பந்த்; தமிழகத்தில் ஆதரவு இல்லை; பஸ்கள் ஓடின முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு

பந்த்; தமிழகத்தில் ஆதரவு இல்லை; பஸ்கள் ஓடின முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து இன்று (செப்.,10) நாடு முழுவதும் பந்த் அறிவித்துள்ளது. இந்த பந்த்தால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வழக்கம் போல் ஆட்டோக்கள், பஸ்கள் ஓடின. சில முக்கிய வீதிகளில் பாதி அளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் சில பகுதிகளில் கடைகள் மட்டும் அடைக்கப்பட்டுள்ளன. பந்த் காரணமாக சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி,…

Read More

ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரை புகைப்படங்கள் போலியா? பா.ஜனதா குற்றச்சாட்டு

ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரை புகைப்படங்கள் போலியா? பா.ஜனதா குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். அங்கு சக பயணிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அவை போலியானவை என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியுள்ளார். யாத்ரீகர் ஒருவருடன் ராகுல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், அவர் கையில் வைத்திருக்கும் ஊன்றுகோலின் நிழல் இல்லை எனக்கூறிய அவர், இது போட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதைப்போல பா.ஜனதா மகளிரணியின் சமூக ஊடக பொறுப்பாளர் பிரிதி காந்தி, டெல்லி எம்.எல்.ஏ. மஞ்சிந்தர் சிங் ஆகியோரும் ராகுல் காந்தியின் மானசரோவர் புகைப்படங்களை கிண்டல் செய்திருந்தனர். பா.ஜனதாவினரின் இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, கைலாஷ் மலைக்கு…

Read More

14வது நாளாக நீடித்த போராட்டம்; மருத்துவமனையில் ஹர்திக் படேல்

14வது நாளாக நீடித்த போராட்டம்; மருத்துவமனையில் ஹர்திக் படேல்

குஜராத் மாநிலத்தில், 14 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும், ஹர்திக் படேலின் உடல் நிலை மோசமானதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர், ஹர்திக் படேல், 25. இவர், ‘படிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். ‘குஜராத் மாநிலத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், படேல் சமூகத்தினருக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இவர், ஆக., 25ல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். குஜராத் தலைநகர் ஆமதாபாதில் உள்ள, தன் பண்ணை வீட்டில், போராட்டம் நடத்தி வருகிறார். இவரது போராட்டத்துக்கு, பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் இன்று(செப்.,7) 14வது நாளாக போராட்டம்…

Read More

சோபியாவின் பின்னணி என்ன: புலனாய்வு அமைப்புகள் விசாரணை

சோபியாவின் பின்னணி என்ன: புலனாய்வு அமைப்புகள் விசாரணை

விமானத்தில் பா.ஜ.,விற்கு எதிரான கோஷம் எழுப்பிய சோபியா என்ற மாணவியின் போராட்ட பின்னணி குறித்து பல்வேறு புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. பா.ஜ., தலைவர் தமிழிசை, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தபோது அவரை விமர்சித்த, தூத்துக்குடியை சேர்ந்த பெண் சோபியா கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கனடாவில் படித்து வரும் சோபியா தனது பெற்றோர்களுடன் விமானத்தில் பயணித்த போதே இச்சம்பவம் நிகழ்ந்தது. தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சாமியின் மகள் சோபியா 28. கனடா நாட்டில் ஆராய்ச்சி மாணவியாக பயின்றுவந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். அவரை தந்தையும், தாய் மனோகரியும் சென்னை சென்று விமானத்தில் அழைத்துவந்தனர். பெற்றோர்கள்…

Read More

மோடி அரசை அகற்ற நக்சல் சதி: போலீசார் தகவல்

மோடி அரசை அகற்ற நக்சல் சதி: போலீசார் தகவல்

பிரதமர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய கும்பலுடன் தொடர்புடையதாக, நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த, எழுத்தாளர் வரவர ராவ், ஐதராபாதில், கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதி களில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில், நக்சலைட் ஆதரவாளர்களான, வெர்னான் கன்சால்வெஸ், அருண் பெரைரா, தொழிற்சங்க தலைவர் சுதா பரத்வாஜ் மற்றும் கவுதம் நவாலகா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ‘இந்த ஐந்து பேரையும் செப்., 6 வரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும்’ என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக புனே போலீசார் கூறுகையில், நக்சல்களுடன் அவர்களுக்கு தொடர்புஉள்ளது என்பது தெளிவாக தெரிந்த பின்னரே நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மாவோயிஸ்ட்களுடன் அவர்களுக்கு…

