“மத்திய அரசு திருப்பதி கோயில் நிர்வாகத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறது’ தெலுங்கு தேசம் பகிரங்க குற்றச்சாட்டு

“மத்திய அரசு திருப்பதி கோயில் நிர்வாகத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறது’ தெலுங்கு தேசம் பகிரங்க குற்றச்சாட்டு

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் நாட்டிலேயே அதிக சொத்து கொண்டதாகவும், வருவாய் அதிகம் கொண்டதாகவும் இருந்து வருகிறது. கோயிலின் நிர்வாகம் ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வாயிலாக நடந்து வருகிறது. சமீபத்தில் தேவஸ்தானத்திற்கு மத்திய தொல்லியியல் துறை எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆந்திராவில் இருந்து எதிர்ப்பு எழவும் சர்ச்சைக்குரிய கடிதத்தை தொல்லியியல் துறை திரும்ப பெற்றது. திருப்பதி கோயிலில் பணி புரியும் அர்ச்சகர்களை 65 நிரம்பியவர்களுக்கு கட்டாய ஓய்வு என தேவஸ்தானத்தின் புதிதாக அமைக்கப்பட்ட அறக்கட்டளை வாரியம் முடிவு எடுத்து உள்ளது. இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கோயிலின் தலைமை அர்ச்சகர் ராமனா தீட்சிதுலு, கோவில் நிர்வாகம்…

Read More

ஆளுநர் அழைப்பு விடுத்தார்- கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது

ஆளுநர் அழைப்பு விடுத்தார்- கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து எடியூரப்பா வியாழன் காலை 9.30 மணிக்கு கர்நாடகாவின் 23-வது முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 78, பாஜக 104, மஜத 38, சுயேச்சைகள் 2 ஆகிய இடங்களை பிடித்தன. இதில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதையடுத்து, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் மஜத சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டமும் நடத்தப்பட்டன. இதில்…

Read More

கர்நாடகதில் பிஜேபி வெற்றி

கர்நாடகதில் பிஜேபி வெற்றி

பா.ஜ., 119 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இது தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்து: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம். 112 தொகுதிக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இதனால், மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி தேவையில்லை. தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை: பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம். பா.ஜ., மீது மக்கள் அபரிதமான நம்பிக்கை வைத்திருப்பதையே காட்டுகிறது. எல்லாவிதத்திலும் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது. ராகுல், சோனியாவின் பிரசாரம் எடுபடவில்லை. இந்தியாவை பிரித்தாண்டது போல், மதத்தை பிரித்தாளும் காங்கிரஸ் முயற்சிக்கு மக்கள் அடி கொடுத்துள்ளார்கள். மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறுகையில், தேர்தல்…

Read More

சுனந்தா புஷ்கர் தற்கொலை: தூண்டியதாக சசிதரூர் மீது வழக்கு

சுனந்தா புஷ்கர் தற்கொலை: தூண்டியதாக சசிதரூர் மீது வழக்கு

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.,யான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு டில்லி போலீஸ் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இது வரை மர்ம மரணம் என குறிப்பிட்டு வந்த போலீசார், இன்று தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், சுனந்தா புஷ்கர் மரணம் தற்கொலை தான்; கொலை அல்ல என குறிப்பிட்டுள்ளனர். மேலும். சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக சசிதரூரின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கை நீதிபதி தர்மேந்திர சிங் முன் பட்டியாலா கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிதரூர், மனைவி சுனந்தாவை கொடுமைப்படுத்தி, தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, சட்டரீதியான…

Read More

வெளிநாட்டில் சொத்து: நளினி, கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு

வெளிநாட்டில் சொத்து: நளினி, கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு

லண்டன் அருகே கேம்பிரிட்ஜ் நகரில் சொத்து வாங்கி அதனை மறைத்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மற்றும் அவரது மகன் கார்த்தி மீது வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் சொத்துகள் வாங்கியது தொடர்பாகவும், அமெரிக்காவில் உள்ள இரு நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடர்பாகவும் வருவாய் ஆதாரங்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு 2 முறை வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது. இந்த நோட்டீசுகளை ரத்துசெய்யக்கோரியும், இதுதொடர்பாக கருப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் தங்களுக்கு…

