தினகரனுக்கு ரூ28 கோடி அபராதம்: அதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி குடும்பத்துக்கு முதல் அடி!

தினகரனுக்கு ரூ28 கோடி அபராதம்: அதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி குடும்பத்துக்கு முதல் அடி!

சசிகலா அக்கா மகனுக்கு அமலாக்கப் பிரிவு விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்துள்ளது சென்னை ஹைகோர்ட். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மன்னார்குடி குடும்பத்துக்கு இது முதல் சம்மட்டி அடியாகும். சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை கபளீகரம் செய்த மன்னார்குடி குடும்பத்துக்கு முதல் அடியாக டிடிவி தினகரனுக்கு அமலாக்கப் பிரிவு விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 20 ஆண்டுகளுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில் ஒன்று தினகரன் மீதான அமலாக்கப் பிரிவு வழக்கு. 1995,1996-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சசிகலா அக்கா மகன் தினகரனின் வங்கி கணக்குகளில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டது. இது…

Read More

தமிழகத்துக்கு பேரிடி! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட முடியாது- சுப்ரீம்கோர்ட்

தமிழகத்துக்கு பேரிடி! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட முடியாது- சுப்ரீம்கோர்ட்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனே உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் கருத்து தமிழகத்துக்கு பேரிடியாகும். டெல்லி: விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்கும் நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு தொடர்பாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. இம்மனுக்கள் மீது நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் முதலில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது….

Read More

இன்னோவா சம்பத் என்ற பழி வேண்டாம்; ஜெயலலிதா கொடுத்த காரை திருப்பிக் கொடுத்தார் நாஞ்சில் சம்பத்

இன்னோவா சம்பத் என்ற பழி வேண்டாம்; ஜெயலலிதா கொடுத்த காரை திருப்பிக் கொடுத்தார் நாஞ்சில் சம்பத்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தனக்கு வழங்கிய இன்னோவா காரை, இன்று காலை அதிமுக தலைமைக் கழகத்தில் விட்டுச் சென்றுள்ளார் நாஞ்சில் சம்பத். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, “2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இயக்க பிரச்சாரத்திற்காக கழகத்தின் பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அம்மா அவர்கள் சாவியை என்னிடத்தில் ஒப்படைத்தார்கள். அந்த காரை கட்சியின் பிரச்சாரத்தைத் தவிர என்னுடைய சொந்த உபயோகத்திற்காக ஒரு நாள் கூட பயன்படுத்தவில்லை. பிரச்சாரம் இல்லாத நாட்களில் என்னுடைய நண்பர் ஜாபர் அலி வீட்டில் பாதுகாப்பாக நிற்கும். இப்போது 8 மாத காலமாக பிரச்சாரம் இல்லை. வீணாக அதை வைத்துக் கொண்டு இன்னோவா…

Read More

“தமிழகத்தின் உடனடித் தேவைஒருபொதுத் தேர்தல்”

“தமிழகத்தின் உடனடித் தேவைஒருபொதுத் தேர்தல்”

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சு. ப. வீரபாண்டியன் அறிவிப்பு தங்கள் கட்சியின் சார்பில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கட்டும், ஆனால் முதலமைச்சரை தமிழ்நாட்டு மக்களேதேர்ந்தெடுக்க வேண்டும். இதுவே சரியானது. எனபேவ தமிழகத்திற்கு இன்றைய உடனடித் தேவை ஒருபொதுத் தேர்தலே”  இவ்வாறு அனைத்திந்திய அண்ணா தி ராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் திருசுப. வீரபாண்டியன் சென்னையில் விடுத்துள்ளஅறிக்கையொன்றியில் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுச் செயலாளராக திருமதி சசிகலா தெரிவு செய்யப்பட்டமை தொடர்பாக திரு சுப. வீரபாண்டியன் மேலும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அதிமுகவின் பொதுக் குழு திருமதி சசிகலாவை தங்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது. அக்கட்சியில் அப்பொறுப்பே மிகுந்த வல்லமை கொண்டதாகும்….

Read More

சமாஜ்வாடி கட்சியில் குழப்பம்…. கட்சி இரண்டாக உடையப் போகிறதா?

சமாஜ்வாடி கட்சியில் குழப்பம்…. கட்சி இரண்டாக உடையப் போகிறதா?

உத்தரபிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், சமாஜ்வாடி கட்சிக்குள் குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான 325 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். இதற்கு போட்டியாக உத்தரப்பிரதேச முதல்வரும் முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவ் தற்போது தனியாக 235 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் முலாயம்சிங் தவிர்த்து சமாஜ்வாடி கட்சியின் நபர்கள் உள்ளனர். இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால், யார் சமாஜ்வாடி கட்சியின் கீழ் போட்டியிடுவார்கள் என குழப்பம் நிலவி வருகிறது. அகிலேஷ் தனியாக கட்சி தொடங்கவும் வாய்ப்பு இருப்பதாக உத்தரப்பிரதேச மாநில அரசியல் வட்டாரங்கள்…

Read More

டாக்டர் எஸ். எம். பாலாஜி அவர்கள் சென்னையில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவக் கல்லூரியின் மாநாட்டையும் அதன் வருடாந்த பட்டமளிப்பு விழாவையும் தொடக்கிவைத்தார்

டாக்டர் எஸ். எம். பாலாஜி அவர்கள் சென்னையில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவக் கல்லூரியின் மாநாட்டையும் அதன் வருடாந்த பட்டமளிப்பு விழாவையும் தொடக்கிவைத்தார்

தமிழ்நாட்டின் பிரபல பல்வைத்திய நிபுணரும், சர்வதேச பல் மருத்துவக் கல்லூரியின் தலைவரும் சென்னை பாலாஜி பல்மருத்துவ நிலையத்தின் ஸ்தாபகருமான டாக்டர் எஸ். எம். பாலாஜி அவர்கள் சென்னையில் நடைபெற்ற சர்வதேச பல் மருத்துவக் கல்லூரியின் மாநாட்டையும் அதன் வருடாந்த பட்டமளிப்பு விழாவையும் தொடக்கிவைத்தார்.  

