‘நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்’ : ஜெயலலிதாவின் மகன் என உரிமை கோரிய நபருக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை

‘நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்’ : ஜெயலலிதாவின் மகன் என உரிமை கோரிய நபருக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை

ஜெயலலிதாவின் மகன் எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இளைஞரை விசாரித்த நீதிபதி, ‘நீதிமன்றத்துடன் விளை யாடினால் சிறைக்கு அனுப்புவேன்’ என எச்சரித்தார். ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவில் கிராமம் முத்துகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி (32) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப் பதாவது: நான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மகன். கடந்த15.2.85-ல் பிறந்தேன். ஈரோடு காஞ்சி கோவிலைச் சேர்ந்த வசந்தாமணி என்பவருக்கு 1986-ல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் என்னை தத்து கொடுத்தனர். எனது வளர்ப்புத் தாய் மற்றும் தந்தையுடன் ஈரோட்டில் வசித்து வரும் நான் பலமுறை ஜெயலலிதாவை சந்தித்து இருக்கிறேன். போயஸ் தோட்டத்தில்…

Read More

டிடிவி தினகரனின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் கோரிக்கை

டிடிவி தினகரனின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் கோரிக்கை

டிடிவி தினகரன் மீது  ஃபெரா வழக்குகள் இருப்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் விளக்குவதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி சென்றார். தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை டெல்லியில் இன்று (புதன்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ”அதிமுக சட்டவிதிக்கு மாறாக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் எடுத்துரைத்தோம். தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும். ஆர்.கே. நகர் தேர்தலுக்கு முன்பாகவே இரட்டை…

Read More

சென்னையில் புதிதாக 3 மெட்ரோ ரயில் தடங்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் புதிதாக 3 மெட்ரோ ரயில் தடங்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் புதிதாக 3 மெட்ரோ ரயில் தடங்கள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார். மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளாக, மொத்தம் 107.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட மூன்று மெட்ரோ ரயில் வழித்தடங்கள் ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் சுழல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். தமிழக பட்ஜெட் 2017 – 2018, சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கையை வாசித்த அமைச்சர் ஜெயக்குமார், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 45 கிலோமீட்டர் நீளத்திற்கு தொடங்கப்பட்ட முதற்கட்டப் பணிகளில் கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை மற்றும் சின்னமலையிலிருந்து விமான நிலையம் வரையிலான 21 கிலோமீட்டர் நீளமுள்ள உயர்த்தப்பட்ட…

Read More

முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீச்சு

முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீச்சு

ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது இளைஞர் ஒருவர் காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் மீது காலணி வீசிய இளைஞர் சாலமன் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார். டெல்லியில் ஜேஎன்யூ மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் கடந்த திங்கட்கிழமை தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டது. இது ஒரு மர்ம மரணம் எனக் கூறி, அவரது தந்தையான ஜீவானந்தம் டெல்லி போலீஸிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, டெல்லி எய்ம்ஸ் தடயவியல் துறை தலைவர் சுதிர்குமார் குப்தா தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துக்குழுவினர் முத்துக்கிருஷ்ணன் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர். அதற்குப் பிறகு முத்துக்கிருஷ்ணன் உடல் புதன்கிழமை இரவு சென்னை வந்தடைந்தது. அங்கிருந்து சேலத்திற்கு சாலை…

Read More

ஆர்.கே.நகரில் தினகரனை தோற்கடிப்பேன் : மதுசூதனன் சூளுரை

ஆர்.கே.நகரில் தினகரனை தோற்கடிப்பேன் : மதுசூதனன் சூளுரை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று டிடிவி தினகரனை தோற்கடிப்பேன் என்று மதுசூதனன் சூளுரைத்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டார். சென்னையில் நடந்த ஓபிஎஸ் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்’ என்று அறிவித்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், ”நான் ஆர்.கே.நகரில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். என் தொகுதி மக்களை நன்கறிவேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று டிடிவி தினகரனை தோற்கடிப்பேன்” என்று கூறினார். மதுசூதனன் 1991-ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனவர். அப்போதைய…

Read More

9 பேர் கொண்ட குழு டெல்லி பயணம்: தலைமை தேர்தல் கமிஷனருடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு

