ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை: மசோதாவை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை: மசோதாவை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கான குற்றவியல் சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொடுப்பதையும், வாங்குவதையும் பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றமாக அறிவிக்கவும், இதற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் வசதியாக சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கதாகும். இந்தியாவில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் கருவியாக திகழ்வது தேர்தல்கள்தான். ஆனால், தேர்தல் களம் வாக்குகளை விலை கொடுத்து வாங்கும் சந்தையாக மாறியிருப்பது…

Read More

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு உடனடியாக ஆணை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ”புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி மூன்று வார காலமாக மக்கள் ஒன்றுபட்ட தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நிலவளம், நீர்வளம், வாழ்வாதாரம் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படும் என்பதால் மக்கள் உறுதியாக போராட்டத்தை தொடர்கின்றனர். நெடுவாசல் போராட்டக்குழுவினர் முதல்வரை நேரில் சந்தித்த போது திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்காது என்று வாய்மொழியாக உறுதிமொழி கொடுத்துள்ளாரே தவிர,…

Read More

உ.பி.யில் நான் செய்த பணிகளை பட்டியலிட்டுவிட்டேன்; 3 ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்தது என்ன? – பிரதமர் மோடிக்கு முதல்வர் அகிலேஷ் சவால்

உ.பி.யில் நான் செய்த பணிகளை பட்டியலிட்டுவிட்டேன்; 3 ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்தது என்ன? – பிரதமர் மோடிக்கு முதல்வர் அகிலேஷ் சவால்

‘‘உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு நான் செய்த பணிகளை பட்டியலிடுகிறேன். உங்களது 3 ஆண்டு கால ஆட்சியில் நீங்கள் செய்த பணிகளை சொல்ல முடியுமா?’’ என்று பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் சவால் விடுத்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. கடைசி மற்றும் 7-வது கட்ட தேர்தல் வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பதோதி நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி சார்பில் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: உத்தரப் பிரதேச மாநிலத்தில் எனது அரசு செய்த 10 பணிகளை பட்டியலிடுகிறேன். அதுபோல் 10 பணிகளை அவரால் (பிரதமர் மோடி) பட்டியலிட…

Read More

தனித்தனியே நிர்வாகிகள் பட்டியல்: கணவன் – மனைவி மோதலால் தீபா பேரவையில் குழப்பம்

தனித்தனியே நிர்வாகிகள் பட்டியல்: கணவன் – மனைவி மோதலால் தீபா பேரவையில் குழப்பம்

தீபாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோத லால் எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவையில் குழப்பம் ஏற்பட்டுள் ளது. இதனால் தீபாவின் ஆதர வாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த 24-ம் தேதி ‘எம்ஜிஆர்-அம்மா-தீபா- பேரவை’ என்ற அமைப்பை தொடங்கி அதற்கு கொடியையும் அறிமுகம் செய்தார். சில தினங்களுக்கு பிறகு பேரவையின் தற்காலிக செய லாளர், தலைவர் பதவிகளுக்கு தனது நண்பர்களான ஏ.வி.ராஜா மற்றும் சரண்யா ஆகிய இரு வரை தீபா நியமித்ததாக தகவல் வெளியானது. இதற்கு தொண் டர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த னர். அதைத்தொடர்ந்து, செய்தி யாளர்களை சந்தித்த தீபா, “முழு மையான நிர்வாகிகள் பட்டியலை பிப்ரவரி 27-ம்…

Read More

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாட் வரி அதிகரிப்பின் விளைவு

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாட் வரி அதிகரிப்பின் விளைவு

பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி விகிதத்தை தமிழக அரசு அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.78-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.70-ம் அதிகரித்துள்ளது. நள்ளிரவு முதல் விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட வாட் வரி விவரம்: பெட்ரோல் மீதான வாட் வரி 27%-ல் இருந்து 34%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் மீதான வாட் வரி 21.4%-ல் இருந்து 25% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.78 ஆக அதிகரித்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.70 ஆக உயர்ந்துள்ளது. திருத்தப்பட்ட வாட் வரியின் அடிப்படையில், தற்போது சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ74.47 ஆகவும்…