Read More

கடன் தவணை செலுத்த மேலும் 30 நாள் கால அவகாசம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கடன் தவணை செலுத்த மேலும் 30 நாள் கால அவகாசம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக, பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால், வீடு, கார், பயிர்க்கடன் உள்பட ரூ.1 கோடிக்கு உட்பட்ட கடன்களை பெற்றவர்கள், கடன் தவணையை செலுத்த ரிசர்வ் வங்கி 60 நாட்கள் கால அவகாசம் அளித்தது. இந்த சலுகை, கடந்த நவம்பர் 21–ந் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடன் தவணையை செலுத்த ரிசர்வ் வங்கி மேலும் 30 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது. இதுபற்றிய அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதனால், கடன் பெற்றவர்களுக்கு மொத்தம் 90 நாட்கள் கால அவகாசம் கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் 1–ந் தேதியில் இருந்து டிசம்பர் 31–ந் தேதிவரை செலுத்த வேண்டிய கடன் தவணைகளுக்கு இச்சலுகை பொருந்தும். ஜனவரி 1–ந்…

Read More

ஏமன் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியாரை மீட்க உரிய நடவடிக்கை: சுஷ்மா உறுதி

ஏமன் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியாரை மீட்க உரிய நடவடிக்கை: சுஷ்மா உறுதி

போர் பதற்றம் நிலவும் ஏமனில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப் பட்ட கேரளாவைச் சேர்ந்த கிறிஸ் தவ பாதிரியார் தாமஸ் உழுன்ன லிலை மீட்க அனைத்து நடவடிக் கையும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருப்பதாவது: தன்னைத் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிரியார் தாமஸ் பேசுவது போன்ற வீடியோவை பார்த்தேன். அவர் ஒரு இந்தியர், ஒவ்வொரு இந்தியரின் உயிரும் மிகவும் விலைமதிப்பற்றவை ஆகும். எனவே, அவரைப் பாதுகாப்பாக மீட்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் பிரச்சினை யில் சிக்கித் தவிக்கும் இந்தியர் களுக்கு மத்திய அரசு தேவையான…

Read More

கருப்பு பண பதுக்கல்காரர்களுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம் : பிரதமர் மோடி

கருப்பு பண பதுக்கல்காரர்களுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம் : பிரதமர் மோடி

டோராடூன், டேராடூனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ரிப்பன்கள் மற்றும் தெருவிளக்குகளை திறந்து வைப்பதற்காக தான் தேர்வுசெய்யப்படவில்லை என்று ஆவேசமாக பேசினார்.விரைவில் பொதுதேர்தல் நடைபெறவுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் நகரில் சர்தம் நெடுஞ்சாலை திட்டத்தை திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- * உத்தரகாண்ட் இறைவனின் நிலம் ஆகும். துணிச்சலான இடம் உத்தரகாண்ட். * பெருமளவில் மக்கள் இங்கு கூடியிருப்பது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. *சர்தாம் நெடுஞ்சாலையை திறந்து வைப்பது உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தும் அஞ்சலி ஆகும். *உத்தரகாண்ட் மக்கள் வளர்ச்சிக்காக இனி காத்திருக்க வேண்டியது இல்லை. *முந்தைய அரசு யாத்திரை வருபவர்களுக்கு…

Read More

பினாமி சொத்துகள் விரைவில் பறிமுதல்: பிரதமர் மோடி

பினாமி சொத்துகள் விரைவில் பறிமுதல்: பிரதமர் மோடி

பினாமி சொத்துகள் தடைச் சட்டம் விரைவில்அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடிஅறிவித்துள்ளார். பினாமி பெயர்களில் வாங்கி குவிக்கப்படும் சொத்துகள்விரைவில் பறிமுதல் செய்யப்படும் என்பதை இவ்வாறுஅவர் குறிப்பிட்டுள்ளார். அகில இந்திய வானொலியின் “மனதின் குரல்’ (மன் கீபாத்) நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு, இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரைவருமாறு: கருப்புப் பணம், ஊழலுக்கு எதிராக மத்திய அரசு போர் தொடுத்துள்ளது. இதில் மத்தியஅரசு வெற்றி பெறுவதற்கு, நாட்டு மக்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பதுக்கல்காரர்கள் குறித்து உறுதியான தகவலை நாட்டு மக்கள் தெரிவித்தால் மட்டுமேதவறிழைத்தவர்கள் மீது அரசால் நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசின் நடவடிக்கை, இத்தோடு முடிந்து விடாது. ஊழலுக்கு எதிரான போரில்எங்களது…

Read More
1 70 71 72 73 74 78