சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்நாட்டு முனையம் வருகை பகுதி 2-வது நுழைவு வாயில் அருகே கார்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் ‘போர்டிகோ’ பகுதியில் நேற்று ஒரு சூட்கேஸ் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. இதனை மத்திய தொழிற்படை போலீசார் மற்றும் விமான நிலைய போலீசார் கண்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த சூட்கேசை யாரும் சொந்தம் கொண்டாட வரவில்லை. இதனால் அந்த மர்ம சூட்கேசின் உள்ளே வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை உடனடியாக இதுபற்றி வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மோப்ப நாயுடன் சம்பவ…

Read More

ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்துக்குப் பயனளிக்கக் கூடியதே: மத்திய அரசு

ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்துக்குப் பயனளிக்கக் கூடியதே: மத்திய அரசு

புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இத்திட்டத்தினால் தமிழ்நாடு பயனடையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நெடுவாசல் வயல்களிலிருந்து ஹைட்ரோகார்பன் உற்பத்தித் திட்டத்தினால் தமிழ்நாட்டுக்கு பொருளாதார பயன்கள் கிடைக்கும், விவசாயிகள் அச்சம் தேவையற்றது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹைட்ரோகார்பன் உற்பத்தித் திட்டத்தினால் வேளாண்மை, மண்ணின் தன்மை, நிலத்தடி நீர் நச்சாதல் உள்ளிட்ட பயங்கர சுற்றுச்சூழல் விளைவுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து அங்கு போராட்டம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை நெடுவாசல், புதுச்சேரியில் உள்ள காரைக்கால் ஆகியவற்றில் ஹைட்ரோகார்பன் உற்பத்தித் திட்டத்தின் மூலம் ரூ.300 கோடி வருவாய்…

Read More

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் இல்லை: சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும் – மாஃபா பாண்டியராஜன் சூசகம்

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் இல்லை: சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும் – மாஃபா பாண்டியராஜன் சூசகம்

‘ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. விரைவில் சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும்’ என்று முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மாஃபா க.பாண்டியராஜன் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ‘அம்மா கல்வியகம்’ என்ற இணையதளத்தை தனது வீட்டில் நேற்று தொடங்கி வைத் தார். அதன்பின் நிருபர்களிடம் பாண்டியராஜன் கூறியதாவது: நாட்டிலேயே முதல்முறை யாக, இலவசக் கல்வி இணைய தளத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்துள்ளார். மற்ற இணையதள சேவை நிறுவனங் கள் பயிற்சி அளிப்பதற்கு பதிவு செய்யவே ரூ.1,000 வரை பெறு கின்றன. ஆனால், இந்தக் கட்டணம்கூட ‘அம்மா கல்வியகம்’ இணையதளத்தில் இல்லை. அதிமுக பொதுச்செயலாள ராக சசிகலா தேர்வு செய்யப்பட் டதை எதிர்த்து,…

Read More

எரிவாயு திட்டத்தை திமுகதான் செயல்படுத்தியது: வைகோ குற்றச்சாட்டு

எரிவாயு திட்டத்தை திமுகதான் செயல்படுத்தியது: வைகோ குற்றச்சாட்டு

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: தமிழகத்தில் மீத்தேன் திட் டத்தை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டதால், அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது தற்போது அதே திட்டத்தை ஹைட்ரோ கார்பன் என பெயர் மாற்றம் செய்து நெடுவாசலில் எரிவாயு எடுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இத் திட்டத்தை கொண்டு வந்திருந் தாலும், அதை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு கையெழுத் திட்டது திமுகதான். தற்போது எரிவாயு எடுக்க முயற்சி மேற்கொள்ளும் பாஜக அரசை அதிமுக அரசு கண்டிக்கவில்லை. நைஜீரியாவில் எரிவாயு திட்டம் செயல்படுத்தி 6 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த சாகுபடியில்…