Read More

நம்பி வந்தவர்கள் ஏமாற்றம்- விரக்தி:காற்று வாங்கும் தீபா வீடு

நம்பி வந்தவர்கள் ஏமாற்றம்- விரக்தி:காற்று வாங்கும் தீபா வீடு

தீபா வீட்டுக்கு தொண்டர்களின் வருகை வழக்கத்தை விட குறைவாகவே உள்ளது. பேரவை நிர்வாகிகள் மட்டுமே சிலர் வந்து செல்கின்றனர். ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கடந்த மாதம் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். இந்த அமைப்பின் செயலாளராக ராஜா என்பவரை நியமித்தார்.  அமைப்பின் தலைவராக  ராஜாவின் மனைவி சரண்யாவை நியமித்தார். இது தீபா ஆதரவாளர் களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டு முன்பு ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய தீபா புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்தார். இந்த நிலையில் ராஜா மற்றும் அவரது மனைவியை நிர்வாகிகளாக நியமித்தது தீபாவின் கணவர் மாதவனுக்கும் பிடிக்கவில்லை. அவர்…

Read More

தனுஷுக்கு மரபணு சோதனை நடத்தக் கோரிய வழக்கு: விசாரணை மார்ச் 9-க்கு ஒத்திவைப்பு

தனுஷுக்கு மரபணு சோதனை நடத்தக் கோரிய வழக்கு: விசாரணை மார்ச் 9-க்கு ஒத்திவைப்பு

தனுஷூக்கு மரபணு சோதனை நடத்தக் கோரி மேலூர் தம்பதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற 9-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. தனுஷிடம் பராமரிப்பு செலவு கோரி கதிரேசன் தாக்கல் செய்த மனு மீதான விசா ரணைக்கு தடை விதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன்(60), இவரது மனைவி மீனாட்சி(55). இவர்கள் தங்களின் மூத்த மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ் என உரிமை கோரி வருகின்றனர். தனுஷிடம் மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்பு செலவு கேட்டு மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் தனுஷ் மனு தாக்கல்…

Read More

விமானப்படை விழாவில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி சென்னை வருகை: ஆளுநர், முதல்வர் வரவேற்றனர்

விமானப்படை விழாவில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி சென்னை வருகை: ஆளுநர், முதல்வர் வரவேற்றனர்

விமானப்படை பிரிவு விருது வழங்கும் விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று இரவு சென்னை வந்தார். சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை பிரிவுக்கு விருது வழங்கும் விழாவும், அடையாறில் இந்திய பெண்கள் விழாவும் இன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று இரவு தனி விமானத்தில் சென்னை வந்தார். அவரை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் வரவேற்றனர். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத காரில் கிண்டியில்…

Read More

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு தீவிர நோய் எதுவும் இல்லை: ஓ பன்னீர் செல்வம்

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு தீவிர நோய் எதுவும் இல்லை: ஓ பன்னீர் செல்வம்

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு தீவிர நோய் எதுவும் இல்லை என்று ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- *முதலமைச்சர் பதவியிலிருந்து விலகக் கோரி எனக்கு பல தரப்பிலிருந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது *ஜெயலலிதாவை வெளிநாட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றோம் அதற்கு அனுமதிக்கவில்லை *ஜெயலலிதாவிற்கு தீவிர நோய் எதுவுமில்லை.*மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். *ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் தீரும் வரை மக்களின் போராட்டம் தீராது. *ஜெயலலிதாவின் மரணத்தில்…

Read More

ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டாரா?- அடுக்கடுக்காக சந்தேகங்களை எழுப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டாரா?- அடுக்கடுக்காக சந்தேகங்களை எழுப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருப்பதாக கூறியுள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இது தொடர்பாக அரசும், மருத்துவமனையும் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலிருந்து இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார் பி.எச்.பாண்டியன். இந்த சந்திப்பின்போது அவருடன், அவரது மகன் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள் உடனிருந்தனர். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பி.எச்.பாண்டியன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக அப்போலோ டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருக்கிறது. அவர் கீழே தள்ளிவிடப்பட்டாரா என்பதை மருத்துவமனை தரப்பு விளக்க வேண்டும். ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம்…

Read More
1 89 90 91 92 93 105