தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் சசிகலா எடுத்த முடிவுகள் செல்லாமல் போகும் பன்னீர்செல்வம் தரப்பு

தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் சசிகலா எடுத்த முடிவுகள் செல்லாமல் போகும் பன்னீர்செல்வம் தரப்பு

தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் சசிகலா எடுத்த முடிவுகள் செல்லாமல் போகும் என பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சசிகலா அறிவித்த எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்கஉள்ளார். ஏற்கனவே சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக புகார் தொடர்பாக ஆலோசித்து வரும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே விளக்கம் கோரிஉள்ளது. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் இன்று தேர்தல் ஆணையத்தை நேரடியாக சந்தித்து நிலை குறித்து பேசிஉள்ளனர். ஓபிஎஸ் ஆதரவு 10 எம்பிக்கள், பி.ஹெச். பாண்டியனுடன் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை மைத்ரேயன் எம்.பி. சந்தித்து பேசிஉள்ளார். இந்நிலையில் பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்….

Read More

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுப்பதால் அதிமுக அழியும் மார்கண்டேய கட்ஜூ வேதனை

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுப்பதால் அதிமுக அழியும் மார்கண்டேய கட்ஜூ வேதனை

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுப்பதால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கி செல்லும் மார்கண்டேய கட்ஜூ வேதனை தெரிவித்து உள்ளார் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என கூறி 4 வருட சிறை தண்டனையும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று மாலை சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கபட்டனர். இந்த நிலையில் தமிழக கவர்னரை  சந்தித்து பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஆட்சியமைக்க கோரிக்கை வைத்தனர். இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க கவர்னர் நேரம்  ஒதுக்கி உள்ளார். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்…

Read More

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை புதிய அமைச்சர் செங்கோட்டையன் சேர்ப்பு

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை புதிய அமைச்சர் செங்கோட்டையன் சேர்ப்பு

இன்று மாலை பதவி ஏற்க போகும் புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது. புதிதாக செங்கோட்டையன் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சரவை பட்டியல் விவரம் வருமாறு:- எடப்பாடி பழனிச்சாமி- முதல்-அமைச்சர் * செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், * திண்டுக்கல் சீனிவாசன் – வனம், * செல்லூர் ராஜூ – கூட்டுறவு, * தங்கமணி – மின்சாரம், * எஸ்.பி.வேலுமணி – நகராட்சி, * ஜெயக்குமார் – மீன்வளம், * சி.வி.சண்முகம் – சட்டம், * அன்பழகன் – உயர்கல்வி, * சரோஜா – சமூகநலம், * எம்.சி.சம்பத் – தொழில், * கருப்பண்ணன் – சுற்றுசூழல், * காமராஜ் – உணவு, * ஓ.எஸ்.மணியன் –…

Read More

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பிக்கள் சந்திப்பு

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பிக்கள் சந்திப்பு

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதையடுத்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்தது. இத்தகவல் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை அங்கீகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இதில் சில விளக்கம் கேட்டதுடன், அதிமுக அதிருப்தி எம்.பி. சசிகலா புஷ்பா அளித்த புகார் மீதும் தேர்தல் ஆணையம் அதிமுகவிடம் விளக்கம் கேட்டுள்ளது. சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில், கட்சியின் பொருளாளர் பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியது. சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது சட்டவிரோதமானது…

Read More

தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அழைப்பு

தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அழைப்பு

இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்கிறார். மேலும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிட்டுள்ளார். அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வான எடப்பாடி பழனிச்சாமி தமக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தார். இடைக்கால முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தமக்கு பெரும்பான்மை இருக்கிறது; சட்டசபையில் நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என ஆளுநரிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்திருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் முடிவில்…