Read More

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னையில் ஓபிஎஸ் அணி மார்ச் 8-ல் உண்ணாவிரதம்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னையில் ஓபிஎஸ் அணி மார்ச் 8-ல் உண்ணாவிரதம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் உண்ணா விரத போராட்டம் நடத்தப்படுகிறது. கடந்த பிப்ரவரி 5-ம் தேதி முதல் வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். 7-ம் தேதி ஜெயலலிதா சமாதியில், தியானம் மேற்கொண்ட அவர், சசிகலா தரப்பினர் கட்டாயப்படுத்தியதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார். அதன் பிறகு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து, அதிமுகவில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர் பாக விசாரணை நடத்தக் கோரி,…

Read More

விழுப்புரத்தில் தொண்டர்களுடன் விஜயகாந்த் சந்திப்பு

விழுப்புரத்தில் தொண்டர்களுடன் விஜயகாந்த் சந்திப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சியில் பங்கேற்று தொண்டர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். அந்த வகையில் நேற்று விழுப்புரத்தில் ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். காலை 10 மணி முதல் பிற்பகல் 3.15 மணிவரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரூ.50 செலுத்தி அனுமதி சீட்டு பெற்ற பின்பே அரங்கில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் விஜயகாந்த் மைக் பிடித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் உறுதி: நெடுவாசல் போராட்டக் குழுவினர் பேட்டி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் உறுதி: நெடுவாசல் போராட்டக் குழுவினர் பேட்டி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளதாக நெடுவாசல் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். முதல்வர் பழனிசாமியை நெடுவாசல் போராட்டக் குழுவினர் இன்று (புதன்கிழமை) தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். நெடுவாசல் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் வேலு தலைமையில் போராட்டக் குழுவினர் 10 பேர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினர். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் நெடுவாசல் போராட்டக் குழுவினர் பேசியதாவது: ”மாநில அரசுகளின் துறைகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை என முதல்வர் கூறினார். விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. ஹைட்ரோ கார்பன் திட்டம் இன்னும்…

Read More

அதிமுக பெண் எம்எல்ஏ-வுக்கு கறுப்புக் கொடி காட்டி மக்கள் எதிர்ப்பு

அதிமுக பெண் எம்எல்ஏ-வுக்கு கறுப்புக் கொடி காட்டி மக்கள் எதிர்ப்பு

சேலம் அருகே அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த வீரபாண்டி தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ மனோன்மணிக்கு எதிராக பொதுமக்கள் கறுப்புக் கொடி காட்டினர். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்ததற்கும், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏ-க்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சசிகலா அணியைச் சேர்ந்த வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ மனோன்மணி பங்கேற்க வந்தார். அப்போது அங்கு திரண்ட பொது மக்கள் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், திடீரென மனோன்மணிக்கு…

Read More

சசிகலா – செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் சந்திப்பு.. 1 மணிநேரம் ஆலோசனை

சசிகலா – செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் சந்திப்பு.. 1 மணிநேரம் ஆலோசனை

பெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை தமிழக அமைச்சர்கள் நால்வர் இன்று நேரில் சந்தித்து ஒரு மணிநேரம் பேசி உள்ளனர். அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் சசிகலாவை சிறையில் சென்று சந்தித்தனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஒருமணிநேரம் சசிகலா உடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 15ஆம் தேதியன்று மாலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 15 நாட்களாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவரது அக்காள் மகன் டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர்…

Read More

இரட்டை இலையை மீட்போம்: புதிய அமைப்பைத் தொடங்கி தீபா சூளுரை

இரட்டை இலையை மீட்போம்: புதிய அமைப்பைத் தொடங்கி தீபா சூளுரை

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கினார். இரட்டை இலையை மீட்போம் என்று தீபா சூளுரைத்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடுவேன். எந்த நிலையிலும் பின்வாங்கமாட்டேன் என்றும் தீபா கூறியுள்ளார். சென்னை தி.நகரில் இன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கி வைத்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேசியதாவது: ”ஜெயலலிதாவின் பணிகளை அரசியல் வாரிசாகத் தொடர்வேன். ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அரசியல் பயண முடிவை அறிவிப்பதில் பெருமையாக உள்ளது. இரட்டை இலையை மீட்பதே எங்கள் குறிக்கோள். தற்போதைய அரசியல் சூழலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. ஒரு துரோகக் கூட்டத்தின் பிடியில் தமிழக மக்கள் உள்ளனர்….

Read More
1 90 91 92 93 94 105