வட மாகாண சுகாதாரஅமைச்சருக்கு எதிராகவும் காணாமற் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

வட மாகாண சுகாதாரஅமைச்சருக்கு எதிராகவும் காணாமற் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

காணாமற் போனோரின் உறவினர்கள் சிலவாரங்களுக்கு முன்னர் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் செய்தபோது, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் அவர்களது உருவப்படத்தை தீவைத்து கொழுத்தினர் என்ற செய்தி மறையும் முன்னதாகவே,நேற்று முன்தினம் வவுனியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் திரு ப. சத்தியலிங்கத்திற்கு எதிராகவும் மேற்படி காணமற் போனோரின் உறவினர்கள் கோசங்களை எழுப்பியதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். மேற்படி ஆர்ப்பாட்டம்  நடைபெற்ற வவுனியா கந்தசுவாமி ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற எமது செய்தியாளர், காணாமற் போனோரின் உறவினர்கள் சிலரோடு உரையாடியபோது அவர்கள் விரக்தியடைந்த நிலையில் சில விபரங்களைத் தெரிவித்தார்களாம். அண்மையில் எரிக்கப்பட்டதற்கு திரு சத்தியலிங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்த…

Read More

பஞ்சாப் முதல்வர் மீது ‛ஷூ’ வீச்சு; தோல்வி பயம் காரணமா?

பஞ்சாப் முதல்வர் மீது ‛ஷூ’ வீச்சு; தோல்வி பயம் காரணமா?

பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலி தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் முக்த்சர் மாவட்டம், லாம்பியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது, பஞ்சாப் முதல்வர் பாதல் மீது நேற்று ‛ஷூ’ வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் பாதல், அங்கிருந்து வெளியேறினார். போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். தோல்வி பயம்: பின்னர் ‛ஷூ’ வீச்சு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாதல் கூறியதாவது: என் மீது, ‘ஷூ’ எறியப்பட்ட சம்பவம், எதிரணியினர், தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு ஆதாரம். தோல்வி பயத்தால், இத்தகைய மோசமான செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்;…

Read More

இந்தியா டுடே மாநாட்டில் மோடியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!

இந்தியா டுடே மாநாட்டில் மோடியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!

இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் ரூபாய் மதிப்பு ரத்து நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மோடி திடீரென வெளியிட்ட ரூபாய் நோட்டு அறிவிப்பு மக்களை பெரும் சென்னை: இந்தியா டுடே மாநாட்டில் பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் ரூபாய் மதிப்பு ரத்து நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மோடி திடீரென வெளியிட்ட ரூபாய் நோட்டு அறிவிப்பு மக்களை பெரும் துயரில் தள்ளியதாகவும் அவர் கூறினார். தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் இந்தியா டுடே குழுமத்தின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஆந்திர முதல்வர்…

Read More

சசிகலாவுக்கு அடுத்த சிக்கல்.. ஜெ. மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க ராஜ்நாத்சிங் பரிந்துரை!

சசிகலாவுக்கு அடுத்த சிக்கல்.. ஜெ. மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க ராஜ்நாத்சிங் பரிந்துரை!

டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி சசிகலா புஷ்பா கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சசிகலா புஷ்பா அளித்தார். அடுத்ததாக, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து, தமிழக அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்தார். ராஜ்நாத்சிங் பரிந்துரை இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் மனுவை தற்போது பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைக்கு அனுப்பி இருக்கிறார்…

Read More

தினகரனுக்கு ரூ28 கோடி அபராதம்: அதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி குடும்பத்துக்கு முதல் அடி!

தினகரனுக்கு ரூ28 கோடி அபராதம்: அதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி குடும்பத்துக்கு முதல் அடி!

சசிகலா அக்கா மகனுக்கு அமலாக்கப் பிரிவு விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்துள்ளது சென்னை ஹைகோர்ட். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மன்னார்குடி குடும்பத்துக்கு இது முதல் சம்மட்டி அடியாகும். சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி குடும்பத்துக்கு முதல் அடியாக டிடிவி தினகரனுக்கு அமலாக்கப் பிரிவு விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 20 ஆண்டுகளுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில் ஒன்று தினகரன் மீதான அமலாக்கப் பிரிவு வழக்கு. 1995,1996-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சசிகலா அக்கா மகன் தினகரனின் வங்கி கணக்குகளில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டது. இது…

Read More

தமிழகத்துக்கு பேரிடி! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட முடியாது- சுப்ரீம்கோர்ட்

தமிழகத்துக்கு பேரிடி! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட முடியாது- சுப்ரீம்கோர்ட்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனே உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் கருத்து தமிழகத்துக்கு பேரிடியாகும். டெல்லி: விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு தொடர்பாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. இம்மனுக்கள் மீது நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் முதலில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது….