Read More

மோடி அரசை மத்தியில் இருந்து அகற்றியாக வேண்டும்

மோடி அரசை மத்தியில் இருந்து அகற்றியாக வேண்டும்

தி.மு.க., தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதும், பொதுக் குழு உறுப்பினர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது, மோடி அரசை மத்தியில் இருந்து அகற்றியாக வேண்டும். அது வரை முழு வீச்சில் போராட வேண்டும் என்றார்.இதற்குக் காரணம், மறைந்த கருணாநிதிக்கு சென்னையில் புகழ் அஞ்சலி கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்துக்கு வருமாறு பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவை அழைத்து வர வேண்டும் என, தி.மு.க., தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மூலம், ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் ஒருவர் டில்லி சென்று, அமித் ஷாவிடமே பேசினார். கூட்டத்தில் கலந்து கொள்வதாக, அமித்ஷா ஒப்புக் கொண்டார். பின், முடிவை மாற்றிக் கொண்டார்.இதனால், பா.ஜ., மீது தி.மு.க.,…

Read More

மனுஷ்யபுத்திரன் (அப்துல் ஹமீது) கவிதை: பெண்கள் கொதிப்பு

மனுஷ்யபுத்திரன் (அப்துல் ஹமீது) கவிதை: பெண்கள் கொதிப்பு

பெண்களை கொச்சைப்படுத்தி கவிதை வெளியிட்ட மனுஷ்யபுத்திரன் ( விக்கிபீடியாவின்படி இயற்பெயர் அப்துல் ஹமீது), அனைத்து பெண்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என பா.ஜ., முன்னாள் பிரமுகர் ஜமீலா தெரிவித்தார். இதுகுறித்து கமிஷனரிடம் புகார் ஒன்றையும் அவர் அளித்துள்ளார். வழக்கமான ஒன்று கூட்டங்களிலும் கவிதைகளிலும் இந்து மத பழக்க வழக்கங்களை விமர்சித்து பேசுவதும் எழுதுவதும் மனுஷ்யபுத்திரனின் வழக்கம். அவரது எழுத்தை பலர் படித்தாலும், ஏற்கனவே இவர் மீது ஏராளமான விமர்சனங்கள் இருந்தும் மற்று மதத்தை விமர்சிப்பதை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. நாளாக நாளாக, தன்னை பேச கூப்பிடும் அமைப்புகளை மகிழ்விப்பதற்காகவே அவர் மாற்று மதத்தை விமர்சித்து பேசுகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தி.மு.க.,வின் அனுதாபியாகவும் இருக்கிறார். ஊழியின்…

Read More

சத்தீஸ்கரின் புதிய தலைநகருக்கு வாஜ்பாய் பெயர்

சத்தீஸ்கரின் புதிய தலைநகருக்கு வாஜ்பாய் பெயர்

சத்தீஸ்கரில் உருவாக்கப்பட உள்ள புதிய தலைநகருக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக அடல்நகர் எனப் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் ரமன்சிங் தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவாகச் சத்தீஸ்கரின் 22மாவட்டத் தலைநகரங்களிலும் சிலை நிறுவப்படும். ராய்ப்பூரின் அருகே புதிதாக உருவாக்கப்படும் தலைநகருக்கு அடல்நகர் எனப் பெயர் சூட்டப்படும். போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதன் நினைவாகச் சத்தீஸ்கர் ஆயுதப்படையின் ஒரு பிரிவு போக்ரான் பட்டாலியன் என அழைக்கப்படும். பிலாஸ்பூர் பல்கலைக்கழகம், ராஜ்நந்தகான் மருத்துவக் கல்லூரி, மார்வா அனல்மின் நிலையம் ஆகியவற்றுக்கும் வாஜ்பாய் பெயர் சூட்டப்படும் என ரமன் சிங் தெரிவித்தார்

Read More

விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு இதுதான் என்கிறார் ‘தி இந்து’ ராம்

விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு இதுதான் என்கிறார் ‘தி இந்து’ ராம்

கலைஞர் மு.கருணாநிதியின் தனிச்சிறப்புகள், அணுகுமுறை, அரசியலில் அவர் ஆற்றிய பங்கு உள்ளிட்டவை குறித்து மூத்த ஊடகவியலாளரான ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம் பிபிசி தமிழிடம் உரையாடியிருந்தார். அதில் விடுதலைப் புலிகள் தொடர்பாக கருணாநிதியின் அணுகுமுறைகள் பற்றிய அவர் கூறிய கருத்துக்கள்- கேள்வி: இலங்கை தமிழர்கள் – விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன? என்.ராம்: ”விடுதலை புலிகள் எப்போதுமே கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் ஆட்சியை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்டதிலிருந்து அவருக்கு விடுதலை புலிகள் மீதிருந்த மரியாதை தகர்ந்தது . ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என…

Read More

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் (93 ) இன்று ( 16ம் தேதி) காலமானார்

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் (93 ) இன்று ( 16ம் தேதி) காலமானார்

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93 ) இன்று ( 16ம் தேதி) மாலை 5. 05 மணியளவில் காலமானார். முன்னதாக அவர் சிகிச்சை பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உடலுக்கு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, காங்., தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஜூலை 11ம்…

Read More
1 4 5 6 7 8 80