இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னம்: ஓபிஎஸ் புது விளக்கம்

இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னம்: ஓபிஎஸ் புது விளக்கம்

இரட்டை விளக்கு மின் கம்பத்தில், ஒரு விளக்கு எம்ஜிஆர் என்றும், மற்றொரு விளக்கு ஜெயலலிதா எனவும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் புது விளக்கம் கொடுத்தார். அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தலைமை தேர்தல் அலுவலகத்துக்கான பூமிபூஜை, பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமர் தெருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு தலைமை தேர்தல் அலுவலகம் அமைப்பதற்கான பந்தக்கால் நட்டார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், ”எங்களது தேர்தல் சின்னம், மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துவிட்டது. எங்களது சின்னமான இரட்டை விளக்கு மின் கம்பத்தில், ஒரு விளக்கு எம்ஜிஆர். மற்றொரு விளக்கு ஜெயலலிதா. இரண்டு விளக்குகளும் ஒளி விளக்காக மாறி இடைத்தேர்தலில்…

Read More

ஜெயலலிதாவின் சொந்த மகன் தான்தான் என்று கூறி போலீயான ஆவணங்களை வைத்து ஏமாற்றிய நபரை கைது

ஜெயலலிதாவின் சொந்த மகன் தான்தான் என்று கூறி போலீயான ஆவணங்களை வைத்து ஏமாற்றிய நபரை கைது

சென்னை: ஜெயலலிதாவின் சொந்த மகன் தான்தான் என்று கூறி போலீயான ஆவணங்களை வைத்து ஏமாற்றிய நபரை கைது செய்து விசாரித்து ஏப்ரல் 10ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி பலரும் குற்றம் சாட்டி வருகின்றன. ஜெயலலிதா மரணத்தில் குழப்பம் உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகன் என்றும் தன்னை தத்து கொடுத்து விட்டதாகவும் பத்திரங்களுடன் வந்து புகார் அளித்தார். இதற்கு அப்போதே நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இப்போது கிருஷ்ணமூர்த்தி போலியான நபர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்…

Read More

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி  சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ்ஜை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில்,  எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஜார்ஜ்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய காவல்துறை ஆணையராக யார் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் 3-வது முறையாக மாற்றப்பட்டுள்ளார்.  இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜார்ஜ் காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றிருந்தார்.

Read More

அருண்ஜேட்லியுடன் விஷால், பிரகாஷ்ராஜ் சந்திப்பு: விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தல்

அருண்ஜேட்லியுடன் விஷால், பிரகாஷ்ராஜ் சந்திப்பு: விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தல்

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை இன்று (வெள்ளிக்கிழமை) நடிகர் விஷால், பிரகாஷ்ராஜ் சந்தித்தனர். அப்போது, டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் வறட்சி மற்றும் விவசாயக்கடன் உட்படப் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தென் இந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பிரகாஷ்ராஜ், நடிகர் ரமணா, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பாண்டியராஜன் ஆகியோர் வெள்ளிக்கிழமை டெல்லி வந்தனர். ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்ட…

Read More

நடிகர்–நடிகைகள் ஏப்ரல் 7–ந் தேதி பிரசாரம்’ பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் பேட்டி

நடிகர்–நடிகைகள் ஏப்ரல் 7–ந் தேதி பிரசாரம்’ பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் பேட்டி

ரஜினிகாந்த் முடிவு இடைவேளை தான். என்னை ஆதரித்து நடிகர்–நடிகைகள் ஏப்ரல் 7–ந் தேதி பிரசாரம் செய்வார்கள் என்று பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் கூறினார். வாக்குசேகரிப்பு ஆர்.கே.நகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் தண்டையார்பேட்டையில் உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. தேர்தல் பணிமனை அருகே நேற்று காலை மாநகர பஸ்சில் சென்ற பயணிகள், பஸ்நிலையத்தில் நின்ற பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். சாலைகள் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஒழுங்குபடுத்தப்படும். வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை…

Read More

இலங்கை பயணம் ரத்து; அரசியலாக்காதீர்: ரஜினி வேண்டுகோள்

இலங்கை பயணம் ரத்து; அரசியலாக்காதீர்: ரஜினி வேண்டுகோள்

நான் இலங்கையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறேன். இனிவரும் காலங்களில் இலங்கை செல்வதை அரசியலாக்கி அங்கு என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ”லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் இலங்கையில் உள்ள வவுனியாவில் வீடுகளை இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அளிப்பதற்காக அவருடைய தாய் ஞானாம்பிகை பெயரில் 150 வீடுகளை கட்டியுள்ளார். சுபாஷ்கரன் அன்பானவர், கருணை உள்ளம் கொண்டவர், அவர் கட்டிய வீடுகளை ஏழைகளுக்கு வழங்குவதற்கான விழாவிற்கு என்னை அழைத்திருந்தார். வருகிற ஏப்ரல் மாதம் 9-ம் தேதி மாலை கிட்டத்தட்ட மூன்று, நான்கு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ள…