Read More

இன்னோவா சம்பத் என்ற பழி வேண்டாம்; ஜெயலலிதா கொடுத்த காரை திருப்பிக் கொடுத்தார் நாஞ்சில் சம்பத்

இன்னோவா சம்பத் என்ற பழி வேண்டாம்; ஜெயலலிதா கொடுத்த காரை திருப்பிக் கொடுத்தார் நாஞ்சில் சம்பத்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தனக்கு வழங்கிய இன்னோவா காரை, இன்று காலை அதிமுக தலைமைக் கழகத்தில் விட்டுச் சென்றுள்ளார் நாஞ்சில் சம்பத். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, “2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இயக்க பிரச்சாரத்திற்காக கழகத்தின் பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அம்மா அவர்கள் சாவியை என்னிடத்தில் ஒப்படைத்தார்கள். அந்த காரை கட்சியின் பிரச்சாரத்தைத் தவிர என்னுடைய சொந்த உபயோகத்திற்காக ஒரு நாள் கூட பயன்படுத்தவில்லை. பிரச்சாரம் இல்லாத நாட்களில் என்னுடைய நண்பர் ஜாபர் அலி வீட்டில் பாதுகாப்பாக நிற்கும். இப்போது 8 மாத காலமாக பிரச்சாரம் இல்லை. வீணாக அதை வைத்துக் கொண்டு இன்னோவா…

Read More

“தமிழகத்தின் உடனடித் தேவைஒருபொதுத் தேர்தல்”

“தமிழகத்தின் உடனடித் தேவைஒருபொதுத் தேர்தல்”

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சு. ப. வீரபாண்டியன் அறிவிப்பு தங்கள் கட்சியின் சார்பில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கட்டும், ஆனால் முதலமைச்சரை தமிழ்நாட்டு மக்களேதேர்ந்தெடுக்க வேண்டும். இதுவே சரியானது. எனபேவ தமிழகத்திற்கு இன்றைய உடனடித் தேவை ஒருபொதுத் தேர்தலே”  இவ்வாறு அனைத்திந்திய அண்ணா தி ராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் திருசுப. வீரபாண்டியன் சென்னையில் விடுத்துள்ளஅறிக்கையொன்றியில் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுச் செயலாளராக திருமதி சசிகலா தெரிவு செய்யப்பட்டமை தொடர்பாக திரு சுப. வீரபாண்டியன் மேலும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அதிமுகவின் பொதுக் குழு திருமதி சசிகலாவை தங்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது. அக்கட்சியில் அப்பொறுப்பே மிகுந்த வல்லமை கொண்டதாகும்….

Read More

சமாஜ்வாடி கட்சியில் குழப்பம்…. கட்சி இரண்டாக உடையப் போகிறதா?

சமாஜ்வாடி கட்சியில் குழப்பம்…. கட்சி இரண்டாக உடையப் போகிறதா?

உத்தரபிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், சமாஜ்வாடி கட்சிக்குள் குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான 325 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். இதற்கு போட்டியாக உத்தரப்பிரதேச முதல்வரும் முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவ் தற்போது தனியாக 235 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் முலாயம்சிங் தவிர்த்து சமாஜ்வாடி கட்சியின் நபர்கள் உள்ளனர். இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால், யார் சமாஜ்வாடி கட்சியின் கீழ் போட்டியிடுவார்கள் என குழப்பம் நிலவி வருகிறது. அகிலேஷ் தனியாக கட்சி தொடங்கவும் வாய்ப்பு இருப்பதாக உத்தரப்பிரதேச மாநில அரசியல் வட்டாரங்கள்…

Read More

டாக்டர் எஸ். எம். பாலாஜி அவர்கள் சென்னையில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவக் கல்லூரியின் மாநாட்டையும் அதன் வருடாந்த பட்டமளிப்பு விழாவையும் தொடக்கிவைத்தார்

டாக்டர் எஸ். எம். பாலாஜி அவர்கள் சென்னையில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவக் கல்லூரியின் மாநாட்டையும் அதன் வருடாந்த பட்டமளிப்பு விழாவையும் தொடக்கிவைத்தார்

தமிழ்நாட்டின் பிரபல பல்வைத்திய நிபுணரும், சர்வதேச பல் மருத்துவக் கல்லூரியின் தலைவரும் சென்னை பாலாஜி பல்மருத்துவ நிலையத்தின் ஸ்தாபகருமான டாக்டர் எஸ். எம். பாலாஜி அவர்கள் சென்னையில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவக் கல்லூரியின் மாநாட்டையும் அதன் வருடாந்த பட்டமளிப்பு விழாவையும் தொடக்கிவைத்தார்.  

Read More
1 73 74 75 76 77 81