Read More

ஆட்சி அமைக்க யாரை ஆளுநர் அழைப்பார்? இன்று முக்கிய முடிவு வெளியாக வாய்ப்பு

ஆட்சி அமைக்க யாரை ஆளுநர் அழைப்பார்? இன்று முக்கிய முடிவு வெளியாக வாய்ப்பு

யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்பதில் இன்று முக்கிய முடிவு வெளியாக வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக அரசியலில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் பரபரப்புகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து முதல் – அமைச்சர் பதவியை ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் 2 மாதம் மிகத்திறமையான, சீரான, அமைதியான ஆட்சியைத் தந்தார். இந்த நிலையில் முதல் – அமைச்சர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டதால் கடந்த 5-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகினார். 7-ந்தேதி அவர் சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார். அவரை தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆதரித்தனர். என்றாலும் 120-க்கும் மேற்பட்ட…

Read More

சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும்? – சிறைத்துறை நிர்வாகம் விளக்கம்

சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும்? – சிறைத்துறை நிர்வாகம் விளக்கம்

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் வழங்கப்படும் என சிறைத் துறை நிர்வாகத்திடம் விசாரித்த போது, “கடந்த முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். ஜெயலலிதா இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்த வி.வி.ஐ.பி. என்பதால் வெளியில் இருந்து உணவு, மருந்துகள், உடை,ஏ.சி.வசதி, உதவியாளர்கள் உள்ளிட்ட பல வசதிகள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் மட்டுமே. முதல்வர் இல்லை என்பதால் அவருக்கு அத்தகைய வசதிகள் வழங்கப்படாது. சசிகலா தரப்பில் தங்களுக்கு நீரிழிவு உள்ளிட்ட…

Read More

சசிகலா, இளவரசியை அடுத்து சுதாகரனும் சிறையில் அடைக்கப்பட்டார்

சசிகலா, இளவரசியை அடுத்து சுதாகரனும் சிறையில் அடைக்கப்பட்டார்

சசிகலா, இளவரசியை அடுத்து சுதாகரனும் சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலா, இளவரசி ஆகியோரையடுத்து சுதாகரனும் இன்றிரவு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. மேலும், மூன்று பேரும் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில் சரணடைய கூடுதல் நேரம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவரது தரப்பு வழக்கறிஞர் முறையிட்டனர். ஆனால், சசிகலாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். இதனால், சசிகலா உடனடியாக…

Read More

‘8 பெருசா? 124 பெருசா? ‘ – ஜெயக்குமார்

‘8 பெருசா? 124 பெருசா? ‘ – ஜெயக்குமார்

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆளுநரைச் சந்தித்தார். அவருடன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ராஜ்யசபா உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் உள்பட 10 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்தனர். இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்தப் பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘எங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை ஆளுநரிடம் வழங்கினோம். அதை ஆவன செய்வதாக ஆளுநர் கூறினார். அவர் ஜனநாயகத்தை காப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு 124 எம்.எல்.ஏக்கள் ஆதவராக உள்ளனர். ஆனால், அவர்களுக்கு (ஓ.பி.எஸ். அணி) ஆதரவாக 8 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். 8 பெருசா? 124 பெருசா? நாளைக்குள் ஆளுநர் முடிவை அறிவிப்பார் என்று நம்புகிறோம் ‘ என்றார்.

Read More

தமிழகத்தை என்றும் ஆள வேண்டும்: சசிகலா

தமிழகத்தை என்றும் ஆள வேண்டும்: சசிகலா

அதிமுக தான் தமிழகத்தை என்றுமே ஆள வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலா தெரிவித்துள்ளார். கூவத்தூரில் நட்சத்திர விடுதியில் எம்.எல்.ஏக்களுடன் தங்கியிருந்த சசிகலா நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்டு போயஸ் கார்டனுக்கு வந்தார். அப்போது தனது ஆதரவாளர்கள் மத்தியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: அதிமுக தான் தமிழகத்தை என்றுமே ஆள வேண்டும். நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. என் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அதிமுகை யாராலும் பிரிக்க முடியாது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தி அதிமுகவின் பயணத்தை தொடர வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்தார். அதுமட்டுமில்லாமல் நான் எங்கிருந்தாலும், கட்சிப் பணிகளையும், உங்களையும் தான் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பேன் என்று கூறினார்.

Read More
1 91 92 93 94 95 103