சசிகலா, இளவரசியை அடுத்து சுதாகரனும் சிறையில் அடைக்கப்பட்டார்

சசிகலா, இளவரசியை அடுத்து சுதாகரனும் சிறையில் அடைக்கப்பட்டார்

சசிகலா, இளவரசியை அடுத்து சுதாகரனும் சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலா, இளவரசி ஆகியோரையடுத்து சுதாகரனும் இன்றிரவு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. மேலும், மூன்று பேரும் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில் சரணடைய கூடுதல் நேரம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவரது தரப்பு வழக்கறிஞர் முறையிட்டனர். ஆனால், சசிகலாவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். இதனால், சசிகலா உடனடியாக…

Read More

‘8 பெருசா? 124 பெருசா? ‘ – ஜெயக்குமார்

‘8 பெருசா? 124 பெருசா? ‘ – ஜெயக்குமார்

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆளுநரைச் சந்தித்தார். அவருடன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ராஜ்யசபா உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் உள்பட 10 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்தனர். இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்தப் பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘எங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை ஆளுநரிடம் வழங்கினோம். அதை ஆவன செய்வதாக ஆளுநர் கூறினார். அவர் ஜனநாயகத்தை காப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு 124 எம்.எல்.ஏக்கள் ஆதவராக உள்ளனர். ஆனால், அவர்களுக்கு (ஓ.பி.எஸ். அணி) ஆதரவாக 8 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். 8 பெருசா? 124 பெருசா? நாளைக்குள் ஆளுநர் முடிவை அறிவிப்பார் என்று நம்புகிறோம் ‘ என்றார்.

Read More

தமிழகத்தை என்றும் ஆள வேண்டும்: சசிகலா

தமிழகத்தை என்றும் ஆள வேண்டும்: சசிகலா

அதிமுக தான் தமிழகத்தை என்றுமே ஆள வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலா தெரிவித்துள்ளார். கூவத்தூரில் நட்சத்திர விடுதியில் எம்.எல்.ஏக்களுடன் தங்கியிருந்த சசிகலா நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்டு போயஸ் கார்டனுக்கு வந்தார். அப்போது தனது ஆதரவாளர்கள் மத்தியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: அதிமுக தான் தமிழகத்தை என்றுமே ஆள வேண்டும். நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. என் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அதிமுகை யாராலும் பிரிக்க முடியாது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தி அதிமுகவின் பயணத்தை தொடர வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்தார். அதுமட்டுமில்லாமல் நான் எங்கிருந்தாலும், கட்சிப் பணிகளையும், உங்களையும் தான் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பேன் என்று கூறினார்.

Read More

எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்தல்

எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்தல்

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. அதற்குப் பிறகு அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். ———————————- எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றக் குழு தலைவராக தேர்வானது சட்டப்படி செல்லாது: நத்தம் விஸ்வநாதன் அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று…

Read More

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அதிகாரப்பூர்வ நகலை தற்போது வரை சசிகலா தரப்பினர் பெறவில்லை என தகவல்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அதிகாரப்பூர்வ நகலை தற்போது வரை சசிகலா தரப்பினர் பெறவில்லை என தகவல்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அதிகாரப்பூர்வ நகலை தற்போது வரை சசிகலா தரப்பினர் பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் வழக்கில் தொடர்புடைய அனைவரும் குற்றவாளிகள் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.  சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் ஆஜராக வேண்டும் என கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 48-ல் மூவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உச்ச…

Read More

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் சசிகலா அணிக்கு யார் தலைமை வகிப்பது என்ற கேள்வி எழுந்தது. சசிகலா தலைமையில் கூவத்தூரில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட கடிதம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ———————————— அ.தி.மு.க எம்.எல்.ஏக்களை சந்திக்க முதல்வர் பன்னீர்செல்வம்…

Read More

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவ் ராய் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். இரண்டு நீதிபதிகளுமே ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினர். கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய…

Read More

சசிகலாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்தது: 10 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது

சசிகலாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்தது: 10 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5-ந் தேதி ராஜினாமா செய்தார். அதேசமயம் பொதுச்செயலாளரான சசிகலா, முதல்வர் பதவிக்கு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதற்கேற்ப, அவர் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சசிகலா புதிய முதல்-அமைச்சராக விரைவில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்தார். இதனால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்பட்டது. பின்னர் கவர்னர் வித்யாசாகர் ராவை சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். சசிகலா தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதால் தனது…

Read More

எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதலமைச்சராக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு!

எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதலமைச்சராக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு!

தமிழக முதலமைச்சராக சசிகலாவும், ஒ.பன்னீர்செல்வமும் மோதிக்கொண்டிருந்த வேளையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது முதல்வர் கனவு தகர்ந்துள்ளது.  இதனையடுத்து கூவத்தூரில் சசிகலா தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டசபை ஆளும் கட்சி தலைவர் தான் முதலமைச்சராக இருப்பார். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக பதவியேற்க வைக்குமாறு தமிழக ஆளுநருக்கு கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்களின் ஒப்புதல் பெறப்பட்ட கடிதம் அனுப்பப்படும். ஏற்கனவே ஓபிஎஸ் ராஜினாமா கடிதம் சர்ச்சையில் இருக்கும் போது இந்த புதிய முதலமைச்சருக்கான எம்எல்ஏக்கள் ஒப்புதல் பெறப்பட்ட கடிதத்தை ஆளுநர் எப்படி பரிசீலிப்பார் என்பதை பொறுத்திருந்து தான்…

Read More

சசிகலா குற்றவாளி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சசிகலா குற்றவாளி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகம் மாட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 3 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதில் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க தீர்ப்பு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. 1991-96-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க போட்டி நடந்துக்…

Read More
1 76 77 78 79 80 87