Read More

அம்பேத்கரை மதிக்காத காங்.,: பிரதமர் மோடி தாக்கு

அம்பேத்கரை மதிக்காத காங்.,: பிரதமர் மோடி தாக்கு

நமோ ஆப் மூலம் பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களை சந்தித்து, அரசின் கொள்கைகள் எடுத்து சொல்ல வேண்டும். அவர்களுக்காக பா.ஜ., அரசின் உழைப்பு குறித்து விளக்க வேண்டும். ஆட்சியில் இருந்த வரை காங்கிரஸ் அம்பேத்கரை மதித்தது கிடையாது. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. பா.ஜ., அரசு, தாழ்த்தப்பட்டவர்களுக்கான சட்டத்தை இன்னும் வலிமையாக்கியுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் சமுதாய கமிஷனுக்கு அரசியல் சாசன அந்தஸ்து கொடுப்பதை தடுக்கவே, காங்கிரஸ் பார்லிமென்டை செயல்படுவதை தடுத்தது. வலிமையான மற்றும் வளர்ச்சியடைந்த நாடு என்ற அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறோம். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த…

Read More

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆவடி இளைஞர் கல்வீச்சில் மரணமடைந்தார்

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆவடி இளைஞர் கல்வீச்சில் மரணமடைந்தார்

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆவடி இளைஞர் கல்வீச்சில் மரணமடைந்தார். அவரது உடல் விமானம் மூலம் இன்று இரவு சென்னை கொண்டு வரப்பட உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாகி வருகிறது காஷ்மீர். சென்னை ஆவடி அருகே உள்ள பாலவேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேலு. இவர் ஆவடி டாங்க் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், சங்கீதா, திருமணி செல்வம், ரவிகுமார் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். கோடையை முன்னிட்டு கடந்த 4-ம் தேதி ராஜவேலுவின் குடும்பத்தார் மகன் ரவிக்குமாரை தவிர அனைவரும் சுற்றுலாப் பயணமாக  காஷ்மீர் புறப்பட்டுச் சென்றனர். டெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் காஷ்மீர் சென்ற அவர்கள் பல இடங்களைச்…

Read More

தமிழக பாஜ பொறுப்பாளர் நிர்மலா சீதாராமன்?

தமிழக பாஜ பொறுப்பாளர் நிர்மலா சீதாராமன்?

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு, தமிழகத்தின் மீது முழு வேகத்தில் கவனம் செலுத்துவது என, பா.ஜ., தேசியத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர். அடுத்தாண்டு வரவிருக்கும் பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், தமிழகத்தில் பா.ஜ.,வை முழுவேகத்தில் வளர்த்தெடுப்பதோடு, தேர்தலில் நிறைய தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான முனைப்பில் உள்ளது. இதற்கான பொறுப்பை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதும், அடிக்கடி தமிழகத்துக்கு வருவார் நிர்மலா சீதாராமன்.

Read More

அலிகார் பல்கலைக்கழகத்தில் முகமது அலி ஜின்னா புகைப்படம் வைக்கப்பட்ட விவகாரம், யோகி அமைப்பு கெடு!

அலிகார் பல்கலைக்கழகத்தில் முகமது அலி ஜின்னா புகைப்படம் வைக்கப்பட்ட விவகாரம், யோகி அமைப்பு கெடு!

இந்தியாவை இரண்டாக பிரிப்பதற்கு காரணமாக இருந்தவரும், பாகிஸ்தானின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று உள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ யூனியன் அலுவலகத்தின் சுவரில் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் தொங்கவிடப்பட்டு உள்ள விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஜின்னா புகைப்பட விவகாரம் தொடர்பாக அலிகார் எம்.பி. சதிஷ் கவுதம் இவ்வார தொடக்கத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார். ஆனால் பல்கலைக்கழகம் தரப்பில் ஜின்னாவின் புகைப்படம் வருடக்கணக்கில் சுவரில் தொங்குவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. செவ்வாய் கிழமை பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாபி கித்வாய் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாக…

Read More

ஒரே நேரத்தில் 8,500 பேரைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்?

ஒரே நேரத்தில் 8,500 பேரைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்?

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் என ஒரே நேரத்தில் 8,500 பேரை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வருடம்தோறும் மேற்கொள்ளும் முழு உடல் பரிசோதனைக்காக, கடந்த மாதம் 23 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். சென்னையில் இருந்து துபாய் சென்று, அங்கிருந்து அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் அவர், அங்கு நடைபெற்று வரும் தனது கட்சிக்கான இணையதளப் பணிகளையும் மேற்பார்வையிடுகிறார். அமெரிக்காவில் இருந்து வருகிற 5 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை திரும்புகிறார் ரஜினி. ஜூன் மாதம் ரிலீஸாக இருக்கும் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது….

Read More
1 5 6 7 8 9 75