9 பேர் கொண்ட குழு டெல்லி பயணம்: தலைமை தேர்தல் கமிஷனருடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் தலைமை தேர்தல் கமி‌ஷனரை இன்று(புதன்கிழமை) சந்திக்கின்றனர். முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (புதன்கிழமை) டெல்லியில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதியை சந்திக்கிறார். அவருடன் ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி,  நத்தம் விசுவநாதன், கே.பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன், செம்மலை, டாக்டர் மைத்ரேயன், சுந்தரம், அசோக்குமார் என 9 பேர் கொண்ட குழுவும் செல்கின்றனர். இன்று காலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தேர்தல் கமி‌ஷனரை பிற்பகல் 12 மணி அளவில் சந்திக்கிறார். சசிகலா நியமனம் செல்லாது இந்த சந்திப்பின் போது, அ.தி.மு.க.வின் ‘அவைத்தலைவர்,…

Read More

அரசியல் களத்தில் நிலைத்து நிற்பவர் பக்கம் செல்வோம் – ஜெ.தீபா வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர் பேட்டி

அரசியல் களத்தில் நிலைத்து நிற்பவர் பக்கம் செல்வோம் – ஜெ.தீபா வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர் பேட்டி

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஜெ.தீபா ஆகிய இருவரில் தமிழக அரசியல் களத்தில் நிலைத்து நிற்பவர்கள் பக்கம் செல்வோம் என்று ஜெ.தீபா வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர் கூறினார். ஜெயலலிதா அண்ணன் மகளான தீபா கடந்த பிப்ரவரி மாதம் 24–ந் தேதி ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா’ என்ற பெயரில் புதிய பேரவையை தொடங்கினார். அன்றைய தினமே கட்சி கொடியையும், பொறுப்பாளர்கள் பட்டியல் பெயரையும் வெளியிட்டார். கடந்த 12–ந் தேதி காலையில் உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் ஜெ.தீபா பேரவையின் சார்பில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது. அன்றைய தினம் இரவு ஜெ.தீபா மெரினா கடற்கரைக்கு சென்றார். அங்கு ஓ.பன்னீர்செல்வத்தை போன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்தார். அதன் பின்பு ஆர்.கே.நகர்….

Read More

பாஜக வேட்பாளராக ஆர்.கே.நகரில் போட்டியா? – நடிகை கவுதமி மறுப்பு

பாஜக வேட்பாளராக ஆர்.கே.நகரில் போட்டியா? – நடிகை கவுதமி மறுப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக நடிகை கவுதமி போட்டியிடப்போவதாக நேற்று தகவல் வெளியானது. இதை கவுதமி மறுத்துள்ளார். ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ம் தேதி நடப்பதாக அறிவிக் கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் தேமுதிக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. மற்ற கட்சி களும் வேட்பாளர்களை நிறுத்து வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பாஜக வேட் பாளராக ஆர்.கே.நகரில் நடிகை கவுதமி போட்டியிட உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதுகுறித்து கவுதமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இது போன்ற ஆதாரமில்லாத செய்தி கள் எப்படி வெளியாகின்றன என்றே தெரியவில்லை. நண்பர் கள் சிலர், ‘நீங்கள் போட்டியிடப் போகிறீர்களாமே?’ என்று கேட்ட பிறகுதான் எனக்கே விஷயம் தெரியவருகிறது. இதில்…

Read More

ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் டிடிவி.தினகரன் போட்டி: முதல்வராகும் திட்டமில்லை என பேட்டி

ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் டிடிவி.தினகரன் போட்டி: முதல்வராகும் திட்டமில்லை என பேட்டி

அதிமுக சசிகலா அணியின் சார்பில் சென்னை ஆர்.கே.நகரில் டிடிவி.தினகரன் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அதிமுக அவைத்தலைவர் செங்கோட்டையன், ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக டிடிவி.தினகரனை ஆட்சிமன்ற குழு கூடி ஒருமனதாக தேர்வு செய்துள்ளதாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன், “ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இதற்காக, ஆட்சிமன்ற குழுவுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னத்தில்…

Read More

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி உறுதி: மிரட்டல் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய ஆலோசித்து வருகிறேன்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி உறுதி: மிரட்டல் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய ஆலோசித்து வருகிறேன்

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை தொடங்கிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதன்முதலாக போட்டியிட உள்ளார். அவருடைய வீட்டில் பேரவை நிர்வாகிகளிடம் தேர்தல் வியூகம் குறித்து நேற்று காலை ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஜெ.தீபா தினத்தந்தி நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:– கேள்வி:– ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட எப்போது வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளீர்கள்? பதில்:– வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பேரவை நிர்வாகக்குழு உறுப்பினர்களையும், தொகுதியில் உள்ள சிலரையும் கலந்து ஆலோசிக்க வேண்டி உள்ளது. அதற்கு பிறகு ஓரிரு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்வேன். கேள்வி:– ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் என்ன வாக்குறுதி அளிக்க…

Read More
1 71 72 73 74 75 90