரதேசம் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் பாரதீய ஜனதாவின் பிரிவினைவாத அரசியலை ஒடுக்கவேண்டும் என்றனர். காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி வைப்பது, முலாயம் சிங் யாதவிற்கு பிடிக்கவில்லை. “காங்கிரசுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சியை உருவாக்க நீண்ட காலம் நான் போராடினேன், இப்போதும் அகிலேஷ் யாதவை கூட்டணி…

Read More

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லி முதல்வரும் ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு நேற்று மற்றும் நேற்று முன்தினம் மர்மநபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில் அரவிந்த் கேஜ்ரிவாலை கொலை செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மின்னஞ்சலை தில்லி காவல்துறை ஆணையர் அலோக் குமார் வர்மாவுக்கு அனுப்பிய மாநில உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 2 முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

டிரம்புடன் என்ன பேசினேன்? டிவிட்டரில் மனம் திறந்தார் மோடி

டிரம்புடன் என்ன பேசினேன்? டிவிட்டரில் மனம் திறந்தார் மோடி

புது தில்லி: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், நேற்று இரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, டிரம்புடனான தொலைபேசி பேச்சு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியா, அமெரிக்காவின் உண்மையான தோழன் என்று டிரம்ப் கூறினார். இரு நாட்டு உறவுகளும் மேம்படும் வகையில், வருங்காலத்தில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட இருவரும் அப்போது ஒப்புக் கொண்டோம். தன்னை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்தார். அவரும் இந்தியாவுக்கு வருகை தருமாறு நான் அழைத்துள்ளேன் என்று மோடி பதிவு செய்துள்ளார். அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக கடந்த 20-ஆம் தேதி டிரம்ப்…

Read More

ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா காந்தி வழக்கு தொடர்ந்ததாக வெளியான செய்தி பொய்யானது

ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா காந்தி வழக்கு தொடர்ந்ததாக வெளியான செய்தி பொய்யானது

புதுடெல்லி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை போலீசார் கலைந்து செல்ல கோரியதை அடுத்து சென்னையில் சில அசம்பவாவித சம்பங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய மந்திரியும், பாரதீய ஜனதா தலைவருமான மேனகா காந்தி வழக்கு தொடர்ந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியது. இது தொடர்பான மீம்ஸ்-க்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது, விமர்சனங்களும் எழுந்தது. இச்செய்தியானது தவறாக பரப்படுகிறது என செய்தியாளர்கள் தரப்பிலும் சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டது. இப்போது மேனகா காந்தி எதிர்ப்பு என்ற செய்தியானது முற்றிலும் பொய்யானது என மற்றொரு மத்திய மந்திரி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவு படுத்தி உள்ளார். இதுதொடர்பாக மத்திய மந்திரி நிர்மலா…

Read More

ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது: தமிழக முதல்வருக்கு மோடியின் பதில்

ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது: தமிழக முதல்வருக்கு மோடியின் பதில்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. இதனையடுத்து டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றக்கோரி முதல்வர் வலியுறுத்தியதனார். தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். மேலும், வறட்சி பாதிப்பு குறித்தும் பிரதமருடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் பிரதமரின் நிலைப்பாடு…

Read More

போராட்டக்காரர்களின் நாகரிகமான நடவடிக்கை: போலீஸார் பாராட்டு

போராட்டக்காரர்களின் நாகரிகமான நடவடிக்கை: போலீஸார் பாராட்டு

மெரினா போராட்ட களத்தில் பகலில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இரவில் இந்த எண்ணிக்கை சுமார் 5 ஆயிரமாக உயர்ந்தது. கூட்டம் கூடினாலும் சிறு அசம்பாவித சம்பவம்கூட அங்கு நடைபெறாமல் போராட்டக்காரர்கள் பார்த்துக் கொண்டனர். அவர்கள் சாலை ஓரத்தில் நடை பாதையில் மட்டுமே அமர்ந்தி ருந்தனர். போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் சிறு சம்பவத்திலும் ஈடுபடவில்லை. செய்தி சேகரிக்க சென்ற பத்திரி கையாளர்கள் சாலையில் இறங்கி நிற்க, அவர்களையும்கூட பக்குவமாக பேசி நடைமேடைக்கு வர வைத்தனர் போராட்டக்காரர்கள். தாங்கள் சாப்பிட்ட பிறகு சேர்ந்த குப்பைகளை அவர்களே மொத்தமாக சேகரித்து குப்பை தொட்டியில் போட்டனர். போராட்டக்காரர்களின் நாகரிகமான நடவடிக்கைகளை பார்த்து போலீ ஸாரே அவர்களை பாராட்டினர்….

Read More
1 95 96 97 98 99 105