Read More

சபாநாயகரை நீக்கக்கோரிய திமுகவின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

சபாநாயகரை நீக்கக்கோரிய திமுகவின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

சபாநாயகரை நீக்கக்கோரிய திமுகவின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது. ஓ.பி.எஸ் அணியிலுள்ள 12 எம்எல்ஏக்களும் தீர்மானத்தை ஆதரிக்காததாலும், ஆளுங்கட்சிக்கு 122 எம்எல்ஏக்கள் பலம் உள்ளதாலும், தீர்மானம் தோல்வியில் முடிந்தது. சபாநாயகர் தனபாலை அப்பதவியிலிருந்து நீக்ககோரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) முன்மொழிந்தார். இதற்கு திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு அளித்தன. அமளியான சட்டப்பேரவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் ஆதரவை நிரூபிக்க கடந்த மாதம் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால் சபாநாயகர் அதனை ஏற்கவில்லை. இதனால் சட்டப்பேரவையில் பெரும் அமளி…

Read More

சசிகலா அணிக்கு தொப்பி, ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னங்கள்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

சசிகலா அணிக்கு தொப்பி, ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னங்கள்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதையடுத்து, சசிகலா அணிக்கு தொப்பி சின்னமும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சசிகலா தரப்பு ஆட்டோ, பேட் மற்றும் தொப்பி ஆகிய சின்னங்களைத் தெரிவு செய்திருந்தது. இந்நிலையில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் சசி அணிக்கு ஒதுக்கப்பட்டது, ஆனால் ஆட்டோ சின்னம் வேண்டாம் என்று சசி தரப்பினர் கோரியதையடுத்து தேர்தல் ஆணையம் தொப்பி சின்னத்தை ஒதுக்கியது. மேலும் அதிமுக அம்மா என்று கட்சிப்பெயர் வேண்டுமெனவும் சசி தரப்பினர் சமர்ப்பித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணி அம்மா அதிமுக என்ற கட்சிப்பெயரை சமர்ப்பித்தது, ஆனால் தேர்தல் ஆணையம் பெயரை மாற்றுமாறு அறிவுறுத்த அதிமுக புரட்சித் தலைவி…

Read More

புதிய இயக்கம் தொடங்குகிறார் இயக்குநர் தங்கர் பச்சான்: இணைந்து பயணிக்க இளைஞர்களுக்கு அழைப்பு

புதிய இயக்கம் தொடங்குகிறார் இயக்குநர் தங்கர் பச்சான்: இணைந்து பயணிக்க இளைஞர்களுக்கு அழைப்பு

தங்கர் பச்சான் புதிய இயக்கம் ஒன்றை தொடங்க இருப்பதாக இயக்குநர் தங்கர் பச்சான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை: நெடுங்காலமாகவே ஏதாவதொரு பெயரில் இயக்கம் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என என்மீது பற்றுள்ளவர்களும், அக்கறை கொண் டவர்களும் கேட்டுக்கொண்டே இருந் தார்கள். எனக்கு அதற்கான நேரமும் இல்லை; அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை என இதுவரை மறுத்து வந்தேன். தற்போதுள்ள சூழ்நிலையைப் பார்த்தால் தமிழர்களின் வாழ்வை சூறையாடியவர்களின் எண்ணிக் கையை விடவும் சூறையாடக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை நாம் எல்லோரும் உணரமுடியும். இவ்வளவு காலம் நாம் அனுபவித்த அத்தனைத் துயர்களுக்கும், சுரண்டல்களுக்கும், அநீதிகளுக்கும் காரணம் நாம் நம் வாக்குரிமையை சரியாக பயன்…

Read More

உச்ச நீதிமன்ற ஆணையை மீறிய கர்நாடக முதல்வர் மீது நடவடிக்கை தேவை: பழ.நெடுமாறன்

உச்ச நீதிமன்ற ஆணையை மீறிய கர்நாடக முதல்வர் மீது நடவடிக்கை தேவை: பழ.நெடுமாறன்

உச்ச நீதிமன்ற ஆணையை மீறியதற்காக கர்நாடக முதல்வர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்திற்கு ஜூலை 11ஆம் தேதிவரை தினமும் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். ஆனால், கடந்த 2016 டிசம்பர் 15, 2017 ஜனவரி 4 மற்றும் பிப்ரவரி 7ஆம் தேதிகளில் உச்ச நீதிமன்றம் இதைப்போல தினமும் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. அந்த மூன்று தடவையும் உத்தரவை நிறைவேற்ற…

Read More
1 93 94 95 96